Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சமூகத்தை கையாளும் இராஜதந்திரம்

Featured Replies

சர்வதேச சமூகத்தை கையாளும் இராஜதந்திரம் `

"கெடுவான் கேடு நினைப்பான்.' என்பார் கள். இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தைக் கையாள்பவர்களின் நடவடிக்கைகளை நோக்கும் போது இந்தக்கூற்று கனகச்சிதமாகப் பொருந்துகின்றது என்றே தோன்றுகின்றது.

நாட்டில் கொடூர மனித உரிமை மீறல்கள் சர்வ சாதாரணமாக இடம்பெறுவதால் நாட்டுக்கும் அரசுக்கும் அரசுத் தலைமைக்கும் கெட்டபெயர். அதை மேலும் கெடுப்பது போல, மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மை நிலையை அம்பலப் படுத்தும் ஊடகங்களை அச்சுறுத்திப் பணிய வைக்க முயல்வது, மனித உரிமை மீறல்கள் குறித்து சிரத்தை எடுக்கும் வெளிநாட்டு இராஜ தந்திரிகளுடன் பகி ரங்கமாக முரண்படுவது என்று விரும்பத்தகாத காரியங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

ஊடக சுதந்திரத்தை மதிக்கிறோம் என வெளிப் பேச்சுக்கு வெளிப்பூச்சுக்கு அரசு கூறிக்கொண் டாலும் அரசின் அதிகார வர்க்கத்தின் அரூபக் கரங் கள் ஊடக சுதந்திரத்தை நசுக்கி, அடக்கி, ஒடுக் குவதில் கங்கணம் கட்டி நிற்கின்றன என்பது கண் கூடாகத் தென்படுகின்றது. மிகவும் சூட்சுமமான நுண்ணியமான நுட்பமான அச்சுறுத்தல் அணுகு முறை மூலம் கருத்து வெளியிடும் சுதந்திரத் தைக் கட்டுப்படுத்தி, மட்டுப்படுத்தி, ஊடகங்களின் குரல்வளையை நசுக்கி, உண்மை நிலை அம்பல மாகாமல் தடுக்கும் தந்திரோபாயத்தை அதிகார வர்க்கத்தின் அரூபக் கரங்கள் திட்டமிட்டு நாசூக் காக மேற்கொண்ட வண்ணம் உள்ளன.

பலமும் வலுவான பின்புலமும் கொண்ட ஊட கங்கள் கூட அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது அந்த மிரட்டல் குறித்த உண்மைகளைத் தாங் களே வெளிப்படுத்த முடியாமல் தவித்து, தடுமாறி, ஊடகச் சங்கங்கள் மூலம் பட்டும் படாமலும் மெல்ல அவிழ்த்துவிட்டு வெளிக்கொணரவேண் டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. அவ் வளவுக்கு நுணுக்கமாகவும், மதிநுட்பத்துடனும், தந்திரோபாய உத்தியுடனும், மோசமான வகை யிலும் இத்தகைய அச்சுறுத்தி அடிபணிய வைக் கும் எத்தனங்கள் அதிகார ஆதிக்கத்தால் மேற்கொள் ளப்படுகின்றன.

இங்கு இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து அதிக சிரத்தையும், கவனமும் காட்டும் இராஜதந்திரிகள் குறித்தும் இதேபோன்ற அணுகு முறையே அதிகார வர்க்கத்தால் கையாளப்படுகின்றது.

இவ்விடயத்தில், தவறிழைக்கும் இராஜதந்தி ரிகள் குறித்துக் கடும் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்ற சாரப்பட அரசின் பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல விடுத்த பகிரங்க அறிவிப்பும் அந்த அணுகு முறையின் ஓர் அங்கம்தான்.

அரசின் எரிச்சலுக்கு உள்ளாகியிருக்கும் முக் கிய இராஜதந்திரி யார் என்பதை அமைச்சர் ரம்புக் வெல அம்பலப்படுத்தாவிட்டாலும் பகிரங்க மாகக் கூறாவிட்டாலும் ஜேர்மன் தூதரக இராஜதந்திரி ஒருவர் குறித்தே அரசுத் தலைமை சீற் றம் கொண்டிருக்கின்றது என்பது இராஜதந்திர வட்டாரங்களில் நன்கு தெரிந்த விடயம்தான்.

