Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையின் நீதித்துறையும் ஒரு தாயின் தேடலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் நீதித்துறையும் ஒரு தாயின் தேடலும்

கடந்த 10 ஆண்டுகளாக அந்த 50 வயதான தாயார், சரோஜினி நாகநாதன், தனது மகனுக்கான நீதி கோரி சளைக்காமல் ஒரு நீதிமன்றதில் இருந்து அடுத்த நீதிமன்றம் வரை சென்றுகொண்டிருக்கிறார்.

கடந்த வியாழனன்று முன்னாள் நேவி கொமாண்டர், தான் கைது  செய்யப் படக் கூடாதென்று தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமைகள் மனு விசாரணைக்கு, இலங்கையின் உச்ச நீதிமன்றின் மூன்று நீதிபதிகள் முன் வந்த போது, அங்கேயும் வந்திருந்தார். கருப்பு நிற சேலையில், 5 மணிநேரம் நீண்ட அந்த விசாரணையில், அயர்வுடன் ஆனால், கவனமாக விசாரணையினை கவனித்துக் கொண்டு இருந்தார் அந்த தாயார்.

மகனை இழந்து தேடும் அந்த தாயாரையும், அதற்கு காரணமானவர் என குற்றம் சுமத்தப் பட்டுள்ள  இலங்கை முன்னாள் நேவி கொமாண்டரையும்,  இலங்கை நீதித்துறை எவ்வாறு வித்தியாசமாக கையாள்கின்றது என்பது  குறிப்பிடத்தக்களவு வெளிப்படையானது.

பல ஆண்டுகளாக மகனைக் காணவில்லை என்ற அவரது முறைப்பாட்டினை, நேவி கொமாண்டர் கருணாகொடவுடனும், அவரது உயர் அதிகாரிகளுடனும் அவர்கள் கோரிய கப்பத்துக்கான அவரது குடும்பம் நடத்திய பேச்சு வார்த்தைகளின் பின்னரும் கூட போலீஸ் நிலையங்களும், நீதிமன்றங்களும் எடுக்க மறுத்தன.

2011 ம் ஆண்டில் அவர் சமர்ப்பித்த ஆட்க்கொணர்வு மனு இன்னும் தீர்வு இல்லாமல் நீதிமன்றில் தூங்கிக் கொண்டு இருக்கிறது.

வேறு ஒரு தெய்வாதீனமான நிகழ்வினால் (கருணாகொடவின் மனைவியுடன் கள்ள தொடர்ப்பு கொண்ட, அவரது கப்பகுழுவின் குழுவின் தலைவன் சரத், விவகாரம்), CID பிரிவினரால், மேற்கொள்ளப்படட துல்லியமான விசாரணைகளினால், 14  சந்தேக நபர்களில், 13 பேர் கைதாக 14வது ஆளாக கைதாவதில் இருந்து விலக்கு பெற கருணாகொட வந்த வழக்கிலேயே, அவர் வியாழனன்று தனது மகன் தொடரபில் நீதி கிடைக்கும் என்ற ஒரு சிறு நம்பிக்கையுடன் வந்திருந்தார்

சிஐடியினரின் விசாரணைகள் மூலம், கடற்படை தளபதி கருணாகொட, அன்றைய யுத்த நிலைமையினை சாதகமாக பயன்படுத்தி,  கொழும்பு நகரத்தின் பணக்காரர்களின் பிள்ளைகளை கடத்தி பணம் பறிக்கும் ஒரு சட்டத்துக்கு புறம்பான வகையில் இயங்கும் இலங்கை கடற்படையின், குழுவொன்றினை தலைமை தாங்கி நடாத்தி இருந்தார் என தெரிய வந்தது. 

ராஜிவ் நாகநாதன் உள்பட்ட  11 பேரை கடத்தி, கொலை செய்த வழக்கில், கடந்த பெப்ரவரி 22 அன்றே, கருணாகொட, 14வது சந்தேக நபராக சேர்க்கப்பட்டார். அன்றைய தினமே அவரை கைது செய்ய சிஐடியினர் முயன்றனர்.

