Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தற்போதய யாழின் பரிதாப நிலை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் களம் இன்று அரட்டையின் சொர்கபுரியாகிவிட்டது.எதிலும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிர்வாகம் இப்படி அரட்டைகளைத் தடுக்க ஏதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1. ஒருவர் குறித்தளவு கருத்துக்களை மட்டுமே எழுத அனுமதித்தல். அல்லது அரட்டையடித்து கொண்டிருப்பவர்களுக்கு, குறித்தளவு கருத்துக்களை மட்டுமே ஒரு நாளுக்கு எழுத முடியும் என்று தடை விதித்தல்.

2. கருத்துக்களின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும் என்பதற்காகவே இப்படி உதவாத அரட்டைகள் தொடருகின்றன. எனவே கருத்துக்களின் எண்ணிக்கை காட்டப்படுவதைத் தடுப்புச் செய்யலாம்.

இப்படியான வீண் அரட்டைகள் தொடருமிடத்து, பார்க்கின்ற இதர உறுப்பினர்களுக்கு வெறுப்பு ஏற்பட வாய்ப்புண்டு. அதற்கு என்ன செய்யப் போகின்றீர்கள்??

Edited by வலைஞன்
அரட்டைகளைக் குறைக்க ஒற்றன் கூறிய ஆலோசனை, அதன் பயன் கருதி சில திருத்தங்களுடன் இப்பிரிவில் இணை

.

Edited by கலைஞன்

இவற்றை உறுப்பினர்கள் தான் கையாளணும் என நினைக்கின்றேன். (நான் உட்பட) இதற்காக தானே அரட்டை என்ற பகுதியே ஒதுக்கப்பட்டிருக்கு. இதைவிட இனி என்ன செய்வார் மோகன் அண்ணா? ;)

அப்படியாயின் ஒவ்வோர் பகுதியாக ஆராய்ந்து அது அரட்டையான கருத்து எனில் அரட்டைப் பிரிவுக்குள் நகர்த்தணும். நிர்வாகம் என்ன செய்ய முடியும்? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றை உறுப்பினர்கள் தான் கையாளணும் என நினைக்கின்றேன். (நான் உட்பட) இதற்காக தானே அரட்டை என்ற பகுதியே ஒதுக்கப்பட்டிருக்கு. இதைவிட இனி என்ன செய்வார் மோகன் அண்ணா? ;)

அப்படியாயின் ஒவ்வோர் பகுதியாக ஆராய்ந்து அது அரட்டையான கருத்து எனில் அரட்டைப் பிரிவுக்குள் நகர்த்தணும். நிர்வாகம் என்ன செய்ய முடியும்? :)

**********************

இப்படி ஒரு தளத்தை உருவாக்கி ஓரளவு சுதந்திரமாக கருத்துக்களை பகிர்ந்து கொள்வதிற்கு கருத்துக்களம் என்ற பகுதியும் எங்களுக்காக அமைத்துத்தந்தது மட்டுமன்றி அத்தியாவசமற்ற அலட்டல்களுக்காக அரட்டைப்பகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது போதாது என்று நிர்வாகத்தினருக்கு மென்மேலும் வேலைப்பழுவைக் கொடுப்பது அவ்வளவு சிறந்த வழியல்ல என்று எனக்குப் படுகின்றது. அதாவது உறுப்பினர்களாகிய நாங்கள் தான் இதுபற்றிய ஒரு விளக்கத்தை சகஉறுப்பினர்களுக்கு தெளிவு படுத்தவேண்டும் என்பது தான் எனது கருத்து.

Edited by Valvai Mainthan

ஒரு தேசம் இருந்தா மக்கள் இனம் இருக்கும்,

ஒரு மக்கள் இனம் இருந்தா அதில பல் குடும்பங்கள் இருக்கும்,

அந்த குடும்பங்களுக்கிடையே பல பிரிவுகள் இருக்கும்,

அதை விட ஒரு விவாத அரங்கு, அல்லது கருத்துக்களம் இருக்கும்,

அப்படியாயின் இயற்கை விட்ட வழியில் அரட்டை, அலட்டல் இருக்கும்,

6 ஆவது அறிவு உள்ள ஜீவன்களுக்கு கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு இருக்கும்,

அதனை அறிந்து, ஒழுகினால், ஓற்றுமையினராய் யாழ் களம் ஒற்றுமையாய் இருக்கும்!!!. :)

அரட்டை அதிகமாய் இருந்து சற்று தற்போது குறைந்திருகின்றது அதனை புரிந்து கொண்ட உறவுகளுக்கு நன்றிகள்.இன்னும் குறைத்து அரட்டைக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அரட்டையடித்து களம் முழுக்க அரட்டை பரவாமல் இருக்க அன்புடனும் தாழ்மையுடனும் என் சக கள உறுப்பினர்களிடம் வேண்டுகின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில நேரங்களில் நானும் நினைத்ததுண்டு நானும் இங்க கூட அரட்டை அடிக்கிறனோ என்று.

