Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவுகள்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவுகள்…

May 18, 2019

45615712_Unknown.jpg?resize=800%2C600

தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிறப்புற உணர்வுபூர்வமாக இடம்பெற்றது

தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட யுத்தம் நிறைவுக்கு வந்த நாளான 2009 மே 18 அன்று தமிழ் மக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக வருடம் தோறும் அனுஷ்டித்து வருகின்றனர். அந்த வகையிலே யுத்தம் நிறைவடைந்து பத்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்ற போதும் தமிழர்களுக்கான நீதி கிடைக்கவில்லை எனவும் நீதி கிடைக்கும் வரை தங்களுடைய உரிமைக்கான போராட்டங்கள் தொடரும் எனவும் அந்த வகையில் அதன் ஒரு அங்கமாக இந்த நினைவு நிகழ்வுகள் இடம்பெறுகின்pறன.

அந்த வகையில் இன்றைய தினம் தமிழினப் படுகொலை 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் காலை பத்து முப்பது மணிக்கு அக வணக்கத்தோடு ஆரம்பித்து தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் தனது உறவுகளை பறிகொடுத்த தனது ஒரு கையை இழந்த சிறுமி ஒருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது

தொடர்ந்து மக்களால் உயிரிழந்தவர்களுக்காக நினைந்துருகி சுடர்கள் ஏற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து தமிழினப் படுகொலை நாளான மே 18 பிரகடனம் வெளியிடப்பட்டது அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலர் அஞ்சலி செலுத்தியதோடு நிகழ்வுகள் நிறைவு பெற்று இருக்கின்றது இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் சிவில் சமூக ஆர்வலர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். #தமிழினப் படுகொலை #முள்ளிவாய்க்கால் #யுத்தம் #mullivaikal

45614272_Unknown.jpg?resize=800%2C60045614784_Unknown.jpg?resize=800%2C60045614864_Unknown.jpg?resize=800%2C60045615104_Unknown.jpg?resize=800%2C60045615136_Unknown.jpg?resize=800%2C600 45616016_Unknown.jpg?resize=800%2C600

DSC04644.jpg?resize=800%2C450DSC04648.jpg?resize=800%2C450DSC04649.jpg?resize=800%2C450DSC04650.jpg?resize=800%2C450DSC04664.jpg?resize=800%2C450DSC04666.jpg?resize=800%2C450DSC04668.jpg?resize=800%2C450DSC04670.jpg?resize=800%2C450DSC04674.jpg?resize=800%2C450DSC04676.jpg?resize=800%2C450DSC04688.jpg?resize=800%2C450DSC04692.jpg?resize=800%2C450DSC04693.jpg?resize=800%2C450DSC04698.jpg?resize=800%2C450DSC04699.jpg?resize=800%2C450DSC04728.jpg?resize=800%2C450DSC04732.jpg?resize=800%2C450DSC04734.jpg?resize=800%2C450 DSC04741.jpg?resize=800%2C450

 

 

http://globaltamilnews.net/2019/122120/

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு!

தமிழகம் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பாகவும் ஈழத்தில் நடைபெற்ற ஈழவிடுதலை போராட்டம் மற்றும் சிங்கள அரசின் படுகொலைகளை வெளிப்படுத்தும் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திராவிடர் விடுதலை கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் என கலந்துகொண்டு சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/120270

திருமலையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த மக்களின் 10ஆவது வருட முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது.

திருகோணமலையில் உள்ள சுற்றுலா விடுதிகள் செறிந்து காணப்படுகின்ற அலஸ்ட்தோட்டம் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) மாலை 6.15 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

உயிர்நீத்த மக்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்

இந்த நினைவேந்தல் நிகழ்வில் அருட்தந்தை மதுரங்கன் குரூஸ் அவர்களால் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது.

குறித்த நிகழ்வில் வெளிநாட்டுப் பிரஜைகளும் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

https://www.ibctamil.com/srilanka/80/120268

அரசியல்வாதிகளைத் திட்டித்தீர்த்த தாய்! முள்ளிவாய்க்காலில் நெஞ்சை உருகவைத்த ஒரு காட்சி!!

முள்ளிவாய்க்காலில் நெஞ்சை உருகவைத்த ஒரு காட்சி!!

 

https://www.ibctamil.com/srilanka/80/120232

அன்று தாய் இறந்தது தெரியாமல் பால் குடித்த குழந்தை! இன்று சிறுமியாக முள்ளிவாய்க்காலில் முதலாவதாக சுடரேற்றினாள்!

