Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்தவித தீர்வின்றி நிறைவடைந்த இரு சமூகங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை வடக்கு தமிழ் பிரிவு பிரதேச செயலகம் தரமுயர்துவது தொடர்பான இரு சமூகங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை எந்தவித  தீர்வின்றி நிறைவடைந்துள்ளது.

687a2a47-5add-4db3-8ce7-3931a8cc47de.jpg

கல்முனை வடக்கு தமிழ்பிரிவு  பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக் கோரி சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் பிரதேச செயலகம் முன்பாக நான்காம் நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் போது இன்று அத்துரலிய ரத்தின தேரரும் அவருடன் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனும் சென்றிறுந்தனர்.

மேற்படி பிரதேச செயலகம் தரம் உயர்த்து தொடர்பில்  இருக்கின்ற சிக்கல் நிலை தொடர்பிலும், சமரசமான முறையில் பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகளைக் கண்டறியும் நோக்கிலும், உண்ணாவிரதிகள் சார்பான குழுவொன்றும் கல்முனை முஸ்லிம் மக்கள் சார்பான குழுவொன்றுக்குமிடையில்  பேச்சுவார்த்தை ஒன்று கல்முனை நகர சபை மண்டபத்தில் வருகைதந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் ரத்தின தேரர் அகியொரின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது.

இதன் போது இருதரப்பு நியாங்களும் முன்வைக்கப்பட்டது அந்தவகையில் கலந்து கொண்ட முஸ்லிம் தரப்பிப்பிலான குழுவினர் தங்களது நியாங்களை முன்வைக்கையில் இந்த பிரதேச செயலகமானது தரமுயர்த்துவதில் எங்களுக்கு எவ்வித அட்சேபனையும் இல்லை. அனால் இதில் சில சிக்கல் நிலை நிலவுகின்றது.

 அதாவது நிலத்தொடர்பற்று காணப்படுதல், மற்றும் கடைத்தொகுதிகள் பாதிக்கப்படுதல், எல்லை நிர்ணயம் முரண்பாடாக காணப்படுதல், மற்றும் இனத்துவேசத்தினை உண்டுபண்ணுவதாக அமைதல் போன்ற விடயங்களை இதன் போது தங்கள் தரப்பு நியாயங்களாக முன்வைத்திருந்தனர்.

மேற்படி தெரிவிக்கப்பட்ட விடயங்களை செவிமடுத்த  உண்ணாவிரதாரிகள் சார்பாக சென்ற கல்முனை தமிழ் மன்றக் குழுவினர் இவ்விடயங்கள்  தொடர்பில் தங்கள் தரப்பு நியாயம் சார்ந்த வகையிலான கருத்துக்களை முன்வைத்தனர். இவ்வாறாக ஒரு மணித்தியாலத்திற்க்கு மேல் பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது

இதனை செவிமடுத்திருந்த ரத்தின தேரர் மிகவும் விரைவாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிவகைகளை கண்டுபிடியுங்கள் உண்ணாவிரதம் இருப்போரின் உடல் நிலையானது பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

இவ்வாறு  பேச்சுவார்த்தையானது எந்த தீர்வின்றி இழுபறியில் முடிவடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.

https://www.virakesari.lk/article/58686

  • கருத்துக்கள உறவுகள்

 

 

‘தமிழ் - முஸ்லிம் உறவை சீர்குலைக்க கூட்டுச் சதி' - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்

கே: கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரமும், இன்று பூதாகரமாகியுள்ளது. இதுபற்றிய, உங்கள் தரப்பு நியாயம் என்ன?

நிர்வாக ரீதியான எல்லை நிர்ணயம் என்பது, ஒரு தனி இனம் சார்ந்த விடயமாகும். இவ்வாறானதொரு நிலையில், எல்லைகளை வரையறுக்கும்போது, நிலத்தொடர்பற்ற முறையிலான அடிப்படைக் கோட்பாடுகள் மீறப்படக் கூடாது. இது தொடர்பாக ஏற்படுத்தப்படுகின்ற பிரசாரங்கள், அடிப்படை நியதிகளுக்கு மாறானவையாகும். குறிப்பாக, வளங்கள், வளப்பங்கீடு, அரச காணிகளுடைய தேவைப்பாடு என்ற விவகாரங்களிலும், சமநிலை பேணப்பட வேண்டும்.   

நிர்வாக அலகுகள் எல்லாவற்றையும் தனி ஓர் இனம் சார்ந்த அலகாக மாத்திரம் அமைவதற்கு எதிரான சில நியதிகளும் இருக்கின்றன. இதிலிருக்கின்ற முரண்பாடுகளைக் களைவதற்கும் எல்லை நிர்ணயத்தில் காணப்படும் சில சிக்கல்களைத் தீர்த்துக்கொள்வதற்கும், பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் ஏற்பட்டிருக்கின்ற பெரும்பான்மை சமன்பாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்ற பேரம் பேசும் சக்தி, இந்த அரசாங்கத்துக்கு எதிராக, இந்தக் கட்டத்தில் பிரயோகிக்கப்பட வேண்டுமென்று, ஒருசில எம்.பிக்கள் விரும்பலாம்.   

எவ்வாறாயினும், நாங்கள் எங்களுக்குள்ளேயே பேசி, இதுபற்றி உடன்பாட்டைக் காணவேண்டும். பேரின சக்திகள் நுழைந்து, இந்த விடயத்தில் குளிர் காய்வதற்கு இடமளிக்கக் கூடாது. அதனால், சில ஆரோக்கியமான விட்டுக்கொடுப்புகளைச் செய்வதற்கு, நாங்கள் தயாராக வேண்டும். அது, எந்தத் தீர்வாக இருந்தாலும், நாம் சார்ந்த சமூகத்தில் சந்தைப்படுத்தக்கூடிய தீர்வாக அமைய வேண்டும். இல்லாவிடின், இலகுவில் இந்தப் பிரச்சினைக்கு விடை காண்பதென்பது கடினமாகிவிடும்.   

அதனால், ஆரோக்கியமான கலந்துரையாடல்களையும் எல்லை நிர்ணயத்தையும் செய்வதற்கு, ஒன்றுகூடிப் பேசி முடிவெடுப்பதற்காக, குழுவொன்று நியமிக்கப்பட்டு, அதன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதை விடுத்து, தேரர்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுப்பதால் தீர்த்துவிட முடியாது.  இதன்போது, யார் யாரோடு கூட்டுச் சேர்கிறார்கள் என்ற விடயத்தில், நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும். இதற்குப் பின்னால், ஓர் அரசியல் நோக்கம் காணப்படுகின்றது. அதை உணர வேண்டும். தமிழ் - முஸ்லிம் ஒற்றுமையைக் குலைப்பதற்கு, இந்த விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சக்திகளுக்கு பலியாகிவிடாமல், நிதானமாக இந்த விடயத்தைக் கையாள வேண்டும்.  

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/தமிழ்-முஸ்லிம்-உறவை-சீர்குலைக்க-கூட்டுச்-சதி/150-234424

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.