Jump to content

ஸ்டெர்லைட் வலியால் திமுக, அதிமுகவை தூத்துக்குடி மக்கள் புறக்கணிப்பார்கள்; என்னை ஆதரிப்பார்கள்: வ.கவுதமன் சிறப்புப் பேட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"வலி சுமந்து நிற்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். அந்த வலி திமுகவும் அதிமுகவும் பாஜகவும் தந்தது. அதனால் அவர்களால் இந்தக் கட்சிகள் புறக்கணிக்கப்படும். அவர்களுக்குத் தேவை ஒரு மாற்று. அவர்களிடம் இருப்பதைக் காக்கவும் இழந்ததை மீட்கவும் அந்த மாற்றாக இருந்து இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவுள்ளேன்" எனக் கூறுகிறார் தமிழ்ப் பேரரசு கட்சியின் தலைவர் வ.கவுதமன்.

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவிலிருந்து தமிழிசை சவுந்தரராஜன் நிறுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினருடன் வ.கவுதமன் ஞாயிறு அன்று ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம், நெடுவாசல் போராட்டம், விவசாயிகள் போராட்டம், நீட் எதிர்ப்புப் போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் குரல் கொடுத்தவர் இயக்குநர் வ.கவுதமன். சில மாதங்களுக்கு முன்னதாக அரசியல் கட்சியை அறிவித்தார். தமிழ்ப் பேரரசு என்று கட்சிக்கு பெயர் சூட்டினார். தற்போது அவர் தூத்துக்குடியில் போட்டியிடவிரும்புவதாகக் கூறியிருக்கும் நிலையில் 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் அவரை அணுகினோம்.

மக்களவைத் தேர்தலில் நீங்கள் தூத்துக்குடியில் போட்டியிடுவது உறுதிதானா?

ஆம். தூத்துக்குடியில் நான் போட்டியிடுவது என்று முடிவு செய்திருக்கிறேன். ஆனால், தேர்தல் அரசியலுக்கு பொருளாதாரம் அவசியம். இந்தத் தேர்தலுக்கான அடிப்படை பொருளாதார உதவி நியாயமான முறையில் கிடைக்கும்போது தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகிவிடும்.

கனிமொழியை வேட்பாளாராக அறிவித்துவிட்டது திமுக. அதிமுக கூட்டணியில் தமிழிசைக்கு வாய்ப்பு என்று கூறப்படுகிறது. இவர்களுடன் நீங்கள் போட்டியிடுவது சமமான போட்டியாக இருக்குமா?

இருக்கட்டுமே. தூத்துக்குடி மக்கள் வலி சுமந்து நிற்கிறார்கள். இந்த வலி ஸ்டெர்லைட்டைத் தொடங்கி வைத்த திமுக, வளர்த்தெடுத்த அதிமுக, அடித்தளம் போட்ட பாஜக என எல்லா கட்சிகளாலும் விளைந்தது. வலியில் இருக்கும் மக்கள் திமுக, அதிமுக, பாஜகவைப் புறக்கணிப்பார்கள். தூத்துக்குடியில் இந்தக் கட்சிகளால் ஏற்பட்ட ரத்தக்கறை இன்னும் அழியவில்லை.

மக்கள் அழைப்பு விடுத்ததின் பேரிலேயே நான் தேர்தலில் போட்டியிடுவதை பரிசீலித்தேன். நாங்கள் தேர்தலைப் புறக்கணிக்கக்கூடாது என நினைத்தால் நீங்கள் போட்டியிட வேண்டும் என்பதே அந்த மக்களின் கோரிக்கை. அதனை ஏற்றே நான் களம் காணத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

இது ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவின் குரல் மட்டுமா? இல்லை ஒட்டுமொத்த தூத்துக்குடியின் குரல் என நினைக்கிறீர்களா?

ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு என்று தனி சமூகமா இருக்கிறது? தூத்துக்குடி மக்கள்தானே அவர்கள். வணிகர்கள், வியாபாரிகள் மக்கள், விவசாயிகள் என பலதரப்பினரும் என்னிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். மேலும், நான் ஒன்றும் திடீரென்று மக்களிடம் நிற்கவில்லை. மக்களோடு மக்களாக பல களங்களில் நின்றிருக்கிறேன். ஸ்டெர்லைட்டை எதிர்த்து ஐ.நா.வரை குரல் கொடுத்ததால் திமுக, அதிமுகவைவிட அவர்கள் என்னை நம்புகின்றனர். அவர்களுக்கு நான் நேர்மையான முகமாகத் தெரிகிறேன்.

