Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தண்ணீர்

Featured Replies

  • தொடங்கியவர்

பியூசு மானுசு (Piyush Manush) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ஆவார். 

2015ஆம் ஆண்டு சென்னை மக்களுக்கு சிஎன்என்-ஐபிஎன் ஆண்டின் சிறந்த மனிதர் விருது வழங்கப்பட்டபோது சென்னை மக்களின் சார்பாளர்களாக பெற்றுக்கொண்டவர்களில் இவரும் ஒருவர்

 

  • Replies 59
  • Views 12.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

D9RvvMQU4AIbZSi.jpg:large

  • தொடங்கியவர்

மறை நீர் [Virtual Water] 

மறை நீர் என்பது ஒரு பொருளின் உற்பத்திக்கென செலவிடப்பட்ட [கண்ணுக்குப் புலப்படாத தண்ணீர்] நீர் ஆகும். [Virtual Water is the “Hidden” Water Volume of Water used to Produce Consumer Products]

நமது உடல் 70% விழுக்காடு நீரால் ஆனது என்பது உண்மையே. ஆனால் நாம் அதை நேரடியாக பார்க்க இயலாது. அந்த நீர் தான் இரத்தமாகவும் சதையாகவும், எலும்பாகவும் உள்ளது. அது போல் எந்த ஒரு பொருளுக்கும் தண்ணீர் மூலதனம் இல்லாமல் உற்பத்தி ஆக வாய்ப்பேயில்லை. அப்படி உருவாகும் பொருள் தன்னகத்தே எடுத்துக்கொள்ளும் நீர் தான் மறைநீர்.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலநூறு அடி ஆழ்துளைக் கிணறுகளில்கூட குடிப்பதற்கு ஏற்ற தண்ணீர் கிடைப்பதில்லை. பெருவாரியான பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது என பொதுப்பணித்துறை ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்நிலை தொடர்ந்தால், இன்னும் சில ஆண்டுகளில் நிலத்தடி நீர் இருப்பு பூஜ்ஜியத்திற்கு சென்றுவிட்ட கேப்டவுன் போல், நீரை அளந்து விநியோகிக்கும் நிலைக்கு வந்துவிடும் என எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

உலகத்தின் 70% பரப்பளவு நீரால் சூழ்ந்துள்ளது. எனவே தண்ணீர் பிரச்னை வந்துவிடவா போகிறது என மனிதர்கள் நினைக்கிறார்கள். ""நீரின்றி அமையாது உலகு"" என கற்றறிந்த இந்த அறிவார்ந்த தமிழ் சமூகத்திற்கு நீரின் சிக்கனம், நீர் பாதுகாப்பு மற்றும் மறை நீர் பற்றி தெரிந்திடாமல் இருப்பது மிகப்பெரிய சாபக்கேடு!

இன்றைக்கு உலகத்தின் மக்கள்தொகை 800 கோடியைத் தாண்டிவிட்டது, ஆனால், 2.5% விழுக்காடு மட்டுமே நல்ல தண்ணீர் உள்ளது! மற்றடி உப்பு நீர்தான்.

இந்த 2.5%விழுக்காட்டில் கூட 1% விழுக்காடுதான் நாம் உபயோகப்படுத்தும் தண்ணீராக உள்ளது, மற்றவை பனிக்கட்டிகளாக உறைந்துள்ளன. நல்ல தண்ணீரை 10% விழுக்காடு உயர்த்துவதற்கு என்ன கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல், 2.5% விழுக்காடு தண்ணீரும் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தாகத்திற்கு நாம் பணம் கொடுத்து பாட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்துக் கொள்ளலாம். கொக்கு, குருவி, காக்கா, சிங்கம், புலி, கரடி, யானை, மான், ஆடு, மாடு போன்ற மற்ற உயிர்கள் என்ன செய்யும்? இவைகளும் வாழ்ந்தால்தானே மனிதன் வாழ முடியும்.

இன்றைக்கு உலகில் நான்கில் ஒருவருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. அதுவும் தூய்மையான குடிநீருக்கு வழி இல்லாதவர்கள் ஏழைகளே. ஒவ்வொரு 20 விநாடிக்கும் சுத்தமில்லாத தண்ணீரால் ஒரு குழந்தை இறக்கிறது. ஒரு நாளைக்கு 20 லட்சம் டன் குப்பையைத் தண்ணீரில் கொட்டுகிறோம். உலக அளவில் ஆண்டுக்கு 35 லட்சம் பேர் தண்ணீர் தொடர்பான நோய்களால் இறக்கிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் அனைத்து உயிரினங்களும் அழிவதைத் தவிர வேறு வழியில்லை.

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக தென்மேற்குப் பருவ மழையின் சராசரி அளவீடு மைனஸில் சென்றுகொண்டிருக்கிறது. அதற்காக மழையே பெய்யவில்லை என்ற பொருளும் இல்லை. மழை நீரைச் சேமித்து வைக்கத் தவறியதால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. மைனஸில் உள்ள மழை வளத்தை மீட்டெடுக்க இன்னும் சிலபல ஆண்டுகள் ஆகலாம்.

உலகம் தோன்றிய முதல் இன்று வரை நீர் ஒரு சொட்டுக்கூட குறையவும் இல்லை கூடவுமில்லை. பிறகு ஏன் இந்த தட்டுப்பாடு?

தொழிற்புரட்சி

தொழிற்புரட்சி ஏற்பட்டதில் இருந்து தான் நீர் தட்டுபாடு பிரச்சனை துவங்கியது.

ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்கும்போது அரசு மக்களுக்கு எதிரே காட்டும் தூண்டில் புழு "வேலை வாய்ப்பு". இந்த தோல் தொழிற்சாலைகளால் கூடுதலாக கிடைத்த வேலை வாய்ப்பு 5% விழுக்காடு. ஆனால் பாலாற்றை சுற்றி இருந்த வேளாண்மை பாதித்ததால், வேளாண் தொழில் வாய்ப்பை இழந்தவர்களோ 85 விழுக்காடு. இங்கு 5% விழுக்காடு பெரிதா 85% விழுக்காடு பெரிதா? என்று நகைச்சுவையாக கேட்க வேண்டியிருப்பது ஓர் அவல முரண்தான். அதோடு குடிநீரும், விளைநிலமும் நஞ்சானது.

சுவீடனில் சாய பட்டறை தொழிற்சாலைகளோ, தோல் பதனிடும் தொழிற்சாலைகளோ கிடையாது ஏன்?

ஏன் சவுதி கோதுமையையும், சீனா பன்றி இறைச்சியையும், இஸ்ரேல் ஆரஞ்சு பழத்தையும் இறக்குமதி செய்கிறார்கள்?

நாம் ஏற்றுமதி செய்யும் போது அந்த குறிப்பிட்ட பொருள் மட்டும் ஏற்றுமதி ஆகவில்லை. அதனுடன் நமது வளமான நீரும் தான் ஏற்றுமதி ஆகிறது. ஆதலால் தான் மற்ற நாடுகள் நமது வளங்களை எளிமையாக சூறையாடுகிறது வணிகம், வேலைவாய்ப்பு, வளர்ச்சி என்ற பெயரில்…

மற்ற நாடுகளுக்காக நமது பாலாறு, காவிரி மற்றும் நொய்யல் ஆற்றின் நீர் வளத்தை இழந்தோம். நீரையும், மண்ணையும் நஞ்சாக்கி கொண்டோம்.

வருங்காலத்தில் நீர் வளம் உள்ள நாடே வல்லரசாக மாறும் எனத் தெரிந்த இஸ்ரேல் போன்ற பல நாடுகள் மறைநீர் கொள்கையைப் பின்பற்றுகின்றன.

எளிதாகக் கூறவேண்டும் என்றால், ஒரு மெட்ரிக் டன் கோதுமை விளைவித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர 1600 கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவை. எந்த நாட்டிற்கு கோதுமை அதிக தேவை உள்ளதோ, அந்த நாடு தனது நீர் வளத்தைக் காக்க, கோதுமையை விளைவிக்காமல் இறக்குமதி செய்துகொள்கிறது.

நாம் ஏற்றுமதியில் முதல் இடம்... தொழிற்சாலைகளால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது... என்றெல்லாம் நினைத்தால் தண்ணீர் இல்லாததால் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நோக்கியா மற்றும் குளிர்பான நிறுவனங்கள் நினைவிற்கு வர வேண்டும். நமது நாட்டில் தண்ணீரைச் சுரண்டும்வரை இந்த தொழிற்சாலைகள் இயங்கும், ஒரு சிலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நீர் வளத்தை மொத்தமாக சுரண்டிய பின் இங்கு எந்த தொழிற்சாலைகளும் இயங்காது. இதன் பின் விவசாயம் செய்துகூட பிழைக்க வழியில்லாமல், இன்று மறைநீர் கொள்கையில் இறக்குமதி செய்யும் புத்திசாலி நாடுகளுக்கு கொத்தடிமைகளாகத்தான் நாம் வேலைக்குச் செல்ல வேண்டும்.

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் எதற்காக மென்பொருள் நிறுவனங்களை இங்கே வைத்து நம்மை கூலிக்கு மாரடிக்க வைக்கின்றன?

