Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் பெயரில் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் பெயரில் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்

சென்னை, ஏப். 23-

சென்னை ஈக்காடுத் தாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகத்துக்கு கடந்த சனிக்கிழமை ஒரு போஸ்ட்கார்டு வந்தது.

நெல்லையில் இருந்து அனுப்பப்பட்டிருந்த அந்த போஸ்ட்கார்டில், தமிழில் மிரட்டல் விடுத்து எழுதப்பட்டு இருந்தது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டி ருந்ததாவது:-

அரசை குறை கூறி ஜெயா டி.வி.யில் தொடர்ந்து செய்தி வெளியிடப்படுகிறது. இதை உடனே நிறுத்த வேண்டும். இல்லையெனில் விபரீத விளைவுகள் ஏற்படும்.

ஜெயலலிதா மீது வெடி குண்டு தாக்குதல் நடத்தப்படும். இது உறுதி.

இவ்வாறு அந்த மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

மேலும் அந்த கடிதத்தில் விடுதலைப்புலிகள், வெங்கடேசன், பாளை. என்.ஜி.ஓ. பி. காலனி என்ற முகவரியுடன் ரப்பர் ஸ்டாம்பு சீலும் அச்சிடப்பட்டு இருந்தது.

மிரட்டல் கடிதம் குறித்து ஜெயா டி.வி. நிர்வாகம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. மிரட்டல் போஸ்ட்கார்டையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் இந்த மிரட்டல் கடிதம் குறித்து நெல்லையில் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது பாளை.யில் அந்த குறிப்பிட்ட முகவரியில் ஒருவாலிபர் தங்கி இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. கடிதத்தை அந்த வாலிபர் தான் எழுதினாரா? அல்லது அந்த வாலிபரை பிடிக்காத யாரேனும் அப்படி கடிதம் எழுதி உள்ளார்களாப என்றும் தெரியவில்லை.

இதுகுறித்து நெல்லை போலீசார் சம்பந்தப்பட்ட முகவரியில் ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை மிரட்டல் கடிதம் எழுதிய வாலிபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

maalaimalar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

this all done by indian brahmins,if any thing happenes to srilankan tamils,tamilnadu tamils should destroy all

vishnu temples and destroy sankaracharya mutts where this bloddy people are there--

if ltte kills jeyalalitha it is only shame to them

கொஞ்சம் அடக்கி வாசியுங்கோ எல்லா குட்டையையும் ஒண்டா குழப்பாதீங்கோ. ஒரு கிணறு இறைச்சு முடியட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் அடக்கி வாசியுங்கோ எல்லா குட்டையையும் ஒண்டா குழப்பாதீங்கோ. ஒரு கிணறு இறைச்சு முடியட்டும்.

நிங்கள் solvathu சரி ,அடக்கி வாசிக்கிறேண்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவுக்கு புலிகளின் பெயரால் அச்சுறுத்தல்: இளந்திரையன் கடும் கண்டனம்

[திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2007, 14:16 ஈழம்] [சி.கனகரத்தினம்]

தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்தியா, தமிழ்நாடு அல்லது உலகின் எந்த ஒரு நாட்டினது உள்விவகாரங்களிலும் தலையிடாது ஒதுங்கியிருக்கும் கொள்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.

விடுதலைப் போராட்ட இயக்கமாகிய நாம், எம்மை ஒடுக்கும் அரசாங்கமான சிறிலங்கா அரசாங்கத்தின் கீழ்த்தரமான பரப்புரைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றோம். ஒடுக்கப்படுகின்ற ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் கரிசனையான நிலைமையை கட்டுப்படுத்திவிடலாம் என்றும் சிறிலங்கா அரசாங்கம் கருதுகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தால் இயக்கப்படும் சில சக்திகளால்தான் தமிழ்நாட்டில் சில முக்கிய தலைவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நாம் நம்புகின்றோம்.

இத்தகைய முறைகேடான செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழ்நாட்டு அரசியலில் எமது பெயரால் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள் குறித்து அவதானமாக இருக்குமாறு நாம் அன்புடன் வேண்டுகின்றோம்.

தனிநபர்களும் ஊடகங்களும் இத்தகைய அனாமதேய கடிதங்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்றும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார் இளந்திரையன்.

புதினம்

புலிகள் பெயரில் ஜெ.வுக்கு மிரட்டல்-பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு விடுதலைப் புலிகள் பெயரில் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஈக்காட்டுதாங்கலிலுள்ள ஜெயா டிவியின் அலுவலகத்திற்கு கடந்த 21ம் தேதி நெல்லையிலிருந்து ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.

அக்கடிதத்தில், ஜெயா டிவியில் அரசை குறை கூறி செய்தி வெளியிடுவதை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரும். ஜெயலலிதா மீது வெடி குண்டு தாக்கல் நடத்தப்படும் என்பது உறுதி என குறிப்பிடப்பட்டிருந்தது.

அக்கடிதத்தில் விடுதலைப் புலிகள், வெங்கடேசன், பாளை, என்ஜிஓபி காலனி என்று முகவரி இருந்தது.

இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் நடத்திய விசாரணையின்போது, அந்த முகவரியில் வாலிபர் ஒருவர் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் எழுதினாரா அல்லது அவருக்கு எதிரிகள் யாராவது இவ்வாறு செய்தனரா என்பது குறித்து நெல்லை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

போலீஸ் பாதுகாப்பு

இந் நிலையில் மிரட்டலின் எதிரொலியாக ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவரது போயஸ் கார்டன் மற்றும் சிறுதாவூர் பங்களாவிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் யா டிவி அலுவலகம் மற்றும் டாக்டர் நமது எம்ஜிஆர் பத்திரிக்கை அலுவலகம் ஆகிய இடங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக தலைமையகத்திலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தற்ஸ்தமிழ்

என்ன நடந்தாலும் இவயளுக்கு நினைவில வாறது,புலிகள் தான்

இவயள் தங்களைத் தாங்களே joker களா காட்டிக்கொள்ளுகினம்

இலங்கைக்கான துணைத்தூதுவர் கம்சா இருக்கும் வரையும் தமிழ்நாட்டில் பதற்றம் இருக்கும்.அவரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"காட்டில மானைப் புலி பிடிச்சாலும்" அது விடுதலைப்புலிகள் தான் அதற்கு மைனாரிட்டி திமுக அரசும் கூட்டு"! என்று புலம்பும் "ஜெயா அம்மையார்!!....அப்படியிருக்க விடுதலைப்புலிகளின் பெயரிலேயே ஒரு மிரட்டல் கடிதம் வந்தால் என்ன சொல்லுவா!! ..! :rolleyes: !

தமிழ்நாட்டு அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!.

ஜெயலலிதாவுக்கு புலிகளின் பெயரால் அச்சுறுத்தல்: இளந்திரையன் கடும் கண்டனம்

தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்தியா, தமிழ்நாடு அல்லது உலகின் எந்த ஒரு நாட்டினது உள்விவகாரங்களிலும் தலையிடாது ஒதுங்கியிருக்கும் கொள்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.

விடுதலைப் போராட்ட இயக்கமாகிய நாம், எம்மை ஒடுக்கும் அரசாங்கமான சிறிலங்கா அரசாங்கத்தின் கீழ்த்தரமான பரப்புரைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றோம். ஒடுக்கப்படுகின்ற ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் கரிசனையான நிலைமையை கட்டுப்படுத்திவிடலாம் என்றும் சிறிலங்கா அரசாங்கம் கருதுகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தால் இயக்கப்படும் சில சக்திகளால்தான் தமிழ்நாட்டில் சில முக்கிய தலைவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நாம் நம்புகின்றோம்.

இத்தகைய முறைகேடான செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழ்நாட்டு அரசியலில் எமது பெயரால் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள் குறித்து அவதானமாக இருக்குமாறு நாம் அன்புடன் வேண்டுகின்றோம்.

தனிநபர்களும் ஊடகங்களும் இத்தகைய அனாமதேய கடிதங்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்றும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார் இளந்திரையன்.

http://www.eelampage.com/

  • கருத்துக்கள உறவுகள்

ஆரியப் பெண்மணி ஜெயலலிதாவின் சதித்திட்டம் உளவுத்துறையின் ஆசியுடன் சிறப்பாக அரங்கேற்றப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு இதனால் ஒரு சொட்டு புலி எதிர்ப்பு மருந்து ஏற்றப்பட்டுள்ளது. மக்களும் மயக்க நிலைக்குச் சென்றுவிடுவார்கள். :rolleyes:

பொப் வுல்மர் மாதிரி கழுத்து நெரிபட்டுச் சாகவேண்டியதான் மிச்சம்.

ஜெயலலிதா என்றாலே அரசியலில் ஒரு அழுக்கு..

அது புலிப்பூச்சாண்டி காட்டி அரசியலில் செல்வாக்கு எடுத்து முதல்வர் ஆகலாம் என் கற்பனையில்

ஆரியக்கூட்டங்களுடன் கொட்டமடிக்கிறது...

பாவம் விட்டு விடுங்கள்.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் அறிக்கை பாராட்டத்தக்கது. எந்தச் சந்தேகத்தையும் நீடிக்க விடாமல் அது பற்றிய உண்மைகளை வெளியால சொல்லி விட்டால் நிறையச் சிக்கல்களில் இருந்து விடுபடலாம். முன்பும் இவ்வாறு பல விடயங்களைச் செய்திருக்கலாம். ஆனா, அப்போ சக்தி வாய்ந்த ஊடகங்கள் இல்லை. சொன்னாலும் அவை ஏற்றுக் கொள்ளமாட்டினம். அல்லது சனத்துக்குச் செய்தியை விடமாட்டினம்.

இப்ப உலகம் கையினுள் வாறமாதிரி வந்திட்டு. புலிகளின் பெயரைப் பாவித்து ஏதும் நடந்தால், அது பற்றி வெளிப்படுத்தி விட வேணும்.

ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் புலிகள் திட்டவட்டமாக நிராகரிப்பு

தமிழக முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க.பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதாவுக்கு தாங்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக வெளியான செய்திகளை விடுதலைப் புலிகள் முற்றாக மறுத்துள்ளனர்.

இது குறித்து புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறுகையில்;

இந்தியாவின் தமிழகத்தின் உள்விவகாரங்களிலோ அல்லது உலகின் எந்தவொரு நாட்டினதும் உள்விவகாரங்களிலோ எவ்விதத்திலும் தலையிடுவதில்லை என்ற கொள்கையில் நாம் மிகவும் உறுதியாகவுள்ளோம்.

இந்தக் கொலை மிரட்டல் தொடர்பான செய்தியானது நீதியற்றதும் அடக்கு முறை ஆட்சியை நடத்தும் இலங்கை அரசினால், ஈழத்தமிழருக்கான அனுதாபமும் ஆதரவும் தமிழகத்தில் பெருகிவருவதைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதொன்றாகும்.

தீயநோக்கம் கொண்ட இந்தச் செயலை தாங்கள் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.