Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனது நியூசிலாந்துப்பயணம்

Featured Replies

  • தொடங்கியவர்

மலையைச்சுற்றிச் சுற்றி மகிழூர்ந்து மேலே ஏறிச் சென்றது. மிகவும் கவனமாகச் செல்லவேண்டும். பாதுகாப்பற்ற வீதியாக இருந்தது.

p9270001fu6.jpg

  • Replies 253
  • Views 31.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நேரம் செல்ல, செல்ல ,பாதை மேலே போய்க் கொண்டிருந்தது. நேரமும் மாலை 4 மணியாகி விட, இனி மேலே சென்றால் இருளில் தான் திரும்பி வர வேண்டும் என்பதினாலும், இருளமுதல் குயின்ஸ்டவுன் செல்ல வேண்டும் என்பதினாலும் திரும்பி போக முடிவெடுத்தேன். ஆனால் திரும்பிச் செல்ல மகிழுந்தை திருப்புவதற்கு சிறிய இடமே இருந்தது. அப்படி திருப்பும்போது மறைவில் இருந்து வேறு வாகனங்கள் வந்தால் இடிபடும் அபாயமும் இருப்பதினால், நன்றாகத் திருப்பக்கூடிய இடம் வரை மேலே மகிழுந்தினைச் செலுத்தினேன் . சில நிமிடங்களில் பாதையின் அருகில் உலங்கு வானூர்தி வந்து இறங்கி மேலே செல்லக்கூடிய ஒரு இடம் இருந்தது. அங்கே மகிழுந்தை திருப்பக்கூடியதாக இருந்தது.

p9270002qc7.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

ஒருவாறு மலையின் அடிவாரத்துக்கு வந்து குயின்ஸ்டவுன் நோக்கி பிரயாணித்தேன். பாதை மீண்டும் குன்றுகள், மலைகளின் ஊடாகவே அமைந்திருந்தது. வலைந்து வலைந்து செல்லும் பாதைகளாகவே இருந்தது.

p9270003hf9.jpg

p9270004pz6.jpg

p9270005xg0.jpg

p9270006os1.jpg

  • தொடங்கியவர்

p9270007ab6.jpg

p9270008qn1.jpg

p9270009gf1.jpg

p9270010jz2.jpg

கீழே படத்தில் உள்ள அறை 15 பாகை கோணத்தில் சரிவாகக் கட்டப்பட்டுள்ளது. உள்ளே வழமைபோலக் கட்டப் பட்டிருந்தாலும், உள்ளே செல்லும் போது விழுந்து விடுவோமோ என்ற எண்ணம் ஏற்படும்.

p9270209tp1.jpg

tilted01bh7.jpg

அரவிந்தன் விபரமாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் முதல் போட்்ட படங்களை பார்த்துவிட்டு என்ன எல்லா நாட்டுலயும் ஒரேமாதிரித்தானே இருக்கிறது. புதிதாக சுவாரசியமாக ஏதாவது இருக்கிறதா என பார்த்துக்கொண்டு இருந்தேன். பசிலிங் வேல்ட் பார்க்கிறதுக்காக எண்டாலும் ஒருக்கா நீயுசிலாந் போகத்தான் வேணும் போல இருக்கு.

நன்றிகள் உங்கள் எழுத்துக்கான உழைப்புக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான கமராக் கோணங்களும், சிறந்த படப்பிடிப்புகளாகவும் இருக்கின்றன!!!!. வாழ்த்துகள் அரவிந்தன். :unsure::o

  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சுவி, விசால்.

விசால் - நீங்கள் ஐரோப்பியா, அமெரிக்கா , கனடா அகிய நாடுகளில் ஒன்றில் வாழ்கிறீர்கள் என நினைக்கிறேன். எனென்றால் நியூசிலாந்துப் படத்தைப் பார்த்து எல்லா நாடுகளும் ஒரே மாதிரியாக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். சுவிற்சலாந்து, அமெரிக்காவின் அட்லாண்டா, கனடாவின் சிலபகுதிகள் நியூசிலாந்தைப் போன்றவை.

  • தொடங்கியவர்

சில நிமிடப்பயணங்களின் முடிவில் கட்டிடங்கள் தெரிவது அவதானிக்கக்குடியதாக இருந்தது. மலைப்பிரதேசத்தில் இருந்து பிரயாணிக்கும் போது தூரத் தெரியும் கட்டிடங்கள் உள்ள பகுதிதான் குயின்ஸ்டவுன்.

p9270011dg7.jpg

மலையில் இருந்து பாக்கும் போது தெரிந்த குயின்ஸ்டவுன், மலையை விட்டு இறங்கியதும் தெரியவில்லை.

p9270012dp3.jpg

குயின்ஸ்டவுணை நோக்கிப் பிரயாணிக்க மேலும் 20 நிமிடங்கள் எடுத்தது.