இங்கே கூலி குறைவு என்பது மட்டுமில்லை, சென்னையில் ஒரு நபருக்கு பிபிஓ பணியைத் தருவதன் மூலம் அந்த நாடுகள் சேமித்துக்கொள்ளும் மறைநீரின் அளவு நாளொன்றுக்கு 7,500 லிட்டர்! இப்படி நம் நாட்டின் மறைநீரைச் சுரண்டுவதால்தான் அந்த நாடுகளில் ஒரு நபரின் தினசரி மறை நீர் நுகர்வு 4000 லிட்டராக இருக்கிறது. இங்கு ஒரு நபருக்கு 1,400 லிட்டர் மறைநீருக்கே திண்டாட்டமாக இருக்கிறது. அரபு நாடுகளில் தண்ணீர் காண்பதே அரிது. ஆனால் அங்கு பழ மரங்களை உற்பத்தி செய்கின்றனர். இஸ்ரேல் நாட்டில் சொட்டு நீர் பாசனம் மூலம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.

மறைந்துள்ள மறை நீர்

ஒரு செருப்பு தயாரிக்க - 7770 லிட்டரும்
ஒரு குவளை பீரில் 75 லிட்டரும்
ஒரு பர்கரில் 2500 லிட்டரும் 
ஒரு கோப்பை தேநீரில் 30 லிட்டரும் 
ஞெகிழியில் சிப்பமிட்டு வரும் ஒரு கோப்பை பாலில் 208 லிட்டரும் 
ஒரு கிலோ சர்க்கரையில் 1653 லிட்டரும் 
சாக்லேட் ஒரு கிலோவுக்கு 26,450 லிட்டரும் 
ஒரே ஒரு துண்டு பிரட்டில் மட்டும் 40 லிட்டரும், 15 துண்டுகள் கொண்ட ஒரு உறையில் 600 லிட்டரும் 
ஒரு முட்டையில் 196 லிட்டரும்
ஒரு கிலோ ஆப்பிளில் 822 லிட்டரும்
ஒரு கிலோ சோளத்தில் 1220 லிட்டரும் 
ஒரு கிலோ பார்லியில் 1425 லிட்டரும் 
ஒரு கிலோ கோதுமையில் 1830 லிட்டரும் 
ஒரு கிலோ சோயாபீன்ஸில் 2145 லிட்டரும் 
ஒரு கிலோ அரிசியில் 2500 லிட்டரும் 
ஒரு கிலோ கோழி இறைச்சியில் 4300 லிட்டரும் 
ஒரு கிலோ வெள்ளாட்டு கறியில் 5500 லிட்டரும்
ஒரு கிலோ வெண்பன்றி கறியில் 10400 லிட்டரும் 
ஒரு கிலோ காபி கொட்டையில் 18900 லிட்டரும்
ஒரு கிலோ சர்க்கரை உருவாக்க 1780 லிட்டரும் 
ஒரு கிலோ வெண்ணெய் உருவாக்க 3180 லிட்டரும் 
ஒரு கிலோ முட்டை உருவாக்க 3300 லிட்டரும் 
ஒரு சட்டை தயாரிக்க 4300 லிட்டரும் 
ஒரு லிட்டர் பெட்ரோல் சுத்திகரிக்க 10 லிட்டரும் 
பொதுவாக 1கி காகிதம் உற்பத்தி செய்ய 100 லிட்டரும், 1 A4 தாள் உருவாக்க 30 லிட்டரும்
ஒரு டன் பைங்கூழ் (சிமெண்ட்) உற்பத்தி செய்ய 4500 லிட்டரும் 
ஒரு டன் பழுப்பு இரும்பை எஃகாக மாற்ற 2000 லிட்டரும் 
ஒரு கோப்பை காபியின் மறைநீர் 140 லிட்டரும் 
ஒரு ஆரஞ்சு பழத்தின் மறைநீர் 50 லிட்டரும் கொண்டுள்ளது.
ஒரு லிட்டர் கோக் தயாரிக்க 56 லிட்டர் நன்னீர் கழிவு நீராக மாற்றப்படுகிறது. 
1.1 டன் எடையுள்ள ஒரு கார் தயாரிக்க 4 இலட்சம் லிட்டரும்... இரு சக்கர வாகனம், மின்னனு பொருட்கள் தயாரிக்க இலட்சக்கணக்கான லிட்டர் மறைநீர் சுரண்டப்படுகிறது.

நமது நாட்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் தவுலா கிராமத்தில் உள்ள ராஜேந்திர சிங் என்பவர் தனி மனிதனாக தனது கிராம மக்களின் உதவியோடு ஏழு நதிகளை அழிவிலிருந்து மீட்டெடுத்து ஜீவநதிகளாக மாற்றியுள்ளார். ‘பாலைவனமான எங்களது மாநிலத்தை சோலைவனமாக மாற்றிட 33 ஆண்டுகள் போராடினோம். ஆனால், தமிழகத்தை சோலைவனமாக மாற்றிட 10 ஆண்டுகள் போதுமானது...’ என்றும் கூறியுள்ளார்.

நமது நாட்டில் உள்ளவர்களுக்கு குடிக்க நீர் உள்ளதோ இல்லைேயா வெளிநாட்டுக் கார் தொழிற்சாலைகளுக்கும், குளிர்பானத் தொழிற்சாலைகளுக்கும் தடையே இல்லாமல் நீர் கிடைக்கிறது. இருக்கும் நீரையாவது பாதுகாத்திட நம் நாட்டு மக்களுக்குத் தேவையான பொருட்களை மட்டும் உற்பத்தி செய்ய வேண்டும். அல்லது நாமும் இறக்குமதி செய்து நமது நீர்வளத்தைப் பாதுகாக்க வேண்டும். அல்லது மறை நீருக்குசமமாக அதற்குரிய விலையில் ஏற்றுமதி செய்தால் விவசாயிக்கு நல்ல லாபம் கிடைக்கும், இளைஞர்கள் விவசாயம் செய்ய முன்வருவார்கள்.

வீட்டிற்கு வீடு மழைநீர் சேமிக்க வேண்டும் என அறிவுறுத்தும் அரசாங்கம் மழைநீர் சேமிப்பிற்காக என்ன திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறது என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை எனலாம். மன்னர் ஆட்சிக் காலத்தில் மக்களின் தேவைக்காக ஊருக்கு நடுவே கோயிலைக் கட்டி அருகே ஒரு குளத்தை அமைத்தார்கள். ஊரின் மத்தியில் உள்ள தெப்பக்குளத்தின் நீர் அவ்வூரின் மொத்த நிலத்தடி நீருக்கும் ஆதாரமாக இருந்தது. விவசாயத்திற்காக ஆறு, குளம், ஏரிகளை அமைத்தார்கள்.

ஆனால் இன்று ஆற்றில் மணல் அள்ளியும், மலைகளை உடைத்து விற்றும் காடுகளை அழித்தும், ஏரி, குளங்களை அழித்து வீட்டுமனைகளாக மாற்றியும் வருகிறோம். இந்நிலை தொடர்ந்தால், நாளை சோற்றுக்கும் ஒரு டம்ளர் நீருக்கும் ஓடுவோம். கையில் பணமிருக்கும். ஆனால், குடிக்க ஒரு சொட்டு நீர் இருக்காது! ஆற்றைப் பார்த்து ஓடுவோம். ஆறு இருந்த இடம் சாலையாக மாறியிருக்கும். குளத்தைப் பார்த்து ஓடுவோம். அந்த இடம் பேருந்து நிலையமாக காட்சி தரும்!

காட்டைப் பார்த்து ஓடுவோம்; அங்கு பல மாடிக் கட்டடங்கள் நின்றுகொண்டிருக்கும். மலையைப் பார்த்து ஓடுவோம்; அங்கு கல்வி நிறுவனங்களும் சாமியார் மடங்களும் மட்டுமே இருக்கும்! அப்போது யோசிப்போம் இதுவா வளர்ச்சி... இயற்கையை அழிக்காமலே இருந்திருக்கலாமே என்று! அந்நிலை வருவதற்குள் இப்பொழுதே விழித்துக் கொள்வோம்!

தன் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டியது ஒவ்வொரு நாட்டினுடைய கடமை. ஆனால் நமது நாட்டின் எந்த ஒரு அரசும் இதுவரை அதை நிறைவேற்றாமல் குடிநீரை வணிக பொருளாக்கி தனியார் முதலாளிகள் ‘பிழைக்க’ வழி செய்து கொடுத்துள்ளது. உரிமையோடு அரசை தட்டி கேட்டு குடிநீரை கேட்டு பெறவேண்டிய நாமோ, நவீன வாழ்க்கை மோகத்தில் மயங்கி போத்தல் நீரை விலைக்கு வாங்கி குடித்து திரிகிறோம். அந்த ஒவ்வொரு லிட்டர் நீரும் கூட, தலா 3 லிட்டர் நன்னீரை வீணாக்கித்தான் தயார் செய்யப்படுகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

விழித்துக்கொண்டால் பிழைத்துக்கொள்வோம்…!

~ கி. முத்தமிழ்வேந்தன் ~

  • தொடங்கியவர்

அருண் சக்கரவர்த்தி, முன்னைநாள் கூகிள் வேலையாளி ஒரு சமூக தொண்டர் நிறுவனத்தை ஆரம்பித்து குளங்களை தூர்வாரி வருகின்றார். 

Chennai-based Arun Krishnamurthy founded Environmental Foundation of India in 2007 through which he has restored 39 lakes and 48 ponds across India in the past decade.

While one of the main reasons is the continued dry spell and delayed monsoons, another major reason leading to this water crisis is the disappearing of lakes and ponds in the state. While the situation is grim in Tamil Nadu at present, it may not be too late before we witness this across India.

