Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இத்தால் சகலரும் அறிவது

Featured Replies

வணக்கம் அனைவருக்கும்,

யாழ் கருத்துக்களம் தொடர்பான அறிவித்தல்கள்,

மாற்றங்கள் - புதியன தொடர்பான விளக்கங்கள்,

உறுப்பினர்கள் தொடர்பான அறிவித்தல்கள்,

கவனயீர்ப்புகள், எச்சரிக்கைகள், அறிவுறுத்தல்கள்

போன்றன இத்தலைப்பின் கீழ் இடம் பெறும்!

நன்றி

  • Replies 75
  • Views 31k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அறிவுறுத்தல்

1. புதிய கருத்துக்கள விதிமுறைகளை இதுவரை படிக்காதவர்கள், தயவுசெய்து அவற்றை ஒருமுறை வாசித்தறியவும். > கருத்துக்கள விதிமுறைகள்

2. கருத்துக்களத்தில் இணைக்கும் படங்களின் அளவு கருத்துக்கள விதிமுறைகளில் குறிப்பிட்டதற்கு அமைய இருக்கவேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்க. (அகலம்: max 640px)

அதிக பழு காரணமாக கடந்த சில மணி நேரங்களாக ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகின்றோம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

எச்சரிக்கை

thamizthukkudu, ithayakani ஆகிய இரண்டு கள உறுப்பினர்களும் யாழ் கருத்துக்களத்தில் தடைசெய்யப்படுகின்றனர். அவர்கள் யாழ் அரிச்சுவடி பகுதியில் தொடங்கிய தலைப்புகளும் நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

இவர்களின் கோமாளித்தனமான செயற்பாடுகள் புதிதாக இணையும் உறுப்பினர்களுக்கு அசெளகரியங்களைக் கொடுக்கும் என்பதாலும், இவர்களின் நோக்கம் எமக்கு சந்தேகங்களைக் கொடுப்பதாலும் கருத்துக்களத்தில் தடைசெய்யப்படுகின்றனர்.

  • தொடங்கியவர்

1. மீண்டும் மீண்டும் நாம் நினைவுறுத்த விரும்புவது. கள விதிமுறைகளுக்கு அமைவாக சக கருத்துக்கள உறவுகளை ஒருமையில் விளிப்பதைத் தவிர்த்துக்கொள்ளவும். அநாகரிகமான முறையில் கருத்தாடுவதையும், விளிப்பதையும் தவிர்க்கவும்.

2. சக கருத்துக்கள உறவுகளை மறைமுகமாகவோ, நேரடியாகவோ தாக்கிக் கருத்து எழுதுவதையும், அவர்களின் அனுமதி இல்லாமல் நையாண்டி செய்வதற்கு அவர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

3. கருத்துகள விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகள் தவிர ஏனை பிரிவுகளில் வீண் அரட்டைகளைத் தவிர்க்கவும்.

* கருத்துக்கள விதிமுறைகளில் உடன்பாடு இல்லாதவர்கள் அல்லது கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமைவாக செயற்பட விரும்பாதவர்கள் "கட்டாயம்" கருத்துக்களத்தில் கருத்துகள் எழுதவேண்டுமென கள நிர்வாகம் ஒருபோதும் வலியுறுத்தவில்லை. எனவே தயவுசெய்து!!!

தொடர்ந்தும் கருத்துக்கள விதிமுறைகளுக்கு முரணாக செயற்படின் எச்சரிக்கை வழங்கப்பட்டு கருத்துக்களத்தில் இருந்து தடைசெய்யப்படுவீர்கள் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். யாராக (பழைய, புதிய, நீண்டகால..) இருப்பினும் பாகுபாடில்லாமல் இது செயற்படுத்தப்படும் என்பதையும் அறியத் தருகிறோம்!!!

கருத்துகள நிர்வாகத்தோடு ஒத்துழைத்து செயற்படுமாறு அனைத்து கருத்துக்கள உறுப்பினர்களையும் அன்புடனும், நட்புடனும் கேட்டுக்கொள்கிறோம்.

  • தொடங்கியவர்

அறிவுறுத்தல்!

தலைப்புக்களை/ஆக்கங்களை உரிய பகுதிகளில் இணைக்கவும். சற்றும் பொருத்தமில்லாத பிரிவில் பொருத்தமில்லாத தலைப்பை இணைப்பதைத் தவிர்க்கவும். (சில தலைப்புகளை எங்கு இணைப்பது என்பதில் குழப்பம் வரலாம் - அவற்றை எம்மால் புரிந்துகொள்ளமுடியும்). ஆனால், அறியாதவர்கள் போல் செய்திகளை அறிமுகப்பகுதியில் இணைப்பதை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை.