  • தொடங்கியவர்

குயின்ஸ்டவுணில் தான் கிறைச்சேர்ச்சை விட்டு வெளிக்கிட்டபின்பு அதிகளவு கட்டிடங்கள், வாகனங்கள், மனிதர்களைக் காணக்கூடியதாக இருந்தது. மற்றைய இடங்களில் இரவு ஊரடங்குச் சட்டம் இருப்பது போல அமைதியாக இருந்தது. ஆனால் குயின்ஸ்டவுனில் இரவிலும் கடைகளும், உணவகங்களும் இரவு நேரத்திலும் திறந்து திருவிழா போலக் காட்சியளித்தது. கிரைஸ்சேர்ச்சுக்கு அடுத்தபடியாக அதிக வீதிகள் குயின்ஸ்டவுனில் காணப்பட்டன. படத்தில் காண்பது குயின்ஸ்டவுனின் வரைபடம். குயின்ஸ்டவுனைவிட மற்றைய இடங்கள் மிகவும் சிறியவை.(கிறைஸ் சேர்ச் தான் மிகவும் பெரியது.)

imageszl1.jpg

  • தொடங்கியவர்

குயின்ஸ்டவுனை(Queenstown) அடையும் போது கிட்டத்தட்ட மாலை 6 மணியாகிவிட்டது. அருகில் இருந்த சுற்றுலா மையத்திற்கு சென்றேன். அன்று இரவு பார்ப்பதற்கும், மறுநாள் (4ம் நாள்) குயின்ஸ்டவுனில் வேகமாகச் செல்லும் படகில் பயணிப்பதற்கும், 4ம் நாள் இரவு செல்லும் ரி-அனனு குகைக்குக்கு செல்வதற்கும், 5ம் நாள் செல்லும் மில்வோட் ஒலியில் படகில் பயணிப்பதற்கும் நுளைவுச்சீட்டினை முன்பதிவு செய்தேன். அன்று இரவு குயுன்ஸ்டவுன் skyline க்கு சென்றேன். மலையின் அடியில் இருந்து மலை உச்சிக்கு கம்பிகையிற்றினால்( cable car -gondola) மேலே செல்லவேண்டும்.

sgrlgondolabaseterminalyd0.jpg

sgrlgondolatopandcomplemu0.jpg

sgrlgondolaatduskuv1.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

மலை உச்சியை அடைந்ததும் அங்கே உணவகமும், மலை ஊச்சியில் இருந்து கீழே செல்லும் பாதையில் சறுக்கிக் கொண்டு செல்லும் விளையாடும் இடமும், நியூசிலாந்துப் பழங்குடியினர் ஆடும் ஆட்டம் நடைபெறும் இடமும் இருந்தது.

medium57ht0.jpg

  • தொடங்கியவர்

நியூசிலாந்துப் பழங்குடியினரை மெளரி(Maori) என்று அழைப்பார்கள். அவர்களின் மொழிகளில் உரத்த குரலில் பாடி ஆடுவதை இங்கு காணலாம்.

kiwihakatheatreif7.jpg

p9270012bn4.jpg

kiwihaka1cw1.jpg

kiwihaka2ae7.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

மெளரி மக்களது கடவுளின் சிலையினையும் இங்கு காணலாம்.

20072020qeenstown2020kiyu9.jpg

இம்மலை உச்சியில் இருந்து குயின்ஸ்டவுனில் அழகினை இரசிக்கலாம்.

20072020qeenstown2020goot3.jpg

20072020qeenstown2020golu6.jpg

  • தொடங்கியவர்

மலை உச்சியில் இருந்து இறங்கிய பின்பு இரவு குயின்ஸ்டவுனில் உள்ள உணவகங்களுக்கு சென்று பார்த்தேன். பெரும்பாலான உணவகங்களில் மக்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தார்கள். தாய்லாந்து உணவகம் ஒன்றுக்கு சென்றேன். அங்கும் மக்கள் நிரம்பி வழிந்து சிலர் வரிசையில் இடம் கிடைக்கும் வரை நின்றார்கள். ஒருவாறு 10,15 நிமிடங்களின் பின்பு இடம் கிடைத்தது. உணவை உண்டதும் அன்று இரவு தங்கும் விடுதிக்கு சென்றேன். விடுதி ஒரு ஏரிக்கரையின் அருகில் இருந்தது.

