Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா குறித்து நாடாளுமன்றக் குழுவுக்கு விளக்கமளிக்கவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா குறித்து நாடாளுமன்றக் குழுவுக்கு விளக்கமளிக்கவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு

Vijay-Gokhale-300x200.jpgஇந்திய- சிறிலங்கா உறவுகள் குறித்தும், சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும், இந்திய நாடாளுமன்றத்தின் வெளிவிவகார நிலையியல் குழுவுக்கு, இந்திய வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் விளக்கமளிக்கவுள்ளனர்.

சசி தாரூர் தலைமையிலான இந்திய நாடாளுமன்றத்தின் வெளிவிவகார நிலையியல் குழுவுக்கு, இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரும் டிசெம்பர் 14ஆம் நாள், விளக்கமளிக்கவுள்ளனர் என்று, இந்திய நாடாளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது.

இந்தநிலையியல் குழுவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அங்கம் வகிக்கிறார்.

இந்தக் குழுவின் முன்பாக, இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோக்ஹலே தலைமையிலான மூத்த அதிகாரிகள் முன்னிலையாகி விளக்கமளிக்கவுள்ளனர்.

பாதுகாப்பு நோக்கில் சிறிலங்காவின் உறுதித்தன்மை இந்தியாவின் நலனுக்கு முக்கியமானது என்ற வகையில், நிலையியல் குழு உறுப்பினர்கள், சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக, நிச்சயம் கேள்வி எழுப்புவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் சீனாவின் ஆதிக்கம் விரிவடைந்திருப்பது, அது உள்நாட்டு அரசியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், ஆகியன குறித்தும், அறிந்து கொள்ள நிலையியல் குழு அக்கறை கொண்டுள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் குறித்து இந்தியா கவலையடைந்துள்ள நிலையில், அதனைக் கையாளுவதற்கான வழிமுறைகள் குறித்து நிலையியல் குழு, கேள்விகளை எழுப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.puthinappalakai.net/2018/12/03/news/35074

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nunavilan said:

சசி தாரூர் தலைமையிலான இந்தி நாடாளுமன்றத்தின் வெளிவிவகார நிலையியல் குழுவுக்கு, இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரும் டிசெம்பர் 14ஆம் நாள், விளக்கமளிக்கவுள்ளனர் என்று, இந்திய நாடாளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது.

" Tharoor was born in London, United Kingdom to a Malayali Nair family of Lily and Chandran Tharoor of Palakkad, Kerala. "

எல்லா நாடுகளிலும் இவ்வாறான பொரியல் குழுவில் சகலரும் இருப்பினும் கிந்தியாவில் மட்டும் தேசிய ஆலோசகர் , வெளியுறவு செயலாளர் , வெளியுறவு ஆலோசகர் பதவிகள் மட்டும் மல்லுக்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டு பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளது .. ஐ. எப்.எஸ்  படிப்பா ? செம்பா ?  சிப்ஸா ? ஓ மை ..?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எமக்கருகில் இருப்பது எமது நிரந்தர சாபக்கேடு. அதனை அகற்றவும் முடியாது, எம்மாலும் விலகிச் செல்ல முடியாது.

தமிழரின் ஆயுதப்போரட்டத்தின் ஆரம்பமுதல் இறுதிவரை இந்தியாவால் செய்ய முடிந்ததெல்லாம் அழிவு..அழிவு..அழிவு மட்டும்தான்.

இன்று அமைதியான இலங்கையே இந்தியாவின் பாதுகாப்பிற்கு நலம் என்று சொல்லும் இந்தியா, 1980 களில் இலங்கைக்கெதிராக தமிழ் ஆயுதக்குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் தந்தது ஏன்?

தனக்குத் தேவையென்றால், ஒரு நாட்டை சுடுகாடாகவும் மாற்றலாம், ஒரு இனத்தையும் அழிக்கலாம், அந்த மயான அமைதியில் குளிர் காயலாம்.

இன்று, இந்தியாவின் தூரநோக்கற்ற வெளியுறவுக் கொள்கையினால் சீனா இலங்கையில் ஆழமாகக் காலூன்றிவிட்டது. இந்தியா விரும்பினால்க் கூட சீனாவை இலங்கையிலிருந்து இனி அகற்ற முடியாது. எந்தச் சிங்களத்திற்கு உதவிபுரிந்து தமிழினத்தைக் கருவறுத்ததோ, அதே சிங்களம் இன்று இந்தியாவைக் கழற்றிவிட்டு சீனாவுடன் கைகோத்து நிற்கிறது. 

தனது சொந்தப் பழிவாங்கலுடன் ஒப்பிடும்பொழுது சீனாவை இலங்கைக்குள் வரவிடுவது அப்படியொன்றும் பெரியவிடயமல்ல என்று சோனியாவும், அவளின் மலையாள எடுபிடிகளும் 2009 இல் நினைத்தது இன்று இந்தியாவுக்கே ஆப்பாக முடிந்திருக்கிறது.

இன்னும் நடக்கவேண்டும். சீனாவின் பலம் இலங்கையில் ஓங்க ஓங்க, இந்தியா பலவீனப்படும். தெற்கின் அம்பாந்த்தோட்டையிலிருக்கும் துறைமுகம் சீனாவின் வழங்கற்பாதையில் ஒரு மணியாக அமையும்போது இந்தியாவின்மீது சீனாவின் சுருக்குக் கயிறின் தாக்கம் தெரியும்.

இந்தியாவிற்கு ஒரு தெரிவு இருந்தது. ஈழத்தமிழர்களின் பக்கம் சேர்வதன் மூலம், அவர்களுக்கு ஒரு சுதந்திரமான தீர்வைப் பெற்றுக்கொடுத்து தனது பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியிருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை. ஈழத்தமிழர் தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே இந்தியா மிகவும் தவறான, மெத்தனமான போக்கையே கடைப்பிடித்து வருகிறது. விளைவு, தமிழினத்தின் இருப்புக் கேள்விக்குறியாக்கப்பட்டிருப்பதோடு, இந்தியாவின் பாதுகாப்பும் இப்போது பலவீனமடைந்திருக்கிறது.

தமிழர் அழிப்பில் முன்னின்று உழைத்த அதே மலையாளிகள் இப்போதும் வெளியுறவுக் கொள்கை, இந்திய நலன் என்று பேசுகிறார்கள். இவர்கள் செய்யப்போவதெல்லாம், இந்தியாவின் இன்றைய பலவீனமான நிலையினை இன்னும் பலவீனமாக்குவதுதான். 

பல்வேறு தேசிய இனங்களை போலித் தேசியவாதத்திற்குள் போட்டுக் கட்டிவைத்திருக்கும் இந்தியா எனும் மாயை உடைய வேண்டும். இந்த உடைவிலிருந்து தனித் தமிழ்நாடு மலரவேண்டும். அதன் துணையுடன் ஈழத்தமிழரது வாழ்வு மீட்சி பெறவேண்டும்.


 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.