Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவாந்துறையில் கூரிய ஆயுதங்களை வீசுவதற்கு வந்தவர்களில் ஒருவர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2019 at 10:58 PM, குமாரசாமி said:

இலங்கையில் ஒரு காலமும் பிரச்சனை இல்லாதமாதிரியும்......ஏதோ விடுதலைப்புலிகள் வந்த பின்னரே இலங்கையில் வாழமுடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டது போலவும்  பல மீள்குடியேற்ற கருத்துக்களை வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இவர்களுக்கு இலங்கையில் நடந்த இனக்கலவரங்கள் ஞாபகத்திற்கு வரவில்லையா?

சிங்களகாடையர்களினால் அடித்து விரட்டப்படும் போது சொந்த ஊர் நாட்டுக்குள்ளேயே அகதிகளாக்கப்பட்டதை மறந்து விட்டார்களா?

அல்லது தமிழ் பிரதேசங்களில் குடிகொண்டிருக்கும் ராணுவம் கடற்படை விமானப்படை எல்லோரும் நல்லவர்களாக மாறிவிட்டார்கள் என எண்ணுகின்றார்களா?

10 வருட இடைவெளியில் ஈழத்தமிழரின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்தமாதிரியே ஒரு சில கருத்துக்கள் காணப்படுகின்றன.

இலங்கையில் பிரச்சனையே சிங்களமும் அதன் கொள்கையுமே என்பதை உலகம் புரிய முன் எம்மவர் புரிந்து கொண்டால் கடவுளுக்கு நன்றி சொல்வேன்.

சோனகர் குண்டு போட்டாங்களாம்.....இனி ஊருக்கு போய் இருக்கேலாதாம்.....தங்கச்சி.....தங்கச்சி.......🤣🤣🤣

உங்கள் கருத்தின் நியாயம் புரிகிறது. இலங்கை 48 க்கு பின் கலவர பூமியாகத்தான் இருந்தது என்பதும் உண்மையே. மஹாவம்ச மனோநிலையே இந்த கலவர நிலையின் ஊற்றுவாய் என்பது சரியே.

ஆனால் 83-09 பகுதியில் நடந்த அல்லோலகல்லோலங்களை 48-83, 09-19, காலங்களோடு ஒப்பிட முடியாதுதானே.

இதுக்கான காரணம் சிங்கள மேலாண்மையை அதன் வழியிலேயே எதிர்க்கும் ஒரு தலைமை தமிழரிடம் 83-09 இல் இருந்தது என்பதுதானே. இப்படிச் சொல்வதால், அவர்களால்தான் நாட்டில் பிரச்சினை வந்தது என்று சொல்வதாக அர்தப்படாது. மாறாக அவர்களுக்கு முன்பும் பின்பும் இருந்த தமிழ் தலைமைகள் கையாலாகதவயாக இருந்தா காரணத்தாலும், அவர்கள் சிங்கள மேலாண்மைக்கு சவாலே இல்லை என்பதாலும், ஒட்டு மொத்தமாக நாட்டில், குறிப்பாக தமிழர் பகுதியில் 09 கு பின்னும், 83 க்கு முன்னும் ஒப்பீட்டளவில் அமைதி நிலவியது.

இன்று புலிகளை போல ஒரு விட்டுக்கொடாத கடும்போக்குத் தலைமை முஸ்லீம்களிடத்தில் உருவாகி, அதன் வழியே இருக்கும் ஓப்பீட்டளவு அமைதியும் சுதந்திரமும் இல்லாமல் போய்விடுமோ என்பதே இங்கே எழுதியோரின் அங்கலாய்ப்பு.

