Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் புதிய சித்திரவதை குற்றச்சாட்டுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் புதிய சித்திரவதை குற்றச்சாட்டுகள்

 

gotabhaya-300x200.jpgசிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக, அமெரிக்காவின் கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் புதிய சித்திரவதை குற்றச்சாட்டுகளுடன், நேற்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினர், தமது அரசியல் எதிரிகளை சித்திரவதை மற்றும், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுத்தினர் என்று, மூன்று பெண்கள் உள்ளிட்ட 10 பேர் நேற்று வழக்குத் தாக்கல் செய்தனர்.

இவர்களில் ஆறு பேர் தாங்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

உளவியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் தாங்கள் மிக மோசமான துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாக இவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது ஒரு தனியான சம்பவங்களோ, எங்காவது ஒன்றாக நிகழ்ந்தவையோ அல்ல என, பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு சட்டவாளர்களில் ஒருவரான, ஸ்கொட் கில்மோர் ஏபி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இது நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு நடவடிக்கையாகும், இதற்கு கோத்தாபய ராஜபக்சவே தலைமை தாங்கியிருந்தார் என்றும் அவர் கூறினார்.

இந்தக் குற்றங்கள் 2008ஆம் ஆண்டுக்கும் 2013ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது,

கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறிலங்கா இராணுவ முகாம்களிலும்,காவல் நிலையங்களிலும், ஆண்களும் பெண்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க சட்டவாளரான ஜோன் உலி தொலைபேசி அழைப்புக்கோ, மின்னஞ்சல் கேள்விக்கோ  உடனடியாக பதிலளிக்கவில்லை.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம்,  கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் கனேடியத் தமிழரான றோய் சமாதானம், கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான மூல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார், இவர் சிறிலங்கா சென்றிருந்த போது கைது செய்யப்பட்டு சித்தரவதைக்குஉட்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கில் நேற்று திருத்தம் செய்யப்பட்டு, எட்டுத் தமிழர்கள் மற்றும் இரண்டு சிங்களவர்கள் என பத்து பேர், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பாக சேர்க்கப்பட்டுள்ளது.

“தனது கட்டுப்பாட்டில் உள்ள படையினரால் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் பெருமளவில் செய்யப்படுகின்றன என்பதை அவர் அறிந்திருந்தார் அல்லது அறிந்திருக்க வேண்டும்.

இந்த முறைகேடுகளைத் தடுப்பதற்குப் பதிலாக, அவர் அவர்களை ஊக்குவித்தார் அல்லது சகித்துக் கொண்டார்.

குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர் நீதிக்குத் தடையாக இருந்தார், மேலும் சாட்சிகளை மரண அச்சுறுத்தல் செய்தார்.” என்று இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.

ஆறு ஆண்டுகள் நடத்தப்பட்ட விசாரணைகளுக்குப் பின்னர் தென்னாபிரிக்காவை தலைமையகமாக கொண்ட அனைத்துலக உண்மை நீதிக்கான திட்டம், அனைத்துலக சட்ட நிறுவனமான Hausfeld உடன் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2019/06/27/news/38745

2 hours ago, nunavilan said:

ஆறு ஆண்டுகள் நடத்தப்பட்ட விசாரணைகளுக்குப் பின்னர் தென்னாபிரிக்காவை தலைமையகமாக கொண்ட அனைத்துலக உண்மை நீதிக்கான திட்டம், அனைத்துலக சட்ட நிறுவனமான Hausfeld உடன் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#1: கோத்தாவின் சனாதிபதி ஆசைக்கு இது ஆப்பாக அமைந்து விடலாம். இந்த வழக்கை முன்னெடுக்கும் விதத்தில் அமெரிக்க அரசு கோத்தா ஜனாதிபதியாக வர அமேரிக்கா விருப்புகின்றதா இல்லையா என ஊகிக்கலாம். 
 