நமது அரட்டை மற்ற உறவுகளுக்கு வெறுப்பை ஏற்படுத்துது என்றால் அதை நாம எல்லோரும் சேர்ந்து தான் குறைக்க வேணும்.

இனி வரும் காலம்களில் எல்லோரும் சேர்ந்து அரட்டையை குறைத்து கொள்வோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'ஒருவர் குறிப்பிட்டளவு கருத்துக்கள் மட்டுமே ஒரு நாளைக்கு களத்தில் எழுத முடியும் என கட்டுப்பாடு கொண்டு வரவேண்டும்' என்ற சிந்தனையில் நமக்கு உடன்பாடு இல்லை. :)

இப்படியான வேண்டுகோளை விடுவதற்குக் காரணமே, மிதமிஞ்சிய உங்களின் அரட்டைகள் தான். இது சரியில்லை என்றால் வேறு ஒரு வழியைச் செய்யலாம். குறித்த நபர், உதாரணத்துக்கு நான் அதிகம் அரட்டைகள் எழுதிக் கொண்டிருந்தால், என்னை இத்தனை கருத்துக்கள் எழுதலாம் என்று தடை விதிக்கலாம். ஆக்கபூர்வமாக எழுதுகின்றவர்களை இத்தடைக்குள் உள்வாங்கத் தேவையில்லை.

எனவே இவ்வாறன தடை மற்றவர்களை ஒரு போதும் பாதிக்காது. குறித்த நபரை மட்டும் தான் தடுக்கும்.

( இந்த இயங்குதளத்தில், இதற்கான கட்டளைகள் வழங்கக் கூடிய வாய்ப்பு உண்டா என்று தெரியவில்லை. ஆனால் இது வெறும் பரிந்துரை மட்டும் தான்)

  • கருத்துக்கள உறவுகள்

அரட்டை அடிக்காதயுங்கோ தயவு செய்து அடிக்காதயுங்கோ

ஆனால் அலட்டுங்கோ தப்புகளையும் கண்டுபிடியுங்கோ

நொட்டை பிடியுங்கோ

மறுபெயரில் அகறினையில் திட்டுங்கோ,எச்சரிக்கை விடுங்கோ

முடிந்தால் சண்டித்தனமும் பண்ணுங்கோ

அரட்டை அடிக்க வேண்டாம் என்று பக்கம் திறந்து அரட்டையை குறைக்க அரட்டை அடியுங்கோ.

கருத்துகள் கூட வந்தால் அவர்களுக்கு ஒஸ்கார் அவார்ட் கிடைக்கும்

ஆகவெ கருத்தை கத்தரிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் அரட்டைகளைக் குறைக்க முடியுமா?

தெரியவில்லை.

அரட்டைகளுக்கு களத்தில் எண்டே பிரித்து தலைப்பிட்டு இருக்கினம்.

களம் எண்டால் எல்லா ரசனைகளும் இருக்கனும் எண்டு நினைக்கிறன்.

யார் யாருக்கு எந்த ரசனை பிடிக்குமோ அங்கங்கே போய் கருத்து எழுதுங்க.

பிடிக்காதவங்க அந்தப்பக்கத்திலிருந்தே விலகியே இருக்கலாம் இல்லையோ.

இந்தப்பக்கமும் அரட்டையாகாமல் இருக்கட்டும்.

அதாவது நிழலின் அருமை வெயிலில் நின்றவனுக்குத்தான் விழங்கும் என்பது போல, களத்தில பொலீஸ்காரர் இருக்கனும். லைட்டு இல்லாட்டி எப்படி முன்னம் சனம் கஸ்டப்படவேண்டி வரும் என்று லைட்டோடு சைக்கிள் ஓடினமோ, அப்படி எந்த ரோட்டில எந்த பொலீஸ் நிக்குது என்று தெரியாம சி.ஐ.டி மாதிரி சிவிலில கருத்து எழுதிற பகுதியில ஆக்கள் இருக்கணும்.

