Jump to content

அப்பாவின் சாப்பாட்டு பிரியமும் எனது காதல்களும்


Recommended Posts

பதியப்பட்டது

என் தந்தை ஒரு போஜனப்பிரியர், அதனால் எனக்கு காதல் தோல்விகள் என்றால் உங்களுக்கு சிரிப்பாய்த்தான் இருக்கும். அந்தக்காலத்தில் எங்கள் ஊரில் ரெங்க விலாஸ் என்னும் உணவகம் இருந்தது. அங்கே சாம்பார் வடை பேமஸ். இரண்டு சாம்பார் வடை வாங்கினால் ஒரு லிட்டர் சாம்பாரை வாளியில் ஊற்றி தருவார்கள். வாரத்தில் மூன்று நாட்களாவது அந்த கடை சாம்பார் வேண்டும் என் தந்தைக்கு. அது வந்தவுடன் அவர் இட்லி சாப்பிட ஆரம்பிப்பார். துணைக்கு அப்பொழுது அரைத்த தேங்காய் சட்னி, இரவு மீதமான தக்காளி கார சட்னி, எப்பொழுதும் வீட்டில் இருக்கும் எண்ணெய் மிளகாய்ப் பொடி.


இரவுகளில் ராஜு ஆப்பக்கடையிலோ, குதிரை மார்க் புரோட்டா ஸ்டாலிலோ வாங்கப்படும் வீச்சு புரோட்டா, வெங்காய கறி. நான் வாங்கி வந்த உடன் என் தாயார் ஆம்லேட் சுட ஆரம்பிப்பார் சின்ன வெங்காயம் போட்டு. பினிஷிங் டச்சாக இரண்டு நைஸ் ஊத்தாப்ப்பமும் உண்டு. மார்கழி மாதங்களில் என் தெருப் பையன்கள் எல்லோரும் பட்டையோ நாமத்தையோ போட்டுக்கொண்டு பொங்கல்,சுண்டல் வாங்க கோவிலுக்கு கிளம்பும் போது நான் வாளியை தூக்கிக் கொண்டு குள்ளி டீக்கடைக்கு போவேன். அங்கே டீ மட்டும் தான் கிடைக்கும். வடை,பஜ்ஜி எதுவும் இருக்காது. தென் மாவட்ட டீக்கடைகளில் காலையில் பறக்கும் மாநிலகொடியான தினத்தந்தி கூட அங்கே வாங்க மாட்டார்கள். ஆனாலும் வியாபாரம் அனல் பறக்கும். போடும் டீ அப்படி. சில மாலை வேளைகளில் ஸ்ரீராம் ஸ்வீட் ஸ்டாலில் இருந்து ஓமப்பொடி,நவதானிய மிக்சர்.

இப்படியாக நாளொரு சாப்பாடும், பொழுதொரு டிபனுமாக போய்க் கொண்டிருந்த என் வாழ்க்கையில் திடீரென பருவக்காற்று வீசியது. எங்கள் தெருவுக்கு இரண்டு தேவதைகளுடன் ஒரு வங்கி அதிகாரி குடி வந்தார். ஒற்றுமையாய் இருந்த தெருப் பையன்களுக்கிடையே சண்டை வரத் தொடங்கியது. எப்படியாவது என் வயதில் இருந்த இரண்டாவது பெண்ணின் காதலைப் பெற்றுவிட வேண்டுமென்று துடித்தேன். ஒருநாள் என் வருங்கால மாமனார் என் வீட்டிற்க்கு வந்தார். என் தந்தை பணிபுரியும் அலுவலகம் தொடர்பான வேலைக்காக.

இரண்டு நாள் கழித்து, என் தந்தை என்னை அழைத்து கையில் ஒரு கவரை கொடுத்து தேவதையின் வீட்டில் போய் கொடுக்கச் சொன்னார். சரி என்று உற்சாகமில்லாமல் தலையாட்டி விட்டு வெளியே வந்தேன். அங்கு போகாமல் ஒளிந்து கொண்டேன். என் தந்தை வெளியே கிளம்பியதும் என் பேவரைட் டிரஸ் அணிந்து ஒப்பனையிட்டு கிளம்பினேன். ஸ்டைலாக நடந்து சென்று அவர்கள் வீட்டு கதவைத் தட்டினேன். வருங்கால மாமியார் கதவைத் திறந்தார். ஹாலில் பாம்பே சகோதரிகளை தோற்கடிக்கும் வண்ணம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். கவரை கொடுத்ததும் அந்த அம்மாள் கேட்டார்

" அவர் பையனா நீ?, சும்மா வாளிய தூக்கிக்கிட்டே திரியுறனால ஏதோ கடைப் பயைன்னு நினச்சோம்".

அப்போது ஹாலில் பிசாசுகள் சிரிக்கும் சத்தம் கேட்டது.