தூத்துக்குடி மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் நேர்மையான முகத்தைத் தேடிக்கொண்டிருக்கிறது. மாற்று அரசியலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது.

தூத்துக்குடியில் மட்டும்தான் போட்டியா?

நிச்சயமாக இந்த முறை தூத்துக்குடியில் மட்டும்தான். அதற்கே பொருளாதார உதவியை நாடியிருக்கிறேன்.

சரி, தேர்தல் களத்தில் எதை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பீர்கள்?

இந்த மண்ணின் நிலமும், இனமும், உடைமையும், உரிமையும் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் நோக்கம். இருப்பதைக் காக்கவும் இழந்ததை மீட்கவும் முழங்குவேன். தூத்துக்குடி மக்களின் ஆதரவு நிறையவே இருக்கிறது என்பதை அவர்களுடனான சந்திப்பு புரியவைத்துவிட்டது.

முதன்முறை களம் காண உள்ளீர்கள். வெளியில் இருந்து ஆதரவு ஏதும் கோரியிருக்கிறீர்களா?

டிடிவி தினகரனிடம் பேசியிருக்கிறேன். அவரும் இதுதொடர்பாக என்னிடம் சில முறை பேசியிருக்கிறார். சீமானிடமும் பேசியிருக்கிறேன். இவர்கள் எல்லோரும் பாஜகவை, அதிமுகவை, திமுகவை எதிர்க்கிறார்கள். அந்தப் புள்ளியில் எங்களுக்குள் ஒற்றுமை இருக்கிறது. அவர்கள் ஆதரவு கிடைத்தால் நலமே.

மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசனிடம் பேசவில்லையா?

பேசவில்லை.. பேசவும் மாட்டோம். ஏனெனில், கமல் இயங்கவில்லை, இயக்கப்படுகிறார். தேர்தலில் அவர் பெறும் வாக்குகளை அறுவடை செய்பவர் யார் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அப்போது உங்களுக்கு உண்மை புரியும். அவரை இயக்குபவர்கள் எங்களை வேரறுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.

இந்தத் தேர்தலிலும் பணம் பேசுமா?

இந்தத் தேர்தலில்தான் பணம் மிகக் கடுமையாக பேசப்போகிறது. காரணம் களத்தில் இருப்பவர்கள் எல்லோரும் நேர்மையற்றவர்கள். அவர்கள் மக்கள் கோபத்தைப் போக்கும் ஒரே ஆயுதமாக பணத்தை மட்டுமே பார்க்கின்றனர். ஆனால், மக்கள் கோபத்துக்கு பணம் மருந்தாக இருக்கப் போவதில்லை என்பதை அவர்கள் அளிக்கும் வாக்குகள் உணர்த்தும்.

இவ்வாறு வ.கவுதமன் கூறினார்.

