Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளைய வவுனியா போராட்டம் முக்கியமானது – மக்களை பெருமளவில் கலந்துகொள்ள விக்னேஸ்வரன் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாளைய வவுனியா போராட்டம் முக்கியமானது – மக்களை பெருமளவில் கலந்துகொள்ள விக்னேஸ்வரன் வேண்டுகோள்

January 29, 2019

viki-_2130.jpg?resize=800%2C533

வவுனியாவில் காணாமல் போன மக்களின் உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் செய்தி ஒன்றை வெளிப்படுத்த வேண்டும் என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற இருக்கும் நீதிமன்ற வழக்கு விசாரணையில் கலந்துகொள்ள வேண்டி இருப்பதால் இந்த போராட்டத்தில் தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் தனது கட்சியின் முக்கியஸ்தர்களும் உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 34/1 தீர்மானம் எதிர்வரும் மார்ச் 2019 ஆம் திகதி காலாவதி ஆகின்றது. இந்த 34/1 தீர்மானத்தில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நிறைவேற்றும் வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் வழங்கி இருந்தது. மனித உரிமைகள் சபையின் கூட்டதொடர் மார்ச் மாதம் ஆரம்பமாகும் போது இலங்கை விடயம் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படவிருக்கிறது.இந்த நிலையில் வவுனியாவில் நாளை நடைபெறும் மக்கள் போராட்டம் மிகவும் அவசியமானதும் முக்கியமானதும். இதில் மக்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்’ என்று செய்தி அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/2019/111579/

4 hours ago, கிருபன் said:

வவுனியாவில் காணாமல் போன மக்களின் உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் செய்தி ஒன்றை வெளிப்படுத்த வேண்டும் என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மிக அவசியமானது!

அநேக தமிழ் மக்கள் தமக்கென ஒரு பிரச்சினை வரும்வரை ஏனைய பொது பிரச்சனைகளை கண்டுகொள்ளாதிருக்கும், ஒதுங்கியிருக்கும் மனநிலை உடையவர்கள்.

இந்த மனநிலை மாறினால் அடிப்படை உரிமைகளை பெறும் முயற்சிகளில் முன்னேற்றம் பல ஆயிரம் மடங்கு அதிகரிக்கும்.

கட்டாயம் எல்லா உணர்வுள்ள தமிழனும் இதனை செய்ய வேண்டும் ....

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் ஆர்ப்பாட்ட பேரணி

4b5b956169aae1f8b35e26fecdda7139?s=48&d=
vavuni-820x500.jpg
 
தாயகத்தில் இலங்கை அரசை படைகளாலும் துணை ஆயுதக்குழுக்களாலும் வலிந்து காணாமால் ஆக்கபட்டோருக்கு நீதி கோரி இன்று 30 ஆம் திகதி வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால்  மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
இன்று காலை 10.30 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பதாக ஏ-9வீதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
vav2.jpg
 
இதில் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், சிவில் அமைப்புக்கள், ஏனைய தனியார் நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன.
 
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் மட்டுமின்றி சர்வதேசத்தினாலும் எந்ததொரு தீர்வும் வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்கின்றது.
vav3.jpg
 
ஜநா அமர்வு நடைபெறவுள்ள நிலையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.