Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

க.பொ.த (சா/த) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

க.பொ.த (சா/த) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின

Examination-Department.jpg

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு உங்கள் டயலொக் கையடக்கத் தொலைபேசியில் Exams என டைப் செய்து இடைவெளியின் பின்னர் உங்கள் சுட்டிலக்கத்தை குறிப்பிட்டு 7777 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்ரொயிட் தொலைபேசிகளில் doenets.lk என்ற செயலியின் (App) ஊடாகவும் அப்பிள் தொலைபேசிகளில் doenets என்ற செயலியின் (App) ஊடாகவும் பரீட்சை முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக 656, 641 மாணவர்கள் 4,661 பரீட்சை நிலையங்களில் தோற்றியிருந்தனர்.

இதேவேளை இந்தப் பரீட்சைக்கு தோற்றிய 969 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

http://athavannews.com/க-பொ-த-சா-த-பரீட்சையின்-பெற/

 

ஓ/எல் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின!

Last updated Mar 28, 2019

கடந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகின.

பரீட்சைப் பெறுபேறுகளை http://www.doenets.lk என்ற இணையத் தளத்தின் ஊடாகவும், அலைபேசிக் குறுந்தகவல்கள் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

நாடளாவிய ரீதியில் முதல் 10 இடங்களுக்குள் வடக்கு, கிழக்கு மாணவர்கள் இடம்பிடிக்கவில்லை.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 ஆயிரத்து 495 பேர் பரீட்சைக்குத் தோற்றி 6 ஆயிரத்து 337 பேர் மட்டுமே உயர் தரத்தைத் தொடர்வதற்கான சித்தியைப் பெற்றுள்ளனர். இது 67.02 சதவீத சித்தியாகும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 405 பரீட்சாத்திகளில் ஆயிரத்து 434 மாணவர்கள் மட்டுமே உயர் தரத்தைத் தொடர்வதற்கான சித்தியைப் பெற்றுள்ளனர். இது 54.3 சதவீதமாகும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 494 பரீட்சாத்திகளில் ஆயிரத்து 246 பரீட்சாத்திகள் மட்டுமே உயர்தரத்தைத் தொடர்வதற்கான சித்தியைப் பெற்றுள்ளனர். இது 60.4 சதவீதமாகும்.

மன்னார் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 638 பரீட்சாத்திகளில் ஆயிரத்து 321 மாணவர்கள் மட்டுமே உயர் தரத்தை தொடர்வதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இது 69. 34 சதவீதமாகும்.

வவுனியா மாவட்டத்தில் 5 ஆயிரத்து 143 பரீட்சாத்திகளில் ஆயிரத்து 929 மாணவர்கள் மட்டுமே உயர்தரத்தை தொடர்வதற்கான சித்தியைப் பெற்றுள்ளனர். இது 68. 28 சதவீதமாகும்.

 

https://newuthayan.com/story/23/ஓ-எல்-பரீட்சைப்-பெறுபேறு-3.html

க.பொ.த சாதாரண தர பெறுபேறு: சறுக்கியது வடக்கு, கிழக்கு!

March 28, 2019
55692924_2051376161827060_56104356604448
 

2018ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த எந்தவொரு மாணவரும், சிறந்த பெறுபேறு பெற்றவர்களின் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பிடிக்கவில்லை. அத்துடன், வடக்கு, கிழக்கில் மாணவர்களின் சித்தி வீதமும் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. இது பெரும் வீழ்ச்சியாக கருதப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 17,126 பேர் பரீட்சைக்கு தோற்றி, 6,419 பேர் உயர்தரத்தை தொடர தகுதி பெற்றுள்ளனர். இது 62.51 சதவீத சித்தியாகும்.

அம்பாறை மாவட்டத்தில் 22,910 பேர் பரீட்சைக்கு தோற்றி, 8,163 பேர் உயர்தரத்தை தொடர தகுதி பெற்றுள்ளனர். இது 64.4 சதவீத சித்தியாகும்.

திருகோணமலை மாவட்டத்தில் 14,291 பேர் பரீட்சைக்கு தோற்றி, 4,724 பேர் உயர்தரத்தை தொடர தகுதி பெற்றுள்ளனர். இது 53.17 சதவீத சித்தியாகும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 17,495 பேர் பரீட்சைக்குத் தோற்றி 6, 337 பேர் உயர்தரத்தைத் தொடர தகுதி பெற்றுள்ளனர். இது 67.02 சதவீத சித்தியாகும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 4,405 பரீட்சாத்திகளில் 1,434 மாணவர்கள் உயர்தரத்தைத் தொடர தகுதி பெற்றுள்ளனர். இது 54.3 சதவீதமாகும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 ,494 பரீட்சார்த்திகளில் 1,246 பேர் உயர்தரத்தைத் தொடர தகுதி பெற்றுள்ளனர். இது 60.4 சதவீதமாகும்.

மன்னார் மாவட்டத்தில் 3,638 பரீட்சாத்திகளில் 1,321 மாணவர்கள் உயர்தரத்தைத் தொடர தகுதி பெற்றுள்ளனர். இது 69. 34 சதவீதமாகும்.

வவுனியா மாவட்டத்தில் 5 ,143 பரீட்சாத்திகளில் 1,929 மாணவர்கள்
உயர்தரத்தைத் தொடர தகுதி பெற்றுள்ளனர். இது 68. 28 சதவீதமாகும்.

