Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் நலனுக்காக ஒன்றிணைந்து போராடுவதே உண்மையான ஒற்றுமை-சி.வி.விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நலனுக்காக ஒன்றிணைந்து போராடுவதே உண்மையான ஒற்றுமை-சி.வி.விக்னேஸ்வரன்

மக்கள் நலனுக்காக ஒன்றிணைந்து போராடுவதே உண்மையான ஒற்றுமை-சி.வி.விக்னேஸ்வரன்

கொள்கையின் அடிப்படையில் மக்கள் நலனுக்காக ஒன்றிணைந்து போராடுவதாகவே உண்மையான ஒற்றுமை அமைய வேண்டும் என்ற பாடத்தை மக்களுக்குப் புகட்டி வருவதாகவும் தமிழரின் ஒற்றுமையை தான் சீர்குலைக்கவில்லையென்றும், மாறாக மக்கள் மனதில் குடிகொண்டிருக்கும் அறியாமையை சீர்குலைக்க முயற்சிக்கின்றேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.அத்துடன் அவலத்திற்கும், அஸ்தமனத்திற்குமே ஒற்றுமை வழிவகுக்குமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வாராந்தம் ஒரு கேள்விக்கு பதிலளித்து வருகின்றார்.இந்த வாரம் தமிழர் ஒற்றுமையை குலைப்பதைத் தவிற, எந்த அடிப்படையில் உங்கள் கட்சி ஏனையவற்றிலிருந்து வேறுபடுமென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கணிதத்தில் மேம்பட்ட, கல்வியில் மேம்பட்ட எம்மவர்கள், பசப்பு வார்த்தைகளுக்கும், மாய்மாலங்களுக்கும் அடிமையாகிவிடுகின்றனரென குறிப்பிட்ட முன்னாள் முதலமைச்சர், அவர்களிடம் குடிகொண்டிருக்கும் ஆணவமும், செருக்குமே அதற்குக் காரணமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானவர்களை நாம் நாடாளுமன்றத்திற்கு அனுப்பினால் அவர்களுக்கு எமது ஒற்றுமை என்பது ஒரு பொருட்டாகாது என்றும் எமது ஒற்றுமை என்பது மற்றவர்கள் மதிப்பதான ஒற்றுமையாக இருக்க வேண்டுமே தவிற, தனிப்பட்ட நன்மைகளைப் பெறுவதற்காக நாம் ஒற்றுமையாக செயற்பட்டால் எவரும் மதிக்கமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/மக்கள்-நலனுக்காக-ஒன்றிண/

 

15 hours ago, கிருபன் said:

மக்கள் நலனுக்காக ஒன்றிணைந்து போராடுவதே உண்மையான ஒற்றுமை-சி.வி.விக்னேஸ்வரன் 

நல்லிணக்கம், ஜனநாயகம் என்ற போர்வையில் தமிழினப் படுகொலைகாரர்களுக்கு முண்டு கொடுத்து அவர்கள் அவ்வப்போது அளிக்கும் சுயலாபங்களை வாரி வாரிப் பெறுவதே உண்மையான ஒற்றுமை என்பது சம்மந்தன்-சுமந்திரன்-மாவை கும்பலின் தாரக மந்திரம்.

சம்பந்தனும் சுமந்திரனும் எப்ப தமிழ் மக்களுக்காக பேசி இருக்கிறார்கள் . இந்த துரோகிகள் ரணிலின் கழுவுபவர்கள் .... இவர்களை போய் .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.