2 hours ago, nunavilan said:

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினர், தமது அரசியல் எதிரிகளை சித்திரவதை மற்றும், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுத்தினர் என்று, மூன்று பெண்கள் உள்ளிட்ட 10 பேர் நேற்று வழக்குத் தாக்கல் செய்தனர்.

இவர்களில் ஆறு பேர் தாங்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

#2: போர்க்குற்றச்சாட்டை போன்று இந்த பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டை இலகுவாக தட்டிக்கழிக்க முடியாது. காரணம், உலகமே 'மீ டூ' இன்றும் மூழ்கி உள்ளது. சாதாரண அமெரிக்கர்கள் கூட, குறிப்பாக பெண்கள், இவ்வாறான குற்றம் சாட்டப்பட்டவர்களை முழுமையாக தண்டிக்க வேண்டும் என வலியுறுத்துவார்கள் . 

கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு-

பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்திருப்பது என்ன?

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர்  மூன்று வருட காலம் இராணுவமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில்  வழக்கு தாக்கல் செய்துள்ள பெண்மணியொருவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் இரு சிங்களவர்கள் உட்பட பத்து பேர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய காலத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்களே    கலிபோர்னியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

குறிப்பிட்ட பெண்மணி தான் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாமின் பொறுப்பதிகாரியான மேஜர் முனசிங்க என்பவர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் என குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் நான் வேறு சில தமிழ் பெண்களுடன் முகாமொன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்தேன் அங்கு பாலியல் வன்முறைகள் இடம்பெற்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் பொலிஸ் தலைமையகத்திலும் இராணுவமுகாமொன்றிலும் இதே வன்முறைகளை அனுபவித்ததாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமை சட்டத்தரணி ஸ்கொட் கில்மோர் நான் எனது வாழ்நாளில் மிக மோசமான  சந்தித்த பாலியல் அடிமைத்தனம் இதுவென குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் கட்சிக்காரர்களிற்கு எதிராக கோத்தபாய ராஜபக்சவின் பாதுகாப்பு படையினர் புரிந்துள்ள பாலியல் வன்முறைகளும்,இதனை புரிந்தவர்கள் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டமையும் பாலியல் வன்முறைகள் இலங்கையில் நிறுவனமயப்படுத்தப்பட்ட கொள்கையாக விளங்கின என்பதை புலப்படுத்துகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/59229

Just now, ampanai said:

இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமை சட்டத்தரணி ஸ்கொட் கில்மோர் நான் எனது வாழ்நாளில் மிக மோசமான  சந்தித்த பாலியல் அடிமைத்தனம் இதுவென குறிப்பிட்டுள்ளார்.

ஸ்கொட் கில்மோர்  https://www.hausfeld.com/our-people/scott-gilmore

Scott Gilmore, an accomplished international human rights lawyer, has joined Hausfeld as Of Counsel in the Washington, D.C. office, continuing the growth of the firm’s award-winning Civil and Human Rights practice.

With over a decade of global experience in human rights investigation and litigation, Scott has represented clients in matters focusing on mass atrocities, media freedom, and digital privacy.

Scott’s work in the field of human rights includes Colvin v. Syrian Arab Republic, where he represented the family of Marie Colvin, a war correspondent for the Sunday Times who was tracked, targeted, and killed in 2012 by Syrian government forces. Scott, as lead counsel in the case, successfully attained a $303.6 million judgment against the Syrian government on behalf of Marie’s family.

Currently, Scott is involved in Samathanam v. Rajapaksa, in which Hausfeld represents a Canadian torture survivor who was subjected to three years of arbitrary detention and abuse in Sri Lanka under the authority of Gotabaya Rajapaksa, a U.S. citizen and former Defense Secretary of the island nation.

https://www.globenewswire.com/news-release/2019/05/16/1826612/0/en/Accomplished-International-Human-Rights-Lawyer-Scott-Gilmore-Joins-Hausfeld-as-Of-Counsel.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.