Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 12 முதல் 18 வரை தமிழின படுகொலை வாரமாக நினைவுகொள்ளத் தீர்மானம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மே 12 முதல் 18 வரை தமிழின படுகொலை வாரமாக நினைவுகொள்ளத் தீர்மானம்!

AdminMay 9, 2019
mulli.jpg?w=640

தமிழின படுகொலை வாரமாக மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான ஒருவாரத்தை வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் அனுஷ்டிக்கவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.

இந்த நிகழ்வுகள் எதிர்வரும் 12ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து வரும் ஒரு வார காலத்தில் வடகிழக்கு மாகாணத்தின் 21 இடங்களில் இடம்பெற உள்ளதாகவும் இறுதி நாளான மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

mulli-2-1.jpg?w=640

அத்தோடு நினைவேந்தல் நிகழ்விற்கு அனைவரும் அணி திரள வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை வருடா வருடம் அனுஷ்டித்து வருகிறோம். வடக்கு மாகாண சபையினூடாக செய்யப்பட்டு வந்த இந்நிகழ்வுகளை இம்முறை அப்பகுதி மதத் தலைவர்கள் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

ஆகவே பொதுவான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்விற்கு அனைவரும் ஆதரவை வழங்கி ஒற்றுமையாக அணிதிரள வேண்டும். ஆனாலும் இறந்தவர்களை நினைவு கூறுவதற்கும் அந்த நிகழ்வுகளை நடத்துவதற்கும் பல வழிகளிலும் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து அவசரகாலச்சட்ட சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழர்கள் மீது கடுமையாக பிரயோகிக்கப்படுகின்றது. இவ்வாறான நிகழ்வுகளை நடத்தக்கூடாது மக்கள் அணிதிரளக்கூடாது என்பதற்காகவே பல்கலைக்கழக மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மக்களை அச்சமூட்டுகின்ற செயற்பாடுகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆகவே இறந்த உறவுகளை நினைவு கூருவதற்கான உரிமை எங்களுக்கு இருக்கிறது. இதனடிப்படையில் அரசின் அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகளுக்கு அடிபணியாமல் தடைகளைத் தாண்டி இந்நிகழ்வுகளில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

http://www.errimalai.com/?p=40094

அன்று விடுதலைப்புலிகள் ஒரு அரச கட்டமைப்பை உருவாக்கி மக்களுக்கு ஒரு நல்லாட்சியையும் சர்வதேசத்திற்கு எமது இன விடுதலையின் தேவையையும் செயலால் எடுத்து காட்டினார்கள். தந்தை செல்வாவின் சாத்வீகப் போராட்டம், விடுதலைப்புலிகளின் தற்காப்பு ஆயுதப் போராட்டம் என விரிந்த களம் 10 ஆண்டுகளுக்கு முன் முள்ளிவாய்காலில் சர்வதேச இராஜதந்திரப் போராட்டமாக அடுத்த களத்தில் வந்து நின்றது. 

இன்று 10 ஆண்டுகளின் பின்னர் திரும்பிப் பார்க்கும் போது அந்த உயர்வு நிலைகளைத் தொலைத்து விட்ட நிலை, தாயகத்தில் மட்டுமல்ல புலத்திலும் பெரும் சறுக்கலை சந்தித்து நிற்கிறது. 

ஈழமக்களின் பல்வேறு தரப்பினரின், அன்றாட அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், முள்ளிவாய்காலுக்கு முன்னர் அமைந்த பல்பரிமாணக் கட்டமைப்புக்களான, காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் பிள்ளைகளுக்கானது), செஞ்சோலை (ஆதரவற்ற பெண் பிள்ளைகளுக்கானது), செந்தளிர் (5 வயதிற்கு குறைந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கானது), வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது), அன்பு முதியோர் பேணகம், இனிய வாழ்வு இல்லம் (காது கேளாத, வாய் பேசாத, பார்வை அற்ற, வலுவழந்த சிறுவர் சிறுமியருக்கானது), சந்தோசம் உளவள மையம் (மனவளம் பாதிப்புக்குள்ளானவர்களுக்கானது), நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது), மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது), சிறீ இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த ஆண் போராளிகளுக்கானது), சீர்திருத்தப்பள்ளி, முரளி முன்பள்ளி (ஜந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப்பள்ளி), புனிதபூமி மகளீர் காப்புத் திட்டம், உதயதாரகை (கணவனை இழந்த பெண்களுக்கானது), பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம், பசுமை வேளாண்மை சேவை (விவசாயிகளுக்கானது), எழுகை தையல் பயிற்சி மையம் என மக்களின் பல்வேறு பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தி, அவர்களின் வாழ்வு சிறக்க அமைந்த கட்டுமானங்கள் போன்று இன்று தேவைகள் அதிகரித்திருக்கும் நிலையில் தேவைப்படும் கட்டமைப்புகளின் தோற்றம் கொடுக்க வேண்டியது எமது கடமை.

