Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலுடன் இனி ஒருபோதும் இணைந்து பணியாற்ற மாட்டேன்: ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Maithiri-1-1-720x450.png

ரணிலுடன் இனி ஒருபோதும் இணைந்து பணியாற்ற மாட்டேன்: ஜனாதிபதி

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது,

“ரணிலுடன் இப்போது மற்றுமல்ல எதிர்காலத்திலும் கூட இணைந்து பணியாற்றும் விருப்பம் எனக்கு இல்லை. இதுவே எனது தீர்க்கமான முடிவாகும்.

மேலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவரை பிரதமராக தெரிவு செய்ய முடியுமென அரசியலமைப்பில் எங்கும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ஜனாதியினால் பிரதமர் ஒருவர் தெரிவு செய்யப்படுகின்றமை குறித்து அரசியலமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் ரணில் மீதுள்ள அச்சத்தின் காரணமாகவே பிரதமர் பதவியை ஏற்கவில்லை.

அந்தவகையில் தற்போதைய அரசியல் பிரச்சினைக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் தீர்வு எட்டப்படாவிடின் பொதுத் தேர்தலுக்கு செல்வதே சிறந்தது” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/ரணிலுடன்-இனி-ஒருபோதும்-இ/

  • கருத்துக்கள உறவுகள்

அதை சொல்ல, இலங்கை அரசிறைமை இவரது பிரத்தியேக சொத்தல்ல, சட்டபூர்வமான கடமையை செய்யவே இவரது பதவிநிலை இவரை கோருகின்றது என்கிறது, கொழும்பு சண்டேரைம்ஸ் பத்திரிகை.

மேலும் நேற்றைய கூட்டமைப்புடனான சந்திப்பில், கூட்டமைப்பு பாஉ கள் தமிழில் தெளிவாக சில சட்டபூர்வமான பிரச்சணைகளை அவருக்கு தெரியப்படுத்த, அது சிங்களத்தில் உடனடியாக மொழிபெயர்கப்பட அவர் கொஞ்சம் தடுமாறியதாக தெரிகிறது.

அரசியல் அமைப்பு சட்ட விதிகளின் படி, அதற்கு எதிராக தெரிந்தே வேண்டுமென்றே வேலை செய்வதும், தவறான சட்டரீதியற்ற உத்தரவுகளை இடுவதும், செயல்படுத்துமாறு அதுகாரிகளை உயர்பதவியில் இருந்து வற்புறுத்துவதும் (அரசமைப்பின் 115 ம் பத்தியில் மக்களின் இறைமைக்கு எதிராக நடந்து கொள்வது)  இருபது வருட தண்டணைக்குரிய குற்றம். (முன்னர் நடந்த வழக்கொன்றின் 1999 (SC 509/98), முடிவின் பிரகாரம்)

பதவியில் இருந்து இறங்கிய பின்னரே வழக்கும், தண்டணையும்....

மேலும் சட்டரீயற்ற உத்தரவுகளை, அது தவறென சுட்டிகாட்டாது நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், உடனடியாகவே நீதிமன்றம் விசாரித்து தண்டிக்க முடியும் என்றும் சொல்லியுள்ளனர்.

இந்திய மேற்குலக வழிகாட்டலில், கூட்டமைப்பு, ரணிலுக்கு ஆதரவு தரும் நிலைப்பாடு எடுத்திருப்பதாக தெரிகிறது .

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

"வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வாபஸ் பெறமாட்டார்'

"வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வாபஸ் பெறமாட்டார்'

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்த சந்தர்ப்பத்திலும் வாபஸ் பெறமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

maythiripala_sirisena.jpg

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியுடனான தேசிய அரசாங்கத்தை தொடர முடியாது என்ற தீர்மானத்தின் அடிப்படையிலேயே ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை பிரதமராக நியமித்துள்ளார். 

எனினும் ஐ.தே.கவின் தொடர்ச்சியான முறையற்ற செயற்பாடுகளின் காரணமாக பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான தீர்மானத்தை அறிவித்தார் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/45606

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

"வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வாபஸ் பெறமாட்டார்'

"வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வாபஸ் பெறமாட்டார்'

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்த சந்தர்ப்பத்திலும் வாபஸ் பெறமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

maythiripala_sirisena.jpg

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியுடனான தேசிய அரசாங்கத்தை தொடர முடியாது என்ற தீர்மானத்தின் அடிப்படையிலேயே ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை பிரதமராக நியமித்துள்ளார். 

எனினும் ஐ.தே.கவின் தொடர்ச்சியான முறையற்ற செயற்பாடுகளின் காரணமாக பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான தீர்மானத்தை அறிவித்தார் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/45606

ஆளாளுக்கு தங்களுக்கு தெரிந்த சட்டம் பேசுகிறார்கள்.

அரச வர்த்தமானியில் அறிவிக்கப் பட்ட ஒரு விடயம் வாபஸ் வாங்கவோ, ரத்து செய்யவோ சட்டத்தில் இடமில்லை.

2015ல் ஜனாதிபதி தேர்தல் வர்த்தமானியில் பிரகடனப்படுத்திய பின்னேரே, முதல் நாளிரவு அப்பம் சேர்ந்து தின்ற,  மைத்திரி களமிறங்கினார். 

ரத்து செய்திருக்க முடியுமாயின், அன்றே மகிந்தர் செய்திருப்பார்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.