https://tamil.thehindu.com/opinion/reporter-page/article26569300.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாரணாசியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய பிரதமர் மோடி முன்னிலையில் 
    • முள்ளிவாய்க்கால் நிலம் - துரைராஜா ஜெயராஜா June 4, 2024   தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிறைவுபெற்றுவிட்டது. பெருமளவான மக்களின் பங்கேற்புடனும், சர்வதேச அமைப்புகளின் – சர்வதேச ஊடகங்களின் நேரடி கண்காணிப்பின் கீழும் இவ்வருட நினைவேந்தல் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. நினைவேந்தலை வெறும் அழுது, ஆறுவதற்கான சம்பிரதாய நிகழ்வாக அல்லாமல், இங்கு இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதையும், அதனை அடுத்தடுத்த சந்ததியினரும் நினைவுகொள்ளவேண்டும் என்பதையும் பங்கேற்பாளர்கள் உணர்த்தியிருந்தார்கள். இன்னொருவிதத்தில் சொல்வதானால், முள்ளிவாய்க்கால் மண்ணும், அது தகிப்போடு வைத்திருக்கும் நினைவுகளும் அழுதரற்றுவதற்கானவை அல்ல, தமிழ் தேசிய எழுச்சிக்கானவை என்பதை வெளிப்படுத்தின.  இவ்வாறானதொரு கற்பித்தலை செய்திருக்கும் நினைவேந்தலைக் குழப்புவதற்கு இலங்கை அரசு பல வேலைகளை முன்னெடுத்தது. அதில் முதன்மையானது, நினைவேந்தல் விடயத்தில் வடக்கு, கிழக்கு எனத் தனித்தனியாகக் கையாண்டமை. கிழக்கில் குவிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்கள், தமிழ் ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்கள் இந்தப் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களும் மிகுந்த விசுவாசத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் கிழக்கில் கட்டுப்படுத்திக்கொடுத்தனர். முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியவர்களை, ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். நினைவேந்துவோரை களத்தில் இறங்கி அச்சுறுத்தினர். கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுங்குசெய்த நினைவேந்தல் நிகழ்வைக் காலால் தட்டிவிட்டுக் குழப்பியடித்தனர். ஆனால் வடக்கில் இந்த அடக்குமுறையை மேற்கொள்ளவில்லை. பல இடங்களில் இராணுவமும், இராணுவப் புலனாய்வாளர்களும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாங்கிப் பருகினர். இறுதி நாள் நினைவேந்தலில் கூட வடக்கு, உள்ளிட்ட முள்ளிவாய்க்கால் பகுதிகளில் சீருடையணித்த பொலிஸாரையோ, இராணுவத்தினரையோ காணமுடியவில்லை. எனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கிழக்குப் பக்கமாகவோ,இலங்கைத் தீவுக்குள் வடக்குத் தவிர்த்து தமிழர்கள் வாழும் ஏனைய பிராந்தியங்களுக்குள்ளோ பரவவிடாது தடுத்துவிட்டனர். நினைவேந்தல் விடயத்தில் வடக்கை தனியாகவும், கிழக்கை தனியாகவும் கையாளத்தொடங்கியிருக்கின்றனர். இனிவரும் காலங்களில் ஒரு தேசமாகத் தமிழர்கள் நினைவேந்தும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இதனைப் பிரயோகிக்கக்கூடும்.  இம்முறை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் அம்னெஸ்டி இன்டர்நெனல் அமைப்பின் செயலாளர் நாயகம் கலந்துகொண்டார். நினைவேந்தல் நிகழ்வுக்கு முதல்நாள் மாலையே முல்லைத்தீவிற்கு வருகைதந்திருந்த அம்மணி, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்தார். “சிறீலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இப்போது என்ன உணர்கிறீர்கள்” என்றவகையறாக் கேள்விகளை சந்தித்த அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். மறுநாள் அதாவது நினைவேந்தல் அன்று, வட்டுவாகல் பாலத்தில் இறங்கி நடந்தார். நினைவேந்தல் மையத்திற்கு வருகைதந்து, இனப்படுகொலையானவர்ககளுக்கு மலர்வணக்கம் செலுத்தினார். அவரைக் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், தம் சகோதரியைப் போல அழைத்துவந்தனர். ஊடகங்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அம்மணியைக் கட்டியணைத்து அழுவார்கள், தம் வலியைச் சொல்வார்கள், அந்நேரம் ஏதாவது ஒளிப்படங்கள் எடுக்கலாம் எனக் காத்திருந்தன. ஆனால் அவ்வாறான எவ்வித “அசம்பாவிதங்களும்” ஏற்படாதபடிக்கு, 17ஆம் திகதி காலையே முல்லைத்தீவுக்கு வருகைதந்துவிட்ட தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் “கவனித்துக்கொண்டார்கள்”. அம்மணியின் வருகையை அமைதியாக வழிநடத்தினர்.  