Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பினர் தமது அரச விசுவாசத்தைக் காட்ட முனைகிறார்கள்-செ.கஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பினர் தமது அரச விசுவாசத்தைக் காட்ட முனைகிறார்கள்-செ.கஜேந்திரன்

Mar 30, 20190

 
 

கூட்டமைப்பினர் தமது அரச விசுவாசத்தைக் காட்ட முனைகிறார்கள்-செ.கஜேந்திரன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடாத்திய ஊடகவியியலாளர் சந்திப்பின்போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போது யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் நிறைவடையும் நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்றது. இக் கூட்டத் தொடரினூடாக ஒரு நீதி கிடைக்குமென தமிழ் மக்கள் பலத்த எதிர்ப்பார்ப்புக்களில் இருந்தனர். அதற்கமையவே இம்முறையும் இலங்கைக்கு சர்வதேச கண்காணிப்பு என்ற பெயரில் கால அவகாசம் வழங்கக் கூடாதென வடக்கு கிழக்கில் மக்கள் ஒன்று திரண்டு போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர் என செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஆனாலும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்பார்ப்புகளுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் இலங்கைக்கு மீளவும் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் தாயகத்திலும் புலத்திலும் உள்ள பலரும் கால அவகாசம் வழங்கப்படாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றே வலியுறுத்தியிருந்தனர். அதேநேரம் கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர் தேசங்களிலுள்ள சில சந்தர்ப்பவாத அமைப்புக்களுமே மேற்குல சக்திகளுடன் இணைந்து கோரிக்கை விடுத்திருந்தனர்.

இவ்வாறானதொரு நிலையில் தற்போது கால அவகாசம் வழங்கப்பட்டு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதுடன் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகவே தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு அல்லது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இலங்கை அரசிற்கு கண்காணிப்பு என்ற போர்வையில் கால அவகாசம் வழங்கப்படுவதற்கு கூட்டமைப்பினரே ஆதரவை வழங்கியிருக்கின்றதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் தமிழ் மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் இனியும் கால அவகாசம் வழங்கப்படக் கூடாது என்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றும் கூட்டமைப்பினரும் கோரியிருந்தால் அதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யத் தயாரில்லை. ஏனெனில் இந்த அரசையும் அரச படைகளையும் பாதுகாக்கின்ற தேவை மட்டுமே அவர்களுக்கு இருக்கின்றது.

ஆனால் கூட்டமைப்பினர் அதனைச் செய்யவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் இந்திய, மேற்கு நாடுகளின் நலன்களினடிப்படையில் அவர்கள் சொல்வதையே செய்கின்றனர். அவர்கள் எதனைச் சொல்கின்றார்களோ அதனையே இலங்கைக்குள்ளும் ஜெனிவாவிலும் செய்து வருகின்றனர். ஆகவே மக்கள் தான் இதனை சரியாக புரிந்து கொண்டு தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

இந்திய மேற்கு நாடுகள் தமக்காக தான் இத்தீர்மானத்தைக் கூட நிறைவேற்றியிருக்கின்றனர். இதனூடாக இலங்கை மீது அவர்களுக்கான பிடி உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகையினால் வரப்போகும் தேர்தலில் இந்திய மேற்கு நாடுகளுக்கு எதிரானவர்கள் வெற்றி பெற்று வருகின்ற போது தான் இதனை கையில் எடுப்பார்கள்.

ஆனால் தமக்குச் சார்பானவர்கள் வந்தால் அதனைக் குறித்த பெரிதும் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். இதனூடாக எல்லாமே நீர்த்தப் போகின்ற வேலைகள் தான் நடைபெறும். ஆக மீண்டும் விசாரணை நடைபெற்று தமிழர்களுக்கு நீதி கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது. இப்படியே தான் காலத்தை இழுத்தடிக்கப் போகின்றனர். ஆகவே இதனை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்ட சென்று நீதியைப் பெற்றுக் கொள்கின்ற நடவடிக்கைகளையே நாம் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

சுமந்திரனுக்கு கெடு காலம் ஆரம்பித்திருக்கிறது. தெற்கிலும் அவரை எதிர்க்கும் நிலைமை உருவாகியிருக்கிறது. சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவமோகன், சம்பந்தன் உட்பட கூட்டமைப்பில் எவர் பேசுவதாக இருந்தாலும் தேர்தலை மையப்படுத்தியே எல்லாம் பேச்சும் நடக்கிறது. சிறிதரன் உட்பட அனைவரம் இன்றைக்கு தமது அரச விசுவாசத்தைக் காட்ட முனைந்து இருக்கின்றார்கள்.“எனகூறியிருக்கிறார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.(15)

http://www.samakalam.com/செய்திகள்/கூட்டமைப்பினர்-தமது-அரச/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.