Jump to content

ஆன்லைன் மூலம் டீ விற்பனை... ஆண்டுக்கு 70 கோடி ரூபாய்... கலக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்!


Recommended Posts

கல்லூரியில் படிக்கும் இளைஞர்களிடம், ‘‘ஒரு லட்சம் ரூபாய் தருகிறோம். டீக்கடை நடத்துவீர்களா?’’ என்று கேட்டுப் பாருங்கள். யாருமே அந்தத் தொழிலைச் செய்வதற்குத் தயாராக இருக்க மாட்டார்கள். ‘அதெல்லாம் என் கனவுத் தொழில் அல்ல’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.

ஆனால், ஆன்லைன் மூலம் அட்டகாசமாக டீ விற்பனை செய்து, அமோகமாக சம்பாதித்து வருகின்றன நான்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள். எல்லோரும் செய்யும் டீ விற்பனைதான், என்றாலும் கொஞ்சம் மாற்றி யோசித்ததன் மூலம் தங்களுக்கென ஒரு தனித்துவமான பிசினஸ் மாடலைக் கண்டறிந்து, உலகம் முழுக்க உள்ள டீ பிரியர்கள் மனதில் இடம்பிடித்திருக்கின்றன இந்த நிறுவனங்கள்.


அந்த நான்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களைப் பற்றிய அலசல்.

நூறு சதவிகிதம் ஆன்லைன் தேநீர் பிராண்டான ‘வஹ்தாம் டீஸ்’ வெற்றிக்குப்பின்னால் பாலா சர்தா என்ற 25 வயது இளைஞர் இருக்கிறார். 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட வஹ்தாம் டீஸ், தேநீர் விநியோகத்தில் உள்ள இடைத்தரகர்களை நீக்கி, டார்ஜிலிங், அசாம், நீலகிரி, அருணாசலப்பிரதேசம், இமாசலப்பிரதேசம், சிக்கிம், பீகார் மற்றும் நேபாளம் ஆகிய ஏழு பிராந்தியங்களிலிருந்து சுமார் 175 தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சிறு விவசாயிகளிடமிருந்து தேநீரைக் கொள்முதல் செய்து, அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

பொதுவாக, தேயிலை தோட்டத்தில் நீங்கள் பெறும் சுவைக்கும், அறுவடைக்கு ஒரு வருடம் கழித்து நீங்கள் பெறும் சுவைக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. அறுவடை செய்வதற்கும் உலகின் ஏதோ ஒரு நாட்டில் உள்ள நுகர்வோர் அதை வாங்குவதற்கும் இடையில் குறைந்தபட்சம் 12 மாதங்கள் இடைவெளி உள்ளது. ஆனால், உற்பத்தி செய்த 24 - 72 மணி நேரத்திற்குள் தேயிலை விவசாயிகளிடமிருந்து நேரடியாக இலைகளை வாங்குவதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு நல்ல தேயிலையைத் தருகிறது இந்த வஹ்தாம்.

இந்தப் பிராந்தியங்களிலிருந்து பெறப்படும் தேயிலையை டெல்லி கிடங்கிற்கு உடனடியாக அனுப்புகிறது இந்த நிறுவனம். அதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒன்று, டெல்லியில் உள்ள விமான நிலையத்திலிருந்து வேகமாகவும், சுலபமாகவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். இரண்டு, அதன் வறண்ட காலநிலை, வேறுபட்ட தேயிலைகளின் நீண்ட ஆயுளுக்கு மிகவும் பொருத்தமானது.

டெல்லியில் தேயிலை பேக் செய்யப்பட்டு, ஆர்டர் செய்யப்பட்ட இடங்களுக்கு நேரடியாக அனுப்பப்படுகிறது. அமெரிக்காவிற்கு சராசரி விநியோக நேரம் நான்கு வேலை நாள்கள். ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தெற்காசியாவுக்கு இது அதிகபட்சம் ஆறு நாள்கள் ஆகும். ஃபெடெக்ஸ், டி.எச்.எல் மூலம் உலக முழுக்க ஃப்ரெஷ் தேயிலையை அனுப்புகிறது இந்த நிறுவனம்.


இந்த நிறுவனம் இதுவரை 76 நாடுகளுக்கு இருபது மில்லியன் கப்களுக்கும் மேற்பட்ட தேயிலையை அனுப்பி இருக்கிறது. வஹ்தாம் டீக்கள் பிரீமியம் 100 கிராமுக்கு 15 டாலர்கள் வரையும், ஒரு பெட்டி தேநீர் பைகள் 4 முதல் 6 டாலர் வரையும் விற்கப்படுகின்றன. இந்த நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் 70 கோடி ரூபாயை ஈட்டுகிறது. இதுவரை முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 30 கோடி ரூபாயைத் திரட்டியுள்ளது. இந்த நிறுவனத்தின் வருவாயில் 98% வெளிநாட்டுச் சந்தைகளிலிருந்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் பெயர் வஹ்தாம் என்று வித்தியாசமாக இருக்கிறதே என இந்த நிறுவனத்தை நிறுவிய பாலா சர்தாவிடம் கேட்டால், சிரித்தபடி சொல்கிறார்... ‘‘என் அப்பாவின் பெயர் மாதவ் (Madhav). இதை அப்படியே திருப்பிப் போட்டேன். வஹ்தாம் (Vahdam) என்று வந்தது. அதை என் நிறுவனத்தின் பெயராக வைத்துவிட்டேன்’’ என்கிறார் பாலா.