 

இன்று எமது துறைசார் வல்லுனர்கள் இணைக்கப்பட்டு, தமிழர் வாழ்வியலை முன்னகர்த்தும் செயற்ப்பாட்டுப் பார்வை தகர்ந்து கிடக்கிறது. முன்னர் வெளிநாட்டில் நிறைந்து கிடக்கும் தமிழ் வைத்திய நிபுணர்கள் தமிழீழ சுகாதார பிரிவினால் உள்ளுர் வைத்தியர்கள் மருத்துவ மனைகளுடன் இணைக்கப்பட்டு, மக்கள் நலம் சார்ந்த வைத்திய முன்னெடுப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன. இதனால் தாயக உள்ளுர் உறவுமுறையில் ஆழமான ஒரு பற்று வளர்க்கப்பட்டது மட்டுமன்றி, மக்களின் சுகாதாரமும் மேம்பட்டது. அதன் தொடர்ச்சியாக மருத்துவப்பிரிவு, திலீபன் சிறப்பு மருத்தவமனை, திலீபன் நடமாடும் மருத்துவ சேவை, பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை, மருத்துவ ஆராச்சிப்பிரிவு, மருத்துவக்கல்லூரி எனப் பல விரிவாக்கங்களைக் கண்டது. இன்றும் இதில் பல விடயங்கள் மக்கள் நலன்கருதி முன்னெடுக்க முடியும். ஆனால் அதை முன்னெடுப்பவர் யார்?  என்ற நிலையில் உள்ளது. ஆனால், இதை முன்னெடுத்து செல்லுதல் அவசியம். ஒரு ஆரோக்கியமான உடல் மற்றும் உள நலம் கொண்ட சமுதாயத்தை பேணுவது அவசியம்.

முள்ளிவாய்காலுக்கு முன்னரான ஒரு தலைமையை இன்று தேடுவதில் இருந்தே மாற்றம் வந்தாக வேண்டும். இன்றுள்ள தலைமைகளில் ஒரு கூட்டு பொறுப்பின் ஊடாக அதை எதிர்கொள்ள முடியுமே அன்றி இன்னொரு தனிநபரால் அது சாத்தியமில்லை என்பதை புரிநது கொள்ள வேண்டும்.

இரண்டாவது தமிழ் அமைப்புகளிடையேயும், செயற்பாட்டாளர்களிடையேயும் குறைந்த பட்ச விடயங்களிலாவது ஒரு ஒருமித்த ஏற்பும் இணக்கப்பாடும் எட்டப்பட்டாக வேண்டும்.

தமிழ் செயற்பாடுகளில் ஆற்றலும், பட்டறிவும் கொண்ட ஒரு குழு திட்டமிடல் வடிவமைப்பில் இணைக்கப்பட்டாக வேண்டும்.

இருக்க அவ்வாறன விடயங்களில் புலனாய்வுத் திறனுடன் பலவிடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டு, அதன் பின்புலத்தில் தமிழ் அரசியல் ஒருங்கமைக்கப்பட்டு நகர்ந்தால் மட்டுமே மலை என நிமிர்ந்து நிற்கும் சவால்களை அதனால் வெற்றிகரமாகக் கடந்து நகர முடியும். அதுவே ஒரு இமாலய சவால் என்ற நிலையிலேயே முள்ளிவாய்காலின் 10 ஆண்டுகள் நிறைவைத் ஈழத்தமிழினம் எதிர்கொள்கிறது.

குறிப்பு : மேலே கூறப்பட்ட கருத்துக்கள் பலவேறு தளங்ககளில் இருந்து சேகரிக்கப்பட்டது . அவற்றுடன் எனது கருத்துக்களும் இணைக்கப்பட்டுள்ளது. 

வரலாற்றில் நாம் கற்ற பாடங்கள் பல. அதில் முக்கியமான ஒன்றாக விளங்குவது : தாய்த்தமிழகத்தின் கையாலாகாத அரசியல் தலைமை. ஆறு கூடி மக்கள் ஒரு கூப்பிடு தூரத்தில் இருந்தும் தமிழீழ மக்கள் அழிக்கபப்டும் பொழுது அரசியல் நாடகம் மட்டுமே அரங்கேறியது.  

தியாகம் செய்தவர்கள் இறந்த பின்னரும் வாழ்கிறார்கள். துரோகிகள் வாழும்பொழுதே இறந்து விடுகிறார்கள். 

இன்றைய கருணாநிதி, ஜெயலலிதா அற்ற தமிழக அரசியலில் ஒரு உண்மையான அடுத்த தலைவரை , உலகத்தமிழினத்தின் ஒரு தலைவனை தாய்த்தமிழகம் தெரிவு செய்தால் அது ஈழத்தமிழர்களின் வாழ்க்கைக்கு மட்டுமல்லாது உலகத்தமிழினம் ஒன்றுபட; ஒற்றுமைப்பட  உதவும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.