Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்ட  மா அதிபருக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜயந்த தனபால ஒரு ஆங்கில புலமை குறைந்த சட்டத்தரணி. இலங்கையின் சட்ட மா அதிபராக பதவி ஏற்ற பின்னர், பிரிட்டிஷ் கவுன்சிலில் இருந்து ஆங்கில வகுப்பெடுக்க ஒருவர் வந்து போவதாக சொல்வார்கள்.

அண்மைய வழக்கில், ஜனாதிபதி சார்பில் ஆஜராகி தனது சட்ட  புலமையினை காட்டிட வெளிக்கிட்டு, நல்ல குட்டு  வாங்கி உள்ளார்.

பேராசிரியர் பீரிஸ், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் போன்றவர்கள் எழுதிக் கொடுத்ததை அப்படியே வாசிக்காமல் சமர்ப்பித்து இருக்கிறார் போல உள்ளது.

இலங்கை பாராளுமன்றத்தை கலைத்தது, அரசியல் அமைப்பினை மீறிய செயல் ஆயின், அதுக்கு உயர் நீதிமன்றினை  நாடி இருக்க வேண்டியதில்லை.

மாறாக, ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றில் பதிவி நீக்க மனுவை கொண்டு வந்திருக்க வேண்டும். அங்கே அது  2/3 பெரும்பான்மையுடன் நிறைவேறியதும், உச்சநீதி மன்றுக்கு அனுப்பி வைக்கப் படும். அப்போதே உச்ச நீதிமன்றம் அது குறித்து ஆராய முடியும் என்று தனது பதில் மனுவில் சொல்லி இருந்தார் அவர். பெரிய புத்திசாலித்தனமாக, 2/3 பெற முடியாது என்ற கணக்கில் சொல்லி இருந்தார்.

அட, எங்கொக்கா மவனே... நல்ல மூளைடா உனக்கு.... என்ற கணக்கில் தலைமை நீதிபதி, தனது தீர்ப்பில், பாராளுமன்றத்தை கலைத்தது தவறு என்பதே வழக்கு. அது புரியாமல்... கலைத்த நிலையில் உள்ள பாராளுமன்றில்,  பதிவி நீக்க மனுவை எப்படி கொண்டு வருவது.... எப்படி நிறைவேற்றுவது என்பது கூடவா புரியாது என்று கேட்டு உள்ளார். 

முகம் முழுக்க முட்டை அடி. கொழும்பு சட்ட சமூகம் கொடுப்புக்குள் சிரிக்கிறது.

இவர் இப்படி  என்றால், மனோகரா டீ சில்வா என்ற மஹிந்தாவுக்காக வாதாடியர் வேறு ரகம்.

பாராளுமன்றத்தினை கலைத்ததன் மூலமாக, மக்களிடம் செல்லும், ஜனநாயக விழுமியம் தான் பேணப் பட்டுள்ளது. மக்களுக்கு மிஞ்சிய இறைமை இல்லை என கூறி இருந்தார்.

அது குறித்த தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிமன்று, இன்றைய பாராளுமன்றம்  மக்களினால் 5 வருடத்துக்கு தேர்வு செய்யப்பட்டது என்று கூறி, மக்களிடம் போவது கூட சட்டபடி தான் அமைய வேண்டுமே அன்றி, ஜனாதிபதியின்  தான் தோன்றிதனமாக செய்கையினால் அல்ல என அவரது வாதத்தினை நிராகரித்திருந்தது.  

முன்னாள் சட்ட பேராசிரியரும், தாமரை மொட்டு கட்சி தலைவருமான பீரிஸ் தனது சமர்பணத்தில், ஜனாதிபதி மீது நீதிமன்றில் வழக்கு தொடுப்பதில் இருந்து அரசியல் அமைப்பு விலக்கு அளித்துள்ளது என கூறி இந்த வழக்கு தள்ளு படி செய்யப்பட வேண்டும் என கூறி இருந்தார்.

இது குறித்த தீர்ப்பில் ஜனாதிபதி வேறு, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார உத்தரவுகள் வேறு. அந்த உத்தரவுகள் மீதான வழக்கே இது.

பாராளுமன்றினை நினைத்த நேரத்தில் கலைக்க முடியுமாயின், ஜனாதிபதி மீது பாராளுமன்றில் பதவி நீக்க மனு கொண்டு வர முடியும் என்ற சட்ட  விதி இருப்பது அரத்தமில்லாது. (ஏனெனில் அவர், அவ்வாறு ஒரு பதவி நீக்க மனு வந்தால், பாராளுமன்றை கலைத்து  தப்பிக்க முடியும்.) அவ்வாறான பதவி நீக்க மனு பாராளுமன்றில் நிறைவேறி உச்ச நீதிமன்றின் பரிசீலனைக்கு வந்தால், அதே அரசியல் அமைப்பின் பிரகாரம் அது விசாரிக்கப் பட்டு பாராளுமன்றுகு  முடிவு தெரியப்படுத்தப் படும்.  ஆகவே ஜனாதிபதி மீது வழக்கு தொடுப்பதில் இருந்து அரசியல் அமைப்பு விலக்கு அளித்துள்ளது என்பதும் தவறு என்று தீர்ப்பில் சொல்லப் பட்டுள்ளது.

ஆக மொத்தம், மகிந்த , மைத்திரி தரப்பு வாதங்களுக்கு பதில் குட்டு வைத்து சரியான தீர்ப்பு கிடைத்துள்ளது.

* சுஜ ஆக்கம்

39 minutes ago, Nathamuni said:

ஆக மொத்தம், மகிந்த , மைத்திரி தரப்பு வாதங்களுக்கு பதில் குட்டு வைத்து சரியான தீர்ப்பு கிடைத்துள்ளது.

சிங்கள-பௌத்த அரசின் நீதித்துறை இதுவரை தமிழினத்துக்கு உரிய நீதிகள் எதையும் வழங்கிய சரித்திரம் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.