Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க நடிகருடன் கட்டிப் பிடித்து முத்தம்: நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக ரசிகர்கள் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க நடிகருடன் கட்டிப் பிடித்து முத்தம்: நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக ரசிகர்கள் போராட்டம்

போபால், ஏப்.17-

லண்டனில் சேனல் 4 என்ற தொலைக் காட்சி நிறுவனம் நடத்திய `பிக்பிரதர்' நிகழ்ச்சியில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி கலந்து கொண்டார். அப்போது அவரை போட்டியில் கலந்து கொண்ட ஆங்கில நடிகைகள் நிறவெறி பாகுபாட்டுடன் நடத்தியது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த பரபரப்பு ஷில்பா ஷெட்டிக்கு சாதகமாக அமைந்தது. அவர் போட்டியில் வெற்றி பெற்று கோடிக்கணக்கான பரிசினை வென்றார். உலகம் முழுவதும் புகழ் பெற்றார்.

இப்போதும் அவர் ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொண்டுள்ளார். ஆனால் இந்த பிரச்சினை அவருக்கு எதிராக கிளம்பி, போராட்டத்தை தூண்டி உள்ளது.

டெல்லியில் எயிட்ஸ் விழிப்புணர்வு பிரசாரமும், எயிட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியும் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியும், அமெரிக்க நடிகர் ரிச்சர்ட் கெரியும் பங்கேற்றார்கள். இந்தி நடிகர் சன்னி தியோல் மற்றும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான லாரி டிரைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில் அமெரிக்க நடிகர் கெரி திடீரென ஷில்பா ஷெட்டியை இருகக் கட்டி அணைத்து, மாறி, மாறி முத்தம் கொடுத்தார். மிக, மிக நெருக்கமாக, பார்த்தவர்கள் முகம் சுழிக்கும் வகையில் இந்த முத்தம் நிகழ்ச்சி அமைந்து இருந்தது.

இந்த முத்தம் நிகழ்ச்சிக்கு இப்போது நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பா.ஜனதா கட்சியினரும், இந்து அமைப்பை சேர்ந்தவர்களும் ஷில்பா ஷெட்டியையும், அமெரிக்க நடிகர் கெரியையும் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள், ஷில்பா ஷெட்டியின் உருவ படங்களை எரித்தல் போன்ற போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவின் பெருமையை கெடுக்கும் வகையில், பண்பாட்டை சீரழிக்கும் வகையில் ஷில்பா ஷெட்டி நடந்து கொண்டார். ஆகவே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

டெல்லி, போபால், வாரணாசி,கான்பூர் உள்பட பல பகுதிகளில் இந்த போராட்டம் நேற்று நடந்தது. வாரணாசி நகரில் பல்வேறு இடங்களில் சிவசேனா தொண்டர்கள், வந்தே மாதரம் சங்கர்ஷ் சமிதியினர், இஸ்லாமியர்கள் இந்த போராட்டத்தை நடத்தினார்கள். கான்பூரில் போராட்டம் நடத்தியவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். அவர்கள் நடிகர் கெரி உடனடியாக இந்தியாவை விடு வெளியேற வேண்டும் என்று கோஷம் போட்டனர். போபாலில் போராட்டம் நடத்தியவர்கள் ஷில்பா ஷெட்டி மன்னிப்பு கேட்கா விட்டால் அவர் நடிக்கும் படங்களை பார்க்க மாட்டோம், திரையிடவும் விட மாட்டோம் என்று கூறினார்கள்.

மும்பையின் நவி மும்பை பகுதியில் `மெட்ரோ' என்ற சினிமா படப்பிடிப்பு நேற்று நடந்தது. அங்கு சென்ற சிவசேனா தொண்டர்கள் படப்பிடிப்பை நடத்த விடாமல் முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அவர்களை கைது செய்து படப்பிடிப்பு தொடர்ந்து நடக்க ஏற்பாடு செய்தனர்.