However, there is one man on a mission to change the scenario for a better future across India.

Arun Krishnamurthy founded Environmentalist Foundation of India (EFI) in 2007, and has since restored 39 lakes and 48 ponds in across India. A resident of Chennai and a former Google employee, the 32-year-old activist is already a well-known face in the Indian environment and natural resources conservation sector.

The cleanup process includes removal of trash and invasive botanical species from lakes, which includes thorny bushes and water hyacinths.

https://yourstory.com/socialstory/2019/06/mission-lake-rejuvination-arun-krishnamurthy?fbclid=IwAR0T3_gGmy6NJ9JtpI5AXqzMYkHxqlxHN7dS8VK4cM1yUUIyYb1zVrOgyFo

arunefi

 

  • தொடங்கியவர்

என்னை வெட்டி வீழ்த்தும் போது உன்னால் தடுக்க முடியவில்லை..! 
நான் வரும் போது நீ என்னை சேமிக்க வில்லை அதனால்
உன்னை வெயில் வாட்டி எடுக்கும் போதும்
தண்ணீர் இப்போது இல்லை என நீ புலம்பும் போது 
என்னால் உணக்கு உதவ முடியவில்லை இப்படிக்கு மழை மரங்கள்...

 

 

  • தொடங்கியவர்

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு: `இது மனிதர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட வறட்சி

நாளுக்கு நாள் தனியார் தண்ணீர் டேங்குகளில் விற்கப்படும் தண்ணீரின் விலை கூடிக் கொண்டே போகிறது. வியாழக்கிழமை மாலை பெய்த மழை தொடரும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் , நேற்று சுத்தமாக மழை பெய்யவில்லை. இருக்கின்ற தண்ணீர் எத்தனை நாட்களுக்கு வரும் என்று தெரியாத நிலையில் இந்த சிக்கல்களில் இருந்து சென்னை எப்படி மீண்டெழும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்த சிக்கல்களுக்கான நிரந்தரத் தீர்வுகள் என்ன, இந்த நிலை எதிர்காலத்தில் ஏற்படாமல் காத்துக்கொள்ள அரசும் , மக்களும் செய்ய வேண்டிய முதன்மையான செயல்கள் என்னென்னெ போன்ற கேள்விகளோடு, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பேராசியரும் நீரியல் நிபுணருமான ஜனகராஜன் அவர்களை சந்தித்தது பிபிசி தமிழ்.

அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல் பின்வருமாறு.

கடுமையான வறட்சியினை சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். இது மழைப்பொழிவு இல்லாமல் ஏற்பட்ட வறட்சி அல்ல, மனிதர்களின் பொறுப்பின்மையாலும் அலட்சியத்தாலும் ஏற்பட்ட வறட்சி. சென்னை கடந்த நாற்பது ஐம்பது வருடங்களில் காணாத அளவு கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டினை சந்தித்துக் கொண்டு வருகிறது.

இதற்கு முதன்மையான காரணம், அரசின் கவனமின்மைதான். கடந்த இருபது வருடங்களாக சென்னைக்கான குடிநீர் திட்டங்களுக்காக ஏராளமான பணம் செலவழிக்கப்பட்டுள்ளதாக அரசு குறிப்பிடுகிறது. குறிப்பாக கடந்த எட்டு வருடங்களில் பார்க்கும்போது அமைச்சரின் அறிக்கை படி குடிதண்ணீருக்காக கிட்டத்தட்ட 38,000 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதில் சாமானிய மனிதர்களுக்கு இருக்கும் சந்தேகம் என்னவென்றால், இந்த பணமெல்லாம் எங்கு போனது, இவ்வளவு கோடிகள் செலவு செய்த பின்னரும் குடிப்பதற்கு நீர் இல்லையே என்பதுதான். இதனால் ஏதேனும் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டனவா, அதனால் அடைந்துள்ள பயன்கள் என்ன என்று பல கேள்விகள் நம் முன்னே இருக்கிறது.

மக்களுக்கான குடிநீர் வாரியத்தினை நிலையாக கட்டமைக்க வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையான சில ஆய்வுகளை அரசு முன்னெடுக்க வேண்டும். எந்த மாதிரி சிக்கல்கள் நம்மிடம் உள்ளன, நம்முடைய பூகோள அமைப்பு என்ன, மழையின் அளவு என்ன இப்படி பல விஷயங்களை அரசு கவனிக்க வேண்டும். ஆனால், அரசு தரப்பில் இப்படியான ஆய்வுகள் நடத்தப்பட்டதாக தெரியவில்லை. ஏரிகள் தானாக நிரம்பினால், ஏரிகள் நிரம்பி விட்டது என்பர். இதற்காக எந்த சிரத்தயினையும் எடுப்பதில்லை.

உதாரணத்திற்கு 6 வருடங்களுக்கு முன்பு , தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் சுமார் 400 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு, அதில் 1 டி எம் சி தண்ணீர் தேக்கலாம் என்று கூறப்பட்டது. அதன் நிலை என்ன என்று தற்போது தெரியவில்லை.

தேர்வாய் கண்டிகை திட்டம் என்பது சென்னையில் அதிகரிக்கும் குடிநீர் தேவையினை எதிர்கொள்ள, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்கான திட்டம் என்றும், ரூ 330 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள நீர்த்தேக்கத்திற்கு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியுள்ளதாகவும் 2013 ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

மேலும், 1000 கோடிக்கு மேல் செலவு செய்து கொண்டு வந்த தெலுங்கு கங்கை திட்டமும் என்னவாயிற்று என்று தெரியவில்லை. அதில் வருடத்திற்கு 12 டி எம் சி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் எந்த வருடத்திலும் 1 டிஎம்சிக்கு மேல் நமக்கு வந்ததில்லை.

சென்னையின் குடிநீர் தேவைக்கு ஆந்திர பிரதேசத்தில் உள்ள கண்டலேறு நீர்த் தேக்கத்தில் இருந்து தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நதி நீர் ஒவ்வொரு ஆண்டும் 12 டிஎம்சி பெறப்பட வேண்டும். ஆனால், 2018-19ம் ஆண்டில் 1.98 டிஎம்சி தண்ணீர் மட்டுமே பெறப்பட்டுள்ளது என்று அரசும் குறிப்பிட்டு உள்ளது.

இது போக வீராணத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக கடல் நீரினை குடிநீராக்கும் திட்டத்திற்காக இரண்டு ஆலைகள் நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் உள்ளன. இவைதான் சென்னைக்கான நீராதாரங்கள். இதை நம்பி நாம் வாழ முடியுமா, இவை நிரந்தரமாக நம்முடைய சிக்கல்களை தீர்த்து விடுமா என்றால் நிச்சயமாக இல்லை. ஏனெனில் மக்கள் தொகை பெருகிக் கொண்டே உள்ளது. சென்னையில் மட்டுமே எட்டு கோடி மக்கள் வாழ்கின்றனர். சென்னை மெட்ரோபாலிட்டன் பகுதிகளையும் சேர்த்தால் ஒரு கோடிக்கும் மேல். ஒரு கோடிக்கும் மேல் உள்ள இந்த மக்களுக்கு நிரந்தரமாக குடிநீர் வழங்க வேண்டும் எனில் நிலையான, வற்றாத நீராதாரங்கள் தேவை.

நமக்கு நன்கு மழை பெய்யக் கூடிய பருவம் வட கிழக்கு பருவமழை. அக்டோபரில் இருந்து டிசம்பர் வரை உள்ள மூன்று மாதம். அந்த மூன்று மாதத்தில் புயலோடு கூடிய மழைதான் நமக்கு கிடைக்கும். புயல் வரும், உடனே ஒரு மழை வரும். அப்படிதான் நமக்கு மழை கிடைக்கிறது என்பது , நமக்கு தெரிந்த செய்திதான். குறைந்த நாட்களில் நமக்கு பெய்யும் மழைதான், அதனை எப்படி சேகரித்து வைப்பது என்பதனை நாம் சிந்திப்பதே இல்லை.

மாறாக மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் பொழுது நமது கவனமெல்லாம் தண்ணீரினை வெளியேற்றுவதில் தான் இருக்கும். வீட்டில் தண்ணீர் நின்றால் சாலையில் விட வேண்டும், சாலையில் தண்ணீர் நின்றால் கூவத்தில் விட வேண்டும் என்ற மனநிலைதான் மக்களிடமும் உள்ளது, அரசிடமும் உள்ளது. அடுத்த ஒரு நான்கு மாதத்தில் டேங்கர் லாரிகள் நகரத்திற்குள் வர ஆரம்பித்து விடும். தண்ணீர் இல்லை தண்ணீர் இல்லை என்று புலம்புவது நமக்கு வழக்கமான செயலாகி விட்டது. இது மிகத் தவறு.

மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரினை நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த முன்னேற்பாடு திட்டங்கள் அரசிடம் இருக்க வேண்டும். இந்த வருடம் செயற்கை மழையினை உருவாக்க இருக்கிறோம் என்று ஒரு அமைச்சர் கூறியதாக படித்தேன். செயற்கை மழையினை தோற்றுவிப்பதில் உள்ள தொழில்நுட்பங்களுக்குள் எல்லாம் போவதற்கு முன்பு அடிப்படையான ஒரு கேள்வியினை முன்வைக்கிறேன். செயற்கை முறையில் மேகங்களை தூண்டிவிட்டு மழை பொழிய வைத்து விட்டீர்கள். 200 மிமீ மழை பெய்கின்றது, அதனை எங்கே சேமிப்பீர்கள்,அதனை வெள்ளமாகத்தான் பார்ப்பீர்கள். இந்த நான்கு மாதங்களை விட்டு விடுவோம், அக்டோபரில் நல்ல மழை பெய்ய இருக்கின்றது ,அந்த நீரினை எல்லாம் எங்கு சேமிக்க இருக்கின்றோம். இந்த கேள்விகள் எதற்கும் அரசிடம் பதில் இல்லை.