  • Replies 60
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

59846260_10156331248692944_6419196290252406784_n.jpg?_nc_cat=100&_nc_ht=scontent.flhr3-2.fna&oh=5e9a1550ad44af710b8c71bff054e2c5&oe=5D6003C9

இதை விட யாரும் உலகத்தில் முஸ்லீம்களுக்கு விட்டுக்கொடுத்திருக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

என்னை கேட்டால்,  எங்கே வாழுவது என்பது அவரவர் தீர்மானம். லண்டனிலும் குண்டு வெடித்ததுதான், ஆனால் அதை வைத்து எல்லா தெற்காசியர்களையும் நோண்டி நுங்கு எடுக்கவில்லை இந்த நாட்டு அரசும், மக்களும்.

ஆனால் இந்த தெளிவு இலங்கையில் யாருக்கும் இல்லை. ஆகவே அங்கே இதை சாட்டாக வைத்தே, அரசும், முஸ்லீம்களும், தமிழர்களும் தத்தம் வலுவுக்கு ஏற்ப, ஏரியிற நெருப்பில் எண்ணையை வார்கிரார்கள். 

இப்படியான நெருக்கடி நிலை மேற்கு நாடுகளில் தோன்றுவதில்லை. ஆகவே தப்பிப் பிழைத்து வந்த பின் மீண்டும் இந்த நெருக்கடிக்குள் போவானேன்? என்ற தயக்கம் நியாயாமாகவே படுகிறது.

இந்த நெருக்கடிக்கு பயமில்லாத ஆக்கள் என்றால் அவர்கள் எல்லாம் ஊரை விட்டே வந்திருக்க மாட்டார்களே?

தவிர முன்பு ஊரில் வெறுங்காலில் நடந்த ஒழுங்கையால் இப்போ செருப்பிலாமல் நடக்க முடியாது இருப்பதை போல. நம்மில் பலரை 20/30 வருட மேலைதேயெ வாழ்க்கை கொஞ்சம் மிருது படுத்தி விட்டது, ஏன் நாகரீகப் படுத்தி விட்டதென்றே சொல்லாம். 

மறுபடியும் அங்கே போய் நெருக்குவாரங்களுக்கு, இனபேதங்களுக்கு முகம் கொடுக்க நம்மில் பலர் தயங்குவது இயற்கையே.

  • கருத்துக்கள உறவுகள்

இது பச்சைப் பொய். 

லண்டன் குண்டு தாக்குதலுக்குப் பின் முஸ்லிம்கள் மீது அசிட் தாக்குதல்கள்.. முஸ்லீம்களின் ஆள் அடையாளத்தை மறைக்கும்.. உடைகளை இழுத்துக்கழற்றிவிட்டு ஓடும் சம்பவங்கள்..

பாடசாலைகளுக்கு அருகில் முஸ்லீம்களை எதிர்க்கும் சுவரொட்டிகள்..

ஏன் எல்லாத்துக்கும் மேல்.. பள்ளிவாசல் தொழுகையின் பின்.. வாகனம் ஒன்றை வேண்டும் என்றே மோதி இடித்த சம்பவம்.. .

கத்திக் குத்துகள்.. என்று..

இஸ்லாமிய மத அடிப்படை வாதப் பயங்கரவாதத்தின் விளைவுகளை முஸ்லீம்கள் இன்று சந்தித்தே வருகின்றனர். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில், மேற்கில், இந்த செயற்பாடுகள் எல்லாம் சில கடும்போக்காளர்களால் செய்யப் படுவன. அவர்கள் மீது சட்டம் பாரபட்சமின்றி பாயும். 

பின்ஸ்பேரி பார்க் மசூதியின் முன் காரால் மோதி ஒரு வெள்ளை இனவாத கூமுட்டை ஒரு வயோதிப முஸ்லீமை கொன்றபோது, பெரும் எடுப்பில் வெள்ளையர்களே அந்த அஞ்சலியில் கலந்து கொண்டனர்.

முஸ்லீம்கள் டியூப்பில் குண்டு வைத்தவுடன், ஒவ்வொரு முஸ்லீமின் மீதும் சந்தேகம் படியவில்லை. மாறாக தகவல் அடிப்படையிலேயே தேடுதல்கள் நடந்தன.

