Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்கொலைக்கு முயற்சித்த கருணா அணி உறுப்பினர் அவசர சிகிச்சைப்பிரிவில் ! காரணம் என்ன?

Featured Replies

தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தரின் படுகொலையுடன் தொடர்புபட்டதாக தெரிவித்து சந்தேகத்தின் அடிப்படை யில் கைது செய்யப்பட்ட கருணா அணியினரின் உறுப்பினர் திரவம் ஒன்றை (ஹாப்பீக்-மலசல கூடம் சுத்தப் படுத்தும் மருந்து) அருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகஸ்தர், கருணா குழு உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சிலரால் கடத்திச் சென்று கொல்லப்பட்டு சடலம் முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக அண்மையில் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணையில் இருந்து தெரியவந்தது.

இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரைக் கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கருணா குழுவின் முன்னாள் உறுப்பினர்களான மகிழன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல், அஜதீபன் மதன் என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய மூவரும் ஓட்டமாவடி களுவாஞ்சிக்குடி கல்லடி ஆகிய இடங்களில் வைத்துக் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாகத் தெரியவந்தது.

இதனடிப்படையில் சடலத்தைத் தோண்டி எடுப்பதற்கு மட்டக்களப்பு நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் நேற்று (11) பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் போது சந்தேக நபர்களில் ஒருவரான லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் அவ்விடத்துக்கு அழைத்து செல்லப்பட்டு நீதவானின் நீண்ட விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

இருந்த போதிலும் மேற்குறிப்பிட்ட சந்தேக நபர்கள் குறிப்பிட்ட இடங்களில் புதைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்படவில்லை.

இந்நிலையில் தற்காலிகமாகக் குறித்த சந்தேக நபர்கள் அனைவரும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இத் தற்கொலை முயற்சி இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடுமையாக உடல் நலக்குறைபாட்டுக்கு உள்ளான சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/121893

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.