இது தொடர்பில், உள்  தகவல்கள் வந்ததும் தலைமறைவான கருணாகொட, அதே தினத்தில், உச்ச நீதிமன்றில் தான் கைது செய்யப் படக் கூடாது என்று அடிப்படை மனித உரிமை வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு பெப்ரவரி 28ம் திகதி அன்று முதலில் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கு ஜூரிகள் இல்லாத trail at  bar விசேட நீதிமன்றில் விசாரிக்கப் பட உள்ளதாகவும், கருணாகொட கைதாக மாடடார்  என உத்தரவாதம் தர முடியாது எனவும்  சட்ட மா அதிபர் திணைகளித்தினால்  தெரிவிக்கப் பட்டிருந்தது.

அன்றைய தினம், திருமதி நாகநாதன், அமர்வில் இருந்த நீதிபதிகளில் ஒருவர், தான் முன்னர் ஓர் சட்டதரணியாக, கருணாகொடவுக்கு சேவை ஒன்றினை தனிப்பட்ட சேவை செய்த வகையில், தான் இந்த வழக்கில் இருந்து விலகிக்  கொள்வதாக அறிவித்ததனைப் பார்த்தார்.   

கடத்தலில், கொலையிலும், ஒரு குழுவாக அதன் தளபதியின் நேரடி கண்காணிப்பில்  இயங்கிய,  ஒரு சக்திமிக்க படைதரப்பில்   இருந்து சாட்சிகளை திரட்டுவதும் , ஒருங்கிணைப்பதும் மிக மிக கடினமானது என்பதனையும், அந்த வேலையினை மிகவும் நேர்த்தியாக  சிஐடியினரின்  செய்தார்கள் என்பதனையும் திருமதி நாகநாதன் அறிந்திருந்தார்.

ஒத்துழைத்த இரு சாட்சிகள் கருணாகொடவினால், நேரடியாகவே மிக கடுமையாக எச்சரிக்கப்பட்டிருந்தனர். வேறு ஒருவரோ துப்பாக்கியின் பின்புறத்தினால் தாக்கப் பட்டிருந்தார். வேறு பலரோ, பதவி உயர்வுகள் மறுக்கப் பட்டிருந்தனர் என்பதனையும் அவர் அறிந்து இருந்தார். 

தனது மகனின், கடத்தல், கொலை விடயத்தில், நாட்டின் அதி உயர் நீதிமன்றம், கருணாகொட, நாட்டின் சட்டத்துக்கு மேலானவர் என்ற நிலைப்பாட்டினை எடுத்தால், மேலும் சாட்சிகள் வெளியே வரவும், நேர்மையாக சாட்சி சொல்வதற்கும் பயப்படுவார்கள் என அவர் பயம் கொண்டிருந்தார்.


இலங்கையின், ராணுவ, விமான, கடற் படையினரின் புலனாய்வு அமைப்புகளையோ, நாட்டின் தேசிய புலனாய்வு அமைப்போ கடத்தப் பட்ட 11 பெரும், கருணாகொட சொல்வது போல் அன்றி எவ்வித பயங்கரவாத தொடர்பும் இல்லாதவர்கள் என சிஐடியின விசாரித்து அறிந்து  கொண்டிருந்தனர்.

கடத்தப்பட்ட 11 பெரும், கொழும்பின் கடற்படை முகாமின் 'புட்டுக்குழாய்' எனும் சிறையில் வைத்திருக்கப் பட்டு பின்னர் திருகோணமலை முகாமுக்கு அனுப்பி வைக்கப் பட்டு இருந்தனர். 2009 மே மாதத்தின் இறுதி வாரத்தில் அங்கே அவர்கள் கொல்லப் பட்டு உடல்கள் மறைக்கப் பட்டு விட்டன.

கடந்த மார்ச் மாதம் 5ம் திகதி வியாழன் அன்று  தனது மகனுக்கான நீதி தேடும் அந்த தாய் அங்கே கறுப்புச் சேலையில், ஐந்து மணிநேர விசாரணையில் அமர்ந்து இருந்தார்.

அவரது மனுவில், முன்னாள் கடற்படை தளபதியின்  ஆசை மனைவியின், ஆசை நாயகரான அவரது உதவியாளரும், கப்ப குழுவின் ஒருங்கிணைப்பாளருமான கொமாண்டர் சாரதி முனசிங்கவுக்கும் இடையேயான காதல் குறித்த அதிரவைக்கும் தகவல்கள் கொண்டதாக இருந்தது.

