Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீர்கொழும்பில் எரியூட்டி, கொல்லப்பட்ட நாய் - விசாரணை ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
news_03-01-2019_96dog.jpg
 

 

185451_650x250_crop-2.jpg
நீர்கொழும்பு – கொப்பர சந்தியிலுள்ள வீடொன்றில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நாயொன்றை எரியூட்டி கொன்றமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
 
கடந்த 31 ஆம் திகதி இரவு நாய் அடைக்கப்பட்டிருந்த கூண்டிற்கு மண்ணெய் ஊற்றி எரியூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
எரிகாயங்களுக்கு உள்ளான குறித்த நாய் நேற்றிரவு உயிரிழந்துள்ளது.
 
லெப்ரடோ (labrador) இன நாயொன்றே இவ்வாறு தீ வைத்துக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
 
இதேவேளை, நாய் அடைக்கப்பட்டிருந்த இடத்தில் கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டுள்ளன.
 
இந்தச் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாயை தீ வைத்த சம்பவம்... நாளை மாபெரும் எதிர்ப்பு ஆர்பாட்டம்.

Untitled%2B%25281%2529.jpg

நீ்ர்கொழும்பு – கொப்பரவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வளர்த்துவரப்பட்ட,
சார்லி என்ற பெயருடைய நாயொன்றை, இனந்தெரியாதவர்களால்  மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்ட சம்பவத்தையடுத்து, நாளை (04) நீர்கொழும்பு பிரதேசத்தில், மாபெரும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக, save a pet with love என்ற மிருகங்களை பாதுகாக்கும் அமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில், மிருகங்களை பாதுகாக்கும் அமைப்புக்கள் அனைத்துக்கும் அழைப்பு விடுப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சார்லி எனப்படும் லெப்ரடோ வகையை சேர்ந்த குறித்த நாயை இவ்வாறு தீயிட்டு கொளுத்திய நபர் பற்றி ஏதேனும் தகவல்கள் தெரியவருமாயின், உடனடியாக அறிவிக்கும்படியும், குறித்த நபரை கண்டுபிடிக்க உதவி செய்யும் நபருக்கு 1இலட்சம் ரூபாய் பணம் வழங்கப்படுமென்றும், save a pet with love அமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  நாளை மறுதினம் (05), பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.