Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையில் சித்திர பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவியை தண்டிப்பதாக அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

இந்தச் சம்பவம் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்றது. முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர் ஆசிரியரைக் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தினர்

ஆசிரியருக்கு எதிராக 345ஆம் பிரிவின் கீழ் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் காவற்துறையினர்  அறிக்கை தாக்கல் செய்தனர்.

சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, பிணை விண்ணப்பம் செய்தார். எனினும் சிறுமிகளைத் துன்புறுத்துவது பாரதூரமான குற்றம் என்று சுட்டிக்காட்டிய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், சந்தேகநபரை வரும் மார்ச் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

http://globaltamilnews.net/2019/113701/

8 hours ago, பிழம்பு said:

பதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை

இது போன்ற காமுகர்கள் உடனடியாக ஆசிரிய சேவையிலிருந்து விலக்கப்பட வேண்டியவர்கள்.

கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள் சிலரும் மிகமோசமான காமுகர்களாக உள்ளது ஏற்கனவே வெளிவந்த செய்தி. அந்தக் கயவர்களை அடையாளம் கண்டு வேலை நீக்கப்படுவதுடன், சிறைகளில் அடைக்கப்பட வேண்டும்.

பதவி நீக்கப்பட்ட முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசாவும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் இது போன்ற காமுகர்களுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.