Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒவ்வொரு தமிழ் மகனும் மனச்சாட்சியோடு செயற்படட்டும்

Featured Replies

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. யுத்தம் முடிந்த கையோடு இலங்கை அரசு குறித்து பலவாறான விமர்சனங்கள் எழுந்தன.
 
அதில் குறிப்பாக வன்னி யுத்தத்தின் கொடூரம் தமிழ் இனஅழிப்பாக இருப்பதாக மனித நேய அமைப்புக்கள் தமது கருத்துக்களைப் பதிவு செய்தன.தவிர யுத்தத்தின் கொடூரங்களை வெளிப்படுத்துகின்ற கண்கண்டசாட்சியமாக சனல் 4 காணொளிகள் அமைந்திருந்தன. கூடவே புலம்பெயர் தமிழ் மக்கள் தமிழினத்துக்கு நேர்ந்த அவலத்தை சர்வதேச வீதிகளில் இறங்கி உரக்கக் கூறினர்.
 
இதன் விளைவாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் இலங்கைத் தமிழர்களின் விடயத்தை நோக்கி தனது பார்வையை திசை திருப்பி இருந்தது.
 
எனினும் தென்பகுதிப் புத்திஜீவிகளும் அரசியல் விற்பன்னர்களும் தமிழ் மக்களுக்குச் சார்பாக சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுள்ள கருத்தியலை முறியடிக்க ஆட்சி மாற்றமேவழி எனத் தீர்மானித்தனர்.
 
மகிந்த ராஜபக்­ தரப்பை ஆட்சிக் கட்டிலிலிருந்து இறக்கி, புதிய ஆட்சியை அமைப்பதனூடாக சர்வதேசத்தின் கொந்தளிப்பை கட்டுப்படுத்த முடியும் என்ற அவர்களின் உன்னத தயாரிப்பு நடைமுறையாகியபோது அவர்கள் இலக்கை அடைந்தனர்.
இந்த இலக்கை அடைவதற்கு தமிழ் அரசியல் தலைமையும் வகிபங்காற்றியமைதான் எங்களிடம் இருந்த இராஜதந்திரப் பலவீனம் என்பதை நாம் இங்கு கூறித்தானாக வேண்டும்.
 
இனப்பிரச்சினை தொடர்பில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் இலங்கை அரசுக்கு நிபந்தனைகளை விதித்து அதை நிறைவேற்றப் பணித்தபோதிலும் அவை எதுவும் கருத்தில் எடுக்கப்படவில்லை.
 
மாறாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற கால அவகாசம் போதாது என்ற கருத்து இலங்கை அரசால் முன்வைக்கப்பட்டது. இங்குதான் தமிழ் அரசியல் தலைமை மீண்டுமொரு வரலாற்றுத் தவறை இழைக்கிறது.
ஆம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என்பதை தமிழ் அரசியல் தலைமை முன்மொழி யும் அளவில் நிலைமை எமக்குப் பாதகமாகியது.
இந்தக் காலக் கடத்தல்கள் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காத நிலைமைகளை உரு வாக்கியது என்பதே உண்மை.
 
வன்னி யுத்தம் நடந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையில் அதன் வடுக்களையும் வேதனைகளையும் தமிழ் மக்கள் சுமந்து கொண்டுள்ளனரே தவிர, எங்களுக்கு நேர்ந்தகதியை சர்வதேசம் மறந்து போகும் அளவிலான ஒரு சூழ் நிலையை காலத்தின் நீண்ட அசைவு உருவாக்கி விட்டது.
 
இதுதான் இன்றைய நிலைமை என்ற கட்டத்தில் தமது எதிர்காலம் பற்றிய தீர்க்கமான முடிவுகளை தமிழ் மக்கள் எடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
 
ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மீண்டும் பிரதமராக பதவியேற்ற கையோடு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாகக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் என நம்மவர்கள் கூறினர். ஆயினும், இதுவரை அதற்கான முயற்சிகள் நடப்பதாகத் தெரியவில்லை.
இதுவே நிலைமை எனும்போது எங்களுக்கான உரிமை, எங்களின் வாழ்வு, எங்களின் இலக்கின் எதிர்காலம் பற்றி தமிழ் மக்கள் அதிகமாக சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
 
இந்தச் சிந்தனை அரசியல் என்ற பக்கச் சார்பற்று ஒவ்வொருவரும் தம் மனச்சாட்சிப் படி செயற்படுவதாய் இருக்கும்போது காலம் கடந்தேனும் உரிமையை வலியுறுத்தி அந்த இலக்கை அடையும் பாதையில் பயணிக்கக் கூடியதாக இருக்கும்.
 
எதற்கும் இதுவரை நடந்தது சரியா? என்ற ஆய்வினூடு மனச்சாட்சியை முன்னிறுத்தி தீர்மானம் எடுப்பதுதான் தமிழ் மக்களின் முக்கியமான கடமையாகும்.
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.