யாழ் அரிச்சுவடி, யாழ் உறவோசை போன்ற பிரிவுகளை அவற்றுக்குரிய கருத்துக்களுக்கு மட்டும் பயன்படுத்தவும். ஏனைய விவாதங்களைத் தவிர்க்கவும். அங்கே, பொருத்தமில்லாத தலைப்புக்களை இடுவதையும் தவிர்க்கவும்.

எச்சரிக்கை!

ஜமுனா, வானவில் ஆகிய இருவருக்கும் நாம் மீண்டும் அறிவுறுத்த விரும்புகிறோம்: தயவுசெய்து தேவையற்ற அரட்டைகளைத் தவிர்க்கவும். கருத்துக்கள விதிமுறைகளில் குறிப்பிடப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வீண் அரட்டைகளைத் தொடர்வதை இனியும் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே பலமுறை எச்சரித்திருக்கிறோம் - தனிமடல்கள் ஊடாகவும் அறிவுறுத்தியிருக்கிறோம் - தடைசெய்யப்பட்டு, மீளவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஏனைய கருத்துக்கள உறுப்பினர்களை சீண்டும் வகையிலான கருத்துக்களைத் தவிர்க்கவும். இதனைக் கடைசி எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளவும். தொடர்ந்தால், தடைசெய்யப்படுவீர்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம். புரிந்துகொண்டு ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறோம்!

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

எச்சரிக்கை

கருத்துக்கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

அண்மைக் காலங்களாக வெவ்வேறு புதிய பெயர்களில் இணைந்து கருத்துக்கள விதிமுறைகளுக்கு முரணாகவும், கோமாளித்தனமாகவும் கருத்துக்களை வைக்கப்பட்டுக்கொண்டிருப்ப

களத்தின் மேலதிக பாதுகாப்புத் தேவைகருதி, தற்போது முதல் புதிதாகப் பதிபவர்களை பொறுப்பாளர்கள் பார்வையிட்டு அங்கீகரித்த பின்னரே கருத்துக்களைப் பதியத் தொடங்க முடியும்.

  • தொடங்கியவர்

அறிவுறுத்தல்

மதம்சார் பிரச்சார வடிவிலான எந்தப்பதிவுகளையும் யாழ் கருத்துக்களத்தில் இணைக்கவேண்டாம். விவாதங்களுக்கான களம் இது என்பதைக் கருத்தில்கொண்டு - விவாதத்தளத்துக்குள் மதங்களைக் கொண்டு செல்லும் விதமாக பதிவுகளை இடுவதை நாம் வரவேற்கிறோம். ஆனால், வெறுமனே எந்தவொரு மதம்சார்ந்த பிரச்சாரப் பதிவுகளையும் யாழ் கருத்துக்களத்தில் இணைப்பது தவிர்க்கப்படவேண்டும். இனி மதம்சார்ந்து இணைக்கும் பரப்புரை வடிவிலான பதிவுகள் அனைத்தும் நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்படும் என்பதை அறியத்தருகிறோம்.

* மதம்சார்ந்த பதிவுகள் தொடர்பாக முடிவெடுப்பதற்கு நீண்ட காலம் எடுத்தமைக்கு வருந்துகிறோம்.

  • தொடங்கியவர்

அறிவித்தல்

யாழ் கருத்துக்களத்திற்கு புதிய மட்டுறுத்துனர் ஒருவர் இணைக்கப்பட்டுள்ளார்.

பெயர்: இணையவன்.

குறிப்பா செம்பாலை (செய்திக்களம்) பகுதியில், செய்திகளைத் தொகுத்து ஒழுங்கமைக்கும் பணியை இவர் செய்வார். கருத்துக்கள உறவுகள் அனைவரும் உங்கள் ஒத்துழைப்பை இணையவனுக்கு வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

  • தொடங்கியவர்

எச்சரிக்கை

ஒருவரையொருவர் மறைமுகமாகத் தாக்குவதும், கருத்தாடற் பண்புமுறையை மீறிக் கருத்தாடுவதும், சக கருத்துக்கள உறுப்பினர்களைச் சீண்டும் விதமாகக் கருத்துக்களை முன்வைப்பதும், இங்கு கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும் சமூகப்பொறுப்பு இருக்கிறது என்பதை உணராமல் உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்களை எழுதுவதும், ஆக்கபூர்வமான கருத்தாடல்களைத் தொடராமல் வெறுமனே மற்றவரைத் தாக்கவேண்டும் என்பதற்காகவே கருத்துக்களை பதிவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நாம் பலமுறை அறிவுறுத்திவிட்டோம். பலதடவைகள் எச்சரித்துவிட்டோம். இதற்குமேலும் நிர்வாகம் பொறுமைகாக்கும் - நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிக்கும் என எதிர்பார்க்கவேண்டாம்.