இந்த நிலையில் எப்படி தண்ணீர் கஷ்டம் தீரும் ? தண்ணீரினை சேமிக்க ஏதுவான மிக அருமையான பூகோள அமைப்பு உடையது சென்னை மாநகரம்.

சென்னையினை சுற்றி இருக்கின்ற திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கிட்டத்தட்ட 3600 ஏரிகள் இருக்கின்றன. இதில் அரக்கோணம் தாலூக்காவினையும் சேர்த்துக் கொண்டால் மொத்தம் 4100 ஏரிகள் உள்ளன. அந்த 4100 ஏரிகளை முறையாக பராமரித்தால் மழை பெய்யும் பொழுது சுமார் 170 டிஎம்சி நீரினை சேமித்து வைக்க இயலும்.

அப்படி ஏரிகளில் சேமித்தால் மூன்று வருடம் மழை பெய்யாவிட்டால் கூட நம்மால் சமாளித்து விட இயலும். நிலத்தடி நீர் வளமும் பெருகும்.

இந்த வருடம் வறட்சி என்கின்றனர், கடுமையான வறட்சி என்கின்றனர். ஆனால், இந்த வருடம் பெய்த மழையின் அளவு 800மிமீ. பெங்களூரின் சராசரி மழை அளவே 860 மிமீ தான், ஜெய்ப்பூரில் சராசரி மழை அளவே 550 மிமீ தான். 800 மிமீ மழை பெய்யும் இந்த நகரம் வறட்சியான நகரம் எனில், நாம் எங்கேயயோ தவறு செய்து கொண்டு இருக்கின்றோம் என்றுதானே பொருள்.

அதனால்தான் அறிவியல் முறைமைகளை அடிப்படையாகக் கொண்ட மழை அளவு கணக்கியல் நெறிமுறைகளை அரசு பின்பற்ற வேண்டும் என்பதனை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறேன். மழை எந்த அளவு பெய்தது, எத்தனை டிஎம்சி தண்ணீர் கிடைக்கப்பெற்றது போன்ற கணக்குகள் நம்மிடம் வேண்டும். மொத்தமாக கடலுக்குள் போய்விட்டது என்று கூறுங்கள். அனைத்தும் ஆவியாகி விட்டது என்று கூறுங்கள், அல்லது அனைத்தும் பூமிக்குள் போய் விட்டது என்று கூறுங்கள், ஏதாவது ஒரு கணக்கு கொடுங்கள் என்று கூறுகின்றேன்.

மெட்ரோ நீர் 750 - 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு அளிக்கப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. அனைத்தும் மக்களுக்கு போய் சேருகின்றதா. விநியோகத்தின் போது சுமார் 20 சதவீதம் தண்ணீர் வீணாகிறது.

வறட்சி வந்து விட்டால், வறட்சி நிவாரணம் கொடுத்து விடுவது, வெள்ளம் வந்து விட்டால் வெள்ள நிவாரணம் கொடுத்து விடுவது என்ற நடைமுறையால் தீர்வுகள் கிடைக்காது. இந்த வருடம் முறையான அறிவியல் தரவுகளின் அடிப்படையில் ஏரிகளை பராமரித்தால் இனியாவது தண்ணீரினை சேமிக்கலாம்.

I am warm திட்டத்தில் கிட்டத்தட்ட 7000 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஏரி பராமரிப்பு காரணத்திற்கு, ஆனால், நடைபெறவில்லை.ஏரி பராமரிப்பு காண்ட்ராக்டர்களிடம் கொடுக்கப்படுகின்றது. அவர்கள், மேற்பரப்பில் உள்ள மண்ணை எடுத்து கரையில் போட்டு விட்டு, எங்கெல்லாம் நல்ல மண் இருக்கின்றதோ அதனை எடுத்து விற்றுவிட்டு, பள்ளம் பள்ளமாக உருவாக்கிவிட்டு ஏரிகள் தூர்வாரப்பட்டது என்று கூறிச் செல்வதுதான் நடைபெறுகின்றது.

இதே நிலை நீடித்தால், 800 மிமீ மழை பெய்த பின்னும் வறட்சி நிலவுவது போல், 900, 1000 மிமீ என மழையின் அளவு அதிகரித்துக் கொண்டே சென்றாலும் வறட்சி தான் நிலவும் என்கிறார் இவர்.

à®à¯à®©à¯à®©à¯ வளரà¯à®à¯à®à®¿ à®à®°à®¾à®¯à¯à®à¯à®à®¿ நிறà¯à®µà®©à®¤à¯à®¤à®¿à®©à¯ à®à®¯à¯à®µà¯ பà¯à®±à¯à®± பà¯à®°à®¾à®à®¿à®¯à®°à¯à®®à¯ நà¯à®°à®¿à®¯à®²à¯ நிபà¯à®£à®°à¯à®®à®¾à®© à®à®©à®à®°à®¾à®à®©à¯

கழிவு நீரினை குடிநீராக்குவது எந்த அளவு சாத்தியம்?

வீட்டில் இருந்து உபயோகப்படுத்தப்பட்ட தண்ணீரினை, மீண்டும் குடிநீராக மாற்ற இயலும். பல வெளிநாடுகளில் இந்த மறு சுழற்சி முறை நடைமுறையில் உள்ளது. அதற்கான தொழில் நுட்பங்கள் நிச்சயம் உள்ளது.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஆகும் பொருள் செலவினை விட , கழிவு நீரினை குடிநீராக்கும் தொழில்நுட்பத்திற்கு செலவு குறைவுதான். மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த விஷயம், கடல் நீரினை குடிநீராக்கும் திட்டத்தின் வாயிலாக கடலில் சூழலியல் மிகவும் பாதிப்படைகின்றது. இந்த தொழில்நுட்பத்தில் அதிக உப்பு கலந்த நீரினை கடலில் விடுகின்றோம்; இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும், 2 மீட்டர் தூரம் வரையிலும் கடல் இறந்து போய்விடும் .

கழிவு நீரினை மறு சுழற்சி செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தால் கடல் சூழலையும் பாதுகாக்கலாம், செலவினையும் குறைக்கலாம். மேலும் , கழிவு நீரினை சுத்திகரிக்கும் போது கிடைக்கின்ற கசடுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கலாம், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இதனை நிரந்தரமாக செய்கின்றனர். சிங்கப்பூரில், மேலும் பல ஐரோப்பிய நாடுகளில் செய்கின்றனர். 60 சதவீதம் நீரினை கழிவு நீர் மறுசுழற்சி வழியாக பெற்றுக் கொள்ள இயலும் என பதிலளித்தார்.

இன்று நாம் சந்தித்துள்ள மோசமான தண்ணீர் பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கான தீர்வினை பெறுவதில் அரசின் செயல்பாடுகள் மட்டும் போதாது, தனிமனிதர்களின் கைகளிலும் அந்தப் பொறுப்பு உள்ளது என்று குறிப்பிடும் ஜனகராஜன், இவ்வளவு பெரிய பிரச்சனையினை நாம் பார்த்து விட்டோம், இதனை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு இனியாவது தண்ணீர் பயன்பாட்டில் மிக கவனத்துடன் இருக்க வேண்டும்.நமக்கு கிடைக்கின்ற நீரின் அளவு என்ன, எங்கிருந்து கிடைக்கின்றது, எவ்வளவு தண்ணீரினை நாம் பயன்படுத்துகின்றோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

குளிப்பதற்கு 20 லிட்டர் தண்ணீர் பயன்படுத்துகிறோம் என்றால் அதனை 10 லிட்டர் தண்ணீராக மாற்ற முடியுமா என முயற்சிக்க வேண்டும். ஒருவர் 100லிட்டர் தண்ணீர் பயன்படுத்துகிறார் என்றால் அதனை 50லி ஆக குறைக்க என்ன செய்வது என சிந்தித்து செயல்பட வேண்டும்.

குழந்தைகளுக்கு, தண்ணீரின் அவசியத்தினையும், தண்ணீர் பயன்பாட்டில் சிக்கனத்தினைக் கடைபிடிப்பது குறித்தும் கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும், வீட்டில் உபயோகப்படுத்தும் தண்ணீரினை வீட்டிற்குள்ளேயே மறு சுழற்சி செய்யும் முறைகளை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். தனி மனிதர்கள் என அனைவரும் இணைந்து விழிப்புணர்வோடு செயல்பட்டால் மட்டுமே இந்த சிக்கல்களில் இருந்து மீள முடியும்.