`எந்தவொரு தேநீர் நிறுவனமும், தனக்கு கிடைக்கும் அனைத்து விநியோக முறைகளையும் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயல வேண்டும்’ என்பது சாய் பாய் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் நிறுவனர் அமுலீக்சிங்கின் கொள்கை. 2012-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம், இன்று மெட்ரோ நகரங்களில் சுமார் 150 கிளைகளைக் கொண்டுள்ளது. எயிட் ரோடு வென்சர்ஸ், பாரகன் பார்ட்னர் உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்கள் இந்த நிறுவனத்தில் சுமார் 200 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.

சாய் பாயின்ட்டின் வணிகத்தின் பெரும்பகுதியான சாய் @ ஒர்க் என்பது, பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்களின் தேவையை நேரடியாகப் பூர்த்தி செய்யும் ஒரு சேவையாகும். பெரிய கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் வணிகப் பூங்காக்கள் வளாகத்தில் சிறிய கடைகள் அமைக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சிறிய நிறுவனங்களில் தேநீர் டிஸ்பென்சர்கள் மற்றும் அதிக வெப்பம் தாங்கும் ஃப்ளாஸ்க்குகளைப் பயன்படுத்தி பலருக்கும் சுடச்சுட டீ பரிமாறப்படுகிறது.

இவை ஆண்ட்ராய்டு ஐ.ஓ.டி (IoT) தொழில்நுட்பத்தினால் இயக்கப்படும் டிஸ்பென்சர்கள். இந்த டிஸ்பென்சர்கள் சுமார் 2000 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஒரு டிஸ்பென்சர் இயந்திரத்துக்கு மாதம்தோறும் சுமார் 2000 ரூபாய் செலவிட, சுமார் ரூ.27,000 லாபம் கிடைக்கிறது. சாய் பாயின்ட் ஆப் மூலமும் தேநீர் டெலிவரி செய்யப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஊபர் ஈட்ஸ், ஜொமோடோ மற்றும் ஸ்விகி உள்ளிட்ட சேனல்கள் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்யவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.


சாய் பாய்ன்ட்டின் ஒவ்வொரு கப்பிலும் தரமும் சுவையும் நிலையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரே நிறுவனத்திடமிருந்து பால் பெறப்படுகிறது. ஒரே சப்ளையரிடமிருந்து சர்க்கரையும் பெறப்படுகிறது. தேயிலைகள் அசாம், டார்ஜிலிங் மற்றும் நீலகிரியிலிருந்து பெறப்படுகின்றன. பின்னர் அவை ஒவ்வொரு கடைக்கும் அனுப்பப்படுகின்றன. விநியோகச் சங்கிலி அமைப்பு மையப்பட்டிருப்பதால், அனைத்துப் பொருள்களின் மீதும் நூறு சதவிகிதக் கட்டுப்பாட்டினை வைத்திருக்கிறது.

ஒரு நாளைக்கு சுமார் நான்கு முதல் ஐந்து லட்சம் கப் தேநீரை விநியோகம் செய்கிறது இந்த நிறுவனம். கடந்த ஆண்டு, இந்த நிறுவனம் சுமார் ரூ.140 கோடிக்கும் மேல் வருவாயை ஈட்டியுள்ளது. தேநீர் மட்டும் இல்லாமல், பிஸ்கெட், வடா பாவ் மற்றும் கேக்குகளும் விற்கப்படுகின்றன.

 

தேநீரை மாற்றி யோசிப்போம் - சாயோஸ்
நவம்பர் 2012-இல் தொடங்கப்பட்ட சாயோஸ் தற்போது என்.சி.ஆரில் (National Capital Region) எட்டு விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. இப்போது மும்பை மற்றும் பெங்களூருக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

`இஞ்சி கொஞ்சம் அதிகமாக, பால் கொஞ்சம் குறைவாக, ஸ்ட்ராங்க், லைட் என்று பல வகையில் டீ குடிக்க பலர் விரும்புவார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதுதான் எங்கள் நோக்கம்’ என்கிறார் சாயோஸ் நிறுவனத்தின் நிறுவனர் நிதின் சலூஜா.


