Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிஷாத் பதியுதீன் சாட்சியம் வழங்குகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

rishad1.jpg?zoom=0.9024999886751175&resi

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பகல் 02 மணியளவில் மீண்டும் கூடவுள்ளது.  இன்றைய தினம் முதலாவது சாட்சியாளராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராக உள்ளார்.  ரிஷாத் பதியுதீன் கடந்த 26ம் திகதி சாட்சியம் வழங்குவதற்காக தெரிவுக்குழு முன்னிலையில் முன்னிலையான போதிலும் அவரிடம் விசாரணை நடத்தாமல் ஒத்தி வைப்பதாக தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.  அதன்படி இன்றைய தினம் 02 மணிக்கு அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்

http://globaltamilnews.net/2019/125492/

பயங்கரவாத தாக்குதலுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்  ரிஷாட் பதியுதீனுக்கும் எவ்வித தொடர்ப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை விசாரணை குழு நாடாளுமன்றுக்கு கடிதம் மூலம் இதனை தெரிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/219289/ரிஷாட்-பதியுதீன்-தொடர்பில்-வெளியான-அதிரடி-செய்தி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழ் நாளில் சஹ்ரானை பார்த்ததில்லை - தெரிவிக்குழு சாட்சியத்தில் ரிஷாத்

(ஆர்.யசி)

கடந்த ஆண்டு அக்டோபர் அரசியல் புரட்சியில் ராஜபக்ஷ அணியில் இணைந்துகொள்ள எனக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டது, அதனை நான் மறுத்தேன். அதன் காரணமாகவே என்மீதான பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு என்னை சஹரானுடன் தொடர்புபடுத்தி பேசுகின்றனர், நானோ எனது குடும்பத்தினரோ பயங்கரவாத செயற்பாடுகளில் தொடர்புபடவில்லை, நான் சஹரானை பார்த்தது கூட இல்லை என முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குறிப்பிட்டார்.

IMG_9734.jpg

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவுக்குழு முன்னிலையில் இவற்றைக் குறிப்பிட்டார். 

தெரிவுக்குழு அமைக்க வேண்டும் என நன் பாராளுமன்றத்தில் தெரிவித்தேன். நான் மட்டும் அல்ல ஏனைய உறுப்பினர்கள் பலர் தெரிவுக்குழு வேண்டும் என்று கூறினார்கள். பயங்கரவாத செயற்பாடுகளுடன் என்னை தொடர்புபடுத்தி பாராதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் என்னை தொடர்புபடுத்தினர். 

ஆகவே என்மீதான  குற்றங்களை நான் நிராகரித்து அதனை நிருபிக்க வேண்டும். ஆகவே நானே தெரிவுக்குழு முன்னிலையில் வரவும் இணக்கம் தெரிவித்தேன். என்மீது குற்றம் சுமத்தி பொலிசில் சிலர் முறைப்பாடுகளை செய்திருந்தனர். ஆனால் ஐ.எஸ் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபட்ட சஹரானை நான் வாழ்கையில் எப்போதும் பார்த்ததில்லை. இந்த தாக்குதல் இடம்பெற்று   ஊடகங்களில்  வெளியிடப்பட்ட புகைப்படத்தின் மூலமாகவே சஹரானை  முதலில் பார்த்தேன். இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும்  இல்லை.

இந்த பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்ற  நிலைப்பாட்டில் நானும் உள்ளேன்.  இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் நானும் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும்  கர்தினாலை  சந்தித்து இது குறித்த வருத்தத்தை  தெரிவித்தோம். இந்த பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட அனைவரையும்  தண்டிக்க எம்மாலான சகல உதவிகளையும் வழங்குவோம் என வாக்குறுதி கொடுத்தேன், அன்றில் இருந்து  இப்போது வரியில் இதற்கான முழுமையான ஒத்துழைப்பை நான் வழங்க வருகின்றோம். அதுமட்டும் அல்ல எமது மதத் தலைவருடன் இணைந்து நாம் அனைவரும் ஒருமித்த நிலைப்பாட்டில் கருத்தொன்றை முன்வைத்தோம். இந்த பயங்கரவாத தாக்குதலில் சம்பந்தப்பட்ட எவரதும் உடல்களை எமது மயானனளில் அடக்கம் செய்ய அனுமத்திக்க மாட்டோம் என்றும் நாம் கூறினோம். இது எதிர்கால இளைஞர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கூறினோம். இந்த பயங்கரவாதிகள் இஸ்லாம் என்ற பெயரை வைத்துக்கொண்டு பயங்கரவவாதத்தில் ஈடுபடலாம். ஆனால் இவர்கள் எவரும் முஸ்லிம்கள் அல்ல. தற்கொலை தாக்குதல் செய்யவோ ஏனைய இனத்தவரை கொலைசெய்யவோ இஸ்லாம் கூறவில்லை என்றார். 