 

 

https://www.bbc.com/tamil/india-48728664

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: வà¯à®³à®¿à®ªà¯à®ªà¯à®±à®®à¯, தணà¯à®£à¯à®°à¯, à®à®°à¯ மறà¯à®±à¯à®®à¯ à®à®¯à®±à¯à®à¯

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

தண்ணீர் பிரச்சனை: காற்றிலிருந்து நீர் - அட்டகாச பாலைவன வண்டு

தண்ணீர் பிரச்சனையை இந்த பாலைவன வண்டு வித்தியாசமாக சமாளிக்கிறது. அதாவது காற்றிலிருந்து நீரை உருவாக்கி தன் தாகத்தை தணித்து கொள்கிறது.

https://www.bbc.com/tamil/science-48723872

 

  • தொடங்கியவர்

நீலத்தடி நீர் மட்டும் இல்ல.இனி பஞ்சபூதமும் பணக்காரனுகளுக்கு தான்...மழைத்தண்ணீக்கே வரி .... 

 

 

  • தொடங்கியவர்

எகிப்து: புலம்பெயாந்த ஜெர்மனி நாட்டில் வசிக்கும் எகிப்தியர் மரங்களை பாலைவனத்தில் நடுகின்றார். இதனால் வேலைவாய்ப்பு, நீர் வளம் பெறுகின்றன. 

தண்ணீருக்கு மிகவும் கடினப்படும் நாடு. நைல் நதி நீரை நம்பி உள்ள நாடு, ஆனால், எதியோப்பியா அணைகட்ட உள்ளதால், நீருக்கு மேலும் தட்டுப்பாடு நிலவும். எனவே, சுத்திகரித்து பாவிக்கும் நீர் உபயோகப்படும். 

0.1 வீதத்திற்கும் குறைவாக காடுகளை கொண்ட நாடு. 

 

  • தொடங்கியவர்

 

 

  • தொடங்கியவர்

பெரம்பலூரைச் சேர்ந்த அரசு ஊழியர் வெங்கடேசன். 1100 சதுரடி பரப்பிலான தரை தளத்தின் அடியில் 1000 சதுரடி பரப்பளவில் கான்கிரீட் தொட்டி அமைத்து அதன் மீது கான்கிரீட் கூரை அமைத்து வீடு கட்டியுள்ளார். இதன்மூலம் தண்ணீரைத் தேடி தவிக்க வேண்டியதில்லை.

 

 

  • தொடங்கியவர்

செயற்கை மழையால் சென்னைக்கு நன்மையா... இல்லையா? 

Artificial Rain-ல௠à®à®³à¯à®³ நனà¯à®®à¯à®à®³à¯ மறà¯à®±à¯à®®à¯ தà¯à®®à¯à®à®³à¯

ன்றைக்கு பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த செயற்கை மழை அறிவியலுக்குப் புதிதல்ல. 1830-களிலேயே இதுகுறித்த ஆராய்ச்சிகளை அமெரிக்கா மேற்கொண்டதாகக் குறிப்பிடுகிறார் ஜேம்ஸ்.ஆர்.பிளமிங். இதேபோலப் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து ஆராய்ச்சிகள் நடைபெற்றாலும் அவை எதுவும் பெரிதாக வெற்றிபெறவில்லை. பின்னர் 1915-ல்தான் முதல்முறையாக மேகவிதைப்பு முறைக்கு விதை போட்டார் அமெரிக்க வேதியியல் நிபுணர் வின்சென்ட் ஜோசப் ஸ்ஷேபர். இவரின் தொடர் முயற்சிக்கு 1946-ல் வெற்றிகிடைத்தது. அதன்பின் சுமார் 10 ஆண்டுகள் கழித்து முதல் செயற்கை மழை உருவாக்கப்பட்டது. பின்னர் 1960-களிலும் குறிப்பிட்ட அளவு செயற்கை மழை பெய்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இந்த ஆராய்ச்சிகளில் அதிதீவிரமாகச் செயல்பட்டனர். அதில் ஸ்ஷேபர் மற்றும் அவருடன் பணியாற்றிய வளிமண்டல விஞ்ஞானி பெர்னார்டு வென்னிகாட் செயற்கை மழை உருவாக்கத்திற்கான அடிப்படை காரணிகளை உருவாக்கியதோடு, அப்போதிருந்த முறைகளைத் தவிர்த்து, மற்ற முறைகளில் மழையை உருவாக்க முடியுமென்பதையும் நிரூபித்தனர். இன்னொருபுறம் சீன ஆராய்ச்சியாளர் சாங் சியாங் மற்றும் அவரின் குழுவினர் நவீன முறையில் மேகவிதைப்பு செய்து மழையைப் பொழியவைத்தனர். உலகில் இன்றளவும் செயற்கை முறையில் மழையை உருவாக்குவதில் சீனா முன்னணி வகிக்கிறது. 

அமெரிக்காவைச் சேர்ந்த வெதர் மாடிஃபிகேஷன் நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 2003-2004-ம் ஆண்டு இந்த மழைக்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 2008-ம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தில் 12 மாவட்டங்களில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், இதுவரைக்கும் இந்த முயற்சிகளில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வெற்றி கிடைத்ததாக தகவல்கள் இல்லை. சரி, இந்த மழை எப்படி உருவாக்கப்படுகிறது? மொத்தம் மூன்று படிநிலைகளில் உருவாகிறது. அவை,

1. காற்றழுத்தத்தை உருவாக்குதல்
2. மழை மேகங்களைத் திரட்டுதல்
3. மழை மேகங்களைக் குளிரச் செய்தல் 

à®à¯à®¯à®±à¯à®à¯ மழ௠à®à®ªà¯à®ªà®à®¿ à®à®°à¯à®µà®¾à®à®¿à®±à®¤à¯?

மேகங்களின் வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரியாக இருந்தால், அவை வெப்ப மேகங்கள் என்றும், பூஜ்ஜியம் டிகிரிக்குக் குறைவாக இருந்தால் அவை குளிர்ந்த மேகங்கள் என்றும் அழைக்கப்படும். வெப்ப மேகங்களைக் குளிர்விக்கும்போது நீர்த்திவலைகளின் அடர்த்தி அதிகரித்து மேகங்களின் அடியிலிருந்து மழைப்பொழிவு ஏற்படுகிறது. அதுபோல், குளிர்மேகங்களைக் குளிர்விக்கும்போது பனிக்கட்டியின் அடர்த்தி அதிகரித்து அவை உடையும்போது வானிலையில் ஏற்படும் வெப்ப மாற்றத்தினால் பனிக்கட்டியானது நீராகி மழையாகப் பொழிகிறது.

https://www.vikatan.com/news/miscellaneous/160334-will-artificial-rain-help-chennai.html?artfrm=home_tab1

  • தொடங்கியவர்

சென்னையில்ல இப்படி ஒரு வீடா அற்புதம் நகர வாசிகள் அனைவரும் இதை பின்பற்றினால் பெரு நகரங்களில் தண்ணீர் பஞ்சமே இருக்காது...

 

  • தொடங்கியவர்

உங்கலால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்க வேண்டாம்

 

 

 

 

  • தொடங்கியவர்

சென்னை தண்ணீர் பிரச்சனை: இரண்டு நாள் மழையில் 18,000 லிட்டர் நீரை சேகரித்த தனியொருவர்

சென்னை முழுவதுமுள்ள நீர்நிலைகள் வறண்ட போன காரணத்தினால், மக்கள் தங்களது தினசரி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்கு நிறைய பணம் மட்டுமின்றி நேரத்தையும் செலவிட்டு வருகின்றனர்.

ஆனால், அதே சென்னையை சேர்ந்த ஒருவர், குடிநீர் வாரியம் வழங்கும் தண்ணீர் இணைப்பை பெற்றுக்கொள்வதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார்.

69 வயதாகும் இந்திர குமாரை தண்ணீர் குழாய் இணைப்பு பெற்றுக்கொள்ளும் படி, பலமுறை குடிநீர் வாரியத்தின் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும் அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார்.

சென்னை மாநகர் முழுவதும் மக்கள் தண்ணீருக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்திர குமாரின் இந்த விடாப்பிடியான நிலைப்பாட்டிற்கு அவரது வீட்டிலுள்ள திட்டமிடப்பட்ட நீர் தொட்டியே காரணம்.

"கடந்த இரண்டு நாட்களில் சென்னையில் மூன்று சென்டிமீட்டர் மழை பொழிந்துள்ளது. அதன் மூலம், நான் கிட்டத்தட்ட 18,000 லிட்டர் தண்ணீரை சேகரித்துள்ளேன். தண்ணீர் பிரச்சனையில் வாடிக் கொண்டிருப்பது சென்னைதான், நானல்ல" என்று பிபிசியிடம் பேசிய இந்திர குமார் பெருமிதத்துடன் கூறினார்.

"சென்னை முழுவதும் மழை நீரை வீணாக்கப்படுகிறது. ஆனால், சுற்றுச்சூழலுக்கு தகுந்த முறையில் கட்டப்பட்டுள்ள எனது வீட்டில் தண்ணீர் முறையாக சேமிக்கப்படுகிறது ," என்று அவர் மேலும் கூறுகிறார்.

குரோம்பேட்டையில் வசிக்கும் இந்திர குமாரின் இரண்டடுக்கு வீடு பார்ப்பதற்கு பழையது போன்று காட்சியளிக்கிறது. ஆனால், அவரது வீட்டினுள்ளே சென்று பார்த்தால்தான் சுற்றுச்சூழலுக்கு ஏதுவான எவ்வளவு வேலைகளை அவர் செய்கிறார் என்று தெரிகிறது.

