Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெளத்த சின்னம் பொறித்த ஆடை – தனது கைதுக்கு எதிராக, மஸாஹிமா உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
June 17, 2019

masakima.jpg?zoom=1.1024999499320984&res
தான் அணிந்திருந்த ஆடை ஒன்றில் அச்சிடப்பட்டிருந்த வடிவத்தைக் காரணம் காட்டி, தன்னை காவற்துறையினர் கைது செய்து, தடுத்து வைத்திருந்தமைக்கு எதிராக, மத்திய மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்திலுள்ள கொலங்கொட எனும் பிரதேசத்தை சேர்ந்த, 47 வயதுடைய மஸாஹிமா எனும் பெண் ஒருவரே இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.  சட்டத்தரணிகள் ஏ.எம்.எம். சறூக், பாத்திமா நுஸ்ரா சறூக் ஆகியோரின் ஆலோசனைக்கு இணங்க, ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன்ன, இந்த வழக்கை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் சார்பாக தாக்கல் செய்துள்ளார்.

 

இந்தப் பெண் அணிந்திருந்த ஆடை ஒன்றில் பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்டிருந்ததாகவும், அதன் மூலம் அவர் பௌத்த மதத்தை அவமதித்து விட்டதாகவும் குற்றம்சாட்டி, மஹியங்கணை காவற்துறையினர் கடந்த மே மாதம் 17 ஆம் திகதி, அவரைக் கைது செய்து, 18 ஆம் திகதி மஹியங்கணை நீதவான் நீதிமன்றில் முன்னலை செய்தனர்.  இதன்போது, குறித்த பெண்ணை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஜுன் மாதம் 03 ஆம் திகதி, சம்பந்தப்பட்ட பெண்ணின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் வாதங்களைக் கவனத்திற் கொண்ட நீதிமன்றம், அவருக்கு பிணை வழங்கியது.  இதேவேளை, குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் ஆடையில் காணப்பட்ட வடிவம், தர்மச் சக்கரம்தானா என்பதை அடையாளம் காண்பதற்காக, அதனை புத்த சமய அலுவல்கள் ஆணையாளருக்கும், தர நிர்ணய சபைக்கும் தாம் அனுப்பி வைத்ததாகவும், ஆனால், அதனை ஒப்பீடு செய்வதற்குரிய சரியான தர்மச் சக்கர வடிவம் தம்மிடம் இல்லை என, அவர்கள் தெரிவித்து விட்டதாகவும், மஸாஹிமாவுக்கு பிணை வழங்கிய அன்று, நீதிமன்றில் காவற்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே, தனது ஆடையில் இருந்த வடிவத்தை காரணம் காட்டி, தன்னை கைது செய்து தடுத்து வைத்திருந்தமையின் மூலம், தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட பெண் மஸாஹிமா உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். #மஸாஹிமா  #ஜேசிவெலியமுன்ன #தர்மச்சக்கரம் #உயர்நீதிமன்றம்,  #அடிப்படைஉரிமைமீறல்

BBC

http://globaltamilnews.net/2019/124492/

Edited by பிழம்பு

5 hours ago, பிழம்பு said:

தான் அணிந்திருந்த ஆடை ஒன்றில் அச்சிடப்பட்டிருந்த வடிவத்தைக் காரணம் காட்டி, தன்னை காவற்துறையினர் கைது செய்து, தடுத்து வைத்திருந்தமைக்கு எதிராக, மத்திய மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

இவ்வாறாக பாதிக்கப்படுவார்கள் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க :

  • ஒரு இலவச சட்டத்தரணிகளை அடக்கிய குழு உருவாக்கப்படலாம்; இல்லை
  • இலங்கை அரசாங்கம் ஒரு இலவச நிதி திட்டத்தை  அறிமுகப்படுத்தலாம்; இல்லை
  • ஐ.நா. / ஆசிய மனித உரிமை அமைப்பு ஒரு சட்ட நிதியை உருவாக்கலாம்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

இவ்வாறாக பாதிக்கப்படுவார்கள் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க :

  • ஒரு இலவச சட்டத்தரணிகளை அடக்கிய குழு உருவாக்கப்படலாம்; இல்லை
  • இலங்கை அரசாங்கம் ஒரு இலவச நிதி திட்டத்தை  அறிமுகப்படுத்தலாம்; இல்லை
  • ஐ.நா. / ஆசிய மனித உரிமை அமைப்பு ஒரு சட்ட நிதியை உருவாக்கலாம்

 

Sri ...... Sorry Lanka!!! ( அடிக்கடி நினைவு படுத்த வேண்டியுள்ளது.)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.