p9280016tg9.jpg

  • தொடங்கியவர்

4ம் நாள் அன்று மதியம் வரை குயின்ஸ்டவுன்(Queenstown). பிறகு கிட்டத்தட்ட 2.15 மணித்தியாலங்கள் பிரயாணம் செய்து ரி-அன(Te Anau) என்ற இடத்தை அடைவது.

m252603wq4.gif

  • தொடங்கியவர்

எனது பயணத்தின் போது தங்கியிருந்த விடுதிகளில் காலை உணவினை உண்பதற்கு மேலதிகமாக 10 - 20 நியூசிலாந்து வெள்ளிகள் கொடுக்கவேண்டும். அப்பணத்தினை விட குறைந்த பணத்துக்கு வெளியில் உள்ள உணவகங்களில் சுவையான உணவுகளை உண்ணலாம் என்பதினால் காலை உணவினை பயணத்தின் போது வெளியிலே உண்டேன். ஆனால் நான் தங்கியிருந்த குயின்ஸ்டவுன் விடுதியில் தங்குமிட வாடகையுடன் கால உணவினையும் தந்தார்கள்(அதாவது காலை உணவு இலவசம்). காலை உணவினை விடுதியில் உண்டபின்பு( இதே விடுதியில் தான் நான் 5ம் நாள் பயணமுடிவில் தங்கினேன்)முதல் நாள் வாங்கிய நுளைவுச்சீட்டினை உபயோகித்து வேகமாகச் செல்லும் படகில் செல்லும் இடத்துக்கு புறப்பட்டேன். அப்படகில் செல்வதினை விட இன்னொரு நிற்வாகத்தினரால் நடாத்தப்படும் படகில் செல்வது தான் நன்றாக இருக்கும் என்று விடுதியில் வேலை செய்பவர்களில் ஒருவர் சொன்னார். எனினும் முதலில் நுளைவுச்சீட்டினை வாங்கியதினால் அப்படகு இருக்கும் இடத்துக்கு புறப்பட்டேன்.

புகைப்படங்களில் இருப்பது குயின்ஸ்டவுன் உள்ள வீதிகள்

40921156xy2.png

800pxqueenstownmallhy9.jpg

queenstownshoppingarealj1.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்
p9280019lt0.jpg
  • தொடங்கியவர்

நீர் உட்புகாத மேலாடையினை அணிந்து Kawarau Jet என்ற படகில் பிரயாணித்தோம். படகில் செல்லச்செல்ல பயங்கர குளிராக இருந்தது. நீர் உட்புகாத ஆடை அணிந்திருந்தாலும் வேகமாகச் செல்லச் செல்ல முகத்தில் ஏரி நீர் அடிக்க முகம் குளிராக இருந்தது. அத்துடன் கைகளினால் படகின் கம்பியினைப் பிடிக்கும் போது கை விரைக்கத் தொடங்கியது. வேகமாகச் சென்ற படகு 180 பாகையில் வேகமாக திரும்பி பிரயாணித்தது.

airporttthumbyg5.jpg

kjet41thumbjl9.jpg

kjet32thumbul8.jpg

kjet07thumbkw6.jpg

jetboatev5.jpg

  • தொடங்கியவர்

கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் படகு வேகமாக மலைகளில் அருகிலும், செடி, கொடிகளின் கீழாகவும் பிரயாணித்தது. கீழே உள்ள படகில் தான் நான் பிரயாணித்தது. இப்படகில் நான் இருக்கிறேன். சிவப்பு நிற மேலாடை அணிந்தவர் தான் படகோட்டி.

p9280024ase0.jpg

  • தொடங்கியவர்

அவுச்திரேலியாத் தொலைக்காட்சிகளில் சுற்றுலா பற்றிய நிகழ்ச்சிகளில் நியூசிலாந்துச் சுற்றுலா பற்றிக் காண்பிக்கும் போது பெரும்பாலும் shot over jet என்ற வேகப் படகினைக் காட்டுவார்கள். நான் சென்ற Kawarau Jet படகை விட shot over jet படகில் பிரயாணம் செய்வது நன்றாக இருக்கும் என நான் தங்கியிருந்த விடுதியில் வேலை செய்பவர் சொன்னதினால், அத்துடன் நேரமிருந்ததினால் shot over jet படகு இருக்கும் இடத்துக்கு சென்றேன். இப்படகு வேறு ஒரு ஏரியில் பிரயாணிக்கிறது. பாறைகளுக்கிடையிலான குறுகிய இடைவெளியில் வேகமாகச் செல்லும். அத்துடன் பாறைகளுடன் மோதுவது போல வேகமாக பாறையினை நோக்கி சென்று பாறைக்கு கிட்ட படகு வந்தவுடன், படகோட்டி வேகமாக படகைத்திருப்பி பாறையுடன் மோதாமல் செய்வார்.

