Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சற்று நேரத்தில் கொழும்பு திரும்புகிறார் கோத்தா – கட்டுநாயக்கவில் வரவேற்புக்கு ஏற்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சற்று நேரத்தில் கொழும்பு திரும்புகிறார் கோத்தா – கட்டுநாயக்கவில் வரவேற்புக்கு ஏற்பாடு

gotabhaya-300x206.jpgசிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று காலை எமிரேட்ஸ் விமானத்தில் சிறிலங்காவுக்குத் திரும்பவுள்ளார்.

டுபாய் வழியாக இன்று காலை 8.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் கோத்தாபய ராஜபக்சவுக்கு  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பு அளிப்பதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

கடந்த மாதம் 26ஆம் நாள் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த கோத்தாபய ராஜபக்சவுக்கு,  எதிராக கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த வாரம் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பாக அவரது மகளும், சித்திரவதைக்கு உள்ளான தமிழர் ஒருவரும் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக சிவில் வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் அவர் இன்று நாடு திரும்புவாரா என்ற சந்தேகங்கள் நீடித்து வந்தன.

இந்த நிலையில் இன்று காலை கோத்தாபய ராஜபக்ச கொழும்பு திரும்புகிறார் என்றும், அவருக்கு விரிவான வரவேற்பை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், கோத்தாபய ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கோத்தாயபய ராஜபக்சவுக்கு ஆசி வழங்கும் மத நிகழ்வு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடக்கவுள்ள வரவேற்பு நிகழ்வில், கோத்தாபய ராஜபக்ச உரையாற்றவுள்ளார். இதன் போது அவர் தனது எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து ஆதரவாளர்களிடம் வெளிப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.puthinappalakai.net/2019/04/12/news/37335

  • கருத்துக்கள உறவுகள்

பல அழுத்தங்களுக்கு மத்தியில் நாடு திரும்பிய கோத்தா

தனிப்பட்ட பயணமொன்றினை முன்னெடுத்து அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ  இன்று காலை இலங்கை வந்தடைந்தார்.

57118247_448298655936936_566749088217825

அமெரிக்காவில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக இரு சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள பின்னணியிலேயே அவர் இன்று நாடு திரும்புயள்ளார்.

இதேவேளை கோத்தபாய ராஜபக்சவிடம்  அவரிற்கு எதிராக  தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்த ஆவணங்களை பிரீமியர் குரூப் இன்டர்நசனல்எனும் தனியார் நிறுவனத்தினர் கையளித்தமை குறித்த தகவல்களும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

56890341_2185962468108221_83586367174811

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கலிபோர்னியாவில் உள்ள டிரேடர்ஸ் ஜோ வணிகவளாகத்திற்கு சென்றுவிட்டு வெளியே வந்தவேளை  அவரிடம் குறிப்பிட்ட  வழக்கின் பிரதிகள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இலங்கை சிறைகளில் பெண்கள் பாலியல் வன்முறைகளிற்கு உட்படுத்தப்படுவது வழமையான விடயம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல்செய்துள்ள ரோய் சமாதானம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/53880

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.