கருத்துக்களத்தில் எச்சரிக்கை முறை இன்றிலிருந்து அறிமுகப்படுத்தப்படுகிறது. பண்பற்ற முறையில், கருத்துக்கள விதிமுறைகளை மீறும் வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்படின் எச்சரிக்கை (warning) வழங்கப்படும். அது கருத்துக்கள உறுப்பினரின் பெயருக்குக் கீழ் காண்பிக்கப்படும். குறிப்பிட்ட அளவு எச்சரிக்கை வழங்கப்பட்டபின் கருத்துக்களத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள். இங்கு புதிய உறுப்பினர்கள், நீண்டகால உறுப்பினர்கள், முன்னர் நல்ல கருத்துக்கள் எழுதியவர் என்கிற தயவு எதுவும் பார்க்கப்படமாட்டாது.

கருத்துக்கள உறவு "பூனைக்குட்டி" க்கு எச்சரிக்கை வழங்கப்படுகிறது. அண்மைக்காலங்களில் கருத்துக்களவிதிமுறைகளை மீறும்வகையில் கருத்தெழுதிய அனைவருக்கும் மீண்டும் அறிவுறுத்துகிறோம். உங்கள் சமூகப் பொறுப்பை உணர்ந்து கருத்துக்களை எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீள நினைவூட்டல்

யாழ் கருத்தில்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும் .

இடையிடையே ஆங்கிலத்தை தமிழில் எழுதுவதை அல்லது ஆங்கில வார்த்தைகளை அவசியமின்றி பயன்படுத்துவதை அனைவரும் தவிர்ப்பது நல்லது.

Edited by yarlpaadi

  • தொடங்கியவர்

warn system தொடர்பான விளக்கம்

பலரும் தனிமடலூடாகவும், பொதுவிலும் இது தொடர்பாக கேட்டபடியால் தெளிவுபடுத்தும் பொருட்டு இந்த விளக்கம்: யாழ் கருத்துக்களத்தில் warn system அறிமுகப்படுத்தப் பட்டிருப்பது அனைவரும் அறிவீர்கள். இதற்கான அடையாளமாக உங்கள் உங்கள் பெயர்களின் கீழ் warn (0%) என்று காண்பிக்கும். உங்களது மட்டும் தான் உங்களுக்குக் காண்பிக்கும். மற்றவர்களுடையது உங்களுக்கு காண்பிக்கப்படமாட்டாது. warn என்பது 0% இருக்கும் வரை நீங்கள் எந்தக் குழப்பமும் அடையத்தேவையில்லை. :rolleyes:

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

எச்சரிக்கை

* கருத்துக்கள விதிமுறைகளை மதித்து செயற்படாமை

* கருத்துக்கள உறுப்பினர்கள் மீதான தனிநபர் தாக்குதல் கருத்து எழுதியமை

* கருத்துக்கள கருத்தாடல் பண்பை மீறியமை

* கருத்துக்கள நிர்வாகத்தினரின் நிர்வாகம்/மட்டுறுத்தல் சார் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தமை

போன்று காரணங்களுக்காக

சிவக்கொழுந்து (Sivakolunthu)

டங்கிளஸ் (Danklas)

தூயவன்

காவியா (kaviya)

நேசன்

ஆகிய நால்வருக்கும் முதலாவது எச்சரிக்கை வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கும் அது தொடர்பாக தனிமடலில் அறியக்கொடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள உறுப்பினர்கள் மீதான தனிநபர் தாக்குதல் கருத்துக்கள் எழுதுவதையும் - அவற்றுக்கு பதிலளிப்பதையும் தவிர்க்கவும். கருத்துக்கள நிர்வாகத்தினரின் நிர்வாகம் மற்றும் மட்டுறுத்தல் சார் செயற்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்புத் தருவீர்கள் என நம்புகிறோம்.

நன்றி

  • தொடங்கியவர்

எச்சரிக்கை

* கருத்துக்கள விதிமுறைகளை மீறி செயற்பட்டமை

* கருத்துக்கள கருத்தாடல் பண்பை கடைப்பிடிக்காமை

ஆகிய காரணங்களால்

Panangkai என்கிற உறுப்பினருக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

அறிவுறுத்தல்

1. தயவுசெய்து தனிப்பட்ட பிரச்சனைகளை பொதுக்களத்துக்கு கொண்டு வராதீர்கள்.

