Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான நோக்கங்களுக்கு இடமளிக்காதிருப்போம் – சாய்ந்தமருதில் ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான நோக்கங்களுக்கு இடமளிக்காதிருப்போம் – சாய்ந்தமருதில் ஜனாதிபதி

Maithripala-Srisena-1.jpg

பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான நோக்கங்களினால் இலங்கையர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த இடமளிக்காதிருப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், பயங்கரவாதம் உலகில் எங்குமே வெற்றிபெற்றதில்லை என்றும் அடிப்படைவாத பயங்கரவாதத்தின் மிலேச்சத்தனமான நோக்கங்களுக்கு இலங்கையரிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க கூடாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்திற்கு இன்று (புதன்கிழமை) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு கிழக்கு மாகாண அரச அதிகாரிகள் மற்றும் மாகாணத்தின் முஸ்லிம் இளைஞர் யுவதிகளை சந்தித்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் இலங்கையின் பிரச்சினை மட்டுமல்ல எனவும் அது சர்வதேசத்துடன் தொடர்புடைய பயங்கரவாதச் செயலாகுமென ஜனாதிபதி கூறினார்.

இந்த சர்வதேச பயங்கரவாத குழுவுக்கு எதிராக செயற்பட உலகின் பலம்வாய்ந்த நாடுகள் முன்வந்திருக்கும் நிலையில் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கும் நடவடிக்கைகளை எமது பாதுகாப்பு தரப்பினர் தற்போது மிக வெற்றிகரமான முறையில் முன்னெடுத்திருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் நாட்டின் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கம் பாதிக்கப்படும் வகையிலான நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டு பயங்கரவாதத்திற்கு எந்த வகையிலும் துணைபோக வேண்டாம் என அனைவரிடமும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி நாட்டில் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்துவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் அரச அதிகாரிகள், பாதுகாப்புத் துறை முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இச்சந்திப்பில் பாதுகாப்புத் துறைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் தெளிவான மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்துடன், நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் தற்போது திட்டமிட்ட வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அந்த நிகழ்ச்சித் திட்டதின் ஊடாக அனைத்து பிரஜைகளும் அச்சமும், சந்தேகமுமின்றி சுதந்திரமான சமூகத்தில் வாழும் உரிமை உறுதிப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

President-Maithripala-srisena-in-Saintha

President-Maithripala-srisena-in-Saintha

President-Maithripala-srisena-in-Saintha

 

 

http://athavannews.com/பயங்கரவாதிகளின்-மிலேச்ச/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை குண்டுதாரிகள் வெடிக்கவைத்த வீட்டினை பார்வையிட்டார் ஜனாதிபதி

President-maithripala-srisena-visit-kalmunai-sainthamaruthu-2.jpg

சாய்ந்தமருது பிரதேசத்தில் தற்கொலை குண்டுதாரிகளால் குண்டுகளை வெடிக்க வைத்துக்கொள்ளப்பட்ட வீட்டினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டார்.

கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்திற்கு இன்று (புதன்கிழமை) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு கிழக்கு மாகாண அரச அதிகாரிகள் மற்றும் மாகாணத்தின் முஸ்லிம் இளைஞர் யுவதிகளை சந்தித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விஜயத்தின்போது பாதுகாப்பு துறையினரால் காத்தான்குடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது தற்கொலை குண்டுதாரிகளால் குண்டுகளை வெடிக்க வைத்துக்கொள்ளப்பட்ட வீட்டினை ஜனாதிபதி பார்வையிட்டார்.

இந்த விஜயத்தில், அமைச்சர் தயா கமகே, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரிகளும் இணைந்துகொண்டனர்.

President-maithripala-srisena-visit-kalm

President-maithripala-srisena-visit-kalm

President-maithripala-srisena-visit-kalm

 

 

http://athavannews.com/தற்கொலை-குண்டுதாரிகள்-வெ/

2 hours ago, கிருபன் said:

பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான நோக்கங்களினால் இலங்கையர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த இடமளிக்காதிருப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது உண்மை என்றால் இவருக்கு மட்டும் எப்படி இடமளிக்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பயங்கரவாத தலைவனுடன் போய்..கை குலுக்கி..சாப்பிட்டு அவனை பாராட்டிவிட்டுவரும் சனாதிபதி...

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்கிளப்புக்கு போய் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல், ஹிஸ்புல்லாவோட கூவி குலாவிட்டு வந்திருக்கார் ...எந்த நாட்டு ஜனாதிபதி செய்யாததை இவர் செய்து இருக்கார் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.