Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் திங்களன்று- பூரண ஹர்த்தால்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகா­ணம் முழு­வ­தும் நாளை­ம­று­தி­னம் திங்­கட்­கி­ழமை காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைத் தேடும் உற­வு­க­ளின் ஏற்­பாட்­டில் முழு அடைப்­புப் போராட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இத­னால் வடக்கு முற்­றாக முடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இந்­தப் போராட்­டத்­துக்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, தமிழ் மக்­கள் கூட்­டணி, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ், அகில இலங்கை மக்­கள் காங்­கி­ரஸ், ஜன­நா­யக மக்­கள் முன்­னணி, சமத்­து­வம் சமூக நீதிக்­கான மக்­கள் அமைப்பு, யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யம் உள்­ளிட்ட பல தரப்­புக்­க­ளும் தங்­க­ளது முழு­மை­யான – – தார்­மீக ஆத­ரவை வழங்­கி­யுள்­ளன.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­கள் தமது தொடர் போராட்­டம் ஆரம்­பிக்­கப்­பட்டு இரண்டு ஆண்­டு­கள் நிறை­வ­டை­வதை முன்­னிட்­டும், ஐ.நா. மனித உரி­மை­கள் சபை அமர்வை இலக்கு வைத்­தும், நாளை மறு­தி­னம் திங்­கட் கிழமை வடக்கு மாகாணம் தழு­விய முழு அடைப்­புப் போராட்­டத்­துக்கு அறை­கூ­வல் விடுத்­துள்­ள­னர். அன்­றைய தினம் கிளி­நொச்சி நக­ரில் காலை கவ­ன­வீர்ப்­புப் போராட்­ட­மும் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­தப் போராட்­டத்­துக்கு அர­சி­யல் கட்­சி­கள், பொது அமைப்­புக்­கள், ஒன்­றி­யங்­கள், சிவில் சமூக அமைப்­புக்­கள் உள்­ளிட்ட பல தரப்­புக்­க­ளும் தங்­கள் ஆத­ரவை வழங்­கி­யுள்­ளார்­கள்.

இந்­தப் போராட்­டத்­துக்கு பல தரப்­புக்­க­ளும் முழு­மை­யாக ஆத­ரவை வழங்­கி­யுள்­ள­தால் அன்­றைய தினம் வடக்கு மாகா­ணத்­தின் இயல்பு நிலை முழு­மை­யா­கப் பாதிக்­கப்­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

போக்­கு­வ­ரத்­துச் சேவை­கள், வர்த்­தக சேவை­கள் உள்­ளிட்ட எல்­லாம் முடங்­கும். இதே­வேளை, அன்­றைய தினம் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளின் வலியை அறிந்து – உணர்ந்து சகல தரப்­புக்­க­ளும் நடந்து கொள்­ளும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தால், அன்­றைய தினம் வடக்கு மாகா­ணம் முற்­றாக முடங்­கக்­கூ­டும்.

இதே­வேளை, இது தொடர்­பில் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யம் நேற்­றி­ரவு விடுத்த ஊடக அறிக்­கை­யில்,

வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்கு நீதி வேண்­டி­யும் திங்­க­ளன்று ஆரம்­ப­மா­கும் ஜெனிவா மனித உரி­மை­கள் சபை அமர்வை முன்­னி­றுத்­தி­யும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளால் நாளை மறு­தி­னம் திங்­கட்­கி­ழமை முன்­னெ­டுக்­கப்­ப­டும் கவ­ன­வீர்ப்பு போராட்­டத்­துக்­கும், முழு­அ­டைப்­புப் போராட்­டத்­துக்­கும் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக சமூ­கம் முழு­மை­யான ஆத­ரவு நல்­கு­வ­தோடு அனை­வ­ரை­யும் ஆத­ரவு வழங்­கு­மாறு வேண்­டி­யும் நிற்­கின்­றது.

தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­மு­றை­க­ளுள் ஒன்­றா­கவே வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விவ­கா­ர­மும் காணப்­ப­டு­கின்­றது. உள்­ளக விசா­ர­ணைப் பொறி­மு­றை­யை­யும் உள்­ளக கலப்பு விசா­ர­ணைப் பொறி­மு­றை­யை­யும் எம்­மால் ஏற்­றுக் கொள்ள முடி­யாத நிலை­யில் தொடர்ந்­தும் ஜெனிவா மனித உரி­மை­கள் சபை­யால் மேற்­படி நட­வ­டிக்­கை­க­ளுக்கு கால அவ­கா­சம் வழங்­கப்­ப­டு­வ­தை­யும் எம்­மால் ஏற்­றுக் கொள்­ள­மு­டி­யா­துள்­ளது.

பொறுப்­புக்­கூ­றும் கடப்­பாட்டை நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க இலங்கை அரசு தொடர்ந்­தும் தவ­று­வ­த­னால் அந்­தக் குற்­றங்­கள் தொடர்­பில் பன்­னாட்டு நீதி­மன்ற விசா­ர­ணைப் பொறி­மு­றை­யின் கீழ் அதனை நிறை­வேற்ற வேண்­டிய அவ­சி­யம் எழு­வதை ஐ.நா. மனித உரி­மை­கள் சபை கவ­னத்­தில் கொள்ள வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கின்­றோம்.

தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­மு­றைகளுக்கான நியா­ய­மான தீர்வை பன்­னாட்டு விசா­ர­ணைப் பொறி­முறை ஒன்­றி­னூ­டா­கவே சாத்­தி­ய­மாக்க முடி­யும். ஐ.நா. பாது­காப்­புச் சபை ஊடாக இலங்கை விவ­கா­ரம் கையா­ளப்­பட வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கின்­றோம் – என்­றுள்­ளது.

இதே­போன்று பல தரப்­புக்­க­ளும் அன்­றைய தினம் நடை­பெ­ற­வுள்ள போராட்­டத்­துக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்­கி­யுள்­ளன.

https://newuthayan.com/story/08/வடக்கில்-திங்களன்று-பூரண-ஹர்த்தால்.html

 

19 minutes ago, பிழம்பு said:

வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்கு நீதி வேண்­டி­யும் திங்­க­ளன்று ஆரம்­ப­மா­கும் ஜெனிவா மனித உரி­மை­கள் சபை அமர்வை முன்­னி­றுத்­தி­யும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளால் நாளை மறு­தி­னம் திங்­கட்­கி­ழமை முன்­னெ­டுக்­கப்­ப­டும் கவ­ன­வீர்ப்பு போராட்­டத்­துக்­கும், முழு­அ­டைப்­புப் போராட்­டத்­துக்­கும் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக சமூ­கம் முழு­மை­யான ஆத­ரவு நல்­கு­வ­தோடு அனை­வ­ரை­யும் ஆத­ரவு வழங்­கு­மாறு வேண்­டி­யும் நிற்­கின்­றது.

இது போன்ற ஹர்த்தல்களில் உடன்பாடு இல்லையெனினும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் சதித்திட்டங்களை அம்பலப்படுத்த இது தவிர்க்க முடியாத செயலாக இருப்பதாலும், அனைவரும் இணைந்து முன்னெடுக்கும் போராட்டம் என்பதாலும், போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்! இதன் போது அவசர அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்படாது இருக்க வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.