தமிழின அழிப்பின் பத்தாவது ஆண்டு நினைவேந்தலை நாம் இன்று கண்ணீருடன் அனுஷ்டித்து கொண்டிருக்கின்ற போதும் யுத்தம் நம் இதயங்களில் தந்து சென்ற வடு எத்தனை வருடங்கள் கடந்தாலும் மாறாதது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் துயர் சுமந்து நிற்கும் எம் உறவுகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் துயரின் சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுமி ராகினி இன்று பொது ஈகைச்சுடரை முதன்முதலாக ஏற்றிவைத்திருந்தார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

முள்ளிவாய்க்கால் யுத்தம் நடந்தபோது இலங்கை அரச படைகள் நடத்திய கோரத் தாக்குதலில் சிறுமி ராகினி தனது கையொன்றை பறிகொடுத்திருந்தார்.

அதைவிட பேரவலம் என்னவெனில் இறந்த தனது தாயிடம், அப்போது பிறந்து எட்டு மாதங்களே ஆகியிருந்த ராகினி பால் குடித்த காட்சி தான்.

தாயின் உயிர் பிரிந்தது அறியாமல், தந்தை படுகாயங்களுக்கு இலக்காகி உயிருக்கு போராடி கொண்டிருந்தது தெரியாமல் அந்த எட்டு மாத பச்சிளம் குழந்தை தாயிடம் பால் குடித்த காட்சி அனைவரது நெஞ்சையும் கனக்கச் செய்து விட்டது.

https://www.ibctamil.com/srilanka/80/120230

கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை(18) மட்டக்களப்பு ஆரையம்பதி சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா, கோ.கருணாகரம், இரா.துரைரெத்தினம், மற்றும், பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், வாலிபர் முன்ணணியினர், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உயிர்களின் ஆன்மா ஈடேற்றத்துக்காக விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு, பஜனை வழிபாடுகளும் இடம்பெற்றன. தொடர்ந்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலியுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/120220

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்களின் முள்ளிவாய்கால் நினைவேந்தல்

கல்முனை புலவிப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று மதியம் 2மணியளவில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் தலைவர் எஸ் .லோகநாதன் தலைமையில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கான விஷேட பிரார்த்தனைகள் இடம்பெற்றது.

இதன்போது இறுதி யுத்தத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட தமிழினத்தின் சாட்சியாக நிற்கின்ற முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நினைவேந்தல் நிகழ்வும் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/120269

தமிழினம் அவலங்களை மட்டும் நினைவுகூரவில்லை! தமிழ் தேச எழுச்சி நாளாகவும் பிரகடனம்

முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தின் ஒரு தசாப்தத்தை நினைகூரும் ஒட்டுமொத்த தமிழினம் அவலங்களை மட்டும் நினைவுகூரவில்லை என்று தெரிவித்துள்ள முள்ளிவாய்க்கால் பிரகடனம், மே 18 ஆம் திகதியான இன்றைய நாளை இன அழிப்புக்கு எதிரான தமிழ் தேச எழுச்சி நாளாகவும் 2019 ம் ஆண்டை இன அழிப்புக்கு எதிரானதும் அரசியல் நீதிக்கான சர்வதேச வலுச்சேர்க்கும் ஆண்டாகவும் பிரகடனம் செய்துள்ளது.

மே 18 ஆம் திகதியான இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் பத்தாவது ஆண்டை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பிரதான நினைவெழுச்சி நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு விடுத்த பிரகடனத்திலேயே இந்த விடையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மனிதாபிமான மீட்பு படை நடவடிக்கை என்ற பெயரில் சிறிலங்கா அரசு கட்டவிழ்த்துவிட்டிருந்த கொடூரமான போரின் இறுதி நாட்களில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் தமிழினப் படுகொலையின் பத்தாவது ஆண்டு பிரதான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர்ந்த நிலையில் முள்ளிவாய்க்கால் பிரகடனம் வாசிக்கப்பட்டது. தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வாசிக்கப்பட்ட இந்த பிரகடனத்தை தமிழில் தென் கைலை ஆதினம் திருகோணமலை அகத்தியர் அடிகளார் வாசித்தார்.

