Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மசூதி, மயானத்திலிருந்து கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீட்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kathankudi-4-720x450.jpg

மசூதி மயானத்திலிருந்து கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீட்பு!

மட்டக்களப்பு – காத்தான்குடியில் உள்ள மசூதி  மயானத்தில் இருந்து  கைக்குண்டுகள், ஆயுதங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி  ஜாமியுழ்ழாபீரின் பெரிய மீரா ஜும்மா மசூதி மயானத்தில் இருந்தே இந்த ஆயுதங்களும் பொருட்களும் இன்று (சனிக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளன.

பிஸ்டோல் ஒன்று, இரண்டு கைக்குண்டுகள், வாள், கைக்கோடாரி, வாக்கிடோக்கி இரண்டு, கணனி கார்ட் டிஸ்குகள் உட்பட பெருமளவான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி பகுதியில் தொடர்ச்சியாக சோதனைகளை மேற்கொண்டுவரும் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

kathankudi-5-720x405.jpg

kathankudi-1-720x405.jpg

http://athavannews.com/காத்தான்குடி-மசூதி-மயானத/

  • கருத்துக்கள உறவுகள்

படையினரின் தேடுதலால்வச்சிருக்க முடியாது அல்லவா அதுதான் கொண்டு போய் போடுகிறார்கள் பிடித்தால் அவ்வளவுதான் இன்று ஓர் சம்பவம் பார்த்தேன் கொஞ்ச பேரை அரஸ்ட் பண்ணி செல்வதை இடம் சம்மாந்துறையில் 

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடியில் சிக்கிய ஆயுதங்கள்: சட்டவிரோத ஆயுதங்களை போலீஸிடம் ஒப்படைக்க உத்தரவு

காத்தான்குடியில் சனிக்கிழமை கைப்பற்றப்பட்ட பொருட்கள் Image captionகைப்பற்றப்பட்ட பொருட்கள்

இலங்கையின் காத்தான்குடியில் இன்று சனிக்கிழமை பாதுகாப்பு தரப்பினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது, மைக்ரோ துப்பாக்கி, தொலைத்தொடர்பு சாதனங்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக, காத்தான்குடி போலீஸார் தெரிவித்தனர்.

சிறப்பு அதிரடிப்படையினர், ராணுவம் மற்றும் காத்தான்குடி போலீஸார் இணைந்து, காத்தான்குடி மொஹிதீன் பள்ளிவாசல் மையவாடியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போதே, இந்த ஆயுதங்கள் சிக்கியதாகவும் காத்தான்குடி போலீஸார் கூறினார்.

மைக்ரோ பிஸ்டல் - 1, அதற்கான ரவைகள் - 6, ரவைக்கூடு - 1, கைக்குண்டுகள் - 2, தொலைத்தொடர்பு சாதனங்கள் - 2, அவற்றுக்கான சார்ஜர்கள் ஆகியவற்றுடன் வாள்களும், இங்கு கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை இலங்கை

அண்மையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் சொந்த ஊர் காத்தான்குடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சட்டவிரோதமான முறையில் வாள், கிறீஸ் கத்தி போன்றவற்றினை பொதுமக்கள் தம்வசம் வைத்திருந்தால், அவற்றினை அருகிலுள்ள போலீஸ் நிலையங்களில் இன்று அல்லது நாளை ஒப்படைக்குமாறு, போலீஸார் திணைக்களம் அறிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-48161717

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.