Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கழிசடைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 
Rajavarman Sivakumar shared a post.
 
 
 
 
Image may contain: outdoor
Image may contain: sky and outdoor
No photo description available.
Kalaichelvan Rexy Amirthan
 

கழிசடைகள்

இப்போதெல்லாம் இலங்கைக்கு உல்லாசப்பயணிகளாகப் போவோரின் தொகை அதிகரித்துவிட்டது. அப்படிப் போவோர்கள் அந்தத் தீவில் தாம்
கண்டவைகளையும் ரசித்தவைகளையும் யூடியூப் காணொளியாகப் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் சரி மேற்குலகத்தோரின் பார்வையில் இலங்கை எப்படித்தான் இருக்கிறது என்ற ஆவல் உந்தித்தள்ள அப்படிப்பட்ட ஒரு காணொளியைப் பார்க்கத் தொடங்கினேன்.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து சொகுசு பஸ்சில் சுற்றுலாப் பயணிக்ள் ஏறுகிறார்கள் பஸ் ஓடத்தொடங்குகிறது. உள்ளே இலங்கையர் ஒருவர் எழுந்து வணக்கம் சொல்லிவிட்டு இலங்கையின் வரலாறு என்று ஒன்றை ஆங்கிலத்தில் சொல்லத்தொடங்குகிறார் அது இப்படித்தொடங்குகிறது:

"இலங்கை சிங்கள பௌத்த நாடு இங்கே முப்பது ஆண்டுகளுக்கு மேல் இடம்பெற்ற பயங்கரவாத பிரச்சினை இப்போது முடிக்கப்பட்டுவிட்டது "

இதற்குப்பின் அந்தக்காணொளியைப் பர்க்கவே பிடிக்கவில்லை. அவுஸ்திரேலியா போன்ற பல இனங்கள் கூடி வாழும் மேற்குலக நாடுகளில் இப்படியாக குறிப்பிட்ட மதத்துக்கோ இனத்துக்கோ முக்கியத்துவம் கொடுத்து யாரும் உரையாடுவதில்லை அப்படி உரையாடுவோர் துவேஷிகளாகப் பார்க்கப்ப்பட்டு மனித சமூகத்திலிருந்து ஒரு படி குறைந்தவர்களாக ஒதுக்கப்படுகிறார்கள் இதனால்தான் இங்கெல்லாம் துவேஷத்தை முன்வைக்கும் அரசியல் கட்சிகளால் ஒரு நிலைக்கு மேல் வளர முடிவதில்லை

இங்கு பொதுவான இடத்தில் ஒருவர் வழிகாட்டியாகவோ வரலாற்று உரைஞராகவோ பணியாற்றும்போது உண்மையைப் பேசுவார்கள் . இது அபறோஜின மக்களின் பாரம்பரிய நாடு இங்கே எல்லோருமே வந்து குடியேறினோம், இது பல இன மத மொழி மக்கள் ஒன்றாகக் கூடி வாழும் பல்லினக்கலாச்சார நாடு என்று ஆரம்பிப்பார்கள் ஆனால் இலங்கை என்ற தீவில் பௌத்தம் சிங்களம் என்ற மத, இன வெறிகள் தோற்றுவித்த இனப்பாகுபாடு மக்களுக்கிடையில் வேற்றுமையை ஏற்படுத்தி யுத்தத்துக்குள் தள்ளி அந்தநாட்டையே சுடுகாடாக்கியது அந்த அழிவில் முப்பத்தைத்து வருடத்துக்கு மேல் சிக்கிச் சீரழிந்து ஒருவாறு மீண்டபின்னர் இன்று அந்த வழிகாட்டி கூறுகிறார்...

இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடு.

... போங்கடா நீங்களும் உங்கடை துவேஷ மனமும் கழிசடை நாடும். உலகம் எங்கேயோ போய்விட்டது நீங்கள் இப்பவும் கிணத்துத்தவளைகளாக மத இன வெறி பிடிச்சு அலைகிறீர்கள். உங்களையும் உங்களை இப்பிடி வளர்த்துவிட்ட அரசியல்வாதிகளையும் நினைச்சு வெட்கப்படுங்கோ.

உங்களின் உள்ளம் இன மத வெறிகளால் அசுத்தமாக்கப்பட்டு அழுக்காக இருக்கும்போது உங்களின் நாடு அழகாக இருந்து என்ன பயன் ???

பி.கு.

1505 இல் போர்த்துக்கல் நாட்டவர் இலங்கையை தற்செயலாக வந்தடைந்தார்கள் அப்போது இலங்கை என்ற தீவில் மூன்று இராச்சியங்கள் இருந்தன அவையாவன :

1) கண்டி இராச்சியம்
2) கொழும்பு இராச்சியம்
3) யாழ்ப்பாண இராச்சியம்.

அன்னியப்படையெடுப்பு இலங்கைக்கு வரும்போது இருந்த மூன்று இராசதானிகளில் யாழ்ப்பாண இராசதானி தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம். இந்த இராசதானியின் இறுதித் தமிழ் மன்னனின் பெயர் சங்கிலியன்.

போர்த்துக்கேயரின் காலம் 1505 -1658 காலப்பகுதியாகும் அதன்பின்னர் ஒல்லாந்தர் எனப்படும் ஹாலந்து நாட்டவரும் இறுதியாக 1948 மாசி 4 வரை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிலும் இலங்கை இருந்தது.