இது பற்றி நடிகை ஷில்பா ஷெட்டி பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

"அமெரிக்க நடிகர் ரிச்சர்ட் கெரி எயிட்ஸ் நோயாளிகளுக்கு சந்தோஷம் அளிக்கும் வகையிலும், எயிட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உணர்ச்சி மேலிட்டால் இவ்வாறு நடந்து கொண்டார். இப்படி முத்தமிடுவது அவர்கள் நாட்டு பண்பாடு, நமது கலாசாரத்துக்கு எதிரானது என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. தனது செயலுக்கு அவர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். போராட்டம் நடத்தும் அளவுக்கு இது ஒரு பெரிய விஷயமும் அல்ல, ஆபாசமும் அல்ல.

மக்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். அதற்காக இப்படி போராட்டம் நடத்தி, அவர் மோசமான நினைவுகளுடன் இங்கிருந்து செல்லும்படி ஆக்கி விடாதீர்கள். ஆகவே இதை எனது ரசிகர்களும், பொது மக்களும் பெரிது படுத்தாமல் விட்டு விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

மூலம்-மாலைமலர்

  • Replies 53
  • Views 8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியான ஜெலசி பிடிச்ச ரசிகர்கள் :angry: :angry:

gere_shetty_narrowweb__300x482,2.jpg

(புண்ணியவாங்கள் இதை தூக்கிடுவாங்களோ :) )

  • கருத்துக்கள உறவுகள்

அன்பா முத்தம் கொடுக்கிறதும் தப்பாப்பா...! இது கொஞ்சம் ஓவரான அன்பாப் போச்சு.. அதுக்கு ஆர்ப்பாட்டம்.. தீக்கிரை...! இந்தியர்கள் ரெம்ப சென்சிற்றிவ் போல..! ஆனா மேற்கில உள்ள இந்தியர்கள் இதெற்கு எல்லாம் எதிர்மாறு..! வெள்ளியானதும் லண்டன் பப்புகளில் வெள்ளையளை விட மோசமா கூத்தடிக்கிறது.. அவைதானேங்க..!

பண்பாடு மூட நம்பிக்கைகளாக அவமரியாதைக்குரியதாக இருக்கக் கூடாது. அந்த நடிகரைப் பார்த்தா சில்பாட அப்பா போல இருக்கார். அப்பா மகளுக்கு கிஸ் கொடுப்பதும் உலகில தப்பாப்போச்சா. எல்லாம் பார்க்கிற பார்வையில இருக்குது..! அவரும் கொஞ்சம் அதிகமா ரசிகர்களிடம் எதிர்பார்த்து முத்தம் கொடுத்துட்டார் போல..! :P

Edited by nedukkalapoovan

பாவம்..கிரேசி அமெரிக்கன்....ஊர் நினைப்புல நடந்துப்புட்டார்

இதுக்கெல்லாம் இப்படி ரகளை செய்யிறாங்களே பீச்சிலயும் ஹொட்டலிலையும் லொட்சிலையும் நடக்கும் அசிங்கத்துக்கு என்னத்தை செய்யிராங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கெல்லாம் இப்படி ரகளை செய்யிறாங்களே பீச்சிலயும் ஹொட்டலிலையும் லொட்சிலையும் நடக்கும் அசிங்கத்துக்கு என்னத்தை செய்யிராங்கள்

இது எயிட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தின் போது நடந்திருக்கே அதுதான்

தலை நாம இந்த பக்கத்துக்கு வந்தது பிழை இது அடல்ஸ் ஒன்லி போல இருக்கு நான் போறேன்

தலை நாம இந்த பக்கத்துக்கு வந்தது பிழை இது அடல்ஸ் ஒன்லி போல இருக்கு நான் போறேன்

ஜம்மு இரு நானும் வாறேச்.......... சீ ஜம்முவ போல என்ன போல குழந்தைகள் இருக்கு எண்டு விவஸ்தையே இல்லை :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலை நாம இந்த பக்கத்துக்கு வந்தது பிழை இது அடல்ஸ் ஒன்லி போல இருக்கு நான் போறேன்

முத்தத்துக்கு ஏதுங்க அடல்ஸ் ஒன்லி. கன்னத்தில் தானே முத்தம் இடுகிறார்

முத்தத்துக்கு ஏதுங்க அடல்ஸ் ஒன்லி. கன்னத்தில் தானே முத்தம் இடுகிறார்

சீ கன்ராவியா இருக்கு கப்பி அக்கா உங்களை மாதிரி வயசுக்கு வந்த ஆட்களுக்கு சரி நம்மள மாதிரி தலையை மாதிரி சின்ன பிள்ளைகளுக்கு

