Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பறிபோகிறதா வவுனியா வடக்கு ஊற்றுப்புலம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பறிபோகிறதா வவுனியா வடக்கு ஊற்றுப்புலம்?

January 29, 2019

நடுக்காட்டிற்குள் பாரிய புத்தர் சிலை அமைத்துக் குடியேற்றம்!

image-7-1.png?resize=800%2C600

வவுனியா வடக்கில் காடுகள் அழிக்கப்பட்டு, பெரும்பான்மையினக் குடியேற்றம் இடம்பெறுவதாக நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர் துரைராசா தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார். அத்துடன் நாடு காட்டிற்குள் பாரிய புத்தர் சிலை ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு, நெடுங்கேணி பிரதேச சபைக்கு உட்பட்ட ஊற்றுக்குளம் கிராமப் பகுதியில் இவ்வாறு காடு கழிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுவ வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தமிழ் மக்களுக்குச் சொந்தமான பகுதியிலேயே இந்தக் குடியேற்ற முயற்சிகள் இடம்பெறுகின்றன.

வவுனியா, வடக்கு, ஊற்றுக் குளம் பகுதியில் தமிழ் மக்கள் வசித்து வந்துள்ளனர். போர் காரணமாக அப் பகுதியிலிருந்த தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்ட நிலையில், தற்போது அப்பகுதி காடு மண்டி காணப்படுகின்றது.

இந்த நிலையில் விவசாயம் செய்யச் சென்ற மக்கள் சிங்களக்குடியேற்றம் மற்றும் புத்தர்சிலை அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தெரிவித்துள்ளனர். அங்கு சில குடும்பங்கள் குடியேறியுள்ளதுடன் பிக்கு ஒருவர் குடியேறி பௌத்த விகாரை ஒன்றையும் அமைத்துள்ளார்.

அண்மையில் முல்லைத்தீவில் செம்மலையடி நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை அமைத்துள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பாரிய விசனத்தை தோற்றுவித்துள்ள நிலையில், வவுனியா வடக்கு ஊற்றுக்குளமும் பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த குடியேற்றம் மற்றும் புத்தர்சிலை திணிப்பு தொடர்பில் நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர் துரைராசா தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள புகைப்படங்களே இவையாகும்.

image-1-3.png?resize=800%2C600image-2-2.png?resize=800%2C600image-3-2.png?resize=800%2C600image-4-1.png?resize=800%2C600image-5-1.png?resize=701%2C470image-6-1.png?resize=800%2C600

 

http://globaltamilnews.net/2019/111567/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் கிராமத்தை அழித்து- சிங்கள மயமாக்க முயற்சி!!

பதிவேற்றிய காலம்: Jan 30, 2019

வடக்கு மாகா­ணத்­தின் வவு­னியா வடக்கு, ஊற்­றுக்­கு­ளம் என்ற தமிழ் கிரா­மத்­தில் காடு அழிக்­கப்­பட்டு புத்­தா் சிலை நிறு­வப்­பட்டு, அதைச் சூழ சிங்­க­ளக் குடும்­பங்­க­ளைக் குடி­யேற்­றும் நோக்­கத்­தில் கொட்­டில்­கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன என்று பிர­தேச மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

வடக்கு மாகா­ணத்­தின் முல்­லைத்­தீவு, வவு­னியா போன்ற மாவட்­டங்­க­ளின் எல்­லைக் கிரா­மங்­கள் திட்­ட­மிட்­டுச் சிங்­கள மயப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன, தமி­ழர் காணி­களை அப­க­ரித்து அடாத்­தா­கப் புத்த விகா­ரை­கள், சிலை­கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன என்று தொடர்ச்­சி­யா­கக் குற்­றச்­சாட்­டுக் கள் முன்­வைக்­கப்­பட்டு வரும் நிலை­யில் மற்­று­மொரு தமிழ்க் கிரா­மத்­தில் சிங்­க­ளக் குடி­யேற்­றத் துக்­கான முன்­னேற்­பா­டு­கள் நடை­பெ­று­கின்­றன என்ற தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

