Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு எம்.பிக்கள் யாரிடமும் இரட்டை குடியுரிமை இல்லை: உறுதிசெய்தார் சுமந்திரன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு எம்.பிக்கள் யாரிடமும் இரட்டை குடியுரிமை இல்லை: உறுதிசெய்தார் சுமந்திரன்!

December 29, 2018
m.a-696x464.jpg

இரட்டைக் குடியுரிமை  குறித்து  தென்னிலங்கை கடும்போக்கு அரசியல்வாதிகளால்  சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மறுத்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் யாருக்குமே இரட்டை குடியுரிமை கிடையாதென்பதையும் உறுதிசெய்தார்.

இன்று, யாழிலுள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, இது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- “கூட்டமைப்பில் நான் உட்பட  மூன்று நாடாளுமன்ற உறுப்பினருக்கு இரட்டைக் குடியுரிமை உள்ளது எனவும், அது தொடர்பில் உச்சநீதிமன்றத்தை நாடி குறித்த  நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியை இல்லாமலாக்குவோம் எனவும் கூறப்படுகிறது. அவ்வாறான இரட்டைக் குடியுரிமை எனக்கு மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எவருக்கும் இல்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகின்றேன். அண்மைக்காலமாக எனது  நடவடிக்கையால் மிகவும் நொந்துபோயுள்ள மஹிந்த அணியினர் என் மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இன்று தென்னிலங்கை கடும்போக்கு அரசியல்வாதிகளால் அதிகம் விமர்சிக்கப்படுபவராக நான் உள்ளேன்.

இதனால் தான்  இவ்வாறான பொய்யான பிரசாரங்களை என் மீதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதும் மேற்கொண்டு வருகின்றனர் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்“ என்றார்.

 

http://www.pagetamil.com/30133/

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

அண்மைக்காலமாக எனது  நடவடிக்கையால் மிகவும் நொந்துபோயுள்ள மஹிந்த அணியினர் என் மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இன்று தென்னிலங்கை கடும்போக்கு அரசியல்வாதிகளால் அதிகம் விமர்சிக்கப்படுபவராக நான் உள்ளேன்.

தென்னிலங்கை கடும்போக்கு அரசியல்வாதிகள் இருக்கட்டும், இலங்கை உட்பட்ட உலகத் தமிழ் மக்கள் பலரும் உங்கள்மீது சந்தணம் பூசுகிறார்கள் என்ற எண்ணத்திலா உள்ளீர்கள்....?  எங்கள் கருத்துக் களமான  யாழ் இணையத்திலேயே உங்கள்பற்றிய கருத்துக்கள் வரும்போது அதில் சந்தணமணத்தை நுகர முடியவில்லையே...??  🤔

  • கருத்துக்கள உறவுகள்

வெறிக்கு முன் ஒரு கதை வெறிக்கு பின் ஒரு கதை கதைக்கும் குடிகாரன் கூட இவர் விடயத்தில் தோத்து விடுவான் சுமத்திரன் மணிக்கு ஒரு தடவை முன் பின் ஆக கதைப்பவர் .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

அண்மைக்காலமாகனது  நடவடிக்கையால் மிகவும் நொந்துபோயுள்ள மஹிந்த அணியினர் என் மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இன்று தென்னிலங்கை கடும்போக்கு அரசியல்வாதிகளால் அதிகம் விமர்சிக்கப்படுபவராக நான் உள்ளேன்.

மகிந்த சேறு பூசுவதுடன் நிற்கிறார்.
நாலடுக்கு பாதுகாப்பில்லாமல் சொந்த மக்களிடமே போகமுடியாமல் இருக்கே அதையும் கொஞ்சம் கவனத்திலெடுக்கவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.