Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமரி மீனவர்கள் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்கள் தலையீடு: வைகோ குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குமரி மீனவர்கள் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்கள் தலையீடு: வைகோ குற்றச்சாட்டு

குமரி மீனவர்கள் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்கள் தலையீட்டிருப்பதாக ஊகமான செய்திகள் வருகின்றன என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு வைகோ அளித்த நேர்காணல்:

சிறிலங்கா கடற்படையினர் கடந்த 30 ஆண்டு காலத்தில் ஏராளமான முறை தமிழக மீனவர்களை தாக்கி உள்ளனர். ஏறத்தாழ 500 தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை சுட்டுக்கொன்றுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீனவர் படகுகளும், வலைகளும் நாசமாக்கப்பட்டுள்ளன. இதனை நான் எண்ணற்ற முறை இந்திய நாடாளுமன்ற கவனத்துக்கு கொண்டு சென்று பேசி உள்ளேன். பிரதமர்களிடத்திலும் வாதாடி உள்ளேன்.

சிறிலங்கா கடற்படை தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றதற்கு நாம் எதிர்ப்பு காட்டுகிற நேரத்தில் சிங்கள கடற்படையைச் சேர்ந்த ஒரு அதிகாரி, நாங்கள் சுட்டுக்கொல்லவில்லை, விடுதலைப் புலிகள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என்ற ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சில காரியங்கள் நடந்து உள்ளன.

இந்த நிலையில், தமிழக காவல்துறை டி.ஜி.பி. முகர்ஜி கடந்த 27 ஆம் நாள் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், 5 மீனவர்களை சுட்டுக்கொன்றது விடுதலைப் புலிகள் எனவும், காணாமல் போன 12 மீனவர்களை விடுதலைப் புலிகள்தான் கடத்தி சென்றுள்ளனர் என்றும், பிடிபட்ட மரியா படகில் பிடிபட்டவர்கள் இப்படி கியூ பிராஞ்ச் காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த பிரச்சினையில் பொய்யான வாக்குமூலம் தயாரிக்க தமிழக காவல்துறை கியூ பிராஞ்ச் காவல்துறையை பயன்படுத்தியுள்ளது.

கியூ பிராஞ்ச் காவல்துறை விடுதலைப் புலிகள் மீது பழிபோட இப்படி வாக்குமூலம் தயாரித்திருக்கிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன். பயமுறுத்தி அல்லது வேறு வகையில் நிர்பந்தப்படுத்தி படகில் பிடிபட்டவர்களை வாக்குமூலம் கொடுக்க செய்திருக்கலாம். இப்படியான வாக்குமூலத்தை காவல்துறையினர் நீதிபதிக்கு முன் கூட பதிவு செய்திருக்கலாம். அதனை நம்ப தயார் இல்லை.

இந்த பிரச்சினையில் மத்திய உளவு நிறுவனங்கள் தலையிட்டிருப்பதாக ஊகமான செய்திகள் வருகின்றன. காணாமல் போன மீனவர்கள் 12 பேரையும் பத்திரமாக கொண்டுவந்து சேர்க்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகள் பிரச்சினை தொடர்பாக ம.தி.மு.க.வை தடை செய்ய வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி நண்பர்கள் பேசி இருக்கிறார்கள். எங்களை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சியினரை பகடைக்காயாக பயன்படுத்துகிறார்கள். இதனால் எனக்கு எந்த ஆத்திரமும் இல்லை. கவலையும் இல்லை. நான் இதில் புதிதாக எதுவும் சொல்லவில்லை. பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கூறியதனைத்தான் அறிக்கையில் கூறியிருந்தேன். தடை செய்யப்பட்ட இயக்கம் குறித்து கருத்து தெரிவிக்க உச்சநீதிமன்றமே அனுமதி கொடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளை ம.தி.மு.க. ஆதரிப்பதால் அ.தி.மு.க.-ம.தி.மு.க. கூட்டணி இடையே எந்த நெருடலும் ஏற்படவில்லை. கூட்டணி பலமாக இருக்கிறது. பெரும்பான்மை தி.மு.க. அரசுக்கு எதிராக மக்கள் சக்தியை ஒன்று திரட்டும் பணியில் இரு கட்சிகளும் இணைந்து செயற்பட்டு வருகின்றன என்றார் வைகோ.

-புதினம்

காணாமற்போன 12 தமிழக மீனவர்களும் இலங்கையில் பாதுகாப்பாக உள்ளனர்

தமிழக பொலிஸ் மா அதிபர் நேற்று தகவல்.

கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் காணாமற் போயிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களும் இலங்கையில் பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. தமிழக பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டி.ஜி.பி.) டி.முகர்ஜி நேற்று இதனைத் தெரிவித்தார்.