 

தமி­ழர் பூர்­வீ­கக் கிரா­மம்
நெடுங்­கே­ணிப் பிர­தேச செய­லர் பிரி­வுக்­குட்­பட்­டது ஊற்­றுக்­கு­ளம் கிரா­மம். இந்­தக் கிரா­மத்­தில் தமிழ் மக்­கள் பூர்­வீ­க­மாக வாழ்ந்து வந்­த­னர். போர் கார­ண­மாக அவர்­கள் இடம்­பெ­யர்ந்­த­னர். இன்­ன­மும் அங்கு மீளக் குடி­ய­ம­ரா­த­போ­தும், அங்கு விவ­சாய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.
தற்­போது ஊற்­றுக்­கு­ளம் கிரா­மத்­தில் திடீ­ரெ­னப் புத்­தர் சிலை ஒன்று நிறு­வப்­பட்­டுள்­ளது. அந்­தப் பகு­தி­யில் குளம் ஒன்­றும் புதி­தாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தப் பகு­தி­யில் புதி­தா­கக் கொட்­டில்­க­ளும் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அங்கு சிங்­கள மக்­க­ளைக் குடி­யேற்­றும் நட­வ­டிக்­கை­கள் இர­க­சி­ய­மாக, முழு­வீச்­சில் நடை­பெ­று­கின்­றன என்று பிர­தேச மக்­கள் கூறு­கின்­ற­னர்.

திடீர்ப் புத்­தர் சிலை
இந்த விட­ய­தைப் பிர­தேச மக்­கள் நெடுக்­கே­ணிப் பிர­தேச சபை­யின் கவ­னத்­துக்­குக் கொண்டு வந்­துள்­ள­னர். நெடுங்­கே­ணிப் பிர­தேச சபைத் தவி­சா­ளர், உறுப்­பி­னர்­கள் அந்­தப் பகு­திக்கு நேர­டி­யா­கச் சென்று ஆராய்ந்­த­னர்.
இது தொடர்­பாக சபை­யின் தவி­சா­ளர் தணி­கா­ச­லம் “உத­னுக்கு” தெரி­வித்­த­தா­வது-

அந்­தப் பகு­தி­யில் 200 ஏக்­க­ருக்கு நீர் வழங்­கக் கூடிய வகை­யில் குளம் ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தப் பகுதி தமி­ழர்­கள் வாழ்ந்த நிலங்­கள்­தான். அங்கு 2 அடிக்­கும் உய­ர­மான புத்­தர் சிலை ஒன்று நிறு­வப்­பட்­டுள்­ளது. அங்கு பௌத்த பிக்கு ஒரு­வர் உள்­ளார். அவ­ருக்கு இரு காவ­லா­ளி­க­ளும் உள்­ள­னர். சிலைக்­குச் செல்­லும் இரு பக்­க­மும் சிறிய கொட்­டில்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அந்­தப் பகு­தி­யில் சிங்­க­ளக் குடி­யேற்­றத்தை உரு­வாக்க முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது மக்­கள் மக்­கள் அச்­சம் கொண்­டுள்­ள­னர். இது தொடர்­பாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களே அர­சி­டம் பேச வேண்­டும். நாங்­கள் இது தொடர்­பா­கப் பிரே­ரணை ஒன்­றைக் கொண்­டு­வ­ர­வுள்­ளோம்.- என்­றார்.

