Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
January 22, 2019

01-11.jpg?zoom=1.3224999725818633&resize

வவுனியா மாவட்டத்தில் இதுவரை காலமும் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி இராணுவத்தினால் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த காணிகளை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று (22) முற்பகல் வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

வன்னி இராணுவ கட்டளை தலைமையகத்தினை பிரதிநிதித்துவம் செய்து 56ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமட்டன்பிட்டிய அவர்கள் காணிவிடுவிப்பிற்கான பத்திரத்தை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் கையளித்தார். ஆளுநர்  அதனை வவுனியா அரச அதிபர் ஐ.எம்.ஹனீபாவிடம் கையளித்தார்

இதனடிப்படையில் வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 40.74 ஏக்கர் அரச காணிகளும் 13.64 ஏக்கர் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த சுமார் 264 ஏக்கர் தனியார் காணிகளும் இராணுவத்தின் கீழ் இருந்த நான்கு பண்ணைகளுக்கு சொந்தமான 1099 ஏக்கர் அரச காணிகளையும் விடுவிப்பதற்கான சான்றுப் பத்திரங்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவால் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்ற தேசிய போதைத்தடுப்பு வாரத்தன் ஆரம்ப நிகழ்வில் வைத்து ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் அந்தக் காணிகள் வடக்கு ஆளுநர் ஊடாக மாவட்ட செயலாளர்களிடம் கையளிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

02-7.jpg?zoom=1.3224999725818633&resize=

வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு
22.01.2019

http://globaltamilnews.net/2019/110758/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.