இந்திர குமார்

1986ஆம் ஆண்டு இந்த வீட்டை கட்டிய இந்திர குமார், சுமார் இருபது ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஒரு மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ள நேரிட்டது. அதாவது, அவரது வீட்டின் தண்ணீர் தேவையை நிறைவேற்றி வந்த நிலத்தடி நீர் சிறிது சிறிதாக உப்பு கரிக்க ஆரம்பித்துவிட்டது. "நான் உடனடியாக மழைநீர் சேகரிப்பு திட்டத்தை எனது வீட்டில் செயற்படுத்தியதால், அடுத்த ஆறு மாதங்களிலேயே நிலத்தடி நீரின் சுவையில் நல்ல மாறுபாடு தென்பட்டது" என்று அவர் கூறுகிறார்.

தனது இந்த அனுபவம் குறித்து பள்ளியில் நடக்கும் காலைநேர கூட்டத்தில் விளக்க விரும்புவதாக பள்ளி முதல்வரிடம் தெரிவிக்குமாறு தனது பிள்ளைகளிடம் இந்திர குமார் கூற, அதை பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. இவர் தனது அனுபவத்தை விளக்கிய பின்னர், வழக்கம்போல அலுவலகத்துக்கு சென்று, மாலையில் வீடு திரும்பியபோது, அப்பள்ளியின் இரண்டு ஆசிரியர்கள் நின்று கொண்டிருந்தனர்.

தவிக்கும் சென்னை: எங்கிருந்து எவ்வளவு தண்ணீர் கிடைக்கிறது?

"தங்களது வீட்டிலுள்ள கிணறுகளின் நிலையை பார்க்க வருமாறு அவர்கள் என்னிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதன் பேரில் அவர்களது வீட்டை பார்த்தபோது, குரோம்பேட்டை - பல்லாவரம் - பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் சூழ்நிலையும் ஒத்து காணப்படுவது தெரியவந்தது. அதாவது, அருகியுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துக்கொண்ட பிறகு, இந்நிலையில் மாற்றுவதுதான் என்னுடைய பணி என்று முடிவு செய்து களத்தில் இறங்கினேன்.

1998 முதல் 2000 வரையிலான காலகட்டத்தில், மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்த முக்கியத்துவத்தை தினமும் இரண்டு பேருக்கு கற்பித்ததன் மூலம் சுமார் ஆயிரம் வீடுகளில் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்திர குமார்

இவரது மழைநீர் சேகரிப்பு திட்டம் வீட்டிற்குள் பொழியும் மழைநீரை சேமிப்பது மட்டுமல்ல. இவரது வீட்டுக்கு சுமார் 50 மீட்டருக்கு முன்னதாகவே, பள்ளம் போன்ற அமைப்புள்ள சாலையிலிருந்து புரண்டோடி வரும் நீர், வீட்டிற்கு முன்புள்ள கால்வாய்க்குள் விழுகிறது. அது பிறகு, நிலத்தடிக்குள் சென்று சேகரமாகிறது.

வீட்டின் மாடியில் இவர் அமைத்துள்ள சிறிய நீர் தொட்டி மழைக்காலங்களில் நிரம்பி, அங்கிருந்த செல்லும் நீர் நன்னாரி தாவரத்தின் ஊடாக சென்று இயற்கையான முறையில் சுத்திகரிக்கப்பட்டு கிணற்றுக்குள் சென்று விழுகிறது. "கிணற்றில் இருக்கும் நீரை நான் நேரடியாக எடுத்து குடிப்பதற்கு பயன்படுத்துகிறேன்" என்று இந்திர குமார் கூறுகிறார்.

மழைநீர் சேகரிப்பு திட்டம் மட்டுமின்றி, தனது முழுக்க இயற்கைக்கு தகுந்த வகையில் பல விடயங்களை செய்துள்ளார் இவர். அதாவது, அவரது வீட்டு மாடியில், துளசி உள்ளிட்ட பல்வேறு வகையா ன மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

"இங்கு விளையும் செடிகளை நீங்கள் சாப்பிட்டால், மருத்துவரை பார்க்க செல்ல வேண்டிய நிலையே உங்களுக்கு ஏற்படாது. அதுமட்டுமின்றி, இதுபோன்ற மூலிகை செடிகளின் வாயிலாக உடல் நலத்துக்கு நன்மை பயக்கும் சுத்தமான பிராண வாயு கிடைக்கிறது."

அதே சூழ்நிலையில், கழிவு நீரை நீரின் ஆதாரமாக பார்க்க வேண்டியதன் அவசியத்தையும் இந்திர குமார் வலியுறுத்துகிறார். "எனது வீட்டில் கழிவுநீர் முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, சமையலறையிலிருந்து வெளியேற்றப்படும் நீர், நேரடியாக தாவரங்களுக்கு சென்றும், கழிவறையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் பாக்டீரியாவினாலும் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயல்முறையை கடந்த 17 ஆண்டுகளாக நான் கடைபிடித்து வருகிறேன்" என்று அவர் கூறும் இந்திர குமார், இயற்கை மண் உரத்தையும் தானே தயாரிக்கிறார்.

"நான் இந்த செயல்முறைக்காக எவ்வளவு பணத்தை செலவிட்டேன் என்று யோசிப்பதில்லை. இது நமது எதிர்காலத்திற்கான முதலீடு அவ்வளவுதான்."

https://www.bbc.com/tamil/india-48812602

 

  • தொடங்கியவர்

எவனையும் நம்பாமல் நாமே களத்தில் இறங்கினால் வெற்றி நிச்சயம்.!

 

 

  • தொடங்கியவர்

பிரதமரின் பாராட்டை பெற்ற வேலூர் பெண்கள்... அப்படி என்ன செய்தார்கள்?

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மழைநீரை பூமிக்கு  அடியில் சேமிக்க...  பெயர் தெரியாத ஒரு விவசாயியின்  யோசனை. 

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

``மழை நீரை இப்படியும் சேமித்து பயன்படுத்தலாம்!” - முன்மாதிரியாகத் திகழும் ஆசிரியர்

 

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு மழை நீரை சேகரித்து குடிப்பதற்கும்இ உணவு சமைப்பதற்கும் பயன்படுத்தி வருகிறார். மழை நீரில் சமைக்கப்படும் உணவு சுவையானதாகவும்இ அந்த நீரை குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறும் அவர் எல்லோரும் இதைச் செய்தால் தமிழகத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடே இருக்காது என்றும் கூறுகிறார்.

இது குறித்து அருணன் கூறியதாவது, சில ஆண்டுகளுக்கு முன்பு எங்க பகுதியில் கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனால் நாங்கள் உட்பட எங்க பகுதியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு உள்ளானோம். அந்த சமயத்தில் இப்போதே இப்படி இருக்கிறதே இனி வரும் நாள்களில் தண்ணீருக்காக தமிழகமே தவிக்கின்ற நிலை ஏற்படும் என உணர முடிந்தது. மேலும் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை உணரவும் வைத்தது. பின்னர் மழை நீரைச் சேமித்து பயன்படுத்துவது குறித்து தெரிந்துகொண்டேன். அதன்படி திருவாரூரைச் சேர்ந்த மழை நீர் சேமிப்பாளர் வரதராஜனின் உதவியாளர் மூலம் எங்க வீட்டில் மழை நீரைச் சேமிக்கக் கூடிய முறையைப் பயன்படுத்தி தொட்டி அமைத்து மழை நீரைச் சேமித்து பயன்படுத்த தொடங்கினோம்.

மழை நீர் சேகரிப்பு தொட்டி
 
மழை நீர் சேகரிப்பு தொட்டி ம.அரவிந்த்

முதலில் மழை நீரைச் சேகரிக்கக் கூடிய வகையில் வீட்டின் மேற் கூரையில் தகரச் சீட்டுகள் அமைத்து அதன் மேல் விழும் மழை நீர் குழாய் வழியாக வீட்டிற்குள் சென்று சைடு சிலாப்களில் அமைக்கப்பட்டுள்ள பைபர் டேங்கில் தேங்கி விடும். பின்னர் தேவைப்படும் போது எப்போதும் போல் பைப் மூலம் சேமித்து வைக்கப்பட்ட நீரைப் பயன்படுத்திக் கொள்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 500 லிட்டர் கொள்ளவு கொண்ட 5 குடிநீர்த் தொட்டிகள் வீட்டிற்குள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தத் தொட்டிகளுக்கு அடியில் சுத்தம் செய்யப்பட்ட நிலக்கரித் துண்டுகளைப் பரப்பி வைத்து அதன் மேல் கூழாங்கற்களும் போட்டு வைக்கப்பட்டுள்ளன. இதில் சேமிப்பாகின்ற நீரில் எந்தக் கிருமிகளும் தங்காமல் சுத்தமாக இருக்கும். மேலும் நீர் வரும் குழாய்களில் இடை இடையே வலை அமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீரோடு சேர்ந்து தூசி, அழுக்கு போன்ற எதுவும் வராமல் தடுத்து விடும்.

 

மேலும் மழை பெய்கின்ற நேரங்களில் மழை நீர்த் தொட்டிகள் நிரம்பிய பிறகு பின்னர் ஒரு சொட்டு மழை நீர் கூட வீணாகாதபடி மற்றொரு குழாய் வழியாக ஆழ்குழாய் கிணறுக்குச் சென்று சேர்ந்து விடுவது போல் இந்த மழை நீர் சேகரிப்பு தொட்டியை அமைத்திருக்கிறோம். இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டமும் உயரும். ஒரு மணி நேரம் மழை பெய்தால் போதும் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 தொட்டிகளில் நீர் நிறைந்து விடும். இதன் மூலம் 2,500 லிட்டர் தூய்மையான தண்ணீர் கிடைப்பதோடு அவை சுமார் 6 முதல் 8 மாதங்கள் வரை எங்கள் குடும்பத்தில் உள்ள நான்கு பேருக்கும் குடிப்பதற்கும் உணவு சமைப்பதற்கும் பயன்படுகிறது.