2. களம் சார்ந்த பிரச்சனைகளை "யாழ் உறவோசை பகுதியில்" எழுதுங்கள்.

3. முறைப்பாடுகளை நிர்வாகத்தினரோடு தொடர்புகொண்டு தெரியப்படுத்துங்கள்.

4. தனிநபர் தாக்குதல் இடம்பெறுவதாகக் கருதினால் பதிலுக்கு தனிநபர் தாக்குதலை நிகழ்த்தாமல், நிர்வாகத்துக்கு அறியத் தாருங்கள்.

5. தனிமடல்களை பொதுக்களத்தில் பிரசுரிக்காதீர்கள்.

6. தனிமடலை யாராவது தவறாகப் பயன்படுத்தினால் நிர்வாகத்திடம் எழுதித் தெரிவியுங்கள்.

நிர்வாக மற்றும் மட்டுறுத்தல் பணிகளைச் செய்வதற்கு நிர்வாகத்தினர் இருக்கிறோம் என்பதை பலர் பல சந்தர்ப்பங்களில் மறந்து போய்விடுகிறார்கள். நாம் சிலவேளைகளில் சில தலைப்புகளை கவனிக்காமல் போகலாம் - அதனால் சில பிரச்சனைகள் எமக்கு தெரியாமல் போகலாம். எனவே, அறிந்தவர்கள் நிர்வாகத்தினருக்கு தெரியப்படுத்தலாம்.

  • தொடங்கியவர்

தனிமடல்

4. தனிமடற் சேவை

1. கருத்துக்கள உறுப்பினர்களோடு தனிப்பட நட்புப் பாராட்ட தனிமடற் சேவையினை பயன்படுத்தலாம்.

2. தனிமடற் சேவையினை தவறான முறையில் பயன்படுத்தல் ஆகாது.

3. (அப்படி ஏதாவது நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் நிர்வாகத்துக்கு அறியத்தரலாம்)

4. தனிமடற் சேவையினை நிறுவனங்களுக்கான விளம்பரங்களுக்கு பயன்படுத்தல் ஆகாது.

இது தனிமடல் தொடர்பாக யாழ் கருத்துக்களத்தின் விதிமுறையில் உள்ளது. அனைவரும் வாசித்திருப்பீர்கள். இதுவரை வாசித்தறியாதவர்கள் கருத்துக்கள விதிமுறைகளை மறுபடியும் வாசிக்கவும்.

கருத்துக்களத்தில் அண்மைக் காலமாக தனிமடல் பிரச்சனை தொடர்பாக சில முறைப்பாடுகள் வந்துள்ளன. இவை தொடர்பாக கருத்துக்கள நிர்வாகம் சில விசாரிப்புக்களை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் நாம் சில விடயங்களை அனைவருக்கும் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

1. தனிமடல் சேவையானது கருத்துக்கள உறுப்பினர்கள் தமக்குள் நட்புப் பாராட்டுவதற்கும், கருத்துக்களம் தொடர்பான விடயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், கருத்துக்கள நிர்வாகத்தினரோடு தொடர்புகொள்வதற்குமான ஒரு சேவையாகவே அமையவேண்டும். இவை தவிர்த்து நிறுவனங்களை விளம்பரப்படுத்துவதற்கோ, வேறு இணையத்தளங்களை விளம்பரப்படுத்துவதற்கோ, எரிதங்களை (SPAM MAILS) அனுப்புவதற்கோ பயன்படுத்துதல் ஆகாது. உங்கள் இணையத்தளம் பற்றி அறியத் தர விரும்பின் - அதனை யாழ் வழிகாட்டி பகுதியில் இணைக்கலாம். யாழ் கருத்துக்களம் சாராத எந்த விளம்பரங்களுக்கும் அனுமதியில்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம்.

2. உங்களின் (கருத்துக்களம் சாராத) தனிப்பட்ட பிரச்சனைகளை தனிமடலில் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்கவும். யாழ் கருத்துக்களம் என்பது கள உறுப்பினர்களிடையே பகையுணர்வை வளர்ப்பதற்கான களமில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கும் - எல்லோரும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தால் யாழ் கருத்துக்களம் என்பது அவசியமில்லை. எனவே, கருத்துக்களத்தில் ஏற்படும் கருத்தாடல் முரண்பாடு என்பது வெளியில் பகையுணர்வாக வளரக்கூடாது என்பதே எமது அவா. அப்படி வளருமானால் அதற்கு கருத்துக்கள நிர்வாகம் எவ்விதப் பொறுப்புமேற்காது. அந்தவகையில், உங்கள் "சண்டைகளுக்கு" - "பகையுணர்வுக்கு" கருத்துக்கள தனிமடற் சேவையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டாம்.

