Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகவத்கீதை கூறும், அற்புதமான வாழ்க்கை போதனை.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 4 people, outdoor

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை.....

1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!
2. தேவைக்கு செலவிடு.
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு. 
13. அவ்வப்போது பரிசுகள் அளி. 
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே. 
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு. 
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
28. நண்பர்களிடம் அளவளாவு.
29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
31. வாழ்வை கண்டு களி!
32. ரசனையோடு வாழ்!
33. வாழ்க்கை வாழ்வதற்கே!

34. நான்கு நபர்களை புறக்கணி!
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
🙋பொறுமை
🙋சாந்த குணம்
🙋அறிவு
🙋அன்பு

39. நான்கு நபர்களை வெறுக்காதே!
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி

40. நான்கு விசயங்களை குறை!
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

43. நான்கு விசயங்கள் செய்!
🌷 தியானம், யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
       

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடை பிடியுங்கள்.

 
  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா அத்தனையும் முத்துக்கள்,சுலபமானவை, எளிமையானவை. அதனால்தானோ என்னமோ இவற்றை கடைபிடிப்பது அத்தனை சிரமமாக இருக்கின்றது........!  👍

  • 4 weeks later...

பகவத் கீதை :
18வது அத்தியாயம், 47வது பதம். 

"ஷ் ரேயன் ஸ்வதர்மோ விகுண : பரதர்மாத் ஸ்வனுஷ்டி தாத் 
ஸ்வபாவ நியதம் கர்ம குர்வன் நாப்னோதி கில்பி ஷம் ".

ஷ்ரேயன் --சிறந்தது.
ஸ்வதர்ம --தனது சொந்தக்கடமை. 
விகுண ---முறையின்றி செய்யப்பட்டாலும். 
பரதர்மாத் ---பிறரது கடமையைவிட. 
ஸு அனுஷ்டி தாத் ---பக்குவமாக செய்வது. 
ஸ்வபாவ நியதம் --ஒருவனது இயற்கைக்கு ஏற்ப விதிக்கப்பட்ட .
கர்ம --செயலை. 
குர்வன் ---செய்வதால். 
ந--- ஒரு போதும் இல்லை. 
ஆப்னோதி ---அடைவது. 
கில்பிஷம் --பாவத்தின் விளைவுகள.

மற்றவரது கடமையை ஏற்று அதனைப் பக்குவமாகச் செய்வதை விட, முறையாக செய்யாவிட்டாலும் தனது சொந்த கடமையில் ஈடுபட்டிருப்பதே சிறந்தது. ஒருவனது இயற்கைக்கு ஏற்ப விதிக்கப்பட்டுள்ள கடமைகள், பாவ விளைவுகள் என்றும் பாதிக்கப்படுவதில்லை. 

திருக்குறள் என்ன கூறுகிறது என்று பாருங்கள். எது மனித வாழ்விற்கு வழிகாட்டி என்று நீங்களே முடிவு செய்யுங்கள். 

குறள் 517

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

 

 

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.