க.பொ.த சாதாரண தர முடிவு: தேசிய ரீதியில் முதலிடம் பிடித்தவர்கள் விபரம்!

March 28, 2019
 
 

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தேசிய ரீதியில் அதி சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களின் பெயர் விபரம் வெளியாகியுள்ளது.

கொழும்பு விசாகா பாலிகா வித்தியாலயத்தை சேர்ந்த, நிலக்னா டிசிவரி வருஷவிதான முதலிடத்தை பெற்றார்.

இரண்டாமிடத்தை கொழும்பு விசாகா பாலிகா வித்தியாலயத்தை சேர்ந்த ஆராய்ச்சிகே சாவித்தி ஹன்சடி, கம்பஹா ரத்னவாலி பாலிக்க மகா வித்தியாலயத்தை சேர்ந்த பிரதாப முதியன்சலாஹே சன்ஜனி டிலிக்கா குமாரி, மாத்தற சஜத்த வித்தியாலயத்தை சேர்ந்த களுஆராய்ச்சி கன்கனாம ரெபேக்கா,

ஐந்தாமிடத்தை கேகாலை சென் ஜோசெப் பாலிகா வித்தியாலயத்தை சேர்ந்த ஆராய்ச்சிகே ஹர்சிகா,

ஆறாமிடத்தை கொழும்பு தேவி பாலிகா மகாவித்தியாலயத்தை சேர்ந்த சண்டலி முதுமினா ரத்னாயக்க, கொழும்பு றோயல் கல்லூரியை சேர்ந்த சமரக்கோன் சஹான் யசந்த, கொழும்பு றோயல் கல்லூரியை சேர்ந்த கவிரு மெதுனுக, காலி மஹிந்த வித்தியாலயத்தை சேர்ந்த சஷ்மிதா அக்ஷ்வரா லியனகே, ஹொரண தக்சிலா மத்தியமகா வித்தியாலயத்தை சேர்ந்த பத்திரனகே ஹிமாசி எரந்திகா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

1 hour ago, கிருபன் said:

மட்டக்களப்பு மாவட்டத்தில் 17,126 பேர் பரீட்சைக்கு தோற்றி, 6,419 பேர் உயர்தரத்தை தொடர தகுதி பெற்றுள்ளனர். இது 62.51 சதவீத சித்தியாகும்.

எனது கணித அறிவுக்கு எட்டிய வரை இது 37.48 சதவீத சித்தியாகும். (62.51 சதவீத எனப்படுவது தமிழ் பக்க ஊடகத்தின் தவறான தகவல்)  

1 hour ago, கிருபன் said:

யாழ்ப்பாண மாவட்டத்தில் 17,495 பேர் பரீட்சைக்குத் தோற்றி 6, 337 பேர் உயர்தரத்தைத் தொடர தகுதி பெற்றுள்ளனர். இது 67.02 சதவீத சித்தியாகும்.

எனது கணித அறிவுக்கு எட்டிய வரை இது 36.22 சதவீத சித்தியாகும். (67.02 சதவீத எனப்படுவது தமிழ் பக்க ஊடகத்தின் தவறான தகவல்)  

இவ்வாறு சகல இடங்களிலும் தவறு உள்ளது!

"தமிழ் பக்கம்"  (pagetamil) ஊடகவியலாளர்களின் கணித அறிவும் பொது அறிவும் மிகமிக மட்டமாகவும் மிகமிக கீழ்த்தரத்திலும்  உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

எனது கணித அறிவுக்கு எட்டிய வரை இது 37.48 சதவீத சித்தியாகும். (62.51 சதவீத எனப்படுவது தமிழ் பக்க ஊடகத்தின் தவறான தகவல்)  

எனது கணித அறிவுக்கு எட்டிய வரை இது 36.22 சதவீத சித்தியாகும். (67.02 சதவீத எனப்படுவது தமிழ் பக்க ஊடகத்தின் தவறான தகவல்)  

இவ்வாறு சகல இடங்களிலும் தவறு உள்ளது!

"தமிழ் பக்கம்"  (pagetamil) ஊடகவியலாளர்களின் கணித அறிவும் பொது அறிவும் மிகமிக மட்டமாகவும் மிகமிக கீழ்த்தரத்திலும்  உள்ளது.

இங்கு எனது நண்பர்கள் மத்தியில் இதைப்பற்றிய விவாதம் நடந்தது. 2 ஆவது 3 ஆவது தடவை தோற்றியவர்களும் single subjectஇற்கு தோற்றியவர்களும் "No Sat" இல் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள் என்றும், passing no இற்கு அவர்கள் கணிக்கப்படவில்லை என்று சிலர் இங்கு கூறினார்கள். உண்மை தெரியவில்லை. ஆனாலும் வடக்கு கிழக்கின் கல்வி நிலைமை இந்த அளவுக்கு போவது மிகவும் கவலைக்குரியது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீள் மதிப்பீட்டு விண்ணப்ப இறுதி திகதி அறிவிப்பு!

2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கு விண்ணப்ப இறுதி திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பரீட்சார்த்திகள் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்த விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பது அவசியம். தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்கள் நாளை தேசிய பத்திரிகைளில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

http://www.virakesari.lk/article/52939

625.0.560.320.160.600.053.800.700.160.90

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.