Jump to content

மிகவும் சிக்கலான பொருளாதார வீழ்ச்சியை நோக்கி இந்தியா செல்வதாக கே.பி.எம்.ஜி. நிறுவனம் அறிக்கை..!


ampanai

Recommended Posts

Dkn_Tamil_News_2019_Sep_03__101589381694794.jpg

வாஷிங்டன்: மிகவும் சிக்கலான பொருளாதார வீழ்ச்சியை நோக்கி இந்தியா செல்வதாக கே.பி.எம்.ஜி. நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட கே.பி.எம்.ஜி. நிறுவனம் உலக அளவில் மிக முக்கியமான தணிக்கை நிறுவனமாகும். உலக அளவில் நிதி மற்றும் வர்த்தக ஆலோசனை வழங்கும் கே.பி.எம்.ஜி. நிறுவனம் இந்தியா பற்றி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறுவதாவது;  30 ஆண்டுகளாக வளர்ந்து வந்த இந்தியப் பொருளாதாரம் சரிவை நோக்கி செல்கிறது. வேகமாக வளரும் நாடாக கடந்த ஆண்டு வரை இருந்த இந்தியா தற்போது அந்த இடத்தை இழந்து விட்டது.

இந்தியாவில் விற்பனை குறைந்து வேலை இழப்புகள் அதிகரித்து வருகிறது. சரியும் பொருளாதாரத்தை சீராக்க இந்திய அரசு அவசர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி உதவி தருவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. புதிதாக தொழில் தொடங்குவோருக்கு வரிச் சலுகைகளையும் இந்திய அரசு அறிவித்துள்ளது. அரசின் சலுகை அறிவிப்புகள், சரிந்து வரும் இந்திய பொருளாதாரத்தை தடுக்க போதுமானதல்ல. கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=523231

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.