தமிழினப்படுகொலைகளை நினைவுகூருவது மாத்திரமன்றி சிங்கள– பௌத்த சிறிலங்கா பேரினவாத அரசின் அடக்கு முறைக்கெதிராக தமிழினம் வெகுண்டெழுந்த வரலாற்றையும் அவற்றின் வெவ்வேறு வடிவங்களையும், கூட்டு உரிமைக்கான தியாகத்தையும் நினைவு கூருவது தமிழர்களான ஒவ்வொருவரதும் வரலாற்றுக்கடமை என்றும் முள்ளிவாய்க்கால் பிரகடனம் வலியுறுத்தியுள்ளது.

தமிழினத்தின் மீது நடந்தேறும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் வெறுமனே அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள முள்ளிவாய்க்கால் பிரகடனம், அது குறித்த கவலையையும் வெளிப்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அரசு பின் முள்ளிவாய்க்கால் கொடூரத்திற்கு பின்னரும் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள-பௌத்த மயமாக்கத்தையும், இராணுவ மயமாக்கலையும் விஸ்தரித்து வருவதையும், தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையை தொடர்ந்து வருவதாகவும் கோடி காட்டியுள்ள இந்தப் பிரகடனம் அதற்கான ஆதாரங்களையும் முன்வைத்துள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஒரு தசாப்தம் நிறைவடைந்தும் நினைவு கூருவதற்கான உரிமை மறுக்கப்பட் டுள்ளமை ஊடாக உண்மையை மறுப்பதும் மறைப்பதற்கும் முயற்சித்து வரும் சிறிலங்கா அரசு மறுப்புவாதத்தை நிறுவனமயப்படுத்தி உண்மைகளை மறுத்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனால் பின் முள்ளிவாய்க்கால் வரலாற்றுத் தசாப்தத்தில் இருக்கும் தமிழ் மக்கள் இம்முறை நினைவுகூரலை அணி திரட்டலாக மாற்ற வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் முள்ளிவாய்க்கால் பிரகடனம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த பிரகடனத்தின் ஆங்கில வடிவத்தை தமிழர் மரபுரிமை இயக்கத்தின் இணைத் தலைவரான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் வாசித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/120226

பொங்குதமிழ் எழுச்சி தூபிக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்!

வவுனியா நகரசபைக்கு முன்பாகவுள்ள பொங்குதமிழ் தூபி முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றது.

இதன்போது யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் இறந்த உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டி இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அத்துடன் உயிரிழந்த உறவுகளுக்காக மலர் தூவி அஞ்சலியும் செலுத்தபட்டது.

குறித்த நிகழ்வு, வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை உறுப்பினர்கள், கட்சிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழின அழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் நினைவுநாள் நிகழ்வுகள் தாயகப் பகுதிகளிலும்,  தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் உணர்வுபூர்வமாக பல்வெறு நிகழ்வுகளுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Mullivaikkal-Remembrance-in-vavuniya.jpg

Mullivaikkal-Remembrance-in-vavuniya-2.j

Mullivaikkal-Remembrance-in-vavuniya-4.j

http://athavannews.com/பொங்குதமிழ்-எழுச்சி-தூபி/

கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நினைவுகூரல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பசுமை பூங்கா வளாகத்தில் குறித்த நிகழ்வு இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணியளவில் ஆரம்பமாகியது.

இதன்போது நினைவுநாள் பொதுச்சுடர் இறுதி யுத்தத்தினால் உறவுகளை இழந்த ஒருவரால் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுச் சுடர்களும் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன், முன்னாள் வட. மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்க்ள, உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குறித்த முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வையடுத்து பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mullivaikal-TNA-18.jpg

Mullivaikal-TNA-16.jpg

Mullivaikal-TNA-14.jpg

Mullivaikal-TNA-9.jpg

Mullivaikal-TNA-7.jpg

http://athavannews.com/கிளிநொச்சியில்-தமிழ்-தேச/

 

தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்!

 

Mullivaikkal-Remembarance-ITAK-in-Jaffna-1-698x450.jpg

 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலையைச் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலையைச் செயலகத்தில் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வாலிப முன்னணியின் தலைவர் க.பிருந்தாபன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா பிரதான சுடரை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர சபை முதல்வர் இ.ஆர்னோல்ட், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Mullivaikkal-Remembarance-ITAK-in-Jaffna

Mullivaikkal-Remembarance-ITAK-in-Jaffna

Mullivaikkal-Remembarance-ITAK-in-Jaffna

Mullivaikkal-Remembarance-ITAK-in-Jaffna

http://athavannews.com/தமிழரசுக்-கட்சியின்-ஏற்ப/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.