மழை நீர் சேகரிப்பு
 
மழை நீர் சேகரிப்பு ம.அரவிந்த்

மழை நீரை நாங்கள் ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்தோம். அதில் ரொம்பவும் சுத்தமான நீர் எனச் சான்றிதழ் கொடுத்தனர். இது ஒரு மனதிருப்திக்காகச் செய்யப்பட்டது. ஆனால், மழை நீரைப் பயன்படுத்த தொடங்கியதிலிருந்து ஏராளமான நன்மைகள் கிடப்பதை எங்களால் உணர முடிகிறது.

 

இந்த நீரில் சமைக்கின்ற உணவு மிகவும் சுவையாக இருப்பதோடு நீண்ட நேரம் கெட்டுப் போகாமலும் இருக்கிறது. அதோடு உடம்பிற்கு எந்த நோயும் வருவதில்லை. நாங்க மழை நீரைப் பயன்படுத்த தொடங்கிய பிறகு சிகிச்சைக்காக டாக்டர் கிட்ட செல்வதே கிடையாது. அந்த அளவிற்கு உடலை ஆரோக்கியமாக இருக்க வைக்கிறது. இதன் மூலம் மனமும் நிறைவடைகிறது. மழைக்காலங்களில் கிடைக்கும் நீரைதான் நாங்கள் முழுமையாக சமைப்பதற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தி வருகி்றோம்.

மழை நீர் சேகரிப்பு
 
மழை நீர் சேகரிப்பு ம.அரவிந்த்

ஆண்டுக்கு இரு முறை 2 மணி நேரம் மழை பெய்தால் போதும், ஆண்டு முழுவதும் எங்களுக்கு தேவையான சுத்தமான சுகாதாரமான தண்ணீர் கிடைத்து விடுகிறது. மழை நீரைச் சேமித்து நாங்க 2 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தி வருகிறோம். இதை அமைப்பதற்கு ரூ.70 ஆயிரம் செலவானது.இந்த முறையைப் பயன்படுத்துங்கள் என நானும் என் மனைவியும் எல்லோரிடமும் சொல்லி வருகிறோம். என் நண்பர்கள் சில பேரும் மழை நீரைச் சேமித்து பயன்படுத்தி வருகின்றனர். நான் பணிபுரியும் பள்ளியிலும் மாணவர்களிடம் மழை நீர் சேமிப்பின் அவசியத்தை அடிக்கடி கூறி வருகிறேன். எல்லோரும் இதைப் பயன்படுத்த தொடங்க வேண்டும். அரசும் இதற்கு நிதி உதவி செய்து மக்களிடம் கொண்டு சேர்த்தால் இன்னும் எளிதாக அனைவரையும் சென்றடையும். இதைச் செய்வதன் மூலம் தமிழகத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடே இருக்காது. மக்களும் தாகமின்றி வாழலாம். இது அடுத்த தலைமுறைக்காகவும் நாம் நிச்சயமாக செய்ய வேண்டிய ஒன்றாகும்” என்றார்.

https://www.vikatan.com/news/tamilnadu/solution-for-water-problem-by-a-teacher

  • தொடங்கியவர்

கடல்நீர் இப்படித்தான் குடிநீராகிறது! - சென்னை ஆலை

சென்னையில் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் செயல்பட்டு வருகிறது. அதில் நெம்மேலியில் செயல்படும் ஆலையில் கடல்நீர் எப்படிச் சுத்திகரிக்கப்படுகிறது என்பதை புகைப்படங்களில் பார்ப்போம்.நெம்மேலி கடல்நீர் குடிநீராக்கும் திட்டம்

நெம்மேலியில் தினமும் 265 மில்லியன் லிட்டர் கடல்நீர் சுத்திகரிப்புக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

சுத்திகரிப்பு நிலையம்
 
சுத்திகரிப்பு நிலையம்

முதல்கட்டமாகக் கடல்நீர், இன்டேக் சேம்பருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்குதான் முதற்கட்ட சுத்திகரிப்பு நடக்கிறது.

இன்டேக் சேம்பர்
 
இன்டேக் சேம்பர்
 

கடல்நீரில் டி.டி.எஸ் மற்றும் டி.எஸ்.எஸ் உப்புகள் இருக்கும். அதில் முதலில் டி.எஸ்.எஸ் உப்பு தனியாகப் பிரிக்கப்படும். இது லாமெல்லா புராசஸ்.

லாமெல்லா புராசஸ்
 
லாமெல்லா புராசஸ்
 

அடுத்ததாகப் புறவடிகட்டுதல் முறையில் கடல்நீரில் இருக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் நீக்கப்படுகின்றன.

புறவடிகட்டுதல்  முறை
 
புறவடிகட்டுதல் முறை
 

இதற்கடுத்து, தலைகீழ் சவ்வூடுபரவல் அமைப்பு மூலம் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, நீரிலுள்ள டி.டி.எஸ் உப்பு நீக்கப்படுகிறது.

Reverse Osmosis Process
 
Reverse Osmosis Process

ஆலையில் ஒட்டுமொத்தமாகக் கடல்நீர் சுத்திகரிப்பு சிக்கலின்றி நடைபெறுவதற்காக, 24 மணிநேரமும் செயல்பாடுகள் கணினி மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.

Control Room
 
Control Room
 

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் மினரல்கள் இருக்காது. அதனால், குடிநீருக்குத் தேவையான மினரல்கள் இங்கு சேர்க்கப்படுகின்றன.

Minerals adding section
 
Minerals adding section

கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு, குடிக்க உகந்ததா எனப் பரிசோதிக்கப்படும். அதன் பிறகே அடுத்தகட்ட செய்முறைக்கு அனுப்பப்படும்.

Testing
 
Testing
 

கடல்நீர் முழுவதுமாகக் குடிநீராக மாற்றப்பட்டு, நெம்மேலியிலிருந்து தென்சென்னைக்குத் தினமும் 100 மில்லியன் லிட்டர் குடிநீர்க் குழாய்கள் மூலம் அனுப்பப்படுகிறது.

outlet
 
outlet

சுத்திகரிக்கப்பட்ட நீர் போக மீதமுள்ள 165 மில்லியன் லிட்டர் கடல்நீர், மீண்டும் கடலுக்குள் அனுப்பப்படுகிறது. இதுதான் இறுதிக்கட்டம்.

நெம்மேலி
 
நெம்மேலி
 

கடல் நீர் சுத்திகரிப்பு முறையின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் விவரிக்கும் ஃப்ளோசார்ட்

Flowchart
 
Flowchart
 
 

https://www.vikatan.com/news/environment/this-is-how-sea-water-gets-purified-in-desalination-plant-in-chennai

 

  • தொடங்கியவர்

பà®à®¤à¯à®¤à¯à®ªà¯ பறà¯à®±à®¿à®¯ à®à¯à®±à®¿à®ªà¯à®ªà¯ à®à®²à¯à®²à¯.

மழைநீர் சேகரிப்பும் நிலக்கீழ் recharge water bank பற்றிய மேலும் ஒரு கருத்து பகிர்வு, இங்கிருந்து காரைநகர் மக்கள் வாழும் ஐரோப்பிய, அமெரிக்க, அவுதிரேலிய நாட்டு உறவுகளையும் இணைத்து இயங்கும் அடுத்த கட்டத்துக்கு வந்துள்ளோம், காரைநகரில் செயல் திட்டங்களுக்கான வரைபுகள் சில வாரங்களில் நிறைவு பெறும்.

  • தொடங்கியவர்

வியர்வை சிந்தி நாகநதியை உயிர் பெறவைத்த வேலூர் பெண்கள்

வியர்வை சிந்தி நதியை உயிர்பெறவைத்த வேலூர் பெண்கள்

 

தமிழகத்தில் வறட்சியின் கதைகளை கேட்ட நமக்கு புது நம்பிக்கையை தந்திருக்கிறார்கள் வேலூரைச் சேர்ந்த பெண்கள்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட பெண்கள் குழுவாக இணைந்து 15 ஆண்டுகளுக்கு முன் வற்றிப்போன, நாகநதி ஆற்றின் பாதையில் கிணறுகள் தோண்டி, மழைநீரை தேக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியுள்ளனர்.

நாகநதி செல்லும் பாதையில் 300க்கும் மேற்பட்ட நீர் செறிவூட்டும் கிணறுகளை அமைத்து, கற்களை அடுக்கி, 349 தடுப்பணைகளை கட்டியதில் பெரும்பங்கை வகித்தவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை சுருக்கமாய் சொல்லிவிடும் கதைக்கு பின் கடப்பாரை, மண்வெட்டியை தூக்கிக்கொண்டு வியர்வை சிந்தி வேலை செய்த ஆயிரக்கணக்கான அசாத்திய பெண்களின் உழைப்பு உள்ளதை நேரில் பார்த்தோம்.

பாலாற்றின் கிளையாக உருவெடுத்து, வேலூர் மாவட்டத்தில் பாம்புபோல வளைந்து 14 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது நாகநதி.

