Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இல்லை: தமிழீழ விடுதலைப் புலிகள் விளக்க அறிக்கை

Featured Replies

தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இல்லை: தமிழீழ விடுதலைப் புலிகள் விளக்க அறிக்கை

[திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 22:03 ஈழம்] [தாயக செய்தியாளர்]

தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் 12 தமிழக உறவுகள் காணாமல் போனமைக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசியல்துறை,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்

30.04.2007

தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கடலில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வெளிவருகின்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

இவை தமிழ் மக்களுக்கும் அவர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரான சக்திகளால் திட்டமிடப்பட்டு வெளிக்கொணரப்படும் கட்டுக்கதைகளே ஆகும்.

தமிழக மக்களுக்கும் எமது மக்களுக்கும் இடையிலான நல் உறவினைப் பிரித்து எமது மக்களைத் தனிமைப்படுத்தி அவர்களின் மீது மிகப்பெரும் மனிதப் பேரவலங்களை கட்டவிழ்த்து விட்டு இன அழிப்பொன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அதன் ஒரு பகுதியாகவே தமிழக மீனவர்களை அவ்வப்போது கடலில் வைத்துச் சுட்டுக்கொன்று விட்டு அதற்கான பழியை தமிழ் மக்கள் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் சுமத்தி விடுகின்ற வழமை தொடர்ந்து வருகின்றது.

இப்படியான குற்றச்சாட்டுக்களை காரணமாக வைத்து இந்திய அரசுடன் ஒரு கூட்டு கடல் ரோந்து நடவடிக்கையை தொடங்குவதற்கும் அதன்மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை நசுக்கிவிடலாம் என்றும் சிறிலங்கா அரசு கனவு காண்கிறது.

அதற்காகவே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களை தொடர்ந்து நடாத்தி வருகின்றது. இதன் மூலம் தமிழக உறவுகளை எமது மக்களிடமிருந்து அன்னியப்படுத்தி தனது இனப்படுகொலை முயற்சிகளை அவர்களுக்கு மறைத்து அரசியல் இலாபம் சம்பாதிக்க நினைக்கின்றது.

எமது மக்களும் அமைப்பினரும் எப்போதும் தமிழக உறவுகளுடன் ஒரு நல்ல உறவினைப் பேணி வருகின்றனர். அவர்களை அச்சுறுத்துவதற்கோ, அவர்களின் உயிர்களுக்கு ஊறுவிளைவிப்பதற்கோ நாம் ஒருபோதும் முயற்சிக்கவில்லை.

பதிலாக பல ஆபத்துக்களில் இருந்தும், சிறிலங்கா அரசின் வன்முறைகளில் இருந்தும் பல சந்தர்ப்பங்களில் அவர்களை காப்பாற்றி பத்திரமாக கரை சேர்த்திருக்கின்றோம். தமிழகத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றோம்.

அப்படியிருந்தும் 300-க்கும் மேற்பட்ட தமிழக உறவுகள் சிங்களக் கடற்படையால் இதுவரையும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது மிகவும் மனவேதனைக்குரியதே.

அந்த விதத்திலே அண்மையில் இடம்பெற்ற வன்முறையும் திட்டமிடப்பட்டு சிங்கள இராணுவத்தினராலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றத

ஈழப்போராட்டத்தின் வளர்ச்சிக்கு தார்மீக பணிசெய்யும் தமிழக மீனவ சகோதரங்களை புலிகள் சுடுவார்கள் என்பதை யாரும் நம்பமாட்டார்கள். வேண்டுமானால் இன்னும் பொருளாதார உதவிகளை செய்து தங்கள் உறவுகளை இன்னும் வளர்க்க விரும்புவார்ளே தவிர தமிழக உறவுகளோடு பகைக்க விரும்பமாட்டார்கள்

எந்தவொரு தமிழருக்கும் எதிராக விடுதலைப் புலிகள் செயற்படமாட்டார்கள் : தமிழக மீனவர் சங்கத் தலைவர்.

தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகள் கொலை செய்தோ அல்லது கடத்தியோ இருக்கமாட்டார்கள் என்று தமிழக மீன் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான பீட்டர் தாஸ் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி தமிழக மீனவர்கள் 5 பேர் கடற்பரப்பில் கொல்லப்பட்ட சம்பவத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிகள் பிரிவுக்கு சம்பந்தம் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தமிழக காவல்துறைத் தலைவர் டி. முகர்ஜி அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியும் தனது அதிர்ச்சியைத் தெரிவித்திருந்தார்.இலங்கையி

12 மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளனர்: டிஜிபி

மே 01, 2007

சென்னை: கடத்தப்பட்ட 12 குமரி மாவட்ட மீனவர்களும் இலங்கையில் பாதுகாப்பாக உள்ளதாக டிஜிபி முகர்ஜி கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 2 மாதங்களாக காணவில்லை. அவர்களை விடுதலைப் புலிகள்தான் கடத்திச் சென்றுள்ளதாக டிஜிபி முகர்ஜி சமீபத்தில் தெரிவித்தார்.

மேலும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களையும் புலிகளின் கடல் புலிகள் பிரிவினர் தான் கொன்றதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இதை விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று மறுத்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முகர்ஜியிடம் 12 மீனவர்கள் நிலை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, எங்களுக்குக் கிடைத்த தகவல்படி 12 மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள் என்றார். விடுதலைப் புலிகள் இயக்கம் மறுப்பு தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.

3 காங். எம்எல்ஏக்களுக்கு புலிகளால் ஆபத்து?

மே 01, 2007

சென்னை: தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் விடுதலைப் புலிகள் மீது கடும் நடவடிக்கை கோரி சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு மத்திய உளவுப் பிரிவு தகவல் அனுப்பியுள்ளது.

இதையடுத்து இந்த மூன்று எம்எல்ஏக்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவான ஹசன் அலி நிருபர்களிடம் பேசுகையில்,

எனக்கும் ஞானசேகரன், சுதர்சனம் ஆகிய எம்எல்ஏக்களுக்கும் புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மத்திய உளவுப் பிரிவு மாநில அரசுக்கு தகவல் தந்துள்ளது. இதை மாநில அரசு எங்களிடம் தெரிவித்தது.

ேமலும் எங்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதாகவும் அரசு கூறியுள்ளது.

ஆனால், இந்த மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். இதனால் பாதுகாப்பு தேவையில்லை என்று கூறிவிட்டேன் என்றார்.

ஏற்கனவே நக்ஸல்களின் ஹிட் லிஸ்டில் இருப்பவர் ஞானசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது வீட்டுக்கு எப்போதும் போலீஸ் பாதுகாப்பு உண்டு. இப்போது அவரது பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்த விஷயத்தில் சுதர்சனத்தின் கருத்தை அறிய முடியவில்லை.

tai doog why they waste time this is play gams indian row if l.t.t.e think they wont soot no body cant blok oky dont think l.t.t.e like chilldren ur all 8appan grup

someone made this comment

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.