ஒரு சம்பவம் நடந்தது என்றா பொதுவா மக்களின் ஒரே நம்பிக்கை தளம் இந்த யாழ் தளம். அதிலும் குண்டுவெடிப்பு அது இது என்றா பல கள உறுப்பினர்கள் எங்கேயோ எல்லாம் தகவல் எடுத்து வந்து இங்க ஒட்டுவீனம் என்று ஒவ்வொரு தமிழனுக்கும் தெரியும்,

அப்படி ஒரு களத்தில களநிலவரங்களை கதைக்கும் போது சுவையே இந்த அலட்டலும், அதனூடு விடும் கலைஞன், வானவில் போன்றோரின் பகிடிகலந்த சொல்லடிகள். அது இல்லாட்டி களம் வெறுமனே சோபை இழந்து இழவு வீட்டுக்கு வந்து பேப்பர் வாசிச்சிட்டு தகவல் அறிந்து போறமாதிரி.

ஒரு ஆண்பையன் என்றா ஒரு துடிதிடிப்பு இருக்கணும், ஒரு பையன் கலையில எழும்பிறான், ஒழுங்கா படிக்கிறான், தாய் தகப்பனுக்கு கரைச்சலே இல்லை...இப்படியே போனா வாழ்க்கையில ஒரு பிடிப்பு இருக்காது.

பையன் கள்ளம்விடனும், அதை தகப்பன், தாய் கண்டு கண்டித்து அதன் பின்பு பையன் ஒழுங்கா இருக்கணும், அதன் பின்பு மீண்டும் தவறிழைக்கணும். இப்படி இருந்தாத்தான் வாழ்க்கை!!

அதே போல யாழ் களத்திற்கு என்று எமது புலிகளின் பாசறையில் உள்ளது போன்று ஒரு கடமை, அதை கண்ணியத்தோடு, கட்டுப்பாடா செய்து அதை இங்கே அழகாக அமுல்படுத்தினா, அதாவது யாரும் மொக்குத்தனமான கருத்துக்கள் எழுதினா அதையும் ஆதரித்து பக்குவமா அவருக்கு கண்ணியமா, இங்க ஏற்கனவே சிலரால் அமுல்படுத்தப்படும் பாணியில் அணுகிணால், அரட்டை அடிக்க பாப்பவரே ஒரு கணத்தில்,

நிதானம் என்ற ஒன்ற ஒன்றை கடைப்பிடிபார்.

அப்படியும் இல்லை நான் அல்ட்டியே தீருவேன் என்று விவண்டாவாதம் செய்கிறவர்களிற்கு இப்ப நாங்க இருக்கிற கூண்டுக்குள்ள சில காலம் இருங்கோ என்று விட்டுவிட்டால். உண்மைகள் உறைக்கும், வயிறு கடிக்கும்,

அப்ப விளங்கும் அட எப்படி இருந்தம் இப்படி ஆகிவிட்டமே என்று, ஆகவே ஒரு அனுபவத்தில் சொல்லுகிறேன்.முதல் அட்வைஸ், இரண்டாவது அட்வைஸ், மூன்றாவது ஒரு மாதச் சிறைத்தண்டனை!!!.

இப்படி செய்யுங்க குளப்படிப்பிள்ளையும் திருந்தி இங்கே நல்ல ஆக்க பூர்வமா எழுதனும் என்று ஓடி வரும் விடுதலை கிடைத்ததும்!!! :o

தானும் செய்யாய் தள்ளியும் நில்லான் போல நீங்கள் என்ன செய்தீர்கள் இந்த தளத்திலே என்று தாழ்மையுடன் கேட்க்கும் அதே நேரம் 4000 கருத்து எழுதுவதற்காக சுயநலமில்லாது தன் நேரத்தினை இங்கே தியாகம் பண்ணிய அந்த நல்ல செயலை நினைக்காமல் போனீர்கள் என்று நினைக்க கவலையாய் உள்ளது.

நீங்கள் சொல்லும் அந்த கள் உருப்பினர் 4000 ல் ஒரு 3500 நல்ல அறிக்கைகளினை தான் தந்தார் ஏனென்றால் நான் அவரின் விசிரி, ஒரு வாசகன்.