இலங்கை அரசுத் தலைமையின் ஆசீர்வாதத் தோடு அரங்கேறும் அராஜகங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து அண்மைக்காலத்தில் அதிகம் கவனத்தில் எடுத்து, கருத்து வெளியிட்டு வரும் ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மன் முக்கிய மானது.

இனப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வைத் துறந்து, இராணுவத் தீர்வில் இலங்கை அரசு அதி கம் நாட்டம் காட்டிவரும் இச்சூழ்நிலையில் இலங் கைக்கான நிதி உதவித் திட்டங்களை நிறுத்தி, முடக்கி, மேற்குலகின் பதில் நடவடிக்கைப் போக் குக்கு முன்னுதாரணமாகச் செயற்படுகின்றது ஜேர் மனி. இலங்கைக்கான பல்வேறு உதவித் திட்டங் களை அது நிறுத்தியிருப்பது அரசுக்கு பேரிடியாக பேரடியாக வந்து வீழ்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாமல், அரசின் பின்புலத்தில் அரங்கேறும் மனித உரிமை மீறல்கள் குறித்து மேற் குலக இராஜதந்திர வட்டாரங்கள் இடையே தக வல் பரிமாற்றங்களைத் தீவிரப்படுத்தி, விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதில் ஜேர்மனி முன்னிற்ப தும் கவனிக்கப்பட வேண்டும்.

மேலும், இருபத்தியைந்து ஐரோப்பிய நாடு களை ஒன்றிணைத்துச் செயற்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பும் இப்போது ஜேர்மன் வசம் உள்ளது.

அதனால் இலங்கை போன்ற நாடுகளின் விவ காரத்தைக் கையாள்வதில் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் சார்பிலும், அவற்றுக்கு வழிகாட்டியாக வும் செயற்பட வேண்டிய கடப்பாடும் ஜேர்மனிக்கு உண்டு.

அத்தோடு, இலங்கைக்கு உதவும் நாடு களின் இணைத் தலைமைப் பொறுப்பும் ஐரோப் பிய ஒன்றியத் தலைமைப் பதவியில் உள்ள ஜேர்மனிக்கு உண்டு.

இத்தகைய அடிப்படைகளின் பின்புலத்தில் கடமையாற்றவேண்டிய ஒரு முக்கிய நாடு சம் பந்தமான விடயத்தை "எடுத்தேன் கவிழ்த்தேன்' என்ற போக்கில் இலங்கையின் அரசுத் தலைமை கையாள்வது, சர்வதேச ஆதரவு தொடர்பான விவ காரத்தில் இலங்கைக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடியது.

ஏற்கனவே சர்வதேச ஆதரவு என்ற பரந்த துறை யில் பல அம்சங்களைக் கோட்டைவிட்டு, தனது பலத்தையும், வலுவையும் இழந்து வரும் இலங் கைக்கு, இராஜதந்திர ரீதியில் இப்போதைய தவ றான கையாள்கை மேலும் பல மோசமான விளைவு களையும் விபரீதங்களையும் ஏற்படுத்தும் என் பது திண்ணம்.

கேடு தேடிச் செயற்படுவதுதான் தங்கள் போக்கு என்று தீர்மானித்தவர்களை திருத்தி, நல்வழிப் படுத்துவது துர்லபம்தான்.

உதயன் ஆசிரியர் தலையங்கம்

இந்தக் கேவலத்திலதானாக்கும் ஐ.நா சபையில செயலாளர் நாயகம் பதவிக்கு தங்கட விசுக்கோத்து ஒன்றை சிறீ லங்கா பயங்கரவாத அரசு போட்டியில் நிறுத்தினவர்கள்...

மற்றது,

இதேநேரம், இறால் கும்பக்கசாமி இப்படியெல்லாம் பிரச்சனை வரும்முன்பே தனக்கு நல்ல பதவி ஒன்று ஐ.நாவில் கிடைத்துவிட்டது என்பதை நினைத்து இப்போது உள்ளம் பூரிப்பு அடைவா!

சிறீ லங்கா Bad Credit ஐ நல்லா Build Up செய்யுது, இதன் விபரீதம் போகப்போக தெரியும்!