பின்னர் தெருவில் ஆழமாக விசாரிக்கையில் தான் தெரிந்தது, இரண்டு முரளி இருப்பதால் எப்பொதும் ஜலதோசத்தால் அவதிப்படுவனை சளி முரளி என்றும் என்னை வாளி முரளி என்றும் மக்கள் அழைத்துவருவது. இனி தெருவில் நம் பப்பு வேகாது, வெளியூரில் இருக்கும் நம் உறவுப் பெண்களையாவது லவ்வலாம் என்று தீர்மானித்தேன். அங்கும் என் தந்தையின் போஜனப் பிரியம் குறுக்கே வந்தது. நானும் ஆசை அசையாக உறவினர் திருமணங்களுக்கு முதல் நாள் மாலையே கிளம்பி செல்வேன்.

கல்யானம் நடத்துபவர்கள் என்னை பார்த்ததும் கேட்பது

" அப்பாவுக்கு புரமோஷனாமே?, காலையிலாவது வருவாரா?,"

அடுத்து உடனே

" எப்பவும் அவர் தான் ஸ்டோரையும்,சமையல்காரங்களையும் பார்த்துப்பார், நீதான்பா அவர் இடத்தில இருந்து பார்த்துக்கணும்"

திருமணத்திற்க்கு வரும் பெண்கள் அதற்கெனவே ஒளித்து வைத்திருக்கும் சிறப்பு உடைகளுடனும், ஒப்பனைகளுடனும் வளைய வந்து கொண்டிருப்பார்கள். என் உறவுப் பையன்களெல்லாம் நூல் விட்டுக் கொண்டிருப்பார்கள். நானோ இங்கே இந்த எண்ணெயில வடை சுட்டா காரலா இருக்கும் மாத்துங்க என்று சமையல்காரர்களிடம் நூல் விட்டுக் கொண்டிருப்பேன்.

பந்தி விசாரணையின் போது,

ஒருமுறை என் அத்தை பெண்னிடம் இந்த கூட்டு வச்சுக்கங்க, ரசத்துக்கு நல்ல காம்பினேஷன் என்று சொல்லப் போக அவள் சொன்னது

" நாங்க வாழ்றதுக்காக சாப்பிடுறவங்க, சாப்பிடறதுக்காக வாழ்றவங்க இல்லை".

என் காதல் என்னிடமே தங்கிவிட்டது. பரிமாறாத சாதத்துக்கு என்ன மதிப்பு?

பின்னர் ஊரிலேயே ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்தேன். ஒருமுறை என் நண்பனுக்கு அட்டஸ்டேஷன் வாங்குவதற்க்கு தந்தை அலுவலகம் சென்றிருந்த போது பியூன் என்னைக் காட்டி கிளார்க்கிடம் சொன்னார்,

" சாமானியமா லீவே எடுக்க மாட்டாரு நம்ம சாரு, மகனுக்கு மஞ்சள் காமாலைன்ன உடனேயே மூணு மாசம் லீவு போட்டதுமில்லாம, மகன் சாப்பிடுற கஞ்சித்தண்னிய தான் குடிச்சுக்குட்டு இருந்தாரு".

அதுவரை என் தந்தையிடம் எனக்கு ஏற்படாதிருந்த பாசம் கண்ணின் வழியே கங்கையாய் வெளியேறியது.

காதல் தான் என் தந்தையால் கிடைக்கவில்லை. ஆனால் கல்யாணம் கிடைத்தது. இப்போது கூட வேலை முடிந்து வீட்டிற்க்குத்தான் போய்க் கொண்டிருக்கிறேன். கதவை பையன் வந்து திறக்கிறான். என்னடா ஆச்சு உங்கம்மாவுக்கு? என்று கேட்ட படியே உள்ளே நுழைகிறேன். தைல வாசனை. மதியம் இருந்து ஒரே தலைவலிங்க என்கிறாள் மனைவி. சரி சரி நல்லா ரெஸ்ட் எடு, சூடா காப்பி போட்டுத் தர்றேன். டிபன் வெளியில வாங்கிக்கிடலாம். என்ற படி சமையலறைக்குள் நுழையு போது மனைவி என்னை கனிவு கலந்த காதலோடு பார்க்கிறாள். பெண் பார்க்கும் போதோ, நிச்சயத்தின் போதோ, கல்யாணத்தின் போதோ இந்த காதல் பார்வையை நான் எதிர்கொண்டதில்லை. போகோவில் சோட்டா பீமை பார்த்துக் கொண்டே என்னைப் பார்க்கிறான் என் மகன்.

 

டீக்கடை -ட்விட்டர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹாஹா என்று சிரிப்பதற்கு இந்த கதையில் என்னத்தை மோகன் கண்டிட்டார்  
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிந்திக்கிற விடயம் கதையில் இருந்தால் அவர் உடனே சிரிச்சுடுவாரு......!  👍 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.