எது கூடாது. ஒரு கருத்தில் சர்ச்சை உருவாகி அது 3, 4 பக்கங்கள் போவது, அது எப்பவும் எங்கேயும் நடக்கும்.

களத்தில நின்று எழுதிற ஆளுக்குத்தான் தெரியும் இது எவ்வளவு கடினம் என்று.

நீங்கள் வாசிக்க ஆயிரம் தளங்கள் இருக்கு. நீங்கல் அத்தனை தளங்களுக்குப்போய் வாசிப்பதை இங்கே ஒரு தள்த்தில் இருந்து வாசிக்க எடுத்துத்தரும் இந்த தள் காவிய நாயகர்கள் பொன்மனச் செம்மல்கள்!!! அதை நினைவில்வையுங்கள்.

உங்களால் பல தளங்களுக்கு போவதை எப்படிக்கட்டுப்படுத்த முடியாதோ அதே போல நாங்கள் கடந்த 6- 7 மாதங்களாக வேறு எந்த தளத்திற்கும் போகது தான் இங்கே போக்கஸிங் செய்கிறோம்.

அதை சரியான் வழியில் ஒரு இரவுக்குள் நேர்ப்படுத்திமுடியாது. ஆகவே எழுதவேண்டும் என்ற உத்வேகம் சிலருக்குத்தான் வரும் அதற்கு அந்த 4000 போஸ்ட் அடித்தவர் ஒரு புரட்ச்சித்தமிழன்!!!

தானும் செய்யாய் தள்ளியும் நில்லான் போல நீங்கள் என்ன செய்தீர்கள் இந்த தளத்திலே என்று தாழ்மையுடன் கேட்க்கும் அதே நேரம் 4000 கருத்து எழுதுவதற்காக சுயநலமில்லாது தன் நேரத்தினை இங்கே தியாகம் பண்ணிய அந்த நல்ல செயலை நினைக்காமல் போனீர்கள் என்று நினைக்க கவலையாய் உள்ளது.

நீங்கள் சொல்லும் அந்த கள் உருப்பினர் 4000 ல் ஒரு 3500 நல்ல அறிக்கைகளினை தான் தந்தார் ஏனென்றால் நான் அவரின் விசிரி, ஒரு வாசகன்.

எது கூடாது. ஒரு கருத்தில் சர்ச்சை உருவாகி அது 3, 4 பக்கங்கள் போவது, அது எப்பவும் எங்கேயும் நடக்கும்.

களத்தில நின்று எழுதிற ஆளுக்குத்தான் தெரியும் இது எவ்வளவு கடினம் என்று.

நீங்கள் வாசிக்க ஆயிரம் தளங்கள் இருக்கு. நீங்கல் அத்தனை தளங்களுக்குப்போய் வாசிப்பதை இங்கே ஒரு தள்த்தில் இருந்து வாசிக்க எடுத்துத்தரும் இந்த தள் காவிய நாயகர்கள் பொன்மனச் செம்மல்கள்!!! அதை நினைவில்வையுங்கள்.

உங்களால் பல தளங்களுக்கு போவதை எப்படிக்கட்டுப்படுத்த முடியாதோ அதே போல நாங்கள் கடந்த 6- 7 மாதங்களாக வேறு எந்த தளத்திற்கும் போகது தான் இங்கே போக்கஸிங் செய்கிறோம்.

அதை சரியான் வழியில் ஒரு இரவுக்குள் நேர்ப்படுத்திமுடியாது. ஆகவே எழுதவேண்டும் என்ற உத்வேகம் சிலருக்குத்தான் வரும் அதற்கு அந்த 4000 போஸ்ட் அடித்தவர் ஒரு புரட்ச்சித்தமிழன்!!!

புலிப்பாசறை...

நான் என்றென்றும் உங்கள் சிஷ்யன்...