வினாச காலே விபரீத புத்தி என்று சமஸ்கிருத்ததில் கூறுவார்கள்............. இதன் பொருள் கெட்ட காலம் வந்து விட்டால் புத்தி பிசகும் என்பது..................... தற்போதைய சிங்கள ஆட்சியாளர்களுக்கு கெட்ட காலம் வந்து விட்டது என்பதை நன்கு உணர்த்துகிறது

  • தொடங்கியவர்

அரசாங்கம் தானே தன் தலையில் மண்வாரியிறைக்கத் தொடங்கியுள்ளது, இதன் விளைவை வெகு விரைவில் உணர வேண்டியேற்படும். அரசாங்கத்திற்கு ஆட்சி கவிழும் என்று ஒரு பயம் உள்ளது அப்படி கவுழுமானால் ஜேவிப் மொட்ட பிசாசுக்கள்ட காலில விழ வேண்டி வரும், அதுக்குத்தான் இப்பவே கூல் பண்ணுற வேலையில இறங்கிரிருக்கிறது போல இருக்கு, எப்படியோ சர்வதேசத்தை பகைத்துக் கொள்வது எமக்கு நல்லதுதான், மேற்குலகை பகைத்து கொள்வது இந்தியாவிற்க்கு மகிழ்ச்சியாக இருக்கும், இதை சாதகமாக்கி அவர்கள் என்னும் ஆழமாக கால்லூன்றப் பார்ப்பார்கள். என்னவோ நடக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா எத்தனை நாட்களுக்குத்தான் பொய் வேஷம் போடமுடியும்? எவ்வளவு காலத்திற்க்குத் தான் உண்மைகள் உறங்கும்? சிங்களவனின் அதர்மத்திற்கு முடிவு காலம் நெருங்குகிறது. அதாவது தங்களுக்கு தாங்களே குழி தோண்டுகிறாங்க அவ்வளவு தான். இதில் வேடிக்கை என்னவென்றால் எங்களுக்கு நடக்கிற அவலங்களை அழுது அழுது சொன்னபோது ஒருத்தரின் காதிலும் ஏறவில்லை இன்று சிங்களவன் பயமுறுத்தும்போது தான் எங்களின் நியாயமான கோரிக்கை புரியத்தொடங்கியிருக்கிறது போலுள்ளது. எதற்க்கும் என்னும் கொஞ்சம் பொறுத்துத்தான் பார்ப்போம்.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் சிறி லங்காவைக் காப்பற்றப் போவது (இப்போது காப்பாற்றிக் கொண்டிருப்பதும்!) அயலிலுள்ள "பாரம்பரிய உறவுகளைக் கொண்ட" நட்பு நாடு தான். சிம்பாப்வே அரசு எவ்வளவு அட்டூழியம் செய்தும் மேற்கு நாடுகள் கண்டனத்தோடு நிறுத்திக் கொள்வது அந்த நாட்டிற்கு ஆபிரிக்க அயல் நாடுகளால் கிடைக்கும் ஆதரவு தான். அண்மையில் சிம்பாப்வேயிலும் இவ்வாறு ஐரோப்பியத் தூதர்களைப் பகிரங்கமாகச் சாடியிருந்தார்கள். எமக்கு அயல் நாடாகக் கிடைத்திருக்கும் தேசம் மிகுந்த சகிப்புத்தன்மை கொண்டது.அந்த நாட்டு மக்களைக் குருவி சுடும் கணக்கில் சுட்டுப் போட்டாலும் 30 கிலோமீற்றர் நீளக் கடல் நெடுகக் கண் தெரியாதது போலத் தேடிக் கொண்டிருக்கும். கொலைகாரர்கள் சிங்களவர் தான் என்று கண்டு கொண்டாலும் பிழைத்துப் போகட்டும் பாவம் என்று விட்டு விடும்.

Edited by Justin

அயல் நாடு இலங்கைக்கு பயம், வேறு ஒன்றுமில்லை.... நாட்டின் கொள்கைவகுப்பாளர்கள் எல்லாம்

இலங்கையின் கைக்குள் அடக்கம்...

நரி இராஜதந்திரம் நன்றாக கையாளுகிறது......

நாங்கள் அதற்கு மேலாக தந்திரங்களை கையாண்டால் தான் சமனிலை அல்லது வெற்றி கிடைக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.