நினைவேந்தல் மையத்திற்கு வெளியே வந்த அம்மணி, ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். எந்தப் பதிலிலும் இனப்படுகொலை என்ற வார்த்தை இடம்பெறவில்லை. தப்பித்தவறிகூட அந்த வார்த்தை வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாயிருந்தார். அவ்விடத்தில் அவர் அளித்த பதில்கள் மிக நுணுக்கமானவை.  இம்முறை நினைவேந்தலில், ஏ.பி, ஏ.எவ்.பி, கெட்டிஇமேஜஸ் உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்கள் கலந்துகொண்டிருந்தன. முள்ளிவாய்க்காலில் சிதறிக் கிடக்கும் போரின் எச்சங்கள் தொடக்கம், இடிந்து கிடக்கு கட்டடஙகள் வரையில் அனைத்தையும் ஒளிப்படம் எடுத்தன. நினைவேந்தலில் கலந்துகொண்ட மக்கள் வடித்த ஒவ்வொரு கண்ணீர்த்துளியையும் ஒளிப்படம் எடுத்துக்கொண்டன. எவ்விடத்திலும், எந்தக் கெமராவும், தமிழினப்படுகொலை என்ற பாதகையைக்கூட ஒளிப்படமெடுக்கவில்லை. தமது ஊடகச் செய்தி அறிக்கைகளில் அந்த வார்த்தையையோ, அந்த வார்த்தையை வெளிப்படுத்தும் ஒளிப்படங்களையோ வெளியிடவில்லை. “தமது ஊடகம் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை” என வெளிப்படையாகவே சொன்னார் ஒரு வெள்ளைக்கார ஊடகர். இதன்காரணத்தினாலேயே முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தலில் வாசிக்கப்பட்ட அறிக்கையை எந்த சர்வதேச ஊடகங்களும் வெளியிடவுமில்லை.  இம்முறை நினைவேந்தல் ஏற்பாடுகளில் மதம் சார்ந்த சில சலசலப்புகள் ஆங்காங்கே ஏற்பட்டன. அதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியாவிட்டால், எதிர்காலத்தில் மிகுந்த பாதிப்பினை அது ஏற்படுத்தும். நினைவேந்தலுக்கு மூன்று நாட்கள் மீதமாக இருக்கும்போது, நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தாது, அதனை ஒரு சமூக இயக்கமாக மாற்றுவதற்கு நினைவேந்தல் ஒருங்கிணைப்புக்குழு தயாராகவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற மதவாத சக்திகள் நினைவேந்தல் நிகழ்வொழுங்குகளுக்குள் தலையிடுவதைத் தடுக்க முடியும்.  இம்முறை நினைவேந்தலில் அவதானிக்கப்பட்ட மிகமுக்கியமான விடயங்களில் ஒன்று, நினைவேந்தல் இடம்பெறும் காணி சம்பந்தமானது. தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் வளாகமானது, அரசுக்கு சொந்தமானது. அந்தக் காணியைக் கரைச்சி பிரதேச சபையின் கீழ் கொண்டுவந்து, நினைவேந்தல் மையமாகப் பிரகடனம் செய்வதற்கான பணிகள், வட மாகாண சபை இயங்கும் காலத்தில் முன்னெடுக்கப்பட்டது. அந்த வேலைத்திட்டத்தில் தமிழ் தேசிய அரசியல்வாதிகளும், நினைவேந்தல் ஒருங்கிணைப்புக்குழுவும் அதிக கவனமெடுக்காமை காரணமாக, எவ்வித முன்னேற்றமும் இடம்பெறவி்ல்லை. தற்போது, பிரதேச சபைகள் செயலற்றிருக்கின்ற நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மையம் நிலஅளவைத் திணைக்களத்தின் அளவீடு செய்யப்பட்டிருக்கின்றது. எந்த அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தில் கவனம் எடுக்கவில்லை. தமது எதிர்ப்பை வெளியிடவில்லை. எனவே குறித்த நினைவேந்தல் மையத்தினை அரசு தன் நிலம் என வர்த்தமானி அறிவிப்புச் செய்து, அபகரித்துக்கொள்ள அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பின் குறியீடாக இன்றும்எஞ்சியிருப்பது முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தைக் கட்டடம் மாத்திரமே. பதுங்குகுழியின் எச்சங்கள், துப்பாக்கி ரவை பதிந்த சுவர்கள், போராளிகளின் ஆடைகள், பொதுமக்களின் பாவனைப்பொருட்கள் என அந்தச் சூழலில் இனப்படுகொலையை நினைவுபடுத்துகின்ற பல விடயங்கள் இருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதி மாவீரர் மண்டபமாகவும் அந்தச் சந்தைக் கட்டடத்தொகுதி செயற்பட்டிருக்கின்றது. எனவேதான் அதனையாவது இனப்படுகொலையின் நினைவாக அப்படியே பேணிப்பாதுகாப்பதும், ஆவணப்படுத்துவதும் அவசியமானதாகும். ஆனால் அந்தக் கட்டடத்தை இடித்துப் புதிய சந்தைத்தொகுதியொன்றை அவ்விடத்தில் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.  முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன், வலையன்மடம், வட்டுவாகல் ஆகிய பகுதிகள் இறுதிப்போர் காலத்தில் முக்கியமான இடங்களாக இருந்தன. ஒவ்வொரு அங்குல நிலத்திலும், இனப்படுகொலையான தமிழர்களின் புதைகுழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு அங்குல நிலத்திலும் போர்க்காலத்தை நினைவுபடுத்துகின்ற பொருட்கள் சிதறிக்கிடந்தன. இறுதியா உணவு உண்ட உணவுப் பாத்திரம் தொடக்கம், பதுங்குகுழிக்கு பயன்படுத்திய உடுபுடவைகள் வரைக்கும் அந்நிலமெங்கும் சிதறிக்கிடந்தன. ஆனால் இன்று அவை அனைத்தும் திட்டமிட்ட வகையில் அகற்றப்பட்டிருக்கின்றன. தெற்கிலிருந்து வருகைதரும் இரும்பு வியாபாரிகளுக்கு அப்பொருட்களை உள்ளூர் மக்கள் வியாபாரம் செய்துவிட்டனர். காணிகளைத் துப்பரவு செய்கிறோம் என்கிற பெயரில், அங்கு கிடந்த துணிகள் உள்ளிட்ட பொருட்களை எரித்துவிட்டனர். தன் வரலாற்றைச் சரியாகப் பேணவும், ஆவணப்படுத்தவும் தெரியாத இனமாகத் தமிழர்கள் இருக்கின்றமையும், இது குறித்த விழிப்புணர்வு தமிழ் அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் இருக்கின்றமையுமே இதற்குப் பிரதான காரணமாகும். உலகம் முழுவதும் இனப்படுகொலைக்குள்ளான இனங்கள் இதுபோன்ற விடயங்களை பல நூற்றாண்டுகள் கடந்தும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றன. மிகப்பெரிய இனப்படுகொலையின் பின்னர் இஸ்ரேலியர்கள் தமக்கான நாட்டைக் கட்டமைத்துக்கொண்டாலும், தம் மீது ஜேர்மனியர்கள் நடத்திய இனப்படுகொலையை நினைவுபடுத்தும் ஆவணங்களை, ஆவணக்காப்பகங்களில் இன்றும் வைத்திருக்கின்றனர். உலகப் போர்க்காலத்தில் அணுகுண்டு வீச்சினால் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்கள் அந்தப் பாதிப்பின் எச்சங்களை இன்றும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றனர். உலகம் நன்கு வளர்ச்சியடைந்துவிட்ட யுகத்தில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இனப்படுகொலைக்குள்ளான இனமொன்று, அதற்கான ஆவணங்களைத் தவறவிட்டிருப்பது எவ்வளவு துயரமானது? அடுத்து வட்டுவாகல் பாலம். இறுதிப் போரின் நாட்களை நினைவுகூறும் எவராலும் வட்டுவாகல் பாலத்தைத் தவிர்க்க முடியாது. பாலத்தைக் கடந்த பலர் இன்று உயிரோடில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டு விட்டனர். பாலத்தில் இறுமருங்கிலும் இராணுவத்தால் சுடப்பட்ட நிலையில் இறந்து மிதந்தவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம். இவ்வளவு பெறுமதிமிகு நினைவுகளைக் கொண்டிருக்கும் வட்டுவாகல் பாலம் மிக விரைவில் மீளப் புனருத்தானம் செய்யப்படப்போகின்றது. அந்த பாலத்தை நீக்குவிட்டுப் புதிய பாலமொன்றை அமைத்துத் தரும்படி உள்ளூர் மக்களே அரசைக் கோரியிருக்கின்றனர்.  இப்படியாக தமிழ் இனப்படுகொலையின் பௌதீக சாட்சியங்களாக இருக்கின்ற பல விடயங்களும் விரைவாகவே அழிக்கப்பட்டு வருகின்றன. அனேகமாகத் தமிழினப் படுகொலையின் இருபதாம் ஆண்டு நினைவேந்தல் செய்யும் மேற்குறித்த எந்த நினைவேந்தல் எச்சங்களும் முள்ளிவாய்க்காலில் இருக்கப்போவதில்லை.  சர்வதேச நிறுவனங்களும், ஊடகங்களும், தமிழர்களும் முள்ளிவாய்க்கால் எனப்படும் தமிழினப் படுகொலையின் குறியீட்டு நிலத்தை எப்படி மாற்றிவருகின்றனர் என்பதற்கான சில விடயங்கள்தான் இந்தப் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்நிலம் அமைதியாகக் கிடந்து எதிர்கொள்ளும் சவால்கள், சதிகள் பலநூறு.   https://www.ilakku.org/முள்ளிவாய்க்கால்-நிலம்/
    • வணக்கம் பாஞ் அண்ணா  உங்களை இங்கே காண்பதில் மகிழ்ச்சி 
    • ம‌கிழ்ச்சி ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்  வி பிர‌பாக‌ர‌ன்  வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்🙏🥰......................................
    • விருதுநகர் தொகுதியில்  8000 வா‌க்குக‌ள் வித்தியாசத்தில் விஜய பிரபாகர்  மீண்டும் முன்னணியில் 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.