60க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பாசனத்திற்கு உதவிய நாகநதி, ஆலை கழிவுகள் தேங்குவது, விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், ஆக்கிரமிப்புகள் என பல காரணங்களால் 15 ஆண்டுகளாக வற்றிக்கிடந்தது.

''100 நாள் வேலைத்திட்டத்தில் எடுக்கப்பட்ட முயற்சியால் பழையபடி மழை வந்ததும் பாய்ந்தோட தயாராகிவிட்டது நாகநதி. பெண்களின் முயற்சியால் பல கிராமங்களில் நான்கு முதல் ஏழு அடிவரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது,''என்கிறார் ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.பெரியசாமி.

 

இருபோகம் விளைச்சல் ஆரம்பம்

கொள்ளு, கேழ்வரகு விளைந்த நிலங்களில் தண்ணீர் அதிகம் தேவைப்படும் மஞ்சள், வாழை மரங்களும் விளைந்து நிற்பது பெண்களின் வெற்றிக்கு சான்றாக உள்ளது. விவசாயிகளின் வாழ்த்துக்களை பெற்ற ஆயிரக்கணக்கான பெண்களில் ஒரு பணியாளர் சரிதா(30). முன்னர் 80 அல்லது 100 அடியில் தண்ணீர் கிடைத்த ஊராக இருந்தது சரிதா வசிக்கும் கீழரசம்பட்டு கிராமம்.

''20 அடியில் நீங்கள் பார்ப்பது ஊற்று தண்ணீர்,'' என புன்னகையுடன் பேசினார் சரிதா.

''மழை வந்தால் ஒரே நாளில் ஆற்று தண்ணீர் காணாமல் போய்விடும் அல்லது சில இடங்களில் தேங்கி குட்டையாக இருக்கும். ஆனால் நாங்கள் தூர் வாரி, கிணறுகளை அமைத்ததால், இன்று நீர் சேமிக்கப்பட்டுள்ளது.ஒரு போகம் விளைச்சலுக்கு சிரமப்பட்ட விவசாயிகள், இரு போகம் அறுவடை செய்கிறார்கள். எங்களை வாழ்த்துகிறார்கள்,''என்கிறார் சரிதா.

 

 

குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு

அடுத்ததாக நாம் சந்தித்த லட்சுமி அம்மா நாகநதி மீட்பு பணிகளால் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது என விவரித்தார்.

குடிநீருக்காக குடங்களை தூக்கிக்கொண்டு நடந்ததை நினைவுகூர்ந்த லட்சுமி, தற்போது தனது வீட்டருகே உள்ள குழாயில் தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது என்கிறார்.

''ஜல்லிக் கற்களை சுமந்து, கனமான சிமெண்ட் வளையங்களை இறக்கி கிணறு அமைத்தோம். காயம்பட்டு வலித்த அதே கைகளில், ஊற்று நீரை அள்ளிக் குடித்தபோது சந்தோசம் மட்டுமே மிச்சமாய் இருந்தது. வேலூர் என்றாலே அதிகமான வெயில், தண்ணீர் பஞ்சம் இருக்கும் மாவட்டம் என்பார்கள். நாகநதியை சுத்தப்படுத்தி, நிலத்தடி நீரை நாங்கள் சேமித்துள்ளதால், எங்கள் உழைப்பை பலரும் பாராட்டுகிறார்கள். பல ஊர்களில் இருந்தும் எங்களை சந்திக்க வருகிறார்கள், ''என்கிறார் லட்சுமி.

கடந்த முப்பது ஆண்டுகளில் பெய்த மழை அளவை கொண்டுபார்த்தால், ஒவ்வொரு ஆண்டும் நாகநதி சுமார் 1,000 மில்லிமீட்டர் மழை அளவை பெற்றுள்ளது என்கிறார்கள் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள். இனிவரும் காலங்களில் நதியின் பாதையில் நீர் தேங்கி, 1,000 மில்லிமீட்டர் மழைநீர் வீணாகாமல் பயன்படும் என்கிறார்கள்.

 

ஆறுகளை பாதுகாப்பது எப்படி?

வியர்வை சிந்தி நதியை உயிர்பெறவைத்த வேலூர் பெண்கள்

தமிழக ஆறுகள் குறித்த ஆய்வு கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை எழுதியுள்ள ஆய்வாளர் எஸ்.ஜனகராஜனிடம் நாகநதி மீட்டெடுப்பு குறித்து கேட்டோம்.

''மக்களால் நாகநதி தூர்வாரப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. தங்களது உழைப்பை செலுத்தி, கடுமையாக மக்கள் வேலைசெய்துள்ளார்கள் என்பதை பாராட்டியாகவேண்டும். அதேநேரம், நதியை முழுமையாக மீட்டெடுப்பது என்பது தூர்வாருவதோடு முடிவு பெறாது. இந்த ஆற்றின் மூலத்தை சரிப்படுத்தி,அது ஓடி வரும் பாதையில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பராமரிக்கவேண்டும். மேலும் மணல் தேக்கத்தை கவனிக்கவேண்டும். அந்த ஆற்றின் அகலம் எவ்வாறு இருந்தது, அந்த அகலத்திற்கு விரிவுபடுத்தவேண்டும்,''என்கிறார் ஜனகராஜன்.

நதியில் கழிவுகள் தேங்காமல் பாதுகாக்கவேண்டும், எத்தகைய கழிவுகளை நதி சுமந்துவருகிறது என்று பார்க்கவேண்டும், அந்த நதி தனது பாதையில் பாய்ந்தோட தடங்கல் இருந்தால் அவற்றைக் களையவேண்டும் என்றும் ஜனகராஜன் குறிப்பிடுகிறார்.

பாலாற்றின் கிளை நதியாக இருக்கும் நாகநதி சீராகியுள்ளது என்பத்தோடு இல்லாமல் பாலாற்றின் முக்கியத்துவத்தையும் அரசாங்கம் உணரவேண்டும் என்கிறார்.

 

உறவுகளை உருவாக்கிய நதி

நாகநதியை தங்களது உடமையாக கருதும் மக்களும் இருக்கிறார்கள். தூர்வாரும் பணிகளின்போது புதுசொந்தங்களை தேடிகொண்டவர்கள்தான் அந்த மக்கள்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்தபோது சாமிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த 55 வயது மேனகா தமக்கு இளவயதில் நிறைய தோழிகள் கிடைத்துவிட்டதாக சொல்கிறார்.

''அரசாங்கத்தில் தினக்கூலியாக ரூ.229 கொடுக்கிறார்கள் என்பதால் வேலைக்கு வந்தேன். மூன்று வாரங்கள் தொடர்ந்து வேலைசெய்ததால் குழுவில் உள்ளவர்கள் தோழிகளாக மாறிவிட்டார்கள். எனக்கு வருமானம் கிடைத்தது. அதேசமயம் ஊருக்காக ஒரு வேலையை செய்தோம் என்ற மனநிறைவு கிடைத்தது. எங்களுக்கு தண்ணீர் கொடுக்கும் நதியை பாதுகாப்போம்,''என்கிறார் மேனகா.

தினமும் வேலையின்போது உற்சாகப்படுத்திக்கொள்ள பாட்டுப்பாடுவது, குடும்ப பிரச்சனைகளை பேசி தீர்வுகாண்பது, சேமிப்பு பற்றி பேசுவது என பெண்களுக்கு இடையில் உறவுப் பாலத்தை இந்த திட்டம் ஏற்படுத்தியது என்கிறார்கள் பணியாளர்கள்.

நாகநதியை போலவே பாலாற்றின் மற்ற கிளை நதிகளான மலட்டாறு, கௌடண்ய நதி, பொன்னையாறு உள்ளிட்ட நதிகளையும் சீரமைக்க திட்டங்களை வகுத்துவருவதாக வேலூர் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். பாலாற்றின் பிற கிளை ஆறுகளின் பாதைகளில் சுமார் 2.200 நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கப்பட்டுவிட்டன என்றும் அதிலும் பெண்களின் உழைப்புதான் அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்தனர்.

மேலும் நாகநதியில் கிணறுகளை அமைத்து பயன்பெற்ற மக்கள் நீர்நிலையை தூய்மையாக வைத்துக்கொள்வதில் அக்கறையுடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

https://www.bbc.com/tamil/india-49007106

  • தொடங்கியவர்

இந்த வருடம் நல்லூர்த்திருவிழாவில் கலந்து கொள்வதுடன்  விட மழைநீரை நிலத்தடி நீராக மாற்ற உங்கள் அறிவை, நேரத்தை,பணத்தை செலவிடுங்கள். 

நிலத்தடி நீரை பாதுகாக்கவேண்டியுள்ளது.
 

வறட்சியுலிருந்து விடுபடவேண்டும். எஞ்சியமக்கள் பசுமையாக வாழவேண்டும் 
நீர் இன்றி உலகமே இல்லை 
இதற்கான இயக்கத்தை ஆரம்பியுங்கள் 
உங்கள் பிரதேசத்தில் நீங்கள் முன்னெடுத்துச்செல்லவேண்டிய 
முக்கியமான பணி நீரை பாதுகாத்தல். 
நீர், நிலம், காற்று, மரங்கள் உயிர்வாழ்வுக்கு மிகவும் அவசியம்
ஆளுக்கொரு மரம் ஆண்டு தோறும் நடுங்கள்
SAVE Land Air Water

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: à®à¯à®à¯à®à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ வà¯à®³à®¿à®ªà¯à®ªà¯à®±à®®à¯

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.