3. ஒரு கருத்துக்கள உறுப்பினர்க்கு இன்னொரு கருத்துக்கள உறுப்பினர் (நிர்வாகத்தினர் தவிர) தன்னோடு தொடர்புகொள்வது விருப்பமில்லையெனின் தனிமடல் சேவையில் அவரை தடைசெய்யும் அனைத்து உரிமையும் உள்ளது.

4. கருத்துக்களம் சாராத வேறு விடயங்களை - குறிப்பாக கருத்துக்களம் சாராத உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை வேறு சேவைகளின் ஊடாக பேசிக்கொள்ளலாம். அவைபற்றி நீங்கள் அறிந்திராவிடின், சில உதாரணங்கள் இதோ: தொலைபேசி, மின்னஞ்சல் சேவை, msn messenger, yahoo messenger போன்றவைகள்.

5. யாழ் கருத்துக்களத்தில் கருத்துக்கள உறுப்பினர்களின் தனிப்பட்ட விபரங்களை - உதாரணம்: மின்னஞ்சல் முகவரி - தவறான முறையில் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட விபரங்களை வெளியில் வேறு நபர்களுக்கு, நிறுவனங்களுக்கு வழங்குவது தவிர்க்கப்படவேண்டும்.

6. தனிமடல்களை பொதுக் களத்தில் இடுவதுவும் - அதுபற்றி பொதுக்களத்தில் விவாதிப்பதுவும் - தடைசெய்யப்பட்டுள்ளது. கருத்துக்கள உறுப்பினர் ஒருவர் உங்களுக்கு அனுப்பும் தனிமடலை அவரது அனுமதியின்றி இன்னொருவருக்கு (நிர்வாகத்தினர் தவிர) அனுப்புவது தவிர்க்கப்படவேண்டும்.

7. ஒரு கருத்துக்கள உறுப்பினர் பற்றி ஏனைய கருத்துக்கள உறுப்பினர்களுக்கு அவதூறான செய்திகளை, வதந்திகளை மற்றும் கோள்மூட்டல்களை பரப்புவதுவும் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்.

8. தவறான முறையில் தனிமடல் சேவை பயன்படுத்தப்படுவது பற்றி அறிந்தால் கருத்துக்கள நிர்வாகத்துக்கு அறியத்தாருங்கள்.

9. தனிமடல் சேவை ஊடாக பிற கருத்துக்கள உறுப்பினர்களால் உங்களுக்கு தொந்தரவு ஏற்படின் அதனை நிர்வாகத்துக்கு தெரியப்படுத்துங்கள்.

10. ஆதாரமான தனிமடல்களினை உடனே அழிக்காமல் - சேமித்து வைத்து நிர்வாகத்தினருக்கு அனுப்புங்கள்.

மேற்கண்ட விடயங்களை கவனத்தில் எடுத்து அனைத்து கருத்துக்கள உறுப்பினர்களும் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • தொடங்கியவர்

தனிப்பட்ட பிரச்சனை

யாழ் கருத்துக்களத்தை (முன்னரே குறிப்பிட்டது போன்று) உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை, பகையுணர்வினை வளர்த்துக்கொள்ளும் இடமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டாம். இது ஒரு கருத்தாடற் களம் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தவேண்டியுள்ளது.

  1. கருத்துக்களில் இருக்கும் முரண்பாடுகள் தாண்டி அனைவரும் நட்பு பாராட்ட வேண்டும் என்பதே எமது அவா.
  2. கருத்துக்களம் சாராத உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை கருத்துக்களத்துக்கு அப்பால் மட்டுமே வைத்துக்கொள்ளுங்கள்.
  3. உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை "மறைமுகமாகவோ, நேரடியாகவோ" களத்தில் எழுதாதீர்கள்.
  4. மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஒருவரைத் தாக்கி எழுதுவதைத் தவிர்க்கவும்.
  5. உங்களின் (கருத்தக்களம் சாராத) தனிப்பட்ட பிரச்சனைகளை கருத்துக்கள நிர்வாகம் தீர்த்துவைக்க முடியாது.
  6. கருத்துக்களம் சார்ந்த பிரச்சனைகளாக இருப்பின் நிர்வாகத்தினருக்கு அறியத்தாருங்கள்.
இவையனைத்துமே கருத்துக்கள விதிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இருந்தும் சில உறுப்பினர்கள் பொறுப்பற்று செயற்படுவது வருத்தமளிக்கிறது. நாம் யாரையும் நேரடியாக சுட்டிக்காட்ட விரும்பவில்லை. அனைவரும் நட்போடும், பொறுப்போடும் கருத்துக்களத்தை அடுத்தகட்ட வளர்ச்சிப்பாதையில் நகர்த்திச்செல்ல ஒத்துழைக்கவேண்டும் என்பதே எமது விருப்பு.
  • தொடங்கியவர்