காணாமல் போயிருந்தவர்கள் மீதான அக்கறை அல்ல, இந்த கள்ளக்காதல் குறித்த கரிசனையே, கருணாகொடவை, முனசிங்கவுக்கு எதிராக போலீசாரிடம் புகார் கொடுக்க வைத்தது. ஆனால் முனசிங்க, எனக்கு உன் மனைவி இல்லாவிடில், உனக்கு என் காதலி இல்லை (கொய்யால, என்ன உள்ளாரா போட்டுட்டு, என் காதலியோடு ஜாலியா இருக்கலாம் என்று நினைக்கிறியா ) என்ற ரீதியில் போட்டுக் கொடுக்க விசயம் வெளியே வந்தது.

கடத்தல் ஒருங்கிணைப்பாளர் முனசிங்கவும், கடத்தல் குழுவின் தலைவர் நேவி சம்பத் என்ற கொமாண்டர் சந்தன கெட்டியாராச்சி என்பவரும் ஒரே கேபினை பாவித்திருந்தார்கள். இதனை சிஐடியினர் திறந்த போது, பணம், காணாமல் போன்றோர் பலரின் அடையாள அட்டைகள், கடவுசீட்டுக்கள் இருந்தன.

***

தேசப் பக்தியாளனாய் எனது ரத்தம் கொதிக்கிறது... முழங்கினார், கருணாகொடவின் சட்டத்தரணி ரொமேஷ் டீ  சில்வா. 

சிஐடியினர், திருகோணமலையில் 11 பேர்கள் தடுத்து வைக்கப் பட்டு இருந்ததாக சொல்லப் பட்ட  இடத்தை பார்த்தது சரி. ஆனால், அதே இடத்தினை ஐநா குழுவினர் பார்வையிட இவர்கள் எப்படி வசதி செய்து கொடுத்தார்கள். அவர்களது தேச அபிமான ரத்தம் கொதிக்கவில்லையா என்று மீண்டும் முழங்கினார் அவர்.

தனது இரண்டு மணி நேர வாதத்தின் போது, இது போன்ற நேர்மையில்லாத, தவறான, இனவாத நோக்கத்தில் அமைந்த, வாதங்களை முன் வைத்தார். 

வியக்க வைக்கும் விதமாக, இவரது இந்த அபத்தங்களுக்கு, 'Objection, your honour' சொல்லாமல், அமைதியாக ஒருவகையில் இணங்குவது போலவே அமர்ந்து இருந்தார், அரச வழக்கு தொடுனரான, சடட மா அதிபர் பிரதிநிதி விராஜ் டயரத்னா.

ஜெனீவா மகாநாடு நடப்பதனால், அழுத்தங்கள் காரணமாகவே தனது கட்சிக்காரர் கருணாகொட கடைசியாக சேர்க்கப் பட்டிருக்கிறார் என்றார் ரொமேஷ்.

இந்த மனிதர் எமக்காக யுத்தத்தினை வென்று தந்தவர். அவருக்கு நாம் நன்றி உடையவராக இருக்க வேண்டாமா?. NGO மற்றும் அது போன்ற அமைப்புகளில் தங்கி இருப்பவர்கள் தான் இந்த வழக்கினை கிளறிக் கொண்டு இருக்கிறார்கள் என அதிரவைத்தார், இந்த ரொமேஸ் டீ  சில்வா. இவரே கோத்தபாய சம்பந்தமான வழக்குகளுக்கும் ஆஜராகும் நபராவர்.

முன்னாள் அமைச்சர் ஒருவரும், 4 கடற்படை அதிகாரிகளும் மொத்தமாக 5 பேர், கருணாகொடவுக்கு எதிராக சாட் டசியம் அளித்த போதிலும், பச்சை பொய்யாக, ஓய்வு பெற்ற இரு கடற்படை அதிகாரிகள் தாமதமாக கொடுத்த பொய்யான சாட் சியம் காரணமாகவே தனது கடசிக்காரர் வழக்கில் இழுத்து விடப்பட்டு உள்ளார் என்றார் அவர்.

சின்னையா என்ற அந்த (தமிழர்) அதிகாரி முதல் நாள் சாட் சியம் அளிக்கிறார், மறுநாள் அவர் கடற்படை தளபதி ஆகின்றார் என்றால் என்ன புரிகிறது என்றார் அவர்.