p9280025wm7.jpg

15320shotover20jet20040ik3.jpg

15620shotover20jet20040ou1.jpg

அரவிந்தன் நீங்கள் மீண்டும் நியூசிலாந்து போவதாக கேள்விப்பட்டன். உங்கள் சுற்றுலா பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அரவிந்தன் நீங்கள் மீண்டும் நியூசிலாந்து போவதாக கேள்விப்பட்டன். உங்கள் சுற்றுலா பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

மீண்டும் ஒரு இலவசப் பயணம்(அடிக்கடி பயணிப்பதினால் பெற்ற புள்ளிகளினால் இலவசப் பயணம் செய்ய முடிந்தது). ஆனால் இம்முறை முழுமையான சுற்றுலாவாக அமையவில்லை. தெரிந்தவர்களைச் சந்திக்க சென்றேன். செல்லும் போது சில இடங்களுக்கு சுற்றுலா சென்றேன். வட நியூசிலாந்தில் ஒக்லண்ட், ரொட்டுரா ஆகிய இடங்களுக்கும் சில தீவுகளுக்கும், தென் நியூசிலாந்தில் கன்மா பிரிங் என்ற இடத்துக்கும் சென்றேன். பார்த்தவற்றை தற்பொழுது எழுதும் நியூசிலாந்துப் பயணம் முடிவடைந்ததும் எழுதுவேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரவிந்தன்

அருமையான பயணக்கட்டுரை. இன்றுதான் படித்தேன். இப்போது யாழ் இணையத்தைத் தினமும் படித்தாலும் கருத்தெழுத விரும்புவதில்லை. ஆனால் உங்கள் இந்தப் பகுதியைப் பார்த்ததும் எழுதமால் இருக்க முடியவில்லை. பாடசாலையில் மாணவர்கள் படைக்கும் சிறந்த படங்களுடன் அமைந்த ஓர் சிறந்த Project work மாதிரி அமைந்துள்ளது. படித்து முடித்ததும் நீயூசிலாந்திற்கே சென்று வந்ததுபோல் ஒர் உணர்வும் என்னுள்ளே ஏற்பட்டது. எனக்கும் சிறுவயதிலிருந்தே புகைப்படங்கள் எடுப்பதில் அளவற்ற ஆவல். சில வருடங்களுக்கு முன்னர் தாயகம் சென்று பார்த்தபோது நான் புலம் பெயர்ந்து வந்தபோது பல ஆண்டுகளாக எடுத்து அழகாக அடுக்கி வைத்திருந்த ஒரு புகைப்படம்கூடக் கிடைக்கவில்லை. சிங்கள இராணுவம் வீடுவீடாகச் சென்று வீடுகளின் கூரைகளை இழுத்து வீழ்த்தியதாகவும், அங்கிருந்த பொருட்களையெல்லாம் எடுத்துச்சென்றதாகவும் அறிந்தேன். உங்கள் அழகான படங்களைப் பார்த்தபோது அவைதான் என் நினைவிற்கு வந்தன. அதனால்தான் அதனையும் இங்கே குறிப்பிடுகின்றேன்.

உங்கள் அருமையான கட்டுரைக்கு எனது பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அரவிந்தன் உங்கள் பயணகட்டுரைக்கும், அருமையான படங்களுக்கும். நண்பர் ஒருவர் paramedic trainning காக நியூசிலாந்து போய் வந்திருக்கிறார். அவரும் பல படங்களை காட்டினார்.வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயமாக நியூசிலாந்து போக ஆசையுண்டு. அரவிந்தன், தொடருங்கள் உங்கள் கட்டுரையை.

  • தொடங்கியவர்

நன்றிகள் செல்வமுத்து ஆசிரியர், நுனாவிலான்.

முன்பு நான் பிரயாணித்த வனு-அற்று என்ற நாட்டைப் பற்றிய சுற்றுலாப் பிரயாணத்தை வாசிக்க விரும்பினால் பின்வரும் இணைப்பிற்கு செல்லுங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=12184

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.