காணாமற்போன மீனவர்கள் விடுத லைப் புலிகளால் கடத்தப்பட்டிருக்கக் கூடும் என்று முன்னர் தமிழகத்தில் பரவலாக சந்தேகம் கிளப்பப்பட்டிருந்தது. அதனை ஊர்ஜிதம் செய்யும் வகையில் டி.ஜி.பி. முகர்ஜி அறிக்கை ஒன்றை விடுத்திருந் தார்.இந்த விடயம் தமிழக சட்ட சபையில் எழுப்பப்பட்டு முதல்வர் கருணாநிதி பதிலும் அளித்திருந்தார்.

மீனவர் கடத்தல் தொடர்பான குற்றச் சாட்டை மறுத்து விடுதலைப் புலிகளின் தலைமை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக தமிழகத் தலைவர் களும் கண்டித்து அறிக்கைகளை வெளியிட் டிருந்தனர்.

இந்நிலையில் தமிழக பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.முகர்ஜி மீனவர் தொடர்பாக மீண்டும் நேற்றுத் தகவல் வெளியிட்டுள்ளார். காணாமற்போன 12 மீனவர்களும் இலங்கையில் பத்திரமாக இருப்பதாக அந் நாட்டு மீனவர்கள் மூலம் தகவல்கள் கிடைத் துள்ளன. இவர்களை விரைவில் மீட்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

-Uthayan-

பாதுகாப்பா இருந்தால் எங்க இருகிரார்கள் என்று சொல்லேண்டபா .

குமரி மீனவர்களைக் கொன்றது புலிகள்தான்;

கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

மே 03, 2007

சென்னை: குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரைக் கொன்றது, 12 பேரைக் கடத்திக் கொண்டு போனது விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவினர்தான் என்பதை இதுதொடர்பாக கைதான 6 கடற்புலிகள் இயக்கத்தினர் கொடுத்துள்ள வாக்குமூலம் நிரூபிக்கிறது.

தமிழக மீனவர்களை நாங்கள் கொல்லவில்லை, கடத்தவும் இல்லை, யாரும் எங்கள் வசம் இல்லை என்று விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், தூத்துக்குடி அருகே பிடிபட்ட 6 கடற்புலிகளும் இதுதொடர்பாக தெளிவாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர் என்று டிஜிபி முகர்ஜி தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்த நிலையில், தூத்துக்குடி அருகே கைதான அருள், செல்வக்குமார், ரவிக்குமார், அருள் ஞானதாஸ், ராபின்சன், போனி பாஸ் ஆகியோர் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வெளியாகியுள்ளது.

இந்த 6 பேர் குழுத் தலைவருக்கு ராபின்சன் தலைவராக இருந்துள்ளார். போனி பாஸ் துணைத் தலைவராக இருந்துள்ளார். ராபின்சன் கியூ பிரிவு போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம்:

வெளிநாடுகளிலிருந்து கப்பல்கள் மூலம் எங்களுக்கு ஆயுதங்கள் வரும். நடுக் கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல்களுக்கு சிறு சிறு படகுகளில் சென்று ஆயுதங்களை எடுத்து வருவோம். விடுதலைப் புலிகள் அமைப்புக்கென்றே சொந்தமாக கப்பல்கள் உள்ளன.

கப்பலிலிருந்து எடுத்து வரும் ஆயுதங்களை மன்னார் அருகே உள்ள கொக்கு புதையன் என்ற இடத்தில் இருக்கும் முகாமில் ஒப்படைப்போம்.

இப்படி கப்பல்களுக்குச் சென்று ஆயுதங்களை எடுத்து வருவதற்காக பல குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 6 பேர் உள்ளனர். அவர்களில் இருவர் தலைவர், துணைத் தலைவர் ஆவர்.

நாங்கள் ஆயுதங்ளுடன் வரும்போது பலமுறை தமிழக மீனவர்களை எதிர்கொண்டுள்ளோம். ஆனால் அவர்களுடன் ஒருபோதும் சண்டை போட்டதில்லை. சகோதரர்களாகத்தான் பார்க்கிறோம். அவர்களுக்கு எங்களது தற்காப்புக்காக வைத்திருக்கும் மீன்களைக் கொடுத்து அனுப்புவோம்.

கடந்த மார்ச் மாதம் பெரிய கப்பலில் பெருமளவு ஆயுதங்கள் வந்தது. மரியா என்ற இயந்திரப் படகில் ஆயுதங்களை எடுத்து வரும் பணி நடந்து கொண்டிருந்தது. மணாளன் என்பவரது தலைமையிலான 6 பேர் ஆயுதங்களை எடுத்து வந்து கொண்டிருந்தனர். அப்போதுதான் அவர்களை கன்னியாகுமரியைச் சேர்ந்த 9 மீனவர்களும் பார்த்துள்ளனர்.

மணாள் குழுவினர் வந்த படகை நிறுத்திய அவர்கள், ஒரு வாரமாக மீன்பிடிக்கிறோம். மீன் கிடைக்கவில்லை. உங்களிடம் உள்ள மீன்களைக் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். அத்தோடு நிற்காமல் தங்களது படகுடன் வைத்து புலிகளின் படகைக் கட்டியுள்ளனர். மேலும் படகில் ஏறிக் குதித்து புலிகள் வைத்திருந்த மீன் பிடி வலையை விலக்கி அங்கு மீன் உள்ளதா என்று பார்த்துள்ளனர்.