டைகர் குளோபல், சைஃப் பார்ட்னர்ஸ் மற்றும் இன்டாக்டட் கேபிட்டல் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த நிறுவனம் சுமார் 17 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது.

இந்த நிறுவனத்தின்அனைத்துக் கடைகளும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு செயல்படுகின்றன. வாடிக்கையாளர்களின் விருப்பங்கள் கேட்கப்பட்டு, அதற்கேற்ப தேநீர் தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் பிரபலமான கிளை ஒன்று, ஆண்டுக்கு சுமார் நான்கு கோடி ரூபாய்மேல் லாபத்தை ஈட்டுகிறது! இந்த நிறுவனத்தின் அனைத்துக் கடைகளும் அசாம் சி.டி.சி கலவையான தேயிலைப் பயன்படுத்துகின்றன.

இதனுடன் இயங்கும் ஃபுட்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ் பிரிவு சாயோஸ் நாற்பது சதவிகிதத்துக்குமேல் வருவாய் அளிக்கிறது. வடா பாவ், முட்டை பொடிமாஸ் சான்ட்விச் போன்ற உணவுகள் வாடிக்கையாளர்களுக்குப் பிடித்தமானவை.

பெரும்பாலான விற்பனையாளர்கள் எதிர்கொள்ளும் சவால், அளவைக் குறைக்கும்போது தரத்தை எப்படிப் பராமரிப்பது என்பதுதான். `ஒவ்வொரு கப் டீயைக் குடிக்கும்போதும், அது வீட்டில் குடிக்கும் டீயைப் போன்று இருக்கிறது என்ற நினைப்பு வரவேண்டும்’ என்கிற இந்த நிறுவனம்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஏழு விற்பனை நிலையங்களைத் திறந்துள்ள இந்த நிறுவனம், கடன் மற்றும் பங்கு மூலம் ஐந்து ஆண்டுகளில் மேலும் 250 கடைகளைத் தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

https://www.vikatan.com/oddities/online-market/tea-start-ups-earning-rs-70-crore-per-annum

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலம்பெயர் நாடுகளில் தமிழ்த் தேசியப்  புலிப் பினாமிகள். அவர்களுக்குப் போட்டியாக நிலத்தில் தமிழ் தேசிய அ ரசியல்வியாதிகள்.  தமிழனின் நிலை  கல்லில் நாருரித்த மாதிரித்தான்.  😏
    • இந்த செய்தி ...தோழர் அணுராவுக்கு எதிராக இந்திய‌ அரசும் ,அவர்களுடன் சேர்ந்து  செயல் படும் புலம்பெயர்ஸும் செய்த திட்டமிட்ட சதி என நான் நினைக்கிறேன்  இலங்கையில் இருந்து இந்த காற்று வருகிறது நாங்கள் நெற் போட்டு தடுக்கிறோம் என இந்தியா பழைய சீலைகளை கொண்டு வந்து தடுத்து நிறுத்தும் முயற்சியில்iடுபட போயினமோ தெரியவில்லை
    • குறைந்த செலவில் நிறைந்த இன்பம் பெற இன்றே செல்லுங்கள் சிறிலங்கா...அதாவது 100டொலருக்கு அமெரிககாவில ஒருநாள் தங்க முடியாது ஆனால் அறுகம்பேயில் 100 டொலருக்கு நாலு நாள் தங்கலாம்..இலவச மாசாஜ் எல்லாம் கிடைக்கும் ...ரஸ்யர்கள்,அமெரிக்கர்கள் எல்லாம் சிறிலங்காவுக்கு ஓடி வருவதன் நோக்கம் அதுதான்..காற்றில் எவ்வளவு தூசு இருக்கு,நாட்டில எவ்வளவு சத்தம் வருகிறது ...நாடு சுத்தமா இருக்கா,நாட்டில் மனித உரிமை நன்றாக செயல் படுகிறதா என எங்களை( என்னை  போல )உள்ள மக்கள் சிந்திக்க மாட்டார்கள் ... சில ரோயல் வமிலிகள் மற்றும் அவர்களை கொப்பி பண்ணி ரோயல் வமிலியாக நடிக்கும் சில சனம் தான் இதெல்லாம் பார்த்து (தூசு,சத்தம்,பிற..)வர பயப்படுங்கள் .... இஸ்ரெல்காரன் வந்து நிலம் வாங்கி கோவில் கட்டி வழிபடுகிறான் என்றால் யோசித்து பாருங்களேன்...நான் பிராண்சுக்கு சுற்றுலா வந்தா ஒரு கிழமை வாடகைக்கு ரூம் போடத்தான் சரிபட்டு வரும் ...
    • ஒரு காலத்தில் எம்மை இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள் என்று பார்க்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது தமிழ் என்று சொன்னால் போதும். சிறீலங்கா நான்காவது இடத்தில்.....
    • திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.✍️ 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.