கிழக்கு கடற்படை தளபதியாக இருந்த டிராவிஸ் சின்னையா, கருணாகொட, தனக்கு வழங்கி இருந்த கடுமையான உத்தரவின் படி, தனது அதிகாரத்துக்கு உள்ளான பகுதியாக இருந்தாலும், அங்கே (11 பேர் தடுத்து வைக்கப் பட்டிருந்த) gunsite எனுமிடத்தில் தான் எக்காரணம் கொண்டும் போக கூடாது என்றும், தனது நேரடி ஆளுமைக்கு உரிய இடமாக சொல்லி இருந்தார் என்றும், தனக்கு கீழான அதிகாரி சுமித் ரணசிங்கவும், கடற்படை பேச்சாளர் ரத்னாயக்க மட்டுமே அங்கே போக தன்னால் அனுமதி வழங்கப் பட்டிருப்பதாகவும் தெரியப்படுத்தி இருந்தார் எனவும் CID  யினருக்கு சொல்லி இருந்தார். 

சிஐடி விசாரணை அதிகாரி நிசாந்த டீ சில்வா  (அரைத்தமிழர்) குறித்தும் பல விச  கருத்துக்களை கூறி இருந்தார் ரொமேஷ். அவர் ஒரு hangman என்றும், சமாதானத்தின் எதிரி என்றும் சொல்லி இருந்தார்.

அரச தரப்பின் விராஜ் டயரத்னா எவ்வித மறுப்போ, ஆட்சேபமோ தெரிவிக்காமல் அவரது வாதத்தின் போக்கினை தடுக்க முயலாமல், தனது திணைக்களத்தின் மீதான அவதூறுகளைக் கூட நிராகரிக்காமல் அமர்ந்து இருந்தார்.

கருணாகொடவின் பிரமாணம் இன்னும் பெறப் படவில்லை எனவும் அதை தராமல் அவர் தவிர்த்துக் கொண்டிருப்பதாகவும் அதனை அவர் கொடுக்காதவரையில் சிஐடியினர் மிகுதி 13 பேரின் பிரமாணத்தை மீதே அவர் மீதான நிலைப்பாட்டினை கொண்டிருக்க வேண்டி உள்ளது என தெரிவித்தார். அவர் இந்த வழக்கில் எந்தளவில் சம்பந்தப் பட்டுள்ளார் என்பது அவர் அளிக்கும்  சாடசியத்தில் தான் தங்கி இருக்கும் ஆகையால் அவர் சாட்சியம் அளிப்பது  முக்கியமானது என தெரிவித்தார்.

திருமதி நாகநாதன் சட்டத்தரணி வெலியமுனா  பேச எழுந்த போது, அவரை வாதாட அனுமதிக்க கூடாது என ரொமேஷ் சத்தமிட்டார். இந்த 14வது  சந்தேகநபர் கைதாகவிடில், அவரது செல்வாக்கு குறித்து பயம் உண்டாகி, சாட்சிகள் வர பயப்படுவார்கள் என்றார், வெலியமுனா. 

ஆயினும் ரொமேஷ் வாதத்தின் பக்கம் சார்ந்த நீதிமன்றம் அவரை மேலே பேச அனுமதிக்கவில்லை.

இவர் கைது  செய்யப்படக்கூடாது என்பதே எனது கோரிக்கை என்றார் ரொமேஷ். 

எரிச்சல் அடைந்த வெலியமுனா, தனது கட்சிக்காரர் திருமதி நாகநாதன், மீதும் ஒரு குற்ற பத்திரிகை ஒன்றினை ரொமேஷ் டீ  சில்வாவே தாக்கல் செய்யலாமே என்றார் நையாண்டியாக. 

இந்த வழக்கு தொடர்பில், ரொமேஷ் டீ சில்வா நீதிமன்றுக்கு சொன்னது போலல்லாது, இன்னும் 20 பேருக்கு மேல் விசாரிக்க பட வேண்டு உள்ளது என தெரிய வருகிறது. இதனை முடிக்க இரு மாதங்களாவது ஆகலாம்.

நீதிமன்று, தலைமறைவாய் இருக்கும் கருணாகொட, கைதாக  மாட்டார் என்னும் உத்தரவாதத்துடன் 11ம் திகதி, திங்களன்று சிஐடியினரை சந்தித்து வாக்குமூலம் கொடுக்க தயாராக உள்ளாரா என்று கேட்டது.

ரொமேஷ் தனக்கு பின்னால் அமர்ந்து இருந்த ஒரு லாயரை  திரும்பி பார்த்தார்.