 

திணைக்­க­ளங்­கள் உடந்தை
மகா­வலி அதி­கார சபை­யும், வன வளத் திணைக்­க­ள­மும் இதற்கு உடந்தை என்று மக்­கள் கூறு­கின்­ற­னர். வவு­னியா, எல்­லைக் கிரா­மங்­க­ளில் இருந்து இடம்­பெ­யர்ந்த தமிழ் மக்­கள் அங்கு மீளக் குடி­ய­ம­ரும்­போது அங்­குள்ள மரங்­களை வெட்­டு­வ­தற்கு வன வளத் திணைக்­க­ளம் தடை போடு­கின்­றது. மக்­கள் மீது நீதி­மன்­றங்­க­ளில் வழக்­குத் தாக்­கல் செய்­கின்­றது. ஆனால் இவர்­கள் காடு­களை அழித்து குடி­யேற்­றங்­க­ளைச் செய்­யும்­போது மௌன­மாக வேடிக்கை பார்க்­கின்­றது என்று பிர­தேச மக்­கள் கடும் விச­னம் வெளி­யிட்­ட­னர்.

திட்­ட­மிட்ட செயல்
தமிழ்­கள் பாரம்­ப­ரி­ய­மாக வாழ்ந்த இடங்­க­ளைத் திட்­ட­மிட்ட வகை­யில் பெளத்த மய­மாக்­கும் நட­வ­டிக்­கை­கள் தற்­போது அதி­க­ரித்­துள்­ளன. முல்­லைத்­தீவு, செம்­ம­லை­யில் உள்ள நீரா­விப் பிள்­ளை­யார் ஆலய வளா­கத்­தில் அண்­மை­யில் நீதி­மன்ற உத்­த­ர­வை­யும் மீறிப் புத்­தர் சிலை நிறு­வப்­பட்­டி­ருந்­தது. அதைப்­போன்று வவு­னி­யா­வில் ஊற்­றுக் குளத்தை அடுத்­துள்ள கச்­சல் சம­னங்­கு­ளத்­தை­யும், அதை அண்­டிய பகு­தி­க­ளை­யும் பௌத்த மய­மாக்கி சப்­பு­மல்­கஸ்­கந்த என்று பெயர்­மாற்றி சிங்­க­ளக் குடி­யேற்­றம் அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது என்று அந்­தப் பகுதி மக்­கள் குற்­றங்­சாட்­டி­யி­ருந்­த­னர். தற்­போது ஊற்­றுப்­பு­லம் கிரா­மத்­தில் திடீ­ரெ­னப் புத்­தர் சிலை அமைக்­கப்­பட்­டுள்­ளது.

 

வடக்கு மாகாண ஆளு­ந­ரா­கப் பத­வி­யேற்­றுள்ள சுரேன் ராக­வன் திட்­ட­மிட்ட வகை­யில் தமி­ழர்­க­ளின் பூர்­வீக இடங்­க­ளில் பௌத்த மய­மாக்­கல் நடை­பெ­று­வதை ஏற்­றுக் கொள்ள முடி­யாது என்று தெரி­வித்­தி­ருந்­தார். இது தொடர்­பாக உரிய தரப்­பு­டன் பேசு­வ­தன் ஊடாக அதைத் தடுக்க முடி­யும் என்­றும் கூறி­யி­ருந்­தார்.

தமிழ் அர­சி­யல் தலை­வர்­க­ளும் இந்த விட­யங்­கள் தொடர்­பா­கக் கருத்­துத் தெரி­வித்து வரு­கின்­ற­னர். ஆனால் அனைத்­தும் பேச்­ச­ள­வி­லேயே உள்­ளன. எந்த நட­வ­டிக்­கை­க­ளும் எடுக்­கப்­ப­டாத நிலை­யில் தமது பூர்­வீக இடங்­கள் வெகு வேக­மாக மறைந்து வரு­கின்­றன என்று மக்­கள் வேத­னை­யு­டன் தெரி­வித்­த­னர்.

1110.jpg1112.jpg

 

 

https://newuthayan.com/story/12/தமிழர்-கிராமத்தை-அழித்து-சிங்கள-மயமாக்க-முயற்சி.html

இதெல்லாம் எங்கள் சுமந்திரனின் ராஜ தந்திரம் .....சிங்களவர்களை கோபமடைய செய்யாதீர்கள் ..... என்ன அக்கறை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.