Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம்

Featured Replies

மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற வழமையான கலாசாரம் அரங்கேற இருக்கிறது.
 
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தமிழ் மக்களிடம் முன்வைக்கப்பட்ட நம்பிக்கைகள் உடைந்து விழுந்து தகர்ந்து போகின்ற காலம் நெருங்கிவிட்டது. அதற்கான அறிகுறிகள் பளிச்சிடுகின்றன.
 
அரசியலமைப்பு சீர்திருத்தத்தை எதிர்ப்பதென மகிந்தராஜபக்­ தரப்பு கங்கணம் கட்டி நிற்கின்றவேளையில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும் அவரைக் கடந்து ஒரு படி மேலாக செல்ல முற்படுவதும் போலத் தெரிகிறது.
 
அதாவது ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பேரின வாத சிந்தனைக்கு பதிலடி கொடுக்க முற்பட்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் சிங்களத்தை அரச மொழியாக்குவதென அறிவித்தார்.
 
ஆக, பண்டாரநாயக்கவின் அறிவிப்பு உன்னை விட நான் பேரினவாதி என நிரூபிப்பதாக இருந்தது. இந்தக் கலாசாரம் இன்னமும் சாகவில்லை என்பதை நிரூபிப்பதைப்போல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டாலும் அது தொடர்பில் ஆச்சரியப்படுதற்கில்லை.
 
ஆம், புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தை எதிர்ப்போம் என மகிந்த ராஜபக்­ தரப்பு பகிரங்கமாக கூறிவிட்டது. இந்நிலையில் நீங்கள் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை எதிர்த்தால் அதனை அப்படியே கைவிடுவதுதான் ஒரே வழியயன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய தென்பது நீ எதிர்ப்பதற்காக மட்டுமல்ல என்னுடைய நினைப்பும் அதுதான். எனவே உன்னுடைய எதிர்ப்பை விட நான் முந்திக் கொண்டு புதிய அரசியலமைப்புக்கு முடிவு கட்டுவேன் என்பதாக நிலைமை இருக்கிறது.
 
இத்தகையதோர் முடிவுதான் வரும் என்பதை தமிழ் மக்கள் தெட்டத்தெளிவாக உணர்ந்திருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதிமொழியும் அவர்கள் ரணில்விக்கிரம சிங்கவுக்கு வழங்கிய ஆதரவும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் 
 
வெளியாகிவிடுமோ என்ற பிரமையை ஏற்படுத்தியிருந்ததும் உண்மைதான்.
எதுஎவ்வாறாயினும் வெறுங்கையோடு இலங்கைபுத்தான் என்பதைப்போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எல்லாவற்றையும் இழந்து வெறுங்கையோடு தமிழ் மக்களை நோக்கி வருகிறது.
 
இங்குதான் தமிழ் மக்கள் தங்களை உசார்படுத்தவும் தங்களை வீரச் செறிவுள்ளவர்களாக்கவும் வேண்டிய தேவையுள்ளது.
 
கேள்வி கேட்பதும் அவற்றுக்கு பதில் தருவதென்பதும் நெறிப்படுத்துவதற்கான ஒருவழிமுறையே அன்றி கேள்வி கேட்பது மட்டுமே உரிமையைப் பெற்றுத் தருவதாக ஒருபோதும் அமையாது.
 
ஆகையால் ஒரு புதிய வழியைத் தேடுகின்ற மக்களாக தமிழ் மக்கள் தங்களை மாற்ற வேண்டியவர்களாக உள்ளனர்.
 
இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்ற எச்சரிக்கைகள் எங்களை ஆற்றுப்படுத்துமேயன்றி அது பெரும்பான்மை சார்ந்தவர்களையோ அன்றி ஆட்சி அதிகாரத்தையுடையவர்களையோ ஒருபோதும் அதட்டாது.
 
அவர்களைப் பொறுத்தவரை நாங்கள் பலவீனப்பட்டுவிட்டோம். எமக்குப் பலமாக இருந்தவர்களை நாம் இழந்துவிட்டோம்.
 
எனவே அவர்கள் கூறியதை ஏற்றுவாழ்வது தான் எங்களின் வாழ்வாக இருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர்.
 
இங்குதான் தமிழர்கள் இராஜதந்திர ஆயுதத்தை ஏந்தியும் தமக்கு ஏற்பட்ட இழப்பு என்ற மறையை பலமாகவும் தொட்டு புதிய பாதையில் சர்வதேசத்தை நோக்கியதான நகர்வை ஆரம்பிக்க வேண்டும்.
 
இதை விடுத்து தத்துவம் கூறுவதும் தர்ம உபதேசம் செய்வதும் பேரினவாதச் சிந்தனையை ஒருபோதும் திருத்தாது.
 
அவ்வாறு திருத்துவதாக இருந்தால் அது தந்தை செல்வநாயகத்தின் காலத்திலேயே காரியமாயிருக்கும்.
 
எனவே நாங்கள் பலமாக இருக்கும்போது தான் அவர்கள் எங்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என சிந்திப்பார்கள்.
 
அந்தச் சிந்தனை அமுலாகவேண்டுமெனின் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு ஒரு புதிய பாதையில் பயணிக்க வேண்டியது அவசியமாகும்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.