:angry:

சீ கன்ராவியா இருக்கு கப்பி அக்கா உங்களை மாதிரி வயசுக்கு வந்த ஆட்களுக்கு சரி நம்மள மாதிரி தலையை மாதிரி சின்ன பிள்ளைகளுக்கு

:angry:

ஆமா அபச்சாரம் அபச்சாரம் ஜம்மு வா போய் மம்மிகிட்ட கப்பியாண்டியா போட்டு கொடுப்பம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முத்தத்துக்கு ஏதுங்க அடல்ஸ் ஒன்லி. கன்னத்தில் தானே முத்தம் இடுகிறார்

ஓ....முத்தத்தில் வேறு சட்டதிட்டங்கள் இருக்கின்றனவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருந்தாலும் இந்த முத்தம் கொஞ்சம் ஓவர்தான்... இது மேல் நாட்டு கலாச்சாரத்தை விட கொஞ்சம்கூடிதான் போச்சு..

மேல்நாட்டுக்காரனே இதை கொஞ்சம் வேறை கண்ணோட்டத்தோடுதான் பார்ப்பார்கள்..

இங்கே சாதாரணமாக கட்டிப்பிடுபதுடன் சரி.. சரித்து வைத்து முத்தம்கொடுப்பது ஓவர்

  • கருத்துக்கள உறவுகள்

ஓ சாறி பாதை மாறி வந்துட்டன்.... :lol:

அதுசரி இங்க (இந்த பிரிவுக்க) என்ன கூட்டம்??மாப்ஸ், குசா, வானவில் உட்பட டைகர் பமிலி மெம்பர்ஸ் வேற நிக்கினம்?? :D

சரி சரி துடையுங்க, ரொம்பத்தான்.... :D :angry: :angry: அவன் கட்டிபிடிச்சானாம், இவன் முத்தம் குடுத்தானாம் எண்டு கொண்டு... :angry:

கள உறவுகளே இப்பவாவது றோயல் பமிலி மெம்பர்ஸை பற்றி புரிஞ்சுகொண்டியளா? றோயல் பமிலி மெம்பேர்ஸ் ஆண்மீகம், விளையாட்டு, அரசியல் பிரிவுக்க நிண்டுகொண்டு இருக்க, டைகர் பமிலியும், சீறோ பமிலியும் என்ன செய்யினம் எண்டு?? :angry: :angry:

கள உறவுகளே இப்பவாவது றோயல் பமிலி மெம்பர்ஸை பற்றி புரிஞ்சுகொண்டியளா? றோயல் பமிலி மெம்பேர்ஸ் ஆண்மீகம், விளையாட்டு, அரசியல் பிரிவுக்க நிண்டுகொண்டு இருக்க, டைகர் பமிலியும், சீறோ பமிலியும் என்ன செய்யினம் எண்டு?? :angry: :angry:

டைகர்பமிலி இதற்கு எதரா ஆர்பாட்டம் நடத்தினம் வடிவா பாரும்,வயசு போக போக கண்ணும் தெறியுது இல்லை

:lol:

ஓ....முத்தத்தில் வேறு சட்டதிட்டங்கள் இருக்கின்றனவா?

:angry: :angry: :angry:

குமாராசாமி அண்ணை, இது ஆம்பிளையள், பொம்பிளையளுக்கு கொடுக்கிற முத்தம். சட்டத்திற்கு உட்பட்டது. நீங்கள், கள்ளுக் கொட்டிலில் ஆம்பிளாயல், ஆம்பிளையளுக்கு கொடுக்கும் முத்தம், சட்டத்திற்கு அப்பாற்பட்டது.

குமாராசாமி அண்ணை, இது ஆம்பிளையள், பொம்பிளையளுக்கு கொடுக்கிற முத்தம். சட்டத்திற்கு உட்பட்டது. நீங்கள், கள்ளுக் கொட்டிலில் ஆம்பிளாயல், ஆம்பிளையளுக்கு கொடுக்கும் முத்தம், சட்டத்திற்கு அப்பாற்பட்டது.

