Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணில், சம்பந்தன், கருஜயசூரிய தமிழீழத்தை உருவாக்க முயற்சி - பவித்திரா வன்னியாராச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணில், சம்பந்தன், கருஜயசூரிய தமிழீழத்தை உருவாக்க முயற்சி - பவித்திரா வன்னியாராச்சி

January 19, 2019

pavithra.jpg?resize=550%2C366

தமிழீழத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில், ரணில் விக்கிரமசிங்க, கருஜயசூரிய மற்றும் இரா.சம்பந்தன் ஆகிய மூவரும் ஈடுபட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில், இதனை நிறைவேற்ற தமது தரப்பு ஒருபோதும் இடமளிக்காது எனத் தெரிவித்துள்ள அவர் கடந்த காலத்தில், பிரதமர், சபாநாயகர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஒன்றிணைந்து நாட்டில் மீண்டும் ஈழத்தைக் உருவாக்கும் நோக்கிலேயே செயற்பட்டதாகவும் இதற்காகவே சமஷ்டி அரசியலமைப்பை கொண்டு வர இந்த மூவரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட தமக்கு உரிமை மறுக்கப்பட்டதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வியின் கைகளிலேயே பாராளுமன்றம் காணப்பட்டதாகவும் குறிப்பாக, ரணில் விக்கிரமசிங்க, கருஜயசூரிய, சம்பந்தன் ஆகிய இந்த மூவரின் கையில் சிக்குண்டிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மகிந்த ராஜபக்ஸ எதிர்கட்சித் தலைவர் ஆகியதை தொடர்ந்து, பாராளுமன்றம் விடுதலை பெற்றிருப்பதாகவும், இனி மக்களின் உரிமையை வென்றெடுக்கும் தமது போராட்டம் தொடரும் எனவும் பவித்திரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/2019/110434/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.