Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுபாண்மை இனத்தவர்களின் வாக்குகள் தேவையில்லை!!!கோத்தபாய ராஜபக்ச.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபாண்மை இனத்தவர்களின் வாக்குகள் தேவையில்லை!!!கோத்தபாய ராஜபக்ச.

சிறுபாண்மை இனத்தவர்களின் வாக்குகளைப் பெறாமல் தன்னால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இந்திய ஆங்கில ஊடகமொன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் கட்சிகள் பிழையான திசையில் பயணித்துக்கொண்டுள்ளன எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அவர்கள் ஆட்சியில் பங்குகொண்டு தங்களது மக்களை அபிவிருத்தி செய்யவிரும்பில்லை,அதிகாரத்திற்கு வெளியே எதிர்கட்சியாகவிருந்து அவர்கள் எதனை சாதித்துள்ளனர் வடமாகாணத்திற்கு பொறுப்பாக அவர்களை மக்கள் தெரிவு செய்தவேளை அவர்கள் எந்த அபிவிருத்தியையும் முன்னெடுக்கவில்லை.

மேலும் அபிவிருத்திக்காக அனுப்பபட்ட நிதியை திருப்பினுப்பினர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இனஅடிப்படையிலான அரசியல் அரசியல் தீர்வையும் பொருளாதார அபிவிருத்தியையும் தாமதித்துள்ளது எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும் நாடு கடந்த மூன்றுதசாப்த காலமாக சிக்கியுள்ள சேற்றிலிருந்து அதனை மீட்பதற்கு இனரீதியில் பக்கச்சார்பற்ற -சமூக பொருளாதார அபிவிருத்தியை நோக்கமாக கொண்ட -மையநீரோட்டத்துடன் சாரத தலைவர் ஒருவரிற்காக இலங்கை ஏங்குகின்றது என தான் நம்புவதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனவே நான் வெற்றிபெறுவேன் என நம்புவதற்கு இதுவே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கோத்தபாய ராஜபக்ச தனது இனரீதியில் பக்கச்சார்பற்ற அபிவிருத்தியை நோக்கமாக கொண்ட நிகழ்சிநிரல் காரணமாக சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகளையும் தன்னால் பெறமுடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் வாக்குகள் குறித்து மாத்திரம் சிந்திக்கும் அபிவிருத்தி குறித்து அக்கறை கொள்ளாத அரசியல்வாதிகள் குறித்து மக்கள் களைப்படைந்துவிட்டனர் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.நான் ஒரு மையநீரோட்ட அரசியல்வாதியில்லை இதுவே எனக்குள்ள சாதகமான நிலை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நான் சிறுபான்மையினரின் வாக்குகளை பெறவேண்டும் என்பது அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் 2010 இல் தமிழ் மக்களின் ஆதரவு இல்லாமல் மகிந்த ராஜபக்ச 1.8 மில்லியன் வாக்குகளை பெற்றார் என குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகளை பெறாததால் அவர் 2015 இல் தோல்வியடையவில்லை மாறாக கம்பஹா,கொழும்பு போன்ற பகுதிகளை சேர்ந்த நடுத்தர வர்க்க சிங்களவர்கள் அவரிற்கு வாக்களிக்காததன் காரணமாகவே அவர் தோல்வியடைந்தார் எனவும் கோத்தபாயராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும் மகிந்த ராஜபக்ச 449000 வாக்குகளாலேயே தோல்வியடைந்தார், தனக்கு சாதகமில்லாத நிலையிலும் அவர் வடக்கில் 100,000 வாக்குகளை பெற்றார் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் கௌரவத்துடன் வாழ்வதற்கான தமிழர்களின் வேண்டுகோள்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச கௌரவம் என்பது அரசியல் அதிகாரத்தின் மூலம் மாத்திரம் கிடைப்பது என நான் கருதவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.மக்களிற்கு உரிய கௌரவத்தை வழங்குவது என்பது அவர்களது வருமானத்தை உயர்த்தி வாழ்க்கை தரத்தை உயர்த்துவது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அதிகாரங்களிற்கான தமிழர்களின் போராட்டத்திற்கு பொருளாதாரமே காரணம் தமிழ் அரசியல்வாதிகள் தெரிவிப்பது போன்று அரசியல் காரணங்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அதிகாரப்பகிர்வு பிரச்சினைகளிற்கு தீர்வை கொண்டுவருமா என தமிழ் அரசியல்வாதிகள் தங்களை தாங்களே கேட்டுக்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.68A6B7C4-CF76-484A-B86E-2A3659FA1287-300

http://tamilleader.com/சிறுபாண்மை-இனத்தவர்களின

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு தமிழர்களின் ஆதரவு தேவையில்லை-கோட்டாபய

 

 

கொழும்பில் ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனாதிபதித் தேர்தலில் எம்மால் வெற்றிபெற முடியும். இதற்கு சிறுபான்மையினரின் குறிப்பாக தமிழர்களின் ஆதரவுதான் அவசியமென்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.எம்மால் சிங்களப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைக்க முடியம். 2010இல் மகிந்த ராஜபக்ஷ, தமிழர்களின் ஆதரவு இல்லாமல், 1.8 மில்லியன் வாக்குகளால் வெற்றி பெற்றிருந்தார் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அந்த சாதகமற்ற சூழ்நிலையில் கூட மகிந்த ராஜபக்ஷவுக்கு, வடக்கில் 1 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்களின் வாக்குகள் கிடைத்திருந்தமையும் அனைவரும் அறிந்த விடயமாகும்” எனவும் ஆனால், 2015இல் அவர் தோல்வியடைந்தமைக்கு, தமிழ், முஸ்லிம்களின் ஆதரவு கிடைக்காதது காரணமல்ல. கொழும்பு, கம்பகா போன்ற மாவட்டங்களில் உள்ள நகரப்பகுதிகளில் உள்ள நடுத்தர மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. அதனால் 449,000 வாக்குகளால் மாத்திரமே அவர் தோல்வியடைந்தார் என தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/ஜனாதிபதித்-தேர்தலில்-வெற/

  • கருத்துக்கள உறவுகள்

இவரது ஜடியா, முழு சிங்களவரும் தனக்கு தான் குத்தப் போகினம் என்டது தான். நிணைப்புதான் பிழைப்பை கெடுக்குமாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.