லோயராக வேலை செய்யாத அவர், ஒரு வியாபாரியாவார் . அவரது மொபைல் தொலைபேசி, நீதிமன்றில் நடப்பதை வேறு ஒருவர் கேட்கும் வண்ணம் தொடர்பில் இருந்தது. எழுந்து வெளியே சென்று பேசி திரும்பி வந்து, ரொமேஷ் காதில் குசுகுசுக்க,
ஆம் என்றார் ரொமேஷ், நீதிபதிகளிடம். நாட்டின் உச்ச நீதிமன்றில், இவ்வாறு யாரேனும் பொதுமக்கள், தலைமறைவாய் இருக்கும் ஒருவருக்கு தொலைபேசி இணைப்பில் வைத்து நடந்து கொண்டால், சிறைக்கு தான் அனுப்பப் பட்டிருப்பார்கள்.

ரொமேஷ் கேட்டவாறே தீர்ப்பும் வழங்கப் பட்டது.

இந்த தீர்ப்பின் மூலம், இந்த வழக்கு முடியும் வரை அவர் கைதாகாமல் இருக்கும் வழி பிறந்துள்ளது. இது சக்தி மிக்க ஒருசிலரால் மட்டுமே பெறக் கூடிய நன்மையாகும்.

இன்னுமொருநாள், இன்னுமொரு நீதிமன்றம்.... 

பத்து ஆண்டுகளாக மகனைத் தேடும் அந்த அந்த தாயின் கதறல், அதன் காதில் விழவில்லை.

அந்தத்தாய் இதோ வீடு திரும்பி விட்டார். நாட்டின் பெரும் யுத்தவீரர் என பதக்கங்கள் அணிவிக்கப்பட்ட, காணாமல் போன தனது மகனை வீட்டுக்கு அனுப்பி வைப்பதாக சொன்ன ஒருவரின் விடுதலை, தனது மகனின் அவலத்திலும் பார்க்க முக்கியமானதாக நீதிமன்றின் கண்களில் தெரிந்துள்ளது என்பதை நினைத்து கொண்டாலும், ஏதோ ஒரு நம்பிக்கையில் அவர் வீடு திரும்பி விட்டார்.

மே 2009ல் யுத்த காலத்தில் கருணாகொட தனது பதவியினால், நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானவர்கள் என்று கருதக் கூடிய யாரையுமே (கொல்ல) அழிக்க கூடியவராக இருந்தார் என ரொமேஷ் டீ சில்வா, மிக மிக தெளிவாக, நாட்டின் உச்ச நீதிமன்றில் சொல்லி விட்டார். 

இந்த அதிகாரம் வேறு யார், யாருக்கு இருந்தது என திருமதி நாகநாதன் நினைத்திருப்பார். அவர்கள் கூட, நாட்டின் சட்டங்களுக்கு  மேலானவர்கள் தானோ என அந்த தாய் மனம் வெதும்பி இருப்பார்.

நன்றி: சண்டே ஆப்செர்வேர்.

யாழ்க்காக எனது மொழிபெயர்ப்பு.

இந்த அழகில், இவர்கள் தாங்களே யுத்த விசாரணை நடத்துவர்களாம்...புத்தம் சரணம் கச்சாமி.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

நன்றி: சண்டே ஆப்செர்வேர்.

யாழ்க்காக எனது மொழிபெயர்ப்பு.

 இந்த அழகில், இவர்கள் தாங்களே யுத்த விசாரணை நடத்துவர்களாம்...புத்தம் சரணம் கச்சாமி.

நாதம் உங்களின் அண்மைய பொழிபெயர்ப்பு என்பது என்பது பலருக்கும் உதவியாக உள்ளது.
ஆங்கிலம் தெரிந்தவர்களுக்குக் கூட தமிழில் செய்தியை படிக்க பார்க்க தனி ஒரு சுகம்.

உங்கள் சேவைக்கு நன்றி நாதம்.
தொடர்ந்தும் முக்கியமான செய்திகளை தமிழில் தொகுத்து வழங்குங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அம்மாவிற்கு மட்டும் இல்லை...அவரைப் போல பிள்ளைகளை இழந்து தவிக்கும் அனைத்து அம்மாக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

அந்த அம்மாவிற்கு மட்டும் இல்லை...அவரைப் போல பிள்ளைகளை இழந்து தவிக்கும் அனைத்து அம்மாக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் 

இப்படி இனவாதத்துடன், அவர்கள், அணுகும் போது எப்படி கிடைக்கும் நீதி? 😡

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.