Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில், 25 வருடங்களுக்கு பின்னர் சடலம் நல்லடக்கம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

death-body-720x450.jpg

25 வருடங்களுக்கு பின்னர் சடலம் நல்லடக்கம் – யாழில் சம்பவம்

இத்தாலி நாட்டில் நோய்வாய்ப்பட்டு இறந்தவரின் உடலம் 25 வருடங்களின் பின்னர் யாழ்.சாவகச்சேரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி அவரது சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சாவகச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மாலை அவரது விருப்பத்திற்கமைய அவரது சடலம் சாவகச்சேரியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

யாழ். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த எம் ஸ்ரிபன் ஜோகி என்பவர் இத்தாலி நாட்டிற்கு சென்று அங்கு தொழில் புரிந்துள்ளார். கடந்த 1994ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி அவருடைய 49ஆவது வயதில் அவர் இறந்துள்ளார்.

அவர் தனது இறுதி ஆசையாக தான் உயிரிழந்த பின்னர் தனது சடலத்தை தனது சொந்த ஊரான சாவகச்சேரிக்கு கொண்டுச்சென்று அங்கு அடக்கம் செய்ய வேண்டும் என உறவினர்களிடம் தெரிவித்திருந்தார்.

அக்கால பகுதியில் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தீவிரம் அடைந்திருந்தமையால் அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல் நிலவியுள்ளது. இதனையடுத்து அவரது சடலத்தை 25 வருடங்களுக்கு பாதுகாக்க நிறுவனம் ஒன்றிடம் உறவினர்கள் ஒப்படைத்தனர்.

இலங்கையில் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் சடலத்தை இலங்கை கொண்டுவர உறவினர்கள் முயற்சித்த போதும் 25 வருட கால ஒப்பந்தம் உள்ளமையால், மீள பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது 25 வருடங்கள் நிறைவடைந்தமையினால் அவரது சடலத்தை பெற்ற உறவினர்கள், அதனை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளனர்.

http://athavannews.com/25-வருடங்களுக்கு-பின்னர்-ச/

 

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்!

ஆச்சரியமாக இருக்கின்றது

25 வருடங்கள் ஒரு சடலத்தை எம்பாமிங் செய்து வைக்க முடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.