உங்கட கருத்துக்கள் எப்பேற்பட்டதாக இருந்தாலும்(எப்போதும் நல்ல கருத்துக்களாத்தான் இருக்கும்)

அதை வாந்தி எடுக்காது வாய் மூடி வரவேற்பென்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவகொழுந்து அவர்கள் சொல்ல்வதிம் உண்மை இருந்தாலும் என்னை போன்றவர்கல் எப்பவும் நகைச்சுவையாக பேசும் பழக்கம் உள்ளதால் பதில்கள் அப்படியே போய் அரட்டை வரை தொடர்கிறது

எம்மால் இதை மாற்ற முடியாது என்பது ஒரு பக்கம் ஆனா களநிர்வாகிகள் இதை கவனிக்கலாம்

ஏன் என்றால் இக் களத்தின் நோக்கம் ஒரு போராட்டதுக்கு பக்க துணையாக இருப்பதே

மற்றகருத்து களங்கள்போல(வெறுமொழி) எல்லாத்திலும் சுதந்திரமாக விட முடியாது அதுக்கு நாங்கள் எமது நேக்கத்தை நிறவேற்றிய பின் செய்ற்படலாம் ஆனா ஒரு அடக்குமுறையை எதிர்த்து போராடும் இன்மாக இருந்து கொண்டு மற்றமொழி கருத்து களங்கள் போல நோக்கம் இல்லாம பொது செய்வை செய்ய முடியாது

அதுவும் உலகத்தில் உள்ள லட்சக்கனக்கான நேயர்கள் வாசிக்கும் களத்தில் அரட்டை என்பது இங்கு அவர்களின் வரவை கேள்விக்குறியாக்கிவிடும் அதுக்காக அரட்டை அடிபவர்களை குறை வரவில்லை(நானும் தானே) நகைசுவை உணர்வுடன் பேசும் போது அது அரட்டையாக மாறும் ஆனா நிர்வாகம் செய்தி பிரிவில் மட்டும் கொஞ்சம் கவனம் எடுகலாம் மற்ற பகுதியை விட்டு பிடித்தாலும் .

இது யாழ்களத்தின் தேவையையும் வளர்ச்சியயும் நோக்கமாக கொண்ட பதில் எழுதினேன்

எந்த ஒரு உறவின் மென்மையான மனதை புண்படுத்துவதுக்காக அல்ல

நன்றி உங்கள் ஆர்யா மிலனோ

தற்போது களத்தில் அரட்டைகள் குறைக்கப் பட்டு அரட்டைகென்று உள்ள தனிப்பகுதியில்தான் அரட்டை இடம் பெறுகிறது, அந்த பகுதி கள உறுப்பினர்களிற்க்கான பகுதி மட்டுமே அதனால் தினமும் வரும் ஆயிரக்கணக்கானவர்களை பாதிக்க வாய்ப்பில்லை, நவரசமும் சேர்ந்தது தான் ஒரு சபை, அதே போல்தான் களமும்

ஆயிரக்கணக்கா செய்தி பார்க்கவாரவை எங்கட கடியையும் சேர்த்து அனுபவிச்சா என்ன குறைஞ்சாபோயிருவீனம். சும்மா வானவில் நீங்க எழுதுங்க.ஏதோ அவர் மேல எழுதினவர் சொல்லிறதப்பார்த்தா, அவரை விட்டாலும் 4000 ஈசியா எழுதிடுவார் மாதிரியும், அது ஒன்றும் பெரிய வேலை இல்லை என்றமாதிரி எல்லோ எழுதிறார். ஒருக்கா குடுத்தா மவன் துண்டையும் காணோம் துணியையும் என்று பின்கால் பிரடியில அடிபட ஓடிவிடுவார்....பக்கத்தில இருக்கிற இன்னுமொரு தளத்திற்கு...பிறகு யாழ் களம் சோரிப்போயிடும்...இல்லையா புக்குடு.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரக்கணக்கா செய்தி பார்க்கவாரவை எங்கட கடியையும் சேர்த்து அனுபவிச்சா என்ன குறைஞ்சாபோயிருவீனம். சும்மா வானவில் நீங்க எழுதுங்க.ஏதோ அவர் மேல எழுதினவர் சொல்லிறதப்பார்த்தா, அவரை விட்டாலும் 4000 ஈசியா எழுதிடுவார் மாதிரியும், அது ஒன்றும் பெரிய வேலை இல்லை என்றமாதிரி எல்லோ எழுதிறார். ஒருக்கா குடுத்தா மவன் துண்டையும் காணோம் துணியையும் என்று பின்கால் பிரடியில அடிபட ஓடிவிடுவார்....பக்கத்தில இருக்கிற இன்னுமொரு தளத்திற்கு...பிறகு யாழ் களம் சோரிப்போயிடும்...இல்லையா புக்குடு.... :lol:

*********

அடிப்பது அரட்டையாகவிருந்தாலும் ஆக்கபூர்வமாக இருந்தால் எல்லோருக்கும் நல்லது தானே. பொழுது போக்குக்காக அரட்டை அடிப்பவர்கள் அரட்டைப் பகுதியில் தங்கள் வித்தைகளைக் காட்டலாம், செய்தி போன்ற பகுதிகளில் கருத்தைப் பதிவு செய்பவர்கள் ஏனோ தானோ என்று தங்களின் பெயர்கள் வரவேண்டும் என்பதிற்காக பதிவு செய்யாமல் சற்றுச் சிந்தித்து பிரியோசனப் படக்கூடிய முறையில் பதிவு செய்தால் இந்தத் தளத்திற்க்கு வரும் விருந்தினர்களின் தொகையையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது இதனால் யாழ்த் தளத்திற்க்கும் பெருமை தானே? அடுத்ததாக இந்தத் தளத்தில் சிறந்த ஆக்கக்கங்கள், ஆய்வுகள், கதைகள், கட்டுரைகளை வழங்கிவரும் உறுப்பினர்களை நிர்வாகத்தினர் இனங்கண்டு அவர்களை உள்வாங்கி உங்கள் குழுக்களில் இணைத்துக்கொள்ள முயற்ச்சிக்க வேண்டும், அடுத்ததாக எழுத்துப் பிழையில்லாது கருத்துக்களை பதிவு செய்வதிற்கு உறுப்பினர்களை முயற்சிப்பிக்க வேண்டும் அதற்காக இந்தத் தளத்தில் பிழையில்லாது கருத்துப் பதிவு செய்யும் ஒவ்வொரு சிறந்த உறுப்பினரை வாரா வாராம் தெரிவு செய்து முதன்மைப் படுத்தினால் ஓரளவு வெற்றியளிக்க வாய்ப்புள்ளது. இப்படி பல திட்டங்களை அறிமுகப்படுத்தினால் உங்களினால் முன்வைக்கப்படும் குறைபாடுகளும் குறைய வாள்ப்புள்ளது என்பது எனது கருத்து.

Edited by Valvai Mainthan

தமிழ்வீரனே பலே!! ஊக்குவிப்பு, போட்டி, புலமையினை காட்டுபவருக்கு பரிசில். இது தான் யாழ் களம் தற்போது செய்ய வேண்டிய ஒரு பெரும் செயல்.

ஆனாலும் சொந்தமா கேட்டமாத்திரத்திர இப்ப களத்தில 10 எண்ணுறத்துக்குள்ள என்னால பாட்டு எழுதமுடியும். இப்படி ஊக்குவிப்பு என்பது என்னை மேலும் ஆழ்கடலில் குத்தித்து மேலும் முத்தெடுத்து இங்கு வரும் கள உறுப்பினர்களுக்கும் தமிழின் இனிமையான அந்த அமுதினை பருகி மகிழ்ந்திட வைத்திடும் அதே நேரம், இப்ப நாம் அறிமுக பகுதியில் நின்று அலட்டலோ அலட்டல் என்று அடிக்கும் அந்த நேரத்தினை ஆக்கபூர்வமா பயன்படுத்த உதவிதாகவும் இருக்கு.

சரி அதுதான் நடக்கப்போகிரவிடயமே இல்லை என்றா, ஒருத்தன் கெட்ட வழியில போய் எப்படி தெரு சண்டியனா மாறுவதற்கு இந்த உலகம் எப்படியான நடமுறைகளினை கையாண்டது என்பதினையும் உலகத்துக்கு காட்டினம்மாதிரி இருக்கும் என்று நீங்க நினைச்சா???

ஆனா என்னைத்தான் இங்க கைகால்கள் அசைக்கமுடியாம வீணே உணர்வோடும் வம்பளக்கு விட்டுட்டு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கே எனக்கே ஒரு மாதிரி இருக்கு!!.

அந்தக்காலத்தில அகிம்சை வழியில போராடினம் தமிழாகிய நாம். சிங்களவன் ஏறி மித்தித்தான். எம் அடிப்படைச்சுதந்திரத்தினை போடு உடைத்தான். அப்பப்ப வன்முறை என்றும் அடிச்சுக்கலைச்சான். விளைவு!!

அதை பெரிசா கதைக்கிறமே நான் செய்த குற்றத்துக்காக என் உணர்வுகள் சிறைப்படுத்தப்படுகின்றனவே? அப்ப நாமளும் சிங்களவன் காட்டின அந்த வழியிலயா போகின்றோம்? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.