இல்லை இந்த விடயத்தை மேற்கு அணுகும் முறையும் இலங்கை அரசு அணுகும் முறையும் ஒன்றுதான் எண்டு யாரும் சொன்னால்,

அவர்களுக்கு தாம் பிறந்த இலங்கை பற்றியும், வாழும் யூகே பற்றியும் தெரிந்தது அவ்வளவுதான் எண்டு விட்டுவிடவேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

என்னை கேட்டால்,  எங்கே வாழுவது என்பது அவரவர் தீர்மானம். லண்டனிலும் குண்டு வெடித்ததுதான், ஆனால் அதை வைத்து எல்லா தெற்காசியர்களையும் நோண்டி நுங்கு எடுக்கவில்லை இந்த நாட்டு அரசும், மக்களும்.

5 hours ago, nedukkalapoovan said:

இது பச்சைப் பொய். 

லண்டன் குண்டு தாக்குதலுக்குப் பின் முஸ்லிம்கள் மீது அசிட் தாக்குதல்கள்.. முஸ்லீம்களின் ஆள் அடையாளத்தை மறைக்கும்.. உடைகளை இழுத்துக்கழற்றிவிட்டு ஓடும் சம்பவங்கள்..

பாடசாலைகளுக்கு அருகில் முஸ்லீம்களை எதிர்க்கும் சுவரொட்டிகள்..

ஏன் எல்லாத்துக்கும் மேல்.. பள்ளிவாசல் தொழுகையின் பின்.. வாகனம் ஒன்றை வேண்டும் என்றே மோதி இடித்த சம்பவம்.. .கத்திக் குத்துகள்.. என்று..இஸ்லாமிய மத அடிப்படை வாதப் பயங்கரவாதத்தின் விளைவுகளை முஸ்லீம்கள் இன்று சந்தித்தே வருகின்றனர். 

5 hours ago, goshan_che said:

இல்லை இந்த விடயத்தை மேற்கு அணுகும் முறையும் இலங்கை அரசு அணுகும் முறையும் ஒன்றுதான் எண்டு யாரும் சொன்னால்,

அவர்களுக்கு தாம் பிறந்த இலங்கை பற்றியும், வாழும் யூகே பற்றியும் தெரிந்தது அவ்வளவுதான் எண்டு விட்டுவிடவேண்டியதுதான்.

 சில சனம்.. என்ன எழுதிறம் என்று சுயமா எழுதுங்களா... இல்ல.... ஏதோ எழுதி வெட்டி விழுத்துவம் என்று எழுதுதுங்களா...??! சுய முரண்களோடு.

உலகெங்கும்.. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தின் தாக்குதல்களின் விளைவை.. எங்கெங்கெல்லாம் தாக்குதல் நடாத்தினார்களோ.. அங்கெல்லாம்.. முஸ்லீம்கள் அனுபவிக்கவே செய்கின்றனர். அதற்கு அவர்களே தான் பொறுப்பு. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் என்றால் மக்களில் பெரும்பாலானோர். ஒரு சில இனவாத கூமுட்டைகள் அல்ல.

லண்டனில் குண்டு வெடித்தவுடன், வெள்ளையர் தெற்காசியரை/முஸ்லீமை தாக்கக்கூடும் என்ற அச்சத்தில், கலவர பயத்தில் ஊரடங்கு வரவில்லை.

ஆனால் இலங்கையில் வந்தது. ஊரடங்கை தளர்தியதும் நீர்கொழும்பில் வன்முறை வெடித்தது.

இதுதான் இரெண்டு நாட்டு மக்களின் அணுகுமுறைக்கும் உள்ள வேறுபாடு. இந்த அடிப்படை வித்யாசமே விளங்கவில்லை எனில், எல்லாமே முரணாகத்தான் தெரியும்.

அது பார்பவரின் கோளாறு.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கதை எப்படிப் போகுதென்னா.. நாங்க என்னமோ சொறீலங்கா சிங்கள ஆட்சியாளர்களின் அபிமானிகள் போலவும்.. தாங்கள் முஸ்லீம்களின் அனுதாபிகள் போலவும்..