இது என்ன கன்றாவி எங்களை மாதிரி சின்ன பிள்ளைகள் இருக்கிறது தெறியவில்லையா

:lol:

குமாராசாமி அண்ணை, இது ஆம்பிளையள், பொம்பிளையளுக்கு கொடுக்கிற முத்தம். சட்டத்திற்கு உட்பட்டது. நீங்கள், கள்ளுக் கொட்டிலில் ஆம்பிளாயல், ஆம்பிளையளுக்கு கொடுக்கும் முத்தம், சட்டத்திற்கு அப்பாற்பட்டது.

களவும் கற்று மற என்று அப்பு சொல்லுரவர். நீங்கள் இதுகளையும் படிக்க வோணும்.

களவும் கற்று மற என்று அப்பு சொல்லுரவர். நீங்கள் இதுகளையும் படிக்க வோணும்.

நேவர் என்ட மம்மி சொல்லி இருக்கா தீயாரோடு சேராதே அப்படி சேரினும் அவர்களின் அறிவுறைகளை கேட்காதே என்று

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே ரசிகர்கள்தான் சில்பா ஷெட்டியை பிக் பிரதர் நிகழ்ச்சியில் யாரோ ஒரு நடிகை இனவாத கருத்துக்கள் கூறியது என்பதற்காக இவருக்காக போர்க்கொடி தூக்கியவர்கள். இப்போ இவர்களே இவரை காலில் போட்டு மிதிக்கிறார்கள் என்ன லொஜிக்கோ.

ஆனால் ஷில்பா ஷெட்டி இதன் மூலம் ரொம்ப பிரபலம் அடைந்துவிட்டார். அடுத்து இவர் வடிவேலுவுடன் ஒரு படத்தில் நடிக்கப்போவதாக கதை உலாவுகிறது

இந்தியாவின் பெருமையை கெடுக்கும் வகையில், பண்பாட்டை சீரழிக்கும் வகையில் ஷில்பா ஷெட்டி நடந்து கொண்டார்.

சரி இப்பொழுது இவர்களின் வழியிலே போய் பார்த்தோமென்றால் பண்பாடுச்சின்னமாக திகழும் பாரத தேசத்தில் பண்பாடுச் சீரழிவுகள் தாராளமாகவே இருக்கின்றன. விபசாரவிடுதிகள் மதுபான சாலைகள் எனவும் போதைப்பொருட்கள் முதல் உடல் அங்கங்கள் வரை எல்லாம் வியாபாரமாக செய்கின்றனர். சாதரண குடும்பத்தவரே விபசாரத்தில் ஈடுபடுகின்றனர். உள்ளோர் வாசிகளை விட வெளிநாட்டு நபர்களுகே இவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனராம். இப்பொழுது பண்பாடு ???? இப்பொழுது எனக்கு ஒரு பாடல் ஞாபகத்துக்கு வருகின்றது "பாடு பாடு பாரத பண்பாடு" என்றபாடலே அது. என்ன இவர்கள் சம்பந்தமில்லாமல் ஏதோ ஏதோ எல்லாம் பாடுகின்றனர் :lol::D

சரி இப்படி இவர்கள் சிந்திப்பவர்களாக இருந்திருந்தால் ஏன் எயிட்ஸ் விழிப்புணர்வு கூட்டத்துக்கு ஒரு அமெரிக்கரை அழைக்க வேண்டும் அது தானே அங்கே உள்ளூருக்குள் ஏகப்பட்ட அமைச்சர்மார்களும், மந்திரிமார்களும் குவிந்து கிடக்கின்றனர் அவர்களில் ஒருவரை இழுத்து வந்து கூட்டத்தை வைக்கவேண்டியது தானே? :P :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேடையில் முத்தம்: ஷில்பா ஷெட்டி-நடிகர் மீது 2 வழக்குகள் பதிவு

புதுடெல்லி, ஏப். 18-

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பொது மேடையில் நடிகை ஷில்பா ஷெட்டியை ஆலிவுட் நடிகர் ரிச்சர்டு ஆவேசமாக கட்டிப்பிடித்து மாறி, மாறி முத்தமிட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள் ளது. பொது மேடையில் முத்தமிட்டு கொள்வது இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது என்று பல்வேறு அமைப்பினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். முத்தமிட்டதில் தவறு ஏதும் இல்லை என்று ஷில்பா ஷெட்டி கூறினார். இதனால் அவர் மீதும் பாய்ந்து உள்ளனர்.

