Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனை மக்கள் எதிர்ப்பு; சுற்றிவளைப்பு:அமைச்சரவை பாதுகாப்பு பிரிவால் மீட்கப்பட்ட மனோ, சுமந்திரன், தயாகமகே!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சுமந்திரன், உள்ளிட்ட பிரமுகர்களிற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அங்கு ஏற்பட்ட முரண்பாடு தள்ளுமுள்ளுவரை சென்றது. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மீது தாக்குதல் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

கல்முனை தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்திப்பதற்கு இன்று மாலை மேற்படி பிரமுகர்கள் சென்றனர். கல்முனையை மூன்று மாதத்தில் தரமுயர்த்தும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிவிப்பை பிரமுகர்கள் வெளியிட்டனர். மூன்று மாத கால அவகாசத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என பொதுமக்களும், போராட்டக்காரர்களும் கருத்து தெரிவித்தனர்.

மூன்று மாத அவகாசமென்பது தம்மை ஏமாற்றும் நடவடிக்கையென பொதுமக்கள் கொந்தளித்தனர்.இதேவேளை இதற்கு முன்னதாக, அமைச்சர் தயா கமகே இந்த பிரதேசத்திற்கு வந்து, தமிழர்களிற்கு எதிராக போராட்டம் நடத்தும் முஸ்லிம்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தார். இது கல்முனை தமிழ்மக்களை கொதிப்படைய வைத்திருந்தது.

நியாயமான கோரிக்கையுடன் போராட்டம் நடத்தும் தம்மை வந்து சந்திக்காமல் எதற்கு, நியாயமற்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்துபவர்களை சந்திக்கிறீர்கள் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து பிரமுகர்கள் வெளியேறி முற்பட்டபோது, பொதுமக்கள் பிரமுகர்களை சுற்றிவளைத்தனர். பொதுமக்களின் எதிர்ப்பு வலுவடைந்து தள்ளுமுள்ளுவரை சென்றது. பிரமுகர்களை பொதுமக்கள் சுற்றிவளைத்ததால், அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாத நிலைமையேற்ப்பட்டது.

எம்.ஏ.சுமந்திரன் மீது அங்கிருந்தவர்கள் தாக்க முற்பட்டனர். அவரது உதவியாளர்கள் அவரை சூழ்ந்து பாதுகாப்பளித்தனர். சுமந்திரன் மீதான தாக்குதல்கள் அவரது உதவியாளர்கள் தாங்கிக்கொண்டனர்.

பிரமுகர்கள் மீது கையில் கிடைத்தவற்றை குழுவினர் எறிந்தனர். செருப்புக்களும் வீசப்பட்டன.

அந்த பகுதியே பெரும் அல்லோலகல்லோப்பட்டது. இறுதியில் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினர் தலையிட்டு, பிரமுகர்களை பாதுகாப்பாக மக்களிடமிருந்து மீட்டெடுத்தனர்.

பிரமுகர்கள் வெளியேறும்போதும் மீண்டும் பொதுமக்கள் சுற்றிவளைக்கப்பட்டு, எல்லைமீறி நடக்க முற்பட்டனர். எனினும், பிரமுகர்களின் பாதுகாப்பு பிரிவினர் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

http://www.pagetamil.com/61088/?fbclid=IwAR3W8usdoywAIArQHOQlEZmFGMC2xQOHCi9OlvdGJl9HdpDvWdk6k0-qQ10

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வினை கொண்டு வந்தவர்கள் மக்களின் எதிர்பினால் திரும்பியோட்டம் - கல்முனையில் பதற்றம்

கல்முனை வடக்கு தமிழ்பிரிவு  பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக் கோரி நடைபெற்று வரும்  சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் பிரதேச செயலகம் முன்பாக இன்று ஐந்தாம் நாளாகவும் நடைபெற்று வருகின்றது.

இந் நிலையில் இன்று பி.ப அமைச்சர் மனோகணேசன், தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அமைச்சர் தயாகமகே ஆகியோர் பிரதமர் தலைமையில் தமிழத்தேசியக் கூட்டமைப்புடனான கலந்துரையாடலின் ஊடாக எடுக்கப்பட்ட தீர்வினை அறிவிப்பதற்காக சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்

இதன் போது முதலில் மனோகணேசன் மக்கள் முன்னிலையில் உரையாற்றிய பின்னர்  தாங்கள் கொண்டுவந்திருக்கும் தீர்வினை சுமந்திரன் அவர்கள் அறிவிப்பார்  என தெரிவித்திருந்தார் இதற்கமைவாக சுமந்திரன் தீர்வினை அறிவித்திருந்தார்.  

அதாவது இப்பிரதேச செயலகம் எற்கனவே தரமுயர்தப்பட்டுள்ளதாகவும் இதற்கு கணக்காளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்தாகவும் இதற்கான பூரண அதிகாரத்தினை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கள் வழங்குவதாக பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எழுத்து மூலம் உறுதியளித்துள்ளதாகவும் இதற்கான வேலைகள் எற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குண்டுதாக்கதலினால் இது தாமதடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இவர் இவ்வாறு தீர்வினை அறிவித்துக் கொண்டிருக்கும் போதே  மகளின் எதிர்ப்பலைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. மூன்று மாத கால அவகாசம் கோரியபோது எதிர்ப்பானது பலமடங்கு அதிகரித்தது இந்த தீர்வில் எந்த விடயமும் இல்லை எது எம்மை ஏமாற்றி காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடாகும் இதற்க சுமந்திரன் துணைபோயுள்ளார் இதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம், ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்து சுமாந்திரன் இடத்தினை விட்டு வெளியேறாதபடி மக்கள் ஒன்று கூடி பலதரப்பட்ட வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்ட வண்ணம் ஆவேசத்துடன் காணப்பட்டனர்.

 இதனைத் தொடர்ந்து பொலிசார்  பாதுகாப்படன் அவரின் வாகனத்தில் ஏற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் போது கதிரை, பாதணி போன்ற வற்றினால் வீசி வானத்தை வாகனத்தை நோக்கி சென்றனர் இதனைத் தொடர்ந்து பலத்த சிரமத்தின் மத்தியில் வாகனத்தில் ஏற்றி அனுப்பப்பட்டார், இதனையடுத்த மனோகணேசனும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். 

20190621_160403.jpg

தயாகமகே மக்களிடம் சமாதானம் கூற முனைந்தபோது மகக்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை அவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து தீர்வுவரும் வரைபோராட்டம் தொடருமென போராட்டக்கார்கள் அறிவித்தனர்.

https://www.virakesari.lk/article/58784

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலம்காத்தால தமிழ் விண்ணில் (கைபுள்ள) சுமத்திரன் ரணிலின் செய்தியுடன் கல்முனை நோக்கி விரைகிறார் விசேட செய்தி என்று போட்டார்கள் அப்பவே கைபுள்ள இன்னிக்கு சிதறு தேங்காய் தான் என்று கொண்பேம் ஆகிட்டுது .

முதல் நாடு நாடாய் திரிந்து அடிவாங்கியது இப்ப உள்ளுர்க்குள்  கலைத்து கலைத்து சனம் அடிக்கிதுகள் ஆனாலும் சுமத்திரன் வடிவேலு கைபுள்ளை வாங்கிய அடியை விட கேவலமாய் வாங்கியும் திருந்தாத ஜென்மம் நாளைக்கே ஒன்றுமே நடக்காதது போல் அறிக்கை ஒன்று விடுவார் பாருங்க .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.