Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பொலிஸாரின் நம்பகத்தன்மை தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ள ரெமிடியஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பொலிஸாரின் நம்பகத்தன்மை தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ள ரெமிடியஸ்

குற்றம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினால் அந்த குற்றம் தடுக்கப்படுகிறதோ இல்லையோ, பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபரை குற்றவாளியே தொலைபேசியில் தொடர்புகொண்டு எச்சரிக்கை செய்யும் அளவிற்கு யாழ்.பொலிஸாருடைய நம்பகத்தன்மை உள்ளதென ஈ.பி.டி.பி கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான மு.ரெமிடியஸ் யாழ்.பொலிஸார் தொடர்பில் வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்.மாநகர சபையின் அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. 

அமர்வின் போது குற்றங்களை தடுக்க விசேட பொலிஸ் காவலரண் அமைப்பது தொடர்பில் சபையில் பேசப்பட்ட போதே மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். கரையோரப் பகுதியில் அளவுக்கு அதிகமாக நடைபெறும் மணல் அகழ்வு தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினால் அத்தகவல் தொடர்பில் பொலிஸார் இரகசியம் பேணுவதும் இல்லை, அக் குற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதிலும் மந்த நிலையை கடைப்பிடிக்கின்றார்கள்.

குறிப்பாக அண்மையில் யாழ்ப்பாணத்தில் மணல் கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபர் ஒருவருக்கு அந்த மணல் கடத்தலில் ஈடுபட்டவரே தொலைபேசியில் அழைத்து அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது .

எனவே  பொலிஸாருக்கும் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது என தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/51796

 

இதன் பின்னால் போலீசாருக்கு பணம் கொடுக்கப்படுகின்றது ..... இந்த போலீசாரும் பொறுக்கிகளும் ஒன்றுதான் ....இன்னுமொரு விடயம் ....இந்த மணல் திருட்டுகு பின்னால் உள்ள கூட்டமைப்பு நபர்களையும் வெளிக்கொணர வேண்டும் ....
 

19 hours ago, கிருபன் said:

குற்றம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினால் அந்த குற்றம் தடுக்கப்படுகிறதோ இல்லையோ, பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபரை குற்றவாளியே தொலைபேசியில் தொடர்புகொண்டு எச்சரிக்கை செய்யும் அளவிற்கு யாழ்.பொலிஸாருடைய நம்பகத்தன்மை உள்ளதென ஈ.பி.டி.பி கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான மு.ரெமிடியஸ் யாழ்.பொலிஸார் தொடர்பில் வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இது வடமாகாணத்தில் அன்றாடம் பரவலாக நடக்கும் சம்பவங்கள் தான்!

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத குழுக்களில் ஒன்றான சிங்கள போலீஸ் மற்றும் முப்படைப் பயங்கரவாதிகளின் துணையுடன் தான் வடமாகாணத்தில் இடம்பெறும் 95% க்கு மேற்பட்ட சமூக விரோத செயல்கள் இடம்பெற்று  வருகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.