அறிவுறுத்தல்

உங்களின் தனிப்பட்ட விபரங்களை யாழ் கருத்துக்களம் ஊடாகவோ, யாழ் கருத்துக்கள தனிமடற் சேவையூடாக பகிர்ந்துகொள்வதால் வரும் விளைவுகளுக்கு யாழ் இணையம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது. உங்கள் பாதுகாப்புக்கு நீங்களே பொறுப்பு. இணையத்தைப் பொறுத்தவரை முதலில் நீங்களே உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும்.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

எச்சரிக்கை

தயவுசெய்து வேறு ஒரு தளத்திலிருந்து எடுத்து ஒரு ஆக்கத்தை யாழ் இணைய கருத்துக்களத்தில் இணைக்கும்போது, அவ்வாக்கம் பெறப்பட்ட இடத்தைக் குறிப்பிடுங்கள். முன்னரும் பலமுறை நாம் அறிவுறுத்தியிருக்கும். ஏனைய கருத்துக்கள உறவுகளும் முறைப்பாடு செய்திருக்கிறார்கள். எனவே, இனிவரும் காலங்களில் பெறப்பட்ட இடம் குறிப்பிடப்படாவிட்டால் அவ் ஆக்கத்தை நீக்க வேண்டி ஏற்படும் என்பதை நட்புடன் அறியத்தர விரும்புகிறோம்.

  • தொடங்கியவர்

அறிவுறுத்தல்

நீங்கள் எழுதும் கருத்துக்களில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். தொழில்நுட்ப/அறிவியற் சொற்களுக்குத் தமிழ் தெரியாவிட்டால் அவற்றை ஆங்கிலத்தில் எழுதுவதில் பிரச்சனையில்லை. அவற்றுக்கு தமிழ்ச் சொற்கள் தெரிந்தவர்கள் உடனுக்குடன் அதன் கீழேயே உரிய தமிழ்ச் சொற்களை பதில் கருத்தாக இணைக்கலாம்.

மற்றும், கருத்துக்களின் இடையே முழு வசனங்களை ஆங்கிலத்தில் எழுதுவதையும் தவிர்க்கவும். இது தமிழ்க் கருத்துக்களம் என்பதை நினைவில் வைத்திருக்கவும். யாழ் கருத்துக்களத்தின் வாசகர்கள்/நோக்கர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பெரும்பாலும் உலக நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பேசும் மக்கள். அவர்கள் வாழும் நாடுகளில் பேசப்படும் மொழிகள் வேறுபடும். ஆனால் அனைத்துத் தமிழர்களையும் இணைக்கும் மொழியாகவும், தாய் மொழியாகவும் இருப்பது தமிழ் மொழி.

எனவே, தயவுசெய்து தமிழில் கருத்தாடுங்கள். தமிழால் இணைந்திருப்போம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அறிவித்தல்

யாழ் இணையத்தின் செய்தி அலசல், கருத்துப்படம் ஆகியவற்றுக்கான உப பிரிவுகள் நிகழ்வும் அகழ்வும் பிரிவின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான இணைப்பு யாழ் இணைய முகப்பிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பிரிவுகளிலும், செய்திக் குழுமத்தினர் மட்டுமே புதிய தலைப்பினைத் தொடங்க முடியும். ஏனையவர்கள் பதிலளிக்க மட்டுமே முடியும்.

