Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேல்முறையீட்டு நீதிமன்று இடைக்காலத்தடை விதித்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேல்முறையீட்டு நீதிமன்று இடைக்காலத்தடை விதித்தது

மகிந்த பிரதமராக தொடரவும்,  அவரது அமைச்சரவை செயல் படவும் மேல்முறையீட்டு நீதிமன்று இடைக்காலத்தடை விதித்தது

http://www.dailymirror.lk/article/Interim-order-against-PM-Cabinet-159266.html

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அங்கிகாரமில்லையெனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட யாதுரிமைப் பேராண்மை மனு தொடர்பான தீர்ப்பு, இன்று (03) பிற்பகல் 3 மணிக்கு வழங்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியகட்சிகளைச் சேர்ந்த 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு, ஒரு நீதிப்பேராணை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியே, மேற்படி யாதுரிமைப் பேராண்மை மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு, கடந்த வௌ்ளிக்கிழமையன்று (30) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாக, மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிற்பகல் 3 மணிக்கு, மீண்டும் இந்த மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிராக, சற்றுமுன்னர், இடைக்கால நீதிப்பேராணை உத்தரவு பிறப்பித்தது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் இடைக்கால தடை

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ  மற்றும் புதிய அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவைக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக அனுமதியில்லை என்றும், அவர்களின் நியமனங்களை செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதேவைளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான மனு மீண்டும் டிசம்பர் 12 ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

http://globaltamilnews.net/2018/105514/

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொள்கிறேன்- சிறிசேன

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

srisena_nove2522.jpg

மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை இயங்குவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை விதித்துள்ள நிலையில் அந்த தீர்ப்பை ஏற்கப்போவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி இது தொடர்பில் அடுத்த 24 மணிநேரத்தில் உரிய நடவடிக்கையை எடுக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

http://www.virakesari.lk/article/45672

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.