அந்த சமயத்தில் புலிகள் வைத்திருந்த ஆயுதங்களை அவர்கள் பார்த்து விட்டனர். இதனால் மணாளன் குழுவினருக்கு அவர்கள் உளவாளிகளாக இருக்கலாம் என சந்தேகம் வந்து விட்டது. இதையடுத்து அவர்களை சுட்டு விட்டு அங்கிருந்து கொக்கு புதையன் முகாமுக்கு வந்து விட்டனர்.

பின்னர் அதே மரியா படகில் எனது தலைமையிலான குழுவினர் கிளம்ப முயன்றோம். அப்போதுதான் ஏற்கனவே இந்தப் படகில் சென்ற மணாளன் குழுவினருக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு விட்டது. பார்த்துப் போய் வாருங்கள் என்று எங்களை எச்சரித்து அனுப்பினர்.

பின்னர் மரியா என்ற பெயரை அழித்து விட்டுச் செல்ல முயன்றோம். ஆனால் அது அழியவில்லை. இதையடுத்து அதே படகில் சென்றோம். ஆனால் படகில் கோளாறு ஏற்பட்டதால் வழி மாறி தூத்துக்குடி பக்கம் வந்து விட்டோம்.

நாங்கள் இலங்கைத் தமிழர்கள் என்றுதான் முதலில் கூறினோம். ஆனால் கியூ பிரிவு போலீஸ் விசாரணையில் உண்மையை சொல்ல நேரிட்டது.

12 மீனவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தை எனக்கு கொக்குபுதையன் முகாமில் உள்ள நண்பரான திருமேணி சாட்டிலைட் போன் மூலமாக தெரிவித்தார். அவர்கள் பத்திரமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அவர்களை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுங்கள் என்று நான் கூறினேன் எனக் கூறியுள்ளார் ராபின்சன்.

இதையடுத்து ராபின்சனையும், போனி பாஸையும் கொக்கு புதையன் முகாமுக்கு போலீஸார் பேச வைத்துள்ளனர். அப்போது அந்த முகாமில்தான் 12 மீனவர்களும் சிறை வைக்கப்பட்டிருப்பது உறுதியாக தெரிய வந்தது.

இந்த நிலையில் மீனவர்கள் சுடப்பட்டது மற்றும் கடத்தல் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளதால் புலிகளின் தலைமை, மணாளனை அழைத்து விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

12 பேரையும் விடுவித்து பிரச்சினையை சரி செய்ய புலிகள் தலைமை எண்ணுகிறதாம். ஆனால் அப்படிச் செய்தால் உங்களின் பெயர் கெட்டு விடும், தமிழக மக்களின் ஆதரவு பறிபோய் விடும் என 'முக்கியமான சிலர்' புலிகளின் தலைமைக்கு ஆலோசனை கூறியுள்ளனராம். இதன் காரணமாக 12 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தாமதம் நிலவுகிறது.

5 பேரை சுட்டுக் கொன்றதும் புலிகள்தான், 12 பேரை கடத்திச் சென்று சிறை வைத்திருப்பதும் புலிகள்தான் என்பதற்கு ராபின்சன் கொடுத்துள்ள வாக்குமூலமே சரியான சான்று. விரைவில் 12 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கியூ பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

maybe this report made with Karuna grupe.If they are real LTTE,why they dont kill themself?

  • கருத்துக்கள உறவுகள்

தினத்தந்தியில் புலிகளே இதற்குக் காரணமென ஆதாரங்கள் வெளிப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. படித்துப் பாருங்கள்.

http://www.dailythanthi.com/article.asp?Ne...2007&advt=1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கன்னியாகுமரி மீனவர் பிரச்சினை- தமிழக டிஜிபியின் அறிக்கை மர்ம நாவலைப் போல் உள்ளது: மருத்துவர் இராமதாஸ்

கன்னியாகுமரி மீனவர் பிரச்சினையில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தி தமிழக டிஜிபி(காவல்துறை தலைவர்) கூறியிருப்பது மர்ம நாவலைப் போல் உள்ளது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் சாடியுள்ளார்.

திண்டிவனத்தில் இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர் மாநாட்டில் மருத்துவர் இராமதாஸ் கூறியதாவது:

தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகள் பிடித்து வைத்திருப்பதாகவும், மீனவர்கள் சிலரை அவர்கள் தான் சுட்டு கொன்றார்கள் என்றும் தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிபி கூறியது மர்ம நாவல் போல் உள்ளது. அவர் கூறியது நம்பும்படியாக இல்லை. அதற்கு காரணம் எனக்கு தெரியும் ஆனால் சொல்லக்கூடாது என்றார் அவர்.

- புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.