அண்மைக்காலமாக யாழ் இணையத்தில் வாரம் ஒரு செய்தி அலசல், வாரம் ஒரு கருத்துப்படம் வருவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். இவற்றை ஒழுங்கமைத்து செய்து வருபவர்கள் யாழ் இணையத்தின் செய்திக் குழுமத்தினர். நீங்களும் கருத்துப்படம் (cartoon) வரைவதில் ஆர்வம் உள்ளவராக இருந்தால், தரப்படும் கருப்பொருளுக்கு ஏற்ப கருத்துப்படங்களை வரைய முடியுமெனின் யாழ் இணைய நிர்வாகத்துடன் தனிமடலூடாகத் தொடர்புகொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்

அறிவித்தல்

கருத்துக்களக் குழுமங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அடிப்படைக் குழுமங்கள், செயல்நிலைக் குழுமங்கள் என இரண்டு வகைக் குழுமங்கள் உள்ளன. முன்னர் போன்று அல்லாமல், இப்போது கருத்துக்கள உறவுகள் என்னும் குழுமம் ஒன்று மட்டுமே அடிப்படைக் குழுமங்களின் தலைமைக் குழுமமாக உள்ளது. கருத்துக்கள உறவுகள் குழுமத்தில் இருப்பவர்களுக்கு அனைத்துப் பகுதியிலும் அனுமதியுள்ளது. குறிப்பாக அனைவராலும் செய்திப் பகுதிக்குள் (ஊர்ப்புதினம், உலக நடப்பு) செய்திகளை இணைக்கமுடியும்.

கருத்துக்களக் குழுமங்கள் தொடர்பான மேலதிக விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்: கருத்துக்களக் குழுமங்கள்

எனவே, செய்திகளை இணைக்கும் போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். ஏற்கனவே அந்த செய்தி உள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். அப்பொழுதுதான் வாசிப்பவர்களுக்கு சுலபமாக இருக்கும். மற்றும், செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது அதன் மூலத்தைக் குறிப்பிடுதல் வேண்டும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, மட்டுறுத்தினர்களின் வேலைப்பளுவைக் குறையுங்கள்.

அடுத்து, உலக நடப்பு பிரிவில் இணைக்கும் செய்திகளில் குறிப்பாக "மனைவியின் மூக்கைக் கடித்துத் துப்பிய கணவன், கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனைக் கொன்ற மனைவி, 60 வயதுக் கிழவன் 13 வயது சிறுமியைத் திருமணம் முடித்தார், சிறுவனுக்கு முகமெல்லாம் முடி" போன்ற செய்திகளை தயவுசெய்து செய்தித் திரட்டி பிரிவுக்குள் இணைக்கவும்.

இறுதியாக, புதினம் தளத்தின் செய்திகளை ஊர்ப் புதினம் பிரிவில் கருத்துக்கள உறவுகள் இணைக்க வேண்டியதில்லை. அவை தானியங்கியாக ஊர்ப் புதினம் பகுதியில் இணைக்கப்படும். செய்திகளின் தலைப்பு மட்டுமே இணைக்கப்படும். முழுச்செய்தியையும் படிக்க அத்தலைப்பின் கீழ் உள்ள இணைப்பை அழுத்தி புதினம் தளத்துக்குச் சென்று படிக்கலாம். செய்தி தொடர்பான கருத்துக்களை எழுத வேண்டுமென்றால் மட்டும், அதனை மேற்கோள் காட்டி எழுதவும்.

* மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் கருத்துக்கள நிர்வாகத்தினருடன் தொடர்புகொள்ளவும்.

  • தொடங்கியவர்

அறிவுறுத்தல்

கருத்துக்கள உறவுகளே, தயவுசெய்து கருத்துக்கள விதிமுறைகளை கடைப்பிடியுங்கள். கருத்துக்களத்தில் உள்ள இந்தக் "கவிதைப் பூங்காடு" பிரிவு கவிதைப் பிரசவத்துக்கானது. கவிதையில் அரிச்சுவடி பழகுபவர்களும், கவிதை எழுதுவதில் நல்லாற்றல் பெற்றவரும் எந்தவிதப் பாகுபாடுமின்றி கலந்துகொள்ளும் இடம். எழுதப் பழகுபவர்களை ஊக்குவிக்கிற அதே நேரம், அவர்கள் விடுகிற பிழைகளை ஆக்கபூர்வமான முறையில் சுட்டிக்காட்ட வேண்டும். அப்படிச் சுட்டிக்காட்டப் படுகிறபோது பிழைகளைத் திருத்திக் கொள்வதன் மூலமே நல்ல படைப்பாளியாக உருவாக முடியும். இவன் சின்னப் பயல்/இவர்களுக்கு என்ன தெரியும் என்கிற உணர்வு விமர்சகர்களுக்கும், இவர்கள் யார் எனக்குச் சொல்வதற்கு என்கிற உணர்வு படைப்பாளிகளுக்கும் இருக்கக்கூடாது.

