Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரணைமடுவிலிருந்து வீணாகும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான திட்டமுன்மொழிவை சமர்ப்பிக்க ஆளுநர் பணிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 Min Read
January 18, 2019

Iranaimadu-02.jpg?zoom=1.210000026226043

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று (18) முற்பகல் இரணைமடு நீர்தேக்கம் மற்றும் நீர்த்தேக்க செயற்திட்ட அலுவலகத்திற்கு திடீர் கண்காணிப்பு பயணத்தினை மேற்கொண்டு நிலைமைகளை ஆரய்ந்தார்.

 

கடந்த 10ஆம் திகதி கிளிநொச்சிக்கு சென்ற ஆளுநர் ; இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு சென்றிருந்ததுடன் வான்கதவுகளின் திருத்தப்பணிகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு பணிப்புரைகளை வழங்கியிருந்தார்.

இரணைமடு நீர்த்தேக்கத்தின் 14 வான்கதவுகளில் 07 வான்கதவுகளில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து இரணைமடு நீர்த்தேக்கத்தை முழுமையாக ஜனவரி 31 ஆம் திகதி கையளிக்க இரணைமடு நீர்த்தேக்கத்தை புனரமைப்பு செய்த தனியார் நிறுவனம் உறுதியளித்துள்ளதுடன் பெப்ரவரி முதல் தொடர்ச்சியாக 06 மாதங்களுக்கு தன்னார்வ ரீதியான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவற்கும் முன்வந்துள்ளது.

இதேவேளை தற்போது இரணைமடு நீர்த்தேக்கத்தின் 40 வீதமான நீர் மட்டுமே விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதுடன் 60 வீதமான நீர் சமுத்திரத்தை சென்றடைவதாக கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதிப் பிணிப்பாளரும் இரணைமடு நீர்த்தேக்க செயற்திட்டத்தின் செயற்திட்ட பணிப்பாளருமாகிய பொறியியலாளர் திரு.என்.சுதாகரன் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

அதனையடுத்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான விசேட செயற்திட்ட முன்மொழிவை கூடியவிரைவில் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்ட ஆளுநர் ;, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இதுதொடர்பில் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

Iranaimadu-01.jpg?zoom=1.210000026226043

http://globaltamilnews.net/2019/110326/

Edited by பிழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.