 

(சாட்சியத்தின் முழு விபரம் நாளைய வீரகேசரியில்)

https://www.virakesari.lk/article/59337

  • கருத்துக்கள உறவுகள்

அரபு மொழி வீதிப் பலகைகளில் தேவையில்லை: இராணுவத் தளபதியிடம் தகவலை மட்டுமே கேட்டேன் – ரிஷாட்

Rishad-Badhiudeen-1.jpg

அரபு மொழியானது மதத்தின் கல்விக்கே தேவை எனத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அரபு மொழி வீதிகளுக்கும், பதாதைகளுக்கும் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தெஹிவளை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட ஒருவர் குறித்து அறிந்து கொள்வதற்காகவே இராணுவத் தளபதியுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், அவருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் மற்றும் அவற்றைத் தடுக்க முடியாமற்போனமை குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னிலையானார்.

இதன்போது அங்கு சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “அரபு மத்ரசாக்களின் கல்வி நடவடிக்கைகள் அரபு மொழியில் இடம்பெறவேண்டும். குர்-ஆன் அரபு மொழியில் இருப்பதால் அரபு கற்பது தேவையாக இருக்கின்றது.

எனினும் வீதிகள் மற்றும் பதாதைகளில் அரபு மொழி இருப்பது தேவையற்றது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இருப்பதே போதுமானது” எனத் தெரிவித்தார்.

இதன்போது, இராணுவத் தளபதிக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த அவர்,

“தெஹிவளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர் குறித்து அறிந்து கொள்வதற்காகவே இராணுவத் தளபதியுடன் கதைத்தேன். குறித்த நபரை தாம் கைது செய்யவில்லை என இராணுவத் தளபதி கூறவில்லை. மாறாக தேடிப் பார்த்துக் கூறுவதாக தெரிவித்தார்.

இதனால் அவருக்கு மூன்று தடவைகள் அழைப்பினை ஏற்படுத்த வேண்டியேற்பட்டது. அவர் கைது செய்யவில்லை என்று கூறியிருந்தால் அவருக்கு அழைப்பை ஏற்படுத்தியிருக்க மாட்டேன்.

மூன்று நாளைக்கு பின்னரே இராணுவத் தளபதி எனக்கு பதில் வழங்கினார். கைதுசெய்யப்பட்டவர் அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறினார். நான் அந்த நபர் எங்கு இருக்கிறார் என்பதை அறிந்து கொள்வதற்காகவே இராணுவத் தளபதிக்கு அழைத்தேன்” என்று தெரிவித்தார்.

இதேவேளை, சதொச வாகனங்களை பயங்கரவாத செயற்பாட்டுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கும் போது,

“சதொச வாகனங்களை நான் பயங்கரவாத செயற்பாட்டுக்கு பயன்படுத்தியதாக ஊடகங்களில் கூறிய எவரும் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை.

உண்மையில் நாட்டை நேசிப்பவர்களாக இருந்தால் அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ய வேண்டும். ஆகவே அவர்கள் முறைப்பாடு செய்யவில்லை என்பதால் நான் அவர்களுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்தேன்.

ஒக்டோபர் ஆட்சி மாற்றத்தின் போது என்னை அந்தப் பக்கம் வருமாறு அடிக்கடி தொல்லை தந்தவர்களே, இவ்வாறு என் மீது பொய் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இதனிடையே, நான் அமைச்சைப் பொறுப்பேற்ற பின்னரே சதொச வாகனங்களுக்கு ஜீ.பி.ஸ். பொருத்தும் திட்டத்தை கொண்டு வந்தேன்” என்று குறிப்பிட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.