Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கி – கஜேந்திரகுமார் உறவில் விரிசல் : கூட்டணியமைப்பதில் சிக்கல்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E2%80%93-%E0%AE%95%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.jpg

விக்கி – கஜேந்திரகுமார் உறவில் விரிசல் : கூட்டணியமைப்பதில் சிக்கல்?

புதிய கூட்டணி ஒன்றினை அமைப்பது குறித்து வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிற்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் மக்கள் கூட்டணிக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குமிடையில் புதிய கூட்டணி ஒன்றினை அமைக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சுரேஷ் பிரேமச்சந்திரனை தவிர்த்து விக்னேஸ்வரன் மாத்திரம் தமது தரப்புடன் இணைய வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதற்கு நிபந்தனை விதித்து வந்தது.

பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகித்த தரப்பினர், சுரேஷ் பிரேமச்சந்திரனை விட்டு விக்னேஸ்வரன் வர தயாராக இருக்கிறார், தற்போது சுரேஷ் தரப்புடன் அவருக்கு கருத்து வேறுபாடுள்ளது என தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதையடுத்து இன்று(திங்கட்கிழமை) இரண்டு தரப்பும் சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்;டிருந்தன. நல்லூரிலுள்ள விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு நடைபெறவிருந்ததாக கூறப்படுகின்றது.

சி.வி.விக்னேஸ்வரன், க.அருந்தவபாலன், பேராசிரியர் வி.சிவநாதன் ஆகியோர் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் கலந்துகொள்ளவிருந்தனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், சட்டத்தரணிகள் சுகாஷ், காண்டீபன், மணிவண்ணன் ஆகியோர் முன்னணி சார்பிலும் கலந்துகொள்ளவிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், சுரேஷ் தரப்பை தவிர்த்து கூட்டணியமைக்க தயாரில்லையென்ற நிலைப்பாட்டை மத்தியஸ்தர்களிடம் விக்னேஸ்வரன் நேற்று மாலை தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

சில்லறை காரணங்களை கூறி ஒவ்வொருவரை தவிர்த்தால் கடைசியில் தமிழ் மக்கள் அணிகளாகவே பிரிந்து நிற்க வேண்டி வருமென்றும் முன்னணிக்கு விளங்கப்படுத்துமாறு மத்தியஸ்தர்களிற்கு தெரியப்படுத்தியிருந்தார்.

எனினும், சுரேஷ் தரப்பையும் இணைத்தால் கூட்டணிக்கு தயாரில்லையென முன்னணி விடாப்பிடியாக இருந்தது. இதையடுத்து இன்றைய சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://athavannews.com/விக்கி-கஜேந்திரகுமார்/

சுரேஷ் பிரேமசந்திரன் இன்றி பேச்சுவார்த்தை இல்லை....

கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தை கைவிடப்பட்டுள்ளதாக, வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கூட்டணியை அமைப்பதற்கு, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் கட்சியை விலக்க வேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பில் நிபந்தனை முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டை உறுதியாக அறிவித்துள்ள விக்னேஸ்வரன், இந்த கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர முடியாது என்றும் கூறியுள்ளார்.

http://www.hirunews.lk/tamil/219914/சுரேஷ்-பிரேமசந்திரன்-இன்றி-பேச்சுவார்த்தை-இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

87-89 பத்மநாபா முதுகில் சவாரி செய்து எம்பி.

90-இல் அதிஸ்டவசமாக சென்னை படுகொலையில் இருந்து “தப்புதல்”

94 - ததேகூ அமையும் மட்டும் சந்திரிகாவின் அரசில் அதிகாரசபை ஆணையளர் பதவி.

ததேகூ வில் சேர்ந்து - புலியின் முதுகில் சவாரி செய்து எம்பி.

2009 க்கு பின் -ததேகூவின் தயவில் தம்பிக்குள் பதவி.

இப்படி தன் சுயநலத்தை மட்டுமே முன்னிறுத்தி அரசியல் செய்யும் சுரேசின் வலையில் சிவி நன்றாக விழுந்துவிட்டார்.

பாவம் விக்கியர். வந்தவளும் சரியில்லை, வாச்சவளும் சரியில்லை என்ற ஜனகராஜ் கொமெடி போல் ஆகிவிட்டார்.

உண்மையிலேயே மனவருத்தம்மான விடயம்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற நம்பிக்கைத் துரோகிகளையும் அப்பட்டமான சுயநலவாதிகளையும் காண்பது அரிது.

அதே நேரம் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு சற்றும் குறைவில்லாத சுயநலவாதி தான்!

இது போன்ற சுயநலவாதிகளுடன் காண்டீபன் போன்றவர்கள் இன்னமும் இணைந்திருப்பது ஆச்சரியமானது தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.