ஒருவரை ஒருவர் தாக்கிக் கவிதை எழுதுகிற போக்கு கருத்துக்களத்தில் தொடர்வதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். வெளி முரண்பாடுகளை கருத்துக்களத்திலும் தொடர்வது பண்பான செயலாக இருக்காது. அதேபோல் கருத்துக்களத்தின் ஒரு தலைப்பில் ஏற்படுகிற முரண்பாட்டை, இன்னொரு தலைப்புக்கும் கொண்டு சென்று சக கருத்துக்கள உறவுகளை தாக்கும் செயல்களையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

கவிதைப் பூங்காடு பிரிவில் கவிதை எழுதும் அனைத்து இளங் கவிஞர்களுக்கும் வளர்ந்துவரும் கவிஞர்களுக்கும் யாழ் இணைய நிர்வாகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

  • தொடங்கியவர்

அறிவுறுத்தல்

கருத்துக்கள உறவுகளுக்கு வணக்கம்,

மதங்கள்

கருத்துக்களத்தில் மதப் பிரச்சாரம் செய்யும் வகையிலான பதிவுகள் அனுமதிக்கப்படமாட்டாது என்று நாம் குறிப்பிட்டுள்ளோம். நீங்கள் மதப் பற்றாளராக இருக்கலாம், பற்றில்லாதவராக இருக்கலாம், கடவுள் நம்பிக்கையாளராக இருக்கலாம், நம்பிக்கையில்லாதவராக இருக்கலாம். அது உங்களின் தனிப்பட்ட கருத்துச் சுதந்திரத்தின் பாற்பட்டது. ஆனால், கருத்துக்களத்தைப் பொறுத்தவரை மதங்களைப் பிரச்சாரப்படுத்தும் நோக்கிலான (அது இந்து மதமாகவோ, கிறிஸ்தவமாகவோ, இஸ்லாமாகவோ அல்லது வேறு மதங்களாக இருக்கலாம்) கருத்துக்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

வரையறுக்கப்பட்ட மதங்கள் தாண்டி மானுடம், மக்கள் வாழ்வு, நன்நெறி, சீர்கேடுகள், சீர்திருத்தங்கள், பண்பாடு, தனிமனித ஒழுக்கம் போன்ற விடயங்கள் சார்ந்து கருத்துக்களை வைக்கலாம். மதம் சார்ந்த பதிவாக இருந்தாலும் விவாதத்திற்கு உட்படுத்தக்கூடிய பதிவாக அமைந்தால் வரவேற்கத்தக்கது.

விமர்சனம்

- கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.

- சங்கங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.

- ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கருத்துக்கள விதிமுறைகளில் உள்ளவை. ஒருவரைப் பற்றி விமர்சிப்பதற்கு உங்களுக்கு கருத்துச் சுதந்திரம் உள்ளது. அதேநேரம், கருத்துக்கள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு உங்கள் விமர்சனங்களை முன்வையுங்கள். யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்றபட்டவர்கள் அல்ல. அதேநேரம், விமர்சனம் என்ற பெயரில் - குடிகாரர் வீதியில் போறவர் வாறவர்களை வசைபாடுவது போன்றோ - நாய்கள், வீட்டுக் கதவைத் தாண்டிப் போகிறவர்களையெல்லாம் பார்த்து குரைப்பது போன்றோ எழுதாதீர்கள். விமர்சிக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் - அது பெரியாராக இருக்கலாம், சாயி பாபாவாக இருக்கலாம், டக்ளஸ் அல்லது கருணாவாக இருக்கலாம், ராஜபக்சா அல்லது கருணாநிதியாக இருக்கலாம் - பண்பான முறையிலும், கருத்தியற் தளத்தில் நின்றும் விமர்சியுங்கள். யாழ் இணைய கருத்துக்களம் ஒன்றும் சாராயக்கடை அல்ல - இது ஒரு கருத்தாடற் களம். கருத்தாடற் பண்பைப் பேணுவது இங்கு அவசியம். மேம்போக்காக - வசைபாடலாக - வீதியோரச் சுவர்க் கிறுக்கல்களாக ஒருவர் பற்றி எழுதுவீர்களானால் - அது யார் பற்றியதாக இருந்தாலும் - நீக்கப்படும்.

திணிப்புகள், திசைதிருப்பல்கள்

தலைப்புக்கு அவசியமற்ற வகையில் அர்த்தமற்ற வலிந்த திணிப்புகள் மேற்கொள்ளப்படுதல் தவிர்க்கப்படவேண்டும். வேறு தலைப்புகளில் தொடரும் விவாதங்களை, அவசியமற்று இன்னொரு தலைப்பிலும் திணித்து அந்தத் தலைப்பின் நோக்கை திசைதிருப்புவது அனுமதிக்கபடமாட்டாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.