ஷில்பா ஷெட்டி-ஆலிவுட் நடிகர்மீது போலீசிலும் புகார் கொடுத்து உள்ளனர். ஒரு புகார் ராஜஸ்தானிலும் இன்னொரு புகார் உத்தரபிரதேசத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் சந்திர பண்டாரி என்ற வக்கீல் புகார் மனு கொடுத்து உள்ளார். அதில் இருவரும் பொதுமேடையில் ஆபாசமாக நடந்துள்ளனர். இது 294 ஐ.பி.சி. சட்டப்படி குற்றமாகும் என்று கூறியுள் ளார்.

இதற்கான மனுவை அவர் நேரடியாக கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி தினேஷ் சந்திரா இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய டி.வி. நிறுவனம் இதன் முழு கேசட்டையும் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.

2-வது புகார் உத்தர பிரதேசம் மாநிலம் காசியா பாத்தில் கொடுக்கப்ட்டுள்ளது. 2 வக்கீல்கள் அங்குள்ள கோர்ட்டில் இது சம்பந்தமாக மனுதாக்கல் செய்தனர். அதில் ஷில்பா ஷெட்டி மற்றும் நிகழ்ச்சியை ஒளிபரப்பிய டி.வி. சானல்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி ரீனா சவுத்திரி முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

மூலம் - மாலைமலர்

முத்தம் கொடுத்ததற்கு 2 வழக்குகளா ?

சினிமாவில் இதைவிட மோசமாக எல்லாம் செய்கிறார்களே. அதை இந்தியா முழுவதும் இரசித்துப் பார்க்கிறார்கள்.

ஆனால் ரீவியில் ஒளிபரப்பியது தவறா ?

ஓ சாறி பாதை மாறி வந்துட்டன்.... :lol:

அதுசரி இங்க (இந்த பிரிவுக்க) என்ன கூட்டம்??மாப்ஸ், குசா, வானவில் உட்பட டைகர் பமிலி மெம்பர்ஸ் வேற நிக்கினம்?? :o

சரி சரி துடையுங்க, ரொம்பத்தான்.... :lol: :angry: :angry: அவன் கட்டிபிடிச்சானாம், இவன் முத்தம் குடுத்தானாம் எண்டு கொண்டு... :angry:

கள உறவுகளே இப்பவாவது றோயல் பமிலி மெம்பர்ஸை பற்றி புரிஞ்சுகொண்டியளா? றோயல் பமிலி மெம்பேர்ஸ் ஆண்மீகம், விளையாட்டு, அரசியல் பிரிவுக்க நிண்டுகொண்டு இருக்க, டைகர் பமிலியும், சீறோ பமிலியும் என்ன செய்யினம் எண்டு?? :angry: :angry:

உலகத்த்லையே சிறந்த முட்டாள் நாந்தான் அப்படி நம்ம டண் அடிக்கடி சொல்லுறார்

டைகர் பமிலி அதற்கெதிரா போராட்டம் செய்கிறார்கள் என்பது கூடத்தெரியவில்லை முட்டாள்களின் கூடாரம் றோயல் பமிலியினர் , அவர்கள் ஆன்மீகம், சமயம் அதுகுள்ள போயாச்சும் மூளை வருதா என்பதற்காகத்தான் போவர்கள் :lol:

உலகத்த்லையே சிறந்த முட்டாள் நாந்தான் அப்படி நம்ம டண் அடிக்கடி சொல்லுறார்

டைகர் பமிலி அதற்கெதிரா போராட்டம் செய்கிறார்கள் என்பது கூடத்தெரியவில்லை முட்டாள்களின் கூடாரம் றோயல் பமிலியினர் , அவர்கள் ஆன்மீகம், சமயம் அதுகுள்ள போயாச்சும் மூளை வருதா என்பதற்காகத்தான் போவர்கள் :lol:

இப்ப 3 வருசமா போயும் வராதது எனி தான் வர போகுதா

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.