மூன்று இராசதானிகளாக காலகாலமாகப் பிரிந்து இருந்த இலங்கைத்தீவை தமது நிர்வாகத்தை இலகுவாக்கும் பொருட்டு , ஒன்றாக்கி ஒரே தேசமாக ஆட்சி செய்யத்தொடங்கினர் ஆங்கிலேயர். அதுதான் அன்றுதான் இலங்கைக்கு போடப்பட்டது சாபம், இலங்கையில் தமிழர் சிங்களவர் பிரச்சினைக்கு வித்திட்டதே இந்த ஒன்றாக்கல்தான்.

அவர்களின் வெளியேற்றத்தின் பின்னர் ஏற்பட்ட பெரும்பான்மை சிறுபான்மை என்ற இனப் பாகுபாட்டால் , தமிழ்மாணவர்களின் பல்கலைக்கழகத் தேர்வில் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தலால் ஏமாற்றமும் கோபமும் அடைந்த தமிழ் தரப்பினர் தாம் மீண்டும் வெள்ளையர் காலத்துக்கு முந்திய ஆட்சியை அமைப்போம் எனத் தீர்மானித்தனர், ஆரம்பத்தில் காந்தீய வழியிலும் பொலிஸ் இராணுவத்தால் அதற்குக்கிடைத்த அடி உதைகளால் கோபப்பட்டு காலப்போக்கில் ஆயுதப்போராட்டத்திலும் குதித்தனர் தமிழ் இளைஞர்கள் ...

மன்னன் சங்கிலியனின் கோட்டையின் பிரதான வாசல் அல்லது முகப்பும், அவனின் மந்திரியின் தங்குமிடமும் சிதைந்தும் சிதையாமலும் இன்றும்யாழ்ப்பாணத்தில் உள்ளது , அதைத்தான் மேலே படமாக்ப் போட்டுள்ளேன், வெகுவிரைவில் இந்த வரலாற்று ஆதாரமும் அழித்தொழிக்கப்பட்டுவிடும்.காரணம் நான் படிக்கும் காலத்தில் இலங்கையில் மூன்று இராச்சியங்கள் இருந்த வரலாறு சிறு வகுப்புப் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது ஆனால் சமீபத்தில் சந்தித்த நண்பர் கூறினார் அந்த வரலாறு இப்போது பாடப்புத்தகத்தில் இல்லை !!!

இதுதான் இலங்கைத் தீவின் சுருக்கமான வரலாறு ஆனால் உண்மை வரலாறு, இதைத்தான் இப்போது பயங்கரவாதப் பிரச்சினை என்கின்றனர்.

ம்ம்ம்ம்... என்னத்தைச் சொல்ல.

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான மத வெறி, இன வெறி பிடித்த நாட்டுக்கு உலக நாடுகள் சப்பை கட்டு கட்டுகிறது...

வெட்கி குனிய வேண்டியது லங்களவன் அல்ல, போர் என்று காம களியாட்டம் போட்டு லச்ச கணக்கான மக்களை கொன்றொழித்து இந்த உலகின் ஒரு மூலையில் சிரித்து கொண்டும், பேசிக்கொண்டும் எந்தவித சஞ்சலமுமின்றி உலக நாடுகளுக்கு முன் வாழ்வதால் வல்லரசு என் பீத்திக் கொள்ளும் வல்லரசுகளும் ஐனா சபையுமே வெட்க்கி தலை குனிய வேண்டும்...

பின்லேடன் ஃப்ளைட்டை உட்டானென்று ஆஃப்கானிஸ்தானையே இப்பொழுது தன் கட்டு பாட்டில் கொண்டு வந்துள்ளது அமெரிக்கா... 

தனது இன போராட்டத்திர்க்கான களத்தையே இழந்து நர்கதியாய் நிக்கிறது தமிழினம்... மற்ற நாடு விழயத்தில் தலையிட மாட்டோம் என்கிறார்கள், மிக் ரக விமானங்கள் குண்டு மழையை பொழிந்தது என்ன ரகம் என்பது புரியவில்லை...

போராட்ட களத்தையே பிடுங்கியாகிவிட்டது, இப்பொழுது ஒரு இனத்தின் அடையாளங்களை அழிக்க துவங்கியாகிவிட்டது... தமிழினம் தன்மானத்துடன் வாழ தகுதியற்ற இனமா... அதற்க்கென்று தனி இடம் தேவை இல்லை என்று தீர்மானிக்கப் பட்டுவிட்டதா... அப்படியான கேவலமான இனம் தான் தமிழினம் என்றால் ஏற்றுக் கொள்கிறோம்... உலக நாடுகளுக்கான அறிவுருத்தல், தமிழ் பேசும் மற்றொரு நாடு(??) இந்தியாவில் உள்ளது... திறட்டி கொண்டு வாருங்கள், பயம் வேண்டாம் சின்ன சின்ன கதறல்கள் மட்டுமே எதிர்வினையாக இருக்கும்... 

இதுவும் செவிடன் காதுகளில் ஊதும் சங்கு தான் என்பது தெரியும், சப்பை மேட்டருக்கு கூட எதிர்பார்க்காததையெல்லாம் செய்தாகிவிட்டது, மாற்றம் கண்ணில் புலப்படவில்லை...

ஈழம், தமிழ்நாடு என்பது இடங்கள் மட்டுமே... தமிழ் மூச்சில் கலந்துள்ளது, செல்லும் இடங்களிலெல்லாம் சுவாசிக்கபடும், தேவைப்பட்டால் மற்றவர்களுக்கும் சேர்த்து...

Edited by மியாவ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.