சொறீலங்காவோ.. இங்கிலாந்தோ.. பிரான்சோ.. எதுவாக இருந்தாலும்.. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகளின் செயலால்... முஸ்லீம்கள் விளைவுகளை சந்திக்கின்றனர் என்பதுதான் வாதம்.

இதில் பார்வைக் கோளாறு விளக்கோளாறு யார் யார் என்பது அவரவருக்கே வெளிச்சம்.

பிரான்சில் இந்த இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதக் கும்பல்களின் செயலின் பின் ஆள் அடையாளங்களை முழுமையாக மறைக்கும் ஆடைகளுக்குத் தடை.

இங்கிலாந்தில்.. பெரும்பாலான முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்தவர்களை நாட்டுக்குள் நுழைந்தால்.. பொலிஸ் பதிவு.

சொறீலங்காவிலும் சில நடைமுறைகள்... முஸ்லீம்களை இலக்கு வைத்து.

ஆக.. நாட்டுக்கு நாடு விளைவுகள் வேறுபடினும்.. இந்தப் பயங்கரவாதத்தினால்.. முஸ்லீம்கள் பொதுப்படையாக விளைவுகளை சந்திக்கின்றனர் என்பது தான் வாதமே தவிர...

இதில்.. கூமு யார் யார் என்பது அவரவருக்கே வெளிச்சம். 

  • கருத்துக்கள உறவுகள்

1. நான் முஸ்லீம் அபிமானி இல்லை. நீங்கள் புலியும் இல்லை. உங்களின் ஒன்றுக்கு பின் முரணான தத்துபித்துவங்கள், இஸ்லாமிய பயங்கரவாததை மேற்கு கையாளும் விதத்துக்கும், இலங்கை கையாளும் விததுக்கும் பெரிய வேறுபாடில்லை என்று சொல்லும் அளவுக்கு உங்களை கொண்டு வந்து விட்டுள்ளது என்பதே யதார்த்த உண்மை.

2. ஐஸஐஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்கு முன்பே பிரான்சில் புர்கா தடை வந்து விட்டது.  அந்த தடையின் அடிப்படை மேலே துல்பன் கூறியது போல பிரான்சை ஒரு secular republic ஆக பேண வேண்டும் என்பதற்கே ஒழிய. குண்டுதாரிகளை இனம் காண அல்ல. (பிரான்ஸ் அரசு அவ்வளவு கூமுட்டை தனமாக சிந்திக்காது)

3. https://www.gov.uk/register-with-the-police/who-needs-to-register

யூகேயின் இந்த கட்டுப்பாடு இஸ்லாமிய நாடுகளுக்கு மட்டும் இல்லை. வடிவாக படிச்சு பார்க்கவும் உக்ரேன் இருக்கு ஆனா பாகிஸ்தான் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு அரசுகள் இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தை கையாள்வதற்கும்.. முஸ்லீம்கள் மீது அதன் விளைவுகள் என்பதற்கும்.. சாதாரண பொது மக்கள் பார்வையில்.. முஸ்லீம்கள் தொடர்பான சிந்தனையோட்டம் என்பதற்கும் விளக்கம் பத்தவில்லை. 

பிரான்ஸ்.. பொதுவான தடை போடவில்லை. குறிப்பாக முஸ்லீம் பெண்களின் ஆள் அடையாளத்தை மறைக்கும் உடைக்கு தடை தான் கொண்டு வந்தது. இது மேற்குலகில்.. இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதம்.. அது அல்குவைடா வடிவில் இருக்கலாம்.. ஐ எஸ் வடிவில் இருக்கலாம்.. ஜிகாத் வடிவில் இருக்கலாம்.. வந்த பின்னர் தான் அந்தத் தடைக்கான தேவையை பிரான்ஸ் அரசு மக்களின் முன்னால் வைத்தது. மக்களும் அதனை ஆதரித்தே நின்றார்கள். இப்ப அதுக்கு இவை சிலர் கூமு விளக்கம் கொடுக்கினம்.

பிரித்தானிய அரசு பொலிஸ் பதிவுப் பட்டியலில் பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் உள்ளன.. எல்லாம் முஸ்லீம் நாடுகளும் உள்ளன என்று கூறப்படவில்லை. இந்தப் பட்டியலே... 11/09  தாக்குதலுக்குப் பின் தான் உருவானது. அதாவது இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தின் பின்.

சொறீலங்காவும் இதே வழியில் தான்.. இவர்களின் வழிகாட்டலில் தான் செயற்படுகிறது. செயற்படவும் போகிறது.. இந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள.

அமெரிக்காவும் முஸ்லீம் நாட்டுப் பிரஜைகளின் வரவில் கடும் சோதனைகளைப் பின்பற்றுகிறது. இதனால்.. பாதிக்கப்பட்டவர்களில்.. முஸ்லீம்கள் அல்லாதோரும் அடங்குவர். 

இதெல்லாம்.. இந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தின் விளைவுகளே. அது முஸ்லீம்களையும் பாதிக்கிறது.. மற்றைய மக்களின் வாழ்வியலும் செல்வாக்குச் செய்கிறது. இதுதான் இங்கு சொல்லப்படும் கருத்து. இதனை எந்த கூமு வாலும் கூட இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும். 

உக்ரைனில் ரஷ்சிய ஆதரவு கிளர்ச்சிக்குழுக்கள் செயற்படுவதால்.. அங்கிருந்து வருபவர்கள் மீதும்.. பொலிஸ் பதிவு இருக்கிறது. அதற்காக முஸ்லீம் நாடுகளின் பெரும்பாலான நாடுகளில் இருந்து வருவோர் மீது இந்த பதிவு வரக் காரணம்.. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதமே ஆகும். இதனை சிலர் விளங்கிக் கொள்ள ரெம்ப சிரமப்படுகிறார்கள். ஒருவேளை அவர் தான் அடுத்தவர்களை பார்த்துச் சொல்லும் கூமுக்குள் அடங்குகிறார்களோ என்னவோ. ☺️

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது, உலகில் எந்த நாடு எந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தாலும் அதை இழுத்து கொண்டு வந்து இஸ்லாமிய பயங்கரவாத எதிர் நடவடிக்கை என்ற மரத்தில் கட்டிவிடுவோம். நல்ல லொஜிக். 

இந்த சம்பாசணை இப்படி ஒரு வழியில் போகும் என்பது முன்பே தெரிந்ததுதான். ஆனால் வாசிப்பவர்களுக்கா சில உண்மைகளை, தர்கரீதியில் சொல்லவேண்டி இருந்தது. அதை சொல்லியாகி விட்டது.

Last word egoistic freaks, தாமே கடைசியில் பதில் கூறியதால் தாமே தர்கத்தில் வெண்டதாக எண்ணி இன்பம் அடைய எத்தனிப்பர். ஆக அப்படி ஒரு பதிலை இந்த பதிவுக்கு பின்னெதிர்பார்கிறேன்(you are so predictable ). 

ஆனல் என் கருத்து பகிர்வு இந்த திரியில் இத்தோடு முடிகிறது. அடுத்த தடவையாவது, ஒரு விடயத்தை பற்றி தலைப்பிடும் முன் புர்கா எது ஹிஜாப் எது போன்ற அடிப்படை விடயங்களை விளங்க முயற்சிக்கவும்.

அப்புறம் 8 வயசில யாழில் தொண்டர் அணியில் இருந்தேன் என்று கூறி, களத்தில் நிண்டவர்களிடமே மொக்கேனப் படுவதையும் தவிர்த்தால் நல்லம்.

இல்லாவிடில் புர்கா திரியில் தலைப்பை மாற்ற வேண